போகும் வழியில் குருவும் சிஷ்யர்களும் காமாஸ்ரமத்தை எட்டினர். இங்குதான் சிவனார் மன்மத தகனம் செய்தார் என்பது ஐதிகம். மன்மத தகனத்தின் வாயிலாகக் காமம் அழிக்கப்பட்டதால் இந்த இடத்துக்குக் காமாஸ்ரமம் என்ற பெயர் வந்தது இங்கு இவர்கள் மூவரும் ஓர் இரவு தங்கியிருந்தனர்.
அடுத்தபடியாகக் குருவும் சிஷ்யர்களிருவரும் அடர்ந்த அடவி ஒன்றைக் கடந்து போக நேர்ந்தது. அந்த அடவியில்தான் தாடகையும் அவளுடைய தனயன் மாரீசனும் வசித்து வந்தனர். அவர்களிருவரும் அசாதாரணமான வலுவு படைத்த பயங்கரமான அரக்கப் பிரகிருதிகள் ஆவர். விரும்பிய மாத்திரத்தில் வேண்டியவாறு வடிவங்களை மாற்றிக் கொள்வது அவர்களுக்குச் சாத்தியமாயிற்று மானுடர்களைச் சித்திரவதை பண்ணுவதிலும் மானுட மாமிசத்தைப் புசிப்பதிலும் அவர்கள் மகிழ்வு மிகக் கொண்டிருந் தனர். அவர்களுக்கு அஞ்சி மானுடர் யாரும் அப்பக்கத் தில் எட்டிப் பார்க்கமாட்டார்கள். அத்தகைய ஆபத்து நிறைந்த காட்டுக்குள் மஹரிஷி சிஷ்யர்களிருவரையும் அழைத்து வந்தார். “இராமா, வேண்டுமென்றே உன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். இவ்வனத்தில் வசித்திருக்கிற தாடகையைக் கொன்றாக வேண்டும். அது உனக்குத்தான் சாத்தியம். பெண்பால் ஒருத்தி யைக் கொல்லுவது பொருந்துமா என்று தயங்காதே. பெண் கொலை பொருந்தாது என்னும் கோட்பாடு நாகரிகம் படைத்துள்ள சமுதாயத்துக்கு உரியது பயங்கரமானவைகளும் கொடூரத்தன்மை வாய்ந்தவை களும் ஆகிய ஐந்துக்களை எதிர்க்கிறபொழுது இது ஆண்பாலா, பெண்பாலா என்னும் கேள்வி எழ வேண்டியதில்லை. நல்லவர்களைக் காத்தல் பொருட் டுக் கொடூரத்தன்மை வாய்ந்தவர்களைக் கொன்றேயாக வேண்டும். இந்த ராக்ஷஸியை அறை கூவி அழை. பின்பு அவளை ஒழித்துத் தள்ளு” என்று முனிவர் தம் சிஷ்ய னுக்குக் கட்டளையிட்டார்.
இராமனும் குரு ஆணையை நிறைவேற்றத் தொடங்கினான். தன்னுடைய வில்லுக்கு நாண் ஏற்றி அதில் அவன் ஓசையைக் கிளப்பினான். இந்த ஓசையைக் கேட்ட மாத்திரத்திலே வனத்தில் வசித்து வந்த உயிர்வகைகள் மருண்டு போய் நாலா பக்கமும் ஓட்டம் பிடித்தன. தான் வசித்து வந்த குகையினின்று தாடகை கோபாவேசத்துடன் கிளம்பி வந்தாள். அறைகூவுதல் எங்கிருந்து கிளம்பிற்றோ ஆங்கு அவள் கர்ஜித்துக் கொண்டு வானவெளியில் பாய்ந்தாள். மானுட உருப் படிகள் மூன்று அவள் கண்ணுக்குத் தென்பட்டன. அக்கணமே அவைகளைக் கசக்கிக்கொன்று விழுங்கி விட அவள் தீர்மானித்தாள் அம்மூன்றும் சேர்ந்து தனக்கு நல்லதொரு நச்சுத் தீனியாகும் என்றும் எண்ணி னாள். கழுகு வானத்தினின்று முயலின்மீது மோதுவது போன்று இம்மூவரின்மீதும் தாடகை விரைந்து பாய்ந்தாள் அங்ஙனம் வானத்தினின்று நிலத்தை நோக்கிச் சீறி வந்த அரக்கியை ராமபாணம் நடுவழியில் சந்தித்தது அவளுடைய ஹிருதயத்தை அது துளைத் துக்கொண்டு போனது. அது மட்டுமல்ல, பூமியில் விழுவதற்கு முன்பே மாமிசமும் எலும்புத் துண்டுகளும் ரத்தமும் ஒன்று சேர்க்கப்பட்ட இறைச்சி மூட்டை யாகத் தடால் என்று அது தரையில் வீழ்ந்தது. நல்லவர்களுக்கு யாண்டும் தொல்லைகளாகத் தோன்றியிருந்த கொடூர ஜந்துக்களை அழிக்க வந்தவன் இராமன். அத்தகையவனுக்கு இது கன்னிப் போராக வாய்த்தது. அவன் செயலை ஆமோதிக்கின்ற பாங்கில் குரு மூர்த்தி சிஷ்யனைக் கட்டித் தழுவிக் கொண்டார். இதுகாறும் இக்கானகத்தில் கால் வைக்கமாட்டாது மக்கள் மருண்டிருந்தனர். தாடகை வதைக்குப் பிறகு மக்களை மகிழ்வுடன் வரவேற்கும் கவர்ச்சிகரமான கானகமாக அது மாறியமைந்தது.
வழியில் போய்க்கொண்டிருந்தபொழுது விஸ்வா மித்ர முனிவர் இராமனுக்கு அஸ்த்ர சஸ்த்ர வித்தைகள் பல புகட்டி வந்தார். அவை யாவும் மானுடவுலகில் காண முடியாத மேலான ஆற்றல்கள் படைத்தவை களாக இருந்தன. செயலுக்கு வரும்படி அவைகளை ஏவுதல், ஆக்கிரமிப்புச் செயலில் எப்படி ஈடுபடுவது, தற்பாதுகாப்புச் செயலை எப்படிச் சமாளிப்பது, செயல்கள் யாவிலுமிருந்து எப்படிப் பின்வாங்குவது ஆகிய பகுதிகளை அவர் புகட்டலானார். அந்த அரிய ஆயுதங்களைச் செயலில் ஈடுபடுத்துவதைவிடச் செயலி னின்று அமைதியாக அடங்கிப் பின்வாங்குவது கடின மானது. அத்தகைய அரிய பெரிய ஆயுதப் பிரயோகங் களையும் ஆயுத அடக்கு முறைகளையும் இராமனும் இலட்சுமணனும் நன்கு கற்றுக்கொண்டனர். இக்காலத் திய ஜடசக்தி ஆயுதங்களை யார் கையாண்டாலும் அவைகளின் ஆற்றல் எல்லார்க்கும் ஒரேபாங்கானது. ஆனால் அக்காலத்திய மந்த்ர சக்தி வாய்ந்த ஆயுதங் களோ அவைகளைக் கையாண்டு வந்த மூர்த்திகளின் ஆத்ம சக்திக்கேற்ப வல்லமையில் மேலோங்கலாயின. இலக்கில் பிசகிப்போவது மந்த்ர சக்தியால் தூண்டப் பெற்ற ஆயுதங்களுக்குக் கிடையாது. இந்த அரிய கோட்பாட்டின் பொருட்டே விஸ்வாமித்ர மஹரிஷி ஸ்ரீ ராமனைத் தகுதி வாய்ந்த சிஷ்யனாகத் தேர்ந்தெடுத்தார்.
விஸ்வாமித்ர மாமுனிவருடைய வாசஸ்தலம் சித்தாஸ்ரமம் என்னும் பெயர் படைத்திருந்தது. மூர்த்தி கள் மூவரும் கடைசியாக அந்த அரிய ஆஸ்ரமத்தை வந்தடைந்தனர். ஆஸ்ரமவாசிகளாகிய ரிஷிபுங்கவர் களுக்கு அவர்களுடைய வருகை பரமானந்தத்தை அளித்தது. ஏனென்றால் தங்களுடைய குலபதி சுருதிச் சென்ற காரியம் கருதியவாறு கைகூடியிருந்தது. தசரதச் சக்கரவர்த்தி போன்ற பெருமை வாய்ந்த பூபதி ஒருவரை இவர்தாம் தம் வழிக்குத் திருப்பமுடியும். அதற்கு மேலாக யாகத்தைப் பாழ்படுத்துதற்கென்றே துணிந்திருந்த ராக்ஷசர்களைத் தோற்கடிப்பது தசரத குமாரனுக்குத்தான் சாத்தியம் யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் அதிவிரைவில் நிறைவேறின அதைப் பூர்த்தி பண்ணுதற்கு ஆறு நாட்கள் பிடிக்கும் அந்த ஆறு நாட்களிலும் மஹரிஷி மௌனமுற்றிருத்தல் வேண்டும். எந்த க்ஷணத்தில் வேண்டுமானாலும் ராக்ஷசர்கள் யாகசாலையின்மீது மோதுவார்கள் ஆதலால் உணவும் உறக்கமுமின்றி அரசகுமாரர்கள் அல்லும் பசுலும் முழு விழிப்புடன் வேள்வியைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு முற்றிலும் ஆயத்தமாக அண்ணனும் தம்பியும் காத்திருந்தனர். கடைசி நாளன்று வானத்தில் ஒரே கர்ஜனை. கார்மேகம் மலைமலையாக உருண்டு வருவதற்கு நிகராக அரக்கர் படை தோன்றுவதாயிற்று. அப்படைக்கு மாரீசனும் சுபாகுவும் தலைமை தாங்கினர் தம்பி இலட்சுமணன் என்ன செய்யவேண்டும் என்பதை அவனுக்குத் தெரி வித்துவிட்டு மூத்தவன் மானவ அஸ்த்ரத்தை மாரீசன் மீது ஏவினான். அந்த அஸ்திரமும் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றியது. தாக்க வந்தவனைத் தகர்த் துத் தள்ளுவதற்குப் பதிலாக அவன் உள்ளத்தில் குழப் பத்தைக் கிளப்பி அவனைக் கடலினுள் வெகுதூரத் துக்கப்பால் வீசியது. ஆக்னேய அஸ்திரத்தை ஏவி இராமன் சுபாகுவைச் சுட்டெரித்தான். பிறகு இரு சகோதரர்களும் ஒன்று கூடி மலைமலையாகப் புரண்டு வந்த ராக்ஷசப் படைகளைத் துடைத்துத் தள்ளினர். யாகமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது ஆறு நாட்கள் ஆறு மாதங்களுக்கு நிகராகச் சிக்கல் நிறைந்த நெருக்கடிகளை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. ராம லட்சுமணர்களைத் தவிர வேறு யாருக்குமே அந்த நெருக்கடியைச் சமாளிக்கச் சாத்தியப்படாது. விஸ்வாமித்ர மகாமுனிவருக்குப் பரமதிருப்தி உண்டாயிற்று.
தசரதச் சக்கரவர்த்திக்குத் தாம் எவ்வளவு தூரம் கடமைப்பட்டவராக இருந்தார் என்பதை உள்ளத் தினுள் உணர்ந்தார். அதை வாய்விட்டுப் பேசவில்லை. ஆனால் ராஜகுமாரர்களுடைய பராக்கிரமத்தைத் திரும்பத்திரும்பப் பாராட்டினார் சித்தாஸ்ரமம் என் றால் தொடுத்த கர்மத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் ஸ்தாபனம் எனப் பொருள்படுகிறது இன்றைக்குச் சித்தாஸ்ரமம் உண்மையாகவே சித்த ஆஸ்ரமாக இலங்குகிறது என்று இயம்பினார். தீமையை எதிர்த்து வெல்லுபவன் சித்தன். அந்த ஆஸ்ரமத்துக்கு அத்தகைய அந்தஸ்தை அமைத்தவர்கள் இராமனும் இலட்சுமணனும் ஆவார்கள்.
தசரத குமாரர்கள் தரணியில் எதற்காகத் தோன்றி யிருக்கிறார்கள் என்பதைத் தகைசான்ற விஸ்வாமித்ர விப்ரர் நன்கு அறிந்திருந்தார். அந்தத் தெய்விகத் திட்டம் நன்கு நிறைவேறுதல் பொருட்டுத் தமக்கு வாய்த்திருந்த பெரிய கடமையையும் அந்தத் தபோதனர் நன்கு உணரலானார். தமக்குத் தசரத குமாரர்களின் சீரிய தொண்டு முற்றிலும் தேவையாயிருந்தது என்று அவர் வெளிக்குக் காட்டிக்கொண்டார். உள்ளூர உள்ளத்தில் அவர் உணர்ந்திருந்தது இந்த ராஜகுமாரர்களை உலக க்ஷேமத்திற்காக ஆயத்தப்படுத்தல் ஒன்றேயாம்.
அரச குமாரர்களிருவரும் தங்களுடைய இறைய வனாரிடமிருந்து அடுத்து வருகிற ஆணையை நிறை வேற்றுதற்கு அமைதியுடனும் பணிவுடனும் காத்திருந்தனர்.
இராமாயணம் – 5 இராமனும் குரு ஆணையை நிறைவேற்றத் தொடங்கினான்… ஏன்..? Asha Aanmigam