சகோதரர்கள் நால்வரும் நல்லமுறையிலே கல்வி பயின்று வந்தனர். வருங்காலத்தில் அவர்கள் நால்வரும் பாராளும் வேந்தர்களாக வாய்க்கவிருப்பதால் அதற்கேற்ற கல்வி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சமுதாயத்தின் நடைமுறையில் அறநெறியில் நிலைநிற்கும் அரசர்கள் அரியபெரிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அறவாழ்வு வாழ்பவர்களுக்கே அது சாத்தியமாகிறது இந்த ராஜ குமாரர்களுடைய நித்திய வாழ்வு முற்றிலும் அறத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அடக்கம் என்றால் என்ன என்பதற்கு முன்மாதிரிகளாக அந்த அரசகுமாரர்கள் இலங்கினார் கள். ஆத்ம சாதனங்களில் அவர்கள் ஆழ்ந்து ஊறி யிருந்தனர். வேதங்களை அவர்கள் விதிப்படிப் பயின் றனர். வேத அங்கங்களையும் அவர்கள் முறையாகக் சுற்று வந்தனர். நாடு ஆள்பவர்களுக்கு உடற்பயிற்சி முற்றிலும் இன்றியமையாதது. வில் வித்தை,குதிரை ஏற்றம், யானையை நடாத்துதல், தேர் கடாவுதல் ஆகிய பயிற்சிகளை இராமனும் அவனுடைய தம்பிமார்களும் ஊக்கத்துடன் பயின்று வந்தனர். நிறை கல்வி என்றால் என்ன என்பது அந்த அரசகுமாரர்களின் வாயிலாக வெளியாயிற்று. பக்தியிலும் ஞானத்திலும் அவர்கள் நிலைத்திருந்தனர் நல்லொழுக்கமே வடிவெடுத்தவர் களாக அவர்கள் இருந்தார்கள் பொதுநல சேவையில் அவர்கள் பேரூக்கம் படைத்திருந்தனர். உடற்கட்டு மிக உடைத்திருந்தனர். போர்க்கலையில் நிபுணர்கள் ஆனார்கள். ஸ்ரீ ராமனும் அவனுடைய தம்பிமார்களும் இத்தகைய தெய்விகப் பேரறிவையும் பராபக்தியையும் பேராற்றலையும் ஒருங்கே அடையப்பெற்று வந்தனர்.
உடன் பிறந்தார் நால்வரும் ஒருவரை ஒருவர் இனிது நேசித்தனர் வடிவத்தில் நால்வர் எனினும் சொரூபத்தில் அவர்கள் ஒன்றாகத் திகழ்ந்தனர். தமையனாகிய இராமன் தம்பிமார்களாகிய மூவரிடத்திலும் தந்தைக்கு நிகராக நடந்துகொண்டான். பின்பு தம்பி மார் மூவருமோ தமையனைத் தந்தைக்கு நிகராகக் கருதினர். அன்னவர்கள் வணங்கும் தெய்வமாக இராமன் திகழ்ந்தான். அன்னைமார்களையும் பிதாவையும் தெய்வங்களாக அவர்கள் பாராட்டினர். சொந்தத் தாய், மாற்றாந் தாய் என்னும் வேறுபாட்டுக்கு அவர்களுடைய உள்ளங்கள் ஒருபொழுதும் இடம் கொடுக்கவில்லை. மாத்ரு, பித்ரு பக்தியில் அவர்கள் தலைசிறந்து விளங்கினர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்னும் கோட்பாட்டில் இராமன் மற்ற மூவர்க்கும் மேம்பட்டவனாகவே இருந்தான். புத்ரோத்தமன் என்றால் இராமனே தகைசான்ற புத்ரோத்தமன் ஆனான் அவனுக்கு நிகரான புத்திரன் ஒருவனை இத் தொல்லுலகம் இதுகாறும் அறிந்திலது. சகோதரர்கள் நால்வரும் அவரவருடைய இயல்பு களுக்கு ஏற்றவாறு இணைபிரியாத இரண்டு ஜோடிகளாக இலங்கினர். இராமனும் இலட்சுமணனும் முதல் ஜோடியாக அமைந்தனர். பரதனும் சத்ருக்கன னும் அடுத்த ஜோடியாக வாய்த்தனர். இத்தகைய இணக்கத்தினின்று அவர்கள் ஒருபொழுதும் பிசகவில்லை. சகோதர வாஞ்சைக்கு இலக்காக அவர்கள் யாண்டும் திகழ்ந்து வந்தனர்.
பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பேரானந்தத்தை ஊட்டுபவர்களாக இராம இலட்சுமணனும் பரத சத்ருக்கனனும் அமைந்திருந்தனர். இந்நால் வருள் மூத்தவனாகிய இராமன் மக்கள் எல்லார்க்கும் ராமானந்தமாகத் திகழ்ந்தான். மக்களுடைய நல் வாழ்வுக்கு வழிகாட்டுகிற துருவ நட்சத்திரமாகவும் அவன் இலங்கினான். சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த தம் புதல்வர்களுக்கு மணம் முடித்து வைக்கும் காலம் நெருங்கியதை தசரதச் சக்கரவர்த்தி சிந்தையில் வாங்கினார். தம் கருத்தை முதியோர்கள் சிலரிடம் தெரிவித்தார். அவர்களும் ஏகோபித்து அவர் கருத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
நம் நாட்டில் மணம் முடித்து வைப்பதைப் பற்றிய கருத்து பழங்காலத்தில் ஒருபோக்கில் இருந்தது; இக்காலத்தில் அது முற்றிலும் மாறிவிட்டது. சிறுவர்களும் சிறுமிகளும் இளம் வயதிலிருந்தபொழுதே அக்காலத் தில் விவாகத்தின் வாயிலாக இணைத்து வைக்கப்பட்டனர் அக்காலத்திய மனப்பான்மைக்கு அது முற்றிலும் பொருத்தமானதாக இருந்தது. தக்க தருணம் வரும் வரையில் அக்காலத்தில் காம உணர்ச்சி உள்ளத்தில் இடம் பெறவில்லை. அது அரியதொரு வாய்ப்பாக இருந்தது. ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் உடன் பிறந்தவர்களாவது மக்கள் வகுக்கும் திட்டத்தை அனுசரித்ததன்று. முற்பிறப்பில் யார் யாராகவோ இருந்தவர்கள் இப்பிறப்பில் தெய்வாதீனமாக உடன் பிறந்தவர்களாக வந்து வாய்க்கின்றனர். அதை முன்னிட்டுச் சுகோதர சகோதரி வாஞ்சை இயல்பாகவே ஊற்றெடுத்து வளர்கிறது. நான் ஏன் இன்னார்க்கு உடன் பிறந்தவன் ஆனேன்? என்னும் கேள்வி இளம் வயதில் எழுவதில்லை. அதற்கு மாறாகப் பிறப்பு பந்தம் உறுதியாக வந்து பிடித்துக்கொள்கிறது. அது இறைவனுடைய திட்டம். இதற்கு நிகராக யார் எந்தக் குடும்பத்துடன் சம்பந்தம் பண்ணிக்கொள்ளுதல் என்னும் தீர்மானத்தை முதியோர்கள் முடிவுகட்டுகின்றனர். சின்னஞ் சிறுவர்களுக்கு அத்தகைய மனபரிபாகம் வாய்க்கமாட்டாது. அங்ஙனம் காம உணர்வு வடி வெடுப்பதற்கு முன்பே விவாகத்தின் வாயிலாக இணைக்கப்பட்டிருந்த சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கு மிடையில் களங்கமற்ற மன ஒற்றுமை படிப்படியாக வடிவெடுத்தது. இல்வாழ்க்கைக்கு அது இனிய இணக்க மாக அமைந்திருந்தது. விவாகரத்தைப் பற்றிய பிரச்னை ஒருபொழுதும் எழுந்தது கிடையாது. ஆனால் இன்றைக்குச் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. பல காரணங்களை முன்னிட்டுக் காம உணர்ச்சி சின்னஞ் சிறு வயதிலேயே சிறுவர் உள்ளத்தில் உருவெடுக்கிறது. பழங்காலத்தில் மணந்துகொண்ட சிறுவனும் சிறுமியும் கிட்டத்தட்டச் சகோதர சகோதரி வாஞ்சையுடன் குருகுலத்தில் பிரம்மச்சரிய ஆச்ரமத்தைக் கடைப் பிடித்தனர். அத்தகைய சூழ்நிலை இக்காலத்தில் வாய்க்கமாட்டாது. ஆதலால் விவாகம் பண்ணுவதை எவ்வளவுக்கெவ்வளவு சமுதாயம் ஒத்திவைக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காம நோயைக் குறைப்பதற்கு அது உற்றதோர் உபாயமாகும். சுருங்கச் சொல்லின் பழங்காலத்துக்குப் பாலிய விவாகம் பயன்பட்டது; இக்காலத்துக்கு அது பயன்படாது. வயது முதிர்ந்த யுவர்களையும் யுவதிகளையும் பெற்றோர்கள் மணச் சடங்கின் வாயிலாக இணைத்து வைப்பதே இக்காலத் துக்கேற்ற விவாகத் திட்டமாகும். மேல்நாட்டு முறைப்படி காதலர்கள் காதலிகளைத் தேடி எடுப்பது வெற்றிகரமான விவாகமாவதில்லை. ஏனென்றால் ‘காமத்துக் குக்கண் இல்லை’ என்பது மறுக்க முடியாத உண்மை. பொருத்தமான விவாகத்தைக் காமனுடைய ஆதிக்கத் திலிருக்கும் யுவர்களும் யுவதிகளும் அமைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்பொறுப்பைப் பெற்றோர் கள் எடுத்துக்கொள்வதே முறை. அதன் விளைவாக இல்வாழ்வு நம் நாட்டில் இனிதாக நடைபெறுவதற்கு நிகராக மேல் நாடுகளில் நடைபெறுவதில்லை. விவாகரத்து அங்கு உச்சநிலையிலிருக்கிறது. நம் நாட்டுக்கோ விவாகரத்து ஒரு நாளும் ஒவ்வாது.
மானுடனொருவன் தான் வாழ்ந்துவரும் சமுதாயத்துக்கு அங்கமாக அமைகிறான் உடலில் அமைந்துள்ள அங்கங்கள் உடலின் நலனுக்காகச் செயல் புரிகின்றன. அதேவிதத்தில் ஒரு சமுதாயத் துக்குரிய மானுடனொருவன் சமுதாய நலனை முன்னணியிலும் தன் சொந்த நலனைப் பின்னணி யிலும் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறான் இக்கோட் பாட்டுக்கு ஏற்ப வாழ்பவனே நல்ல குடிமகனாகிறான்.
இராமாயணம் – 3 குருகுலத்தில் நால்வரும் அறநெறியில் கல்வி | Asha Aanmigam