திரிபுராவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில், துர்கா பூஜையை (நவராத்திரி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் பாதுகாப்பாக கொண்டாட அரசு வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திரிபுராவில் கொரோனா நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. நவராத்திரி பண்டிகை காலம் நெருங்குவதால். அதன் முக்கிய விழாவான ‘துர்கா பூஜை’ மேற்கு வங்கம், உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனாவின் தீவிரத்தை கருத்திற் கொண்டு அனைத்து மாநிலங்களும் முக்கிய விழாக்கள் / பண்டிகைக்கான வழிகாட்டுதல்களை கூறுகிறது. அதனை பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.
திரிபுராவில் துர்கா பூஜையை பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை முன்னதாக செப்.,4 அன்று வெளியிட்டது. தொற்று தீவிரமடைவதால், தற்போது சில திருத்தங்களையும் அரசு கொண்டு வந்ததாகவும் கூறுகிறது. அதன்படி, துர்கா பூஜையை கொண்டாடும் அமைப்பாளர்கள் சந்தாவை ஆன்லைனில் சேகரிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறையின்படி, விழாவுக்கான பந்தல்களை குறைக்க வேண்டும். பந்தல்களில் குறுகிய நுழைவு மற்றும் வெளியேறும் அமைப்புகளை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 முதல் 10 பேர் சுவாமி சிலையை அனுமதிக்கப்படுகிறது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, அனைத்து பூசாரிகள், பூஜை அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் அக்.,21 ஆம் தேதி வரும் பஞ்சமிக்கு முன் கொசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பூஜை நடக்கும் இடத்திற்கு அருகே கொரோனா சோதனை குழுக்கள் இருக்கலாம். துர்கா பூஜை பண்டிகையின் போது சுவாமியை தரிசிக்க வரும் / பார்வையிடும் பக்தர்களுக்கு சோதனைகள் நடத்தப்படலாம். விழா நடக்கும் இடங்கள் காற்றோட்ட வசதியுடனும், கூட்டம் அதிகமாக இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். 10 முதல் 15 பேர் ஒரே நேரத்தில் புஷ்பாஞ்சலியில் பங்கேற்கலாம். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பூக்களை கொண்டு வரலாம். பூஜை பந்தல்களுக்கு முன்னால் எந்தவிதமான கண்காட்சிகளையும் அரசாங்கம் தடைசெய்தது, கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக பூஜா பந்தலிலிருந்து சிறிது தூரத்தில் சில ஸ்டால்களை அமைக்கலாம்.
தசரா அன்று பூஜைக்கான விழா அமைப்புகள் சிண்டூர் கெலா என்ற பாரம்பரிய சடங்கை ஏற்பாடு செய்யும். இந்த சடங்கு துர்கா தேவிக்கு செய்யப்படும் வழிபாடு முறைகளில் ஒன்றாகும். எந்த ஊர்வலமும் இல்லாமல் சுவாமி சிலைகளை பந்தல்களுக்கு கொண்டு வரும் படி பூஜை அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் துர்கா தேவியை தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கைகைளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பந்தல் குழுக்களில், கூட்டத்தை கண்காணிக்க சிசிடிவி அமைக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூஜையின் போது வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொது துர்கா பூஜை கொண்டாட்டம் இருக்காது என்றாலும், மண்டலங்களுக்குள் வசிக்கும் மக்கள் அந்தந்த வீடுகளில் கொண்டாடலாம். திரிபுராவில் இதுவரை 28,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 313 பேர் நோயால் பலியாகியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....
இராமாயணம் இதிஹாசம் ஏற்றிய வால்மீகி பண்டைக் காலத்தில் நம் நாட்டிலே முற்றிலும் பண்பாடு அடைந்துள்ள மேன்மகன் ஒருவனை ரிஷி என்று அழைப்பது வழக்கம். அந்த இலட்சியம் மங்கிப்...
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பேயாழ்வாரின் தெய்வீக வரலாறு பற்றிய இந்த விவரிப்பு மிகவும் செழுமையானது. இந்த கோவிலின் தொன்மையும், ஆழ்வார்களின் புனித இடமாகவும் மயிலாப்பூரின்...
இந்தியாவின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் தற்காலிகப் பொறுப்புகளைச் சிக்கலற்றதாக மாற்றும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics...
பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக திருச்சி எஸ் சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் விவகாரமே அவர்...