அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த பட்டணம் ஒன்று இருந்தது. அதன் பெயர் மிதிலாபுரி. அதை ஜனசு மஹாராஜா ஆண்டு வந்தார் அவர் கல்வியிலும் மேன்மையுற்றிருந்தார். பண்பாட்டில் சிறந்த அவர் யாகம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்து வந்தார். அத்துடன் அவரிடம் அதிசயிக்கத்தக்க வில் ஒன்று இருந்தது. பல இடங்களிலிருந்து கற்றவர்களும் மற்றவர்களும் ஆற்றல் மிக வாய்க்கப் பெற்றிருந்த அரச குமாரர்களும் அவ்விழாவில் கலந்து கொள்ள ஆங்கு வந்துகொண்டிருந்தனர். சித்தாஸ்ரமத்தின் குலபதியா கிய விஸ்வாமித்ர மஹரிஷி அவ்வேள்வியில் கலந்து கொள்ள இசைந்திருந்தார். அவருடன் ஆஸ்ரமவாசிகள் பலர் புறப்பட்டுப் போவதற்கும் ஆயத்தமாய்க் கொண்டி ருந்தனர். இவ்விஷயங்களையெல்லாம் ஒரு நாள் காலை யில் விஸ்வாமித்ரர் ரகுராமனுக்கு எடுத்துரைத்தார். விருப்பமிருந்தால் அந்த அரசகுமாரர்களிருவரும் இந்த யாகத்தைப் பார்க்க வரலாம் என்று இயம்பினார்.
ஆச்சாரியர் ஆணைப்படி நடந்து கொள்ளத் தாங்கள் என்றும் ஆயத்தமாயிருப்பதை அவரிடம் இராமன் தெரிவித்தான். பொருளைத் தொடர்ந்து நிழல் வருவதற்கு நிகராகக் குருவைப் பின்பற்றிச் சிஷ்யர்கள் செல்வதுதான் முறையென்றும் அவன் இயம்பினான் ஆஸ்ரமத்தின் திருக்கூட்டம் புறப்பட்டுச் சென்றது. அத் திருக்கூட்டத்தில் இராமனும் இலட்சு மணனும் சேர்ந்திருந்தது ஆஸ்ரமவாசிகள் எல்லார்க் கும் பெரு மகிழ்வை ஊட்டியது. போய்க்கொண்டிருந் தவர்களுக்கு மிதிலாபுரியின் காட்சி நெடுந்தூரத் திற்கு அப்பாலிருந்தே கண்ணுக்குத் தென்பட்டது. தூரத்தில் இருந்தது எனினும் அது மிகவும் கவர்ச்சி கரமாக இருந்தது. ஆயினும் அதனோடு சீர்தூக்கிப் பார்க்குமிடத்துப் பாழடைந்து கிடந்த ஆஸ்ரமம் ஒன்று இடைவெளியில் தென்பட்டது. முன்பொரு காலத்தில் இந்த ஆஸ்ரமம் மேன்மைகள் பலவற்றைப் படைத்திருந் ததன் அறிகுறிகளும் தென்பட்டன. அதற்குக் காரணம் யாதோ என்று இராமன் முனிவரிடம் வேண்டினான்.
அந்த ஆஸ்ரமத்தின் வரலாற்றை விஸ்வாமித்ரர் ரகுவீரனிடம் எடுத்தியம்பினார். முன்னொரு காலத் தில் அந்த ஆஸ்ரமம் அழகுக்கும் அருளுக்கும் உறைவிட மாயிருந்தது. கௌதம மஹரிஷி அதன் குலபதியாயிருந் தார். அந்த ரிஷியின் வாழ்க்கைத் துணையாயிருந்தவள் அகல்யை. அவளுடைய அழகோ ஒப்புயர்வு அற்றது. தேவேந்திரனுடைய மனத்தை அம்மாதரசியின் மேலாம் அழகு கவர்ந்தது. காம நோய்க்கு உட்பட்ட அவ் விண்ணவர்கோன் கௌதம முனிவர் போன்று வேஷம் பூண்டு வந்து அந்த அழகியோடு முறைவழுவிக் கூடலானான். நிகழ்ந்ததைக் கௌதமர் கண்டுபிடித்து விட்டார். நெறிவழுவிய ஆடவனை அலியாகும்படியும் பெண்பாலைக் கல்லாகும்படியும் அந்த ரிஷி சபித்தார். இந்த விபத்துக்கு விமோசனம் இல்லையா என்ற விண்ணப்பம் நெறிவழுவிய இருவரிடமிருந்தும் வந்தது. பின்பு ஒரு காலத்தில் இராமன் என்னும் நாமம் தாங்கிய நாராயணனுடைய அவதார மூர்த்தி அப்பக்கத்தில் வருவான். அவன் வாயிலாக விமோசனம் வாய்க்கும்; அப்பொழுது தபஸ்வியாகிய தாமும் அங்குத் திரும்பி வரும்படி வாய்க்கும் என்று சொன்னார். மனதிலே சஞ்சலத்தை ஊட்டிய இந்த நிகழ்ச்சியை மறந்திருத்தல் பொருட்டு அவர் ஹிமாசலத்துக்குப் புறப்பட்டுப் போனார். இவ்வரலாற்றை இயம்பி முடிப்பதற்குள் ளாக அத்திருக்கூட்டம் பாழடைந்து கிடந்த எல்லைக் குள் வந்து விட்டது. கதையைக் கேட்டுக்கொண்டு வந்த இராமனுடைய பாதம் தரையின்மீது கிடந்த கல்லின் மீது தற்செயலாய்ப் படிந்தது. அவனுடைய திருவடி பட்டவுடனே அந்தக் கல் மாயமாய் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக நேர்மை வாய்க்கப்பெற்ற மாது ஒருத்தி பக்தி நிறைந்த அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். இவள்தான் சாபத்துக்கு இலக்கான மாதரசியாகிய அகல்யை ஆவாள் சிறிது நேரத்துக்குள் ளாக முன்பு சங்கல்பித்திருந்தபடி கௌதம மஹரிஷியும் அங்கே பிரசன்னமானார். இப்பொழுது ரிஷி தம்பதிகளா சிய இவர்கள் இருவரும் ஒன்றுகூடி இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் பாதபூஜை விரிவாக நடாத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியிலே இயற்கையின் பெரிய திட்டம் ஒன்று புதைந்து கிடக்கிறது. பிரபஞ்சமெங்குமுள்ள ஜீவாத்மாக்கள் தங்களுடைய யதார்த்த நிலையினின்று வழுவிக் கீழ் நிலைக்கு வந்தவர்கள் ஆவார்கள். அக்கீழ்நிலையோ கல்லுக்கு ஒப்பாகிறது ஜடபுத்தியில் ஜீவாத்மாக்கள் உழன்று கிடக்கின்றன ஆனால் பரமாத்மாவோடு தொடர்பு வைப்பதற்கேற்ப ஜட நிலை பின்னணிக்குப் போகிறது. படிப்படியாகச் சேதன நிலை முன்னணிக்கு வருகிறது. இதுவே ஜீவாத்மனைப் பற்றிய உண்மை. இக்கோட்பாட்டை இக்காலத்திய பௌதிக விஞ்ஞானம் தன்போக்கில் விளக்குகிறது. உயிரற்றுக் கிடப்பவைகள் உயிர் உற்றவைகளாகத் திருந்தியமைவது இயற்கையின் திட்டமென்று பௌதிக விஞ்ஞானம் இயம்புகிறது. இயற்கையின்கண் இது சதா நிகழ்ந்து கொண்டிருக் கிறது வெறும் மணல் தரையாயிருப்பது செழிப்பு நிறைந்த மண் தரையாய் மாறுவதை இதற்குச் சான்றா சுக் காண்கிறோம். செழிப்புத் தரையில் செடிவகைகள் உயிராக உருவெடுக்கின்றன. இதே பேருண்மையைப் புராணம் தன்போக்கில் புகட்டுகிறது. கன்னியாகுமரி யாகிய பார்வதி பர்வத ராஜனுடைய புதல்வி, மலை மகள் என்னும் பெயர் பெறுகிறாள் மலையோ உயிரற்ற கல் அதினின்று உயிர் உருவெடுப்பது குமரியின் சம்பவம் என விளக்கப்படுகிறது. இக்குமரி சிவனாரை அடைதல் பொருட்டுத் தென்முனையில் தவம் புரிவதில் அந்த மேலாம் கருத்து அடங்கியிருக்கிறது ஜீவாத்மாக்கள் யாவும் படிப்படியாகக் கல் நிலையினின்று கடவுள் நிலையை எட்ட முயலுவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது அகல்யா தேவியின் சாப விமோசனமாம்.
இராமாயணம் – 6 இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் பாதபூஜை | Asha Aanmigam