வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா ஆனை முகனே விநாயகனே
அகமும் புறமும் இருப்பவனே அடியார்கள் துயர் துடைப்பவனே ஆற்றோரத்திலும், குளக்கரைதனிலும் அமர்ந்தரசாட்சி புரிபவனே.
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா ஆனை முகனே விநாயகனே
ஓங்காரப் பொருளின் தத்துவனே உள்ளத்தினில் குடி கொண்டவனே உன்புகழ் பாடும் அன்பர்கள் குறையை உடனடியாகத் தீர்ப்பவனே.
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா ஆனை முகனே விநாயகனே
ஓங்காரப் பொருளும் நீ தானே உலகம் என்பதும் உன்வடிவே காணும் இயற்கை காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே.
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா ஆனை முகனே விநாயகனே
வெள்ளைக் கொம்பன் விநாயகனே வினைகள் தீர்க்கும் ஐங்கரனே | God Songs | Aanmeega Bhairav