அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது. அதை தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானப்பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து இன்று கட்டுமான பணி தொடங்குகிறது. சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை ஆண்டுகளில் கோவில் பணி முற்றிலும் முடிவடையும். 2024-ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிலுக்கான திட்ட வரைபடம், ஒப்புதலுக்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கட்டணமாக ரூ.2 கோடி செலுத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.