வளர்பிறை அஷ்டமி விரத பூஜை – கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
வளர்பிறை அஷ்டமி என்பது மாதந்தோறும் 15 நாட்களும் கொண்டுள்ள வளர்பிறையில் வரும் அஷ்டமி தினமாகும். இந்த நாளில் பைரவப் பெருமான் வழிபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். ராகு கால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணாகர்ஷண பைரவருக்கு மந்திரத்தை கூறி வர வேண்டும்.
பைரவரின் மகத்துவம்
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார். பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினமாக வளர்பிறை அஷ்டமி தினம் கருதப்படுகிறது. குறிப்பாக பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.
பூஜையின் வழிமுறை
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம். 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து, அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை “ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
பைரவரை வணங்கினால் கிடைக்கும் நன்மைகள்
வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப் பெருமானை வழிபடலாம். நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும். இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பின், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். குடும்ப உறவுகள் மேலும் இனிமையடையும்.
பைரவரின் அருள் மற்றும் சனியின் பிரச்சினைகள்
சனியின் குரு பைரவர், சனியின் வாத நோயை நீக்கியவர். தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். பைரவர் அவனுக்கு மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும். ஏழரை சனி, அஷ்டமச் சனி போன்ற பிரச்சினைகள் நீங்குவதற்கு பைரவரின் அருள் முக்கியமானதாகும்.
சொர்ணாகர்ஷண பைரவர்
சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். சிறந்த வணிக சாதனை கிடைக்கும். இது தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களின் அருளை அடைய உதவும்.
பொன்னும் பொருளும் கிடைக்கும்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித் தருகிறார்.
பூஜையின் பலன்கள்
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.