பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
கொச்சை மொழியானாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சையெல்லாம் தீர்ந்த தப்பா
எங்கும் சாந்தி நிலவுதப்பா
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
நெஞ்சமென்னும் கோவில் சமைத்தேன்
அதில் நேர்மை என்னும் தீபம் வைத்தேன்
செஞ்சிலம்பு கொஞ்சிடவே முருகா
சேவல் கொடி மயில் வீரா
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
வெள்ளமது பள்ளந்தனிலே
பாயும் தன்மையது போலவே
என் உள்ளமதில் குடி புகுவாய்
முருகா கள்ளமதைப் போக்கிடுவாய்
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
அலைகடல் ஓரத்திலே
என் அன்பான ஷண்முகனே
அலையா மனந் தருவாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமண்யனே வா
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
இனி எள்ளளவும் பயமில்லையே
பச்சை மயில் வாஹனனே… சிவ பாலசுப்ரமண்யனே வா… பாடல் | Aanmeega Bhairav