ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்:
“காசிபன் மகனே! புத்திரன் முதலியோர், தன் தாய்தந்தையர்களைக் குறித்து ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தை தன் மகனுக்கும், தமையன் தன் தம்பிக்கும் சிரார்த்தம் செய்யும்படி நேரிட்டால், தன் தலைமுறையில் உள்ளவரைக் குறிக்காமல், இறந்தவனைக் குறித்து மட்டுமே செய்யவேண்டும். ஆசௌசம், விருத்தி முதலியவை நேரிட்டால், அவை: நீங்கிய தினத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மரித்தவனுக்குக் கிருத்தியம் செய்யும் பொழுதே. சபிண்டீகரணம் செய்யாமல் மாசிகம் மட்டுமே செய்து வரும்போது, ஆசௌசம் நேர்ந்து மாசிகம் நிறுத்தப்படுமானால், அந்த மாசிகத்தை மறு மாசிகத்தோடு சேர்த்துச் செய்யல் வேண்டும். சபிண்டீகரணம் செய்து மாசிகம் செய்யப்பட்டு வந்தால், ஆசௌசத்தால் நின்ற மாசிகத்தை, அந்த ஆசௌசம் நீக்கிய தினத்தில் செய்யலாம்.
பூணூல் பூணாத புத்திரன், சிரார்த்தம் செய்யும்படி நேரிட்டால் சங்கற்ப விதானத்தோடு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் தேசாந்திரத்தில் பலர் இறந்தார்கள் என்று கேள்வியுற நேரிட்டால், யாவன் இறந்தான் என்று முன்பு கேட்டானோ அவனுக்கு முன்னதாகவும் மற்றவருக்குப் பிறகும் கிரியைகளைச் செய்ய வேண்டும். தினம் தெரிந்து மாதம் தெரியாவிட்டால், ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய இந்த மாதங்களில் கிருஷ்ணபக்ஷத்தில் அஷ்டமியிலாவது, அமாவாசையிலாவது ஆவது செய்யலாம். தேசாந்தரத்தில் ஒருவன் இறந்தால், அவன் இறந்த தினமாவது மாதமாவது தெரியாவிட்டால், அவன் தேச யாத்திரைக்குப் புறப்பட்ட திதியில் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்துக்குத் தலைவனாக இருந்தவன். சார்ந்த சில சிலரோடு தேசாந்திரம் சென்ற அவனைச் போது, அவர்களில் ஒருவன் இறந்துவிட்டால், அந்தத் தலைவன். அங்கேயே ஆசௌசம் அனுஷ்டித்து பிறகு மனைக்கு வருவானால், அந்தக் காலத்தில் அவனது புத்திரன் வேறு ஒருவனுக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்தால், வந்த தலைவன், சிரார்த்தம் செய்து முடியும் வரையில் சற்று தூரத்தில் இருந்து. பிறகே வீ ட்டுக்கு வருதல் வேண்டும்.
சிரார்த்தத்துக்கு வரிக்கப்பட்ட பிராமணன் மேற்கூறிய செய்தியை முன்னதாக உணர்ந்தும் அதைச் சிரார்த்தம் செய்யும் புத்திரனுக்குச் சொல்லாமல் சிரார்த்தத்தில் சாப்பிட்டால் தோஷம் அந்தப் பிராமணனையே சாரும். தாய் தந்தையர்கள் இறந்த திதியை மறந்து விட்டால் அஷ்டமியிலாவது. ஏகாதசியிலாவது, அமாவாசையிலாவது நீத்தார் கடன்களைச் செய்தல் வேண்டும். செய்யாமல் விட்டு விடக்கூடாது. அவற்றைச் சிரார்த்தம் செய்யாமல் விடுபவன் எவனோ, அவனே சண்டாளன். ஒருவன் மரிக்கும் காலம் வரையில் நாள்தோறும் நித்திய சிரார்த்தம் செய்வானாகில் அவனுக்கு மிகவும் நன்மையுண்டாகும். இறந்தவனைக் குறித்தல்லாமல் உயிரோடு இருப்பவன் தன் க்ஷேமார்த்தமாகச் செய்யத் தக்கதாகிய இந்த நித்திய சிரார்த்தத்துக்கு விதியொன்றும் இல்லை. ஆவாஹனமுமில்லை. பிராமணார்த்தம் சாப்பிடுகிறவனுக்கு யாதொரு நிர்ப்பந்தமான விதி முறையெதுவுமில்லை. தினந்தோறும் பிராமணனுக்குப் போஜனம் செய்வித்தல் மட்டுமே போதுமானது,” என்று திருமால் கூறியருளிவிட்டுக் கருடனை நோக்கி, “கருடா! நீ என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய பதில்களைச் சொல்லி விட்டேன். இனி, கேட்க வேண்டியது ஏதாயினும் கேட்பாயானால் அதற்கும் பதில் சொல்கிறேன் என்றார்.
கருட புராணம் – 30 வருஷ நித்திய சிரார்த்தங்கள் | Asha Aanmigam