திருக்கயிலையில் பேரொளி பொங்க திருத்தோற்றம் அளிக்கும் கந்தபுரியில் ஈசனின் செல்லப் பிள்ளையான செந்தில் ஆண்டவன் வழக்கம் போல் தமது இளையவர்களோடு உல்லாசமாக உப்பரிகையிலும் உயர்ந்த துவஜஸ்தம்பங்களிலும், கயிலைமலை சிகரத்திலும் விதவிதமான வேடிக்கைகள் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அது சமயம் நான்முகன் தேவாதிதேவர்களும்,...
பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான மயன் மிக பிரம்மாண்டமான மணி மண்டபம், யாகசாலை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தான். ஆயிரக்...
பார்வதிக்கு வரம் அளித்து அருள் புரிந்த அம்பலவாணர், கயிலை மலை ஞான பீடத்தில் ஜோதி சொரூபனாய் எழுந்தருளியிருந்தார். ஈசன் தமது திருமண வைபவத்தை மனுஷ்ய சம்பிரதாயப்படி நடத்தத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பொறுப்பான சடங்கினை நிறைவேற்ற தகுதி வாய்ந்தவர்கள் சப்தரிஷிகள் என்ற...
பிரம்ம தேவன் தமது புத்திரர்களான சனகர், சனந்தனர் முதலான முனிவர்களுக்குப் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்படிச் சொன்னார். ஆனால் பிரம்மபுத்திரர் களோ தந்தையின் ஆணையை ஏற்க மறுத்தனர். பிரம்ம புத்திரர்கள், ஈசனைத் தரிசித்து முக்தி நிலை அடைவதற்கான ஞான மார்க்கத்தைப் பெறப் போகிறோம்...
சூரன் போருக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்தான். அண்டங்களில் இருந்த சேனாவீரர்களைக் களம் புகக் கட்டளை இட்டான். கணக்கிலடங்கா அளவிற்கு வந்துவிட்ட சேனைகள் காலியாக இருக்கும் இடமெல்லாம் வந்து கூடினர். சூரன் போர்க் கோலம் பூண்டான். ஈசனைப் பணிந்து போற்றினான் . ஈசன் மற்றும்...
திருக்கயிலைத் திருமாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் - நவரத்தின பொன்மணி சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரியன் உதித்தாற் போன்ற பேரொளி யுடன் அருள்வடிவான ஈசனும் கருணையே வடிவான ஈசுவரியும் எழுந்தருளியிருந்தனர். அங்கே தேவகானம் வேதமந்திர ஜபத்தோடு இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சிவகணத்தவர்கள்...
ஸ்ரீ தமிழ் முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீமத் ராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல், பதினெண் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் கந்தபுராணம்...