ராம் கோயில் பூமி பூஜை: அத்வானி, ஜோஷிக்கு தொலைபேசி அழைப்பு

0
2

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த போராட்டத்தில், தீவிரமாக ஈடுபட்டவர்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு பெரும் பங்கு உண்டு.
அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி, கடந்த, 1990ல், அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க, அயோத்தி பேராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்திருந்தது. பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அத்வானி, ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, தகவல் வெளியானது, இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அத்வானி, ஜோஷிக்கு, டெலிபோனில் அழைப்பு விடுக்கப்படும் என, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறுகையில், ”அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதற்கான விலையை, நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அடிக்கல் நாட்டு விழாவில், நிச்சயம் பங்கேற்பேன்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here