ஸ்ரீமந் நாராயணமூர்த்தி கூறியவற்றை, கருடன் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
பிறகு ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கிக் கூறலானார்:-
“பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனி உள்ளன. பேதங்கள் அவை அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன. அந்த நான்கு வகையில், அண்டஜம் என்ற வகையில் முட்டையில் இருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் முதலியன தோன்றின. பூமியினின்று தோன்றினவாகிய உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி முதலிய தாவர வகைகள் தோன்றின. கருப்பப்பையில் இருந்து தோன்றுவதான சராயுசம் என்ற இருபத்தோரு வகையில் லட்சம் மனிதர் முதலானவர்கள் தோன்றினர். வேர்வையில் இருந்து தோன்றுவதான சுவேதசம் என்ற வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.
கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி கிடைப்பது அரிதினும் அரிது. அந்த மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். பொருள்களைப் பார்ப்பதற்குரிய கண்களும். விஷயங்களைக் கேட்பதற்குரிய காதுகளும், இனிமையை உணர்வதற்குரிய நாக்கும், வாசனைகளை அறிவதற்குரிய நாசியும் காமவின்பந் துய்ப்பதற்குரிய மெய்யும் (உடம்பும்) நன்மை தீமைகளைப் பகுத்து உணர்வதற்கு உணர்வும் இருப்பதால், மானிடப் பிறவியே சிறப்புடையது. அம் மானிடரில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு ஜாதியர் உள்ளனர். ஆடைகளை வெளுக்கும் வண்ணாரும், தோல் தைப்பவரும். நாட்டியமாடுவோரும். ஓடம் விடுவோரும், கம்மாளரும், நுளைஞரும், வேடரும் ஆகிய இவர்கள் சூத்திர ஜாதியிலும் அடுத்த ஜாதியராவர். உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகிய இவை அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் உரியதான இயற்கையாகவுள்ளன. ஞானம் மட்டும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதல்ல.
சில தேசங்களில் மக்கள், ஒரே காலுடையவராகவும் சில தேசங்களில் இரண்டு கால்களையுடையவராகவும் சில தேசங்களில் அநேகம் கால்களையுடையவராகவும் இருக்கிறார்கள். கிருஷ்ணசாரம் என்ற கறுப்பு நிறமுடைய மான்கள் எந்தப் பூமியில் வசிக்கின்றனவோ அந்தப் பூமியே புண்ணிய பூமியாகும். அந்தப் பூமியில் தேவர்களையும் முனிவர்களையும் பிதுர்க்களையும் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் மிகவும் உண்டாகும். அந்தப் புண்ணிய பூமியிலேதான் முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்போதும் சாந்நித்தியமாக இருப்பார்கள்.
கருடனே! பூதப் பிரேத, பைசாசாதிகளில் ஆவியுருவம் மட்டுமேயுண்டு. அவற்றில் தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். அந்த ஜீவர்களில் பசு, பக்ஷிப் பிறவிகளெடுத்து. சிறிது அறிவோடு ஜீவிக்கும் தேங்கள் சிறப்புடையன. அவற்றைவிட மனிதர் சிறப்புடையவர்கள். அம்மானிடருள்ளும் பிராமணர்கள் மிகவும் சிறப்புடையவர்கள். அப்பிராமணர்களிலும், உபசார வழக்கமாக வாழ்க்கை நடத்தாமல், லௌகீக அகடவிகட சாமர்த்தியச் சழக்குகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு வேதார்த்தங்களை உள்ளபடி கற்றுணர்ந்தவர்கள் சிறப்புடையவர்கள். அவர்களையும் விட, தாம் உணர்ந்த வழியிலேயே நிலையாக நிற்பவர்கள் இன்னும் சிறப்புடையவர்கள். அவர்களையும்விட, பிரம்மஞானம் அடைந்தவர்கள் இன்னும் அதிகச் சிறப்புடையவர்கள்.
கருடா! பல கோடிப் பிறவிகளாலேயே அடையப்படுவனவாகிய சுவர்க்கமோட்சங்களை அடைவதற்கு மானுடப் பிறவியே காரணமாக இருக்கிறது. அத்தகைய மானுடப் பிறவியை அடைந்து, நல்ல வினைகளைச் செய்து நல்ல உலகத்தை அடையாமல், நரகலோகத்தில் தள்ளக்கூடிய தீய செயல்களையே புரிந்து அத்தகைய உயர்ந்த மானிடப் பிறவியையே வீணாக்குபவர்கள் தான் உலகில் மிகப்பலராக இருக்கிறார்கள். புண்ணியத்தால் அடைந்த அந்த மானுடப் பிறவியால், பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள்.
மண் ஆசை, பெண்ணாசை, பொருள் ஆசை எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து, தன் மனச்சாட்சிக்கும் மனிதாபிமான உணர்வுக்கும் மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவானேயல்லாமல், தன்னைப்போன்ற மனித வர்க்கத்தினரோடு ஒப்பிடத்தக்கவனல்லன். அவனை விடத் தீயவன் ஒருவனுமிரான். ஆசைப்பெருக்கத்தால் ஆசையானது பேராசையாகுமே அல்லாமல், அறிவுணர்வும் அன்புணர்வும் அறநெறி வாழ்வும் வளராது, பேராசையால் பிணிக்கப்பட்ட மனிதன், தன் பேராசை மிக்க மனத்தாலேயே, இவ்வளவு அவ்வளவென, அளவு எதுவுமில்லாமல் யாவுமே நிறையக் கிடைத்தாலும் ‘இன்னும் வேண்டும்’ ‘இதைவிட அதிகம் வேண்டும்’ என்று அலையாய் அலைவானே தவிரத் தனக்குக் கிடைத்ததைக் கொண்டு ஒருபோதும் திருப்தியடைய மாட்டான்.
அத்தகையவனுக்கு ஒரு நூறு பொன் கிடைத்தால் அதைக்கொண்டு திருப்தியடைந்துவிட மாட்டான். ஆயிரம் பொன் வேண்டும் என்று இச்சிப்பான். அந்த இச்சைக்காக அறநெறிகளை மீறுவான், மனச்சாட்சியை மீறுவான். இந்நிலையில் அவனுக்கு ஆயிரம் பொன் கிடைத்தால், அதோடும் திருப்தியடைய மாட்டான். ஆயிரம் பொன் அடைந்தவன் லட்சம் பொன்னை இச்சிப்பான். லட்சம் பொன் அடைந்தவன் கோடிப் பொன்னை இச்சிப்பான். கோடிப் பொன் அடைந்தவன் ஒரு தேசத்தின் பகுதியைத் தனதாக்கிக் கொள்ள இச்சிப்பான். ஒரு பிறகு அரசனாக விரும்புவான். அரசனான பின், புவி முழுதுக்கும் ஏகச் சக்கராதிபதியாக விரும்புவான். அவ்வாறு சக்கரவர்த்தியான பிறகோ அப்போதும் ஆசை விடாமல் தேவனாக வேண்டுமென இச்சிப்பான். தேவனானவுடன் தேவேந்திரன் ஆவதற்கு இச்சிப்பான். இவ்விதமாக இச்சையானது மேலும் மேலும் பெருகுமே அன்றி. ஓர் அளவோடு அது நிற்பதில்லை. இந்த இச்சையானது பொருள் ஆசையாக இருப்பது மண்ணாசையாக மாறும், மண் ஆசை வளர வளரப் பெண்ணாசை வளரும். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய இம்மூன்றும் மனதில் பெருகப் பெருக. அவன் மனிதத் தன்மையையே இழந்துவிடுவான்; குழப்பத்துக்கு ஆளாவான். அறிவு சரிவர வேலை செய்யாமல், ஆசையுணர்வே அதிகமாவதால், தன்னாசை நிறைவேற, தான் அடைய இச்சிக்கும் பொன்னுக்கும். மண்ணுக்கும், பெண்ணுக்குமாகச் சுயநலக்காரனாக மாறுவான். அக்கிரமக்காரனாக, பலருக்குத் துரோகம் செய்து தன் ஆசைகளை நிறைவேற்றுவதில் வெறியனாகி விடுவான். அவனது ஆசைகள் வளருகிற அந்த அளவுக்கு அவன் வாழும் காலம் நீடிப்பது இல்லை.
மேலும், இத்தகைய இச்சையை ஒழிக்காதவன். கண்டவருக்கெல்லாம் கரங்குவிப்பான். பிறரால் இகழப்படுவான். இறுதியில் இறந்த பிறகு, நரகத்துக்கே ஆளாவான். ‘கொடிய கேடுகள் ஒருங்கே அடைவதற்கு ஆசை எனப்படும் இந்த அவாவே காரணம்!’ என்றும் ஆசையே அழிவுக்குக் காரணம்’ என்றும் போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, தம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள், புலன்கள் சென்ற வழியில் மனதைச் செல்ல விடாமல், மனதையடக்கிச் சுதந்தரமாக எவன் ஒருவன் இருக்கிறானோ, அவனே எல்லா வகையான நன்மைகளுக்கும் உரியவனாவான். சுதந்திரம் இல்லாதவன், பாலிய பருவத்தில் தாய் தந்தையரது சொற்கேட்பவன், யெளவனப் மோக்ஷ பருவத்தில் ஸ்திரீக்கு மூதேவியாகியவளின் கட்டளைக்குப் பணிந்து அவள் கட்டளைகளை தலைமேல் தூக்கி நடப்பவன், வயோதிகப் பருவம் வந்ததும் தன் புத்திரர், பௌத்திரர்கள் துணிந்து ‘கிழப் பிணமே’ வாய்திறவாமலே வெறுமனே விழுந்துகிட’ என்று இழித்தும் பழித்தும் அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம் பொறுமிக் கிடப்பான். ஆகையால், கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனே ஆனாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பெண்ணைப் போல என்றுமே சுதந்திரம் இல்லாதவனாகக் கிடப்பான்!
”கருடனே! உணர்வினாலும் கேட்பதாலும் ஸ்பரிச பார்வையினாலும் நாவின் ருசியாலும் முகரும் நாசியாலும் நாசமடைவதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன! புள்ளிமானானது, புல்லாங்குழலின் இசையைக் கேட்டு மயங்கித் தான் இருக்குமிடத்தை விட்டு அசையாமல் இருந்து, வேடனாற் பிடிக்கப்படுவதால், அந்தப் புள்ளிமான் காதால் கெடுவதாகும். புணர்ச்சியை விழைந்த ஆண் யானை ஒரு பெண் யானையைப் பின் தொடர்ந்து சென்று, யானை வேட்டைக்காரர்கள் தோண்டிய படுகுழியில் விழுவதால், அந்த யானை ஸ்பரிச இன்பத்தால் கெடுவதாகும். விட்டிற் பூச்சிகள் மழைக் காலத்தில் எரியும் விளக்கைக் கண்டு, கனிந்திருக்கும் நல்லதொரு கனி என்று நினைத்து, அதில் பாய்ந்து விழுந்து, எரிகின்ற விளக்கின் ஜ்வாலையில் விழுந்து எரிந்து தீய்ந்து போவதால் அது கண் பார்வையால் கெடுவதாகும்.
தேனீக்கள் தேன் சுவையை விரும்பித் தம் கூட்டிலே தேனைச் சேர்த்து, அதில் தங்கியிருக்கும்போது, தேன் சேகரிக்கும் வேடர்கள் தீயால் கொளுத்தி தேனீக்களை விரட்டியும் சாகடித்தும் தேனைக் கவர்ந்து செல்வதால் அத்தேனீக்கள் நாவால் கெடுவனவாகும். தூண்டில் முள்ளின் முனையில் கோர்த்த மண்ணுள்ளிப் புழுவின் இறைச்சியின் நாற்றத்தை விரும்பிய மீன், அதைப் பற்றியிழுத்து, தூண்டில் முள் நெஞ்சில் செருகி துடிதுடித்து மடிவதால் அந்த மீன் நாசிப்புலனால் கெடுவதாகும்.
பரு கருடா! இவ்வாறு இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாக இராது என்பதில் சந்தேகமும் உண்டாக முடியுமா? இல்லற வாழ்வின் சுக துக்கங்களில் எது அதிகமாயினும், பெண்டு பிள்ளைகள் அதிகமாகிப் பந்த பாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான். பாலியனாயினும் யுவனாயினும் விருத்தனாயினும் நாட்கள் கழிந்து செல்வதையே கணித்துக் கொண்டிருக்கும் ‘மிருத்யு’ (மரண தேவன்) என்று ஒருவன் இருக்கத்தான் இருக்கிறான். அவன் இருப்பதை உணர்ந்து நடப்பவன்தான் இல்லை.
உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான். யாரிடமும் சொல்லாமல் கேளாமல் வந்து பிறப்பதைப் போலவே, பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், பொருளாசையால் தேடிய பொருள். மண்ணாசையால் தேடிய மனை, மாளிகை ஆகிய அனைத்தையும் விட்டு, உற்றோரும் உறவினரும் பெற்றவர்களும் பார்த்திருக்கச் சொல்லியது சொல்லாமலேயே மனிதன் மாண்டு விடுகிறான். பெற்றோர்கள், பெண்டு பிள்ளைகள் ஆகியவர்களில் ஒருவரும் தனக்குத் துணையில்லாமல், தான் ஒருவனாகவே, அவன் எப்படிப் பூமியில் தனியனாகப் பிறந்தானோ. அப்படியே அவன் தனியனாகவே மடிந்து போகிறான். மட்டுமே
ஒருவன் இறந்தவுடன். அவன் உடலைக் காஷ்டம் போலப் பூமியில் கிடத்தி. உற்றாரும் உறவினரும் எல்லோருமாகச் சேர்ந்து ஆ, ஊ என்று அழுது அரற்றுவார்கள். அவ்வாறு அவர்கள் அழுதுபுலம்புவதால் செத்தவன் பயன்தான் அடையும் என்ன? பொய்யான பத்திரங்கள் எழுதுதல், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், வழிப்பறி செய்தல், கொலை புரிதல் தொழில்களைப் புரிந்து ஒருவன் பொருளைச் சம்பாதிக்க, அவனைச் சார்ந்த அனைவருமே அவன் சம்பாதித்த பொருள்களை உரிமையுடன் அனுபவிப்பார்கள். பொய் ஓலை எழுதலாகிய அத்தகைய தீய செயலைச் செய்ததால் வருகின்ற கொடிய பாவத்திலும், பொருள்களை அனுபவிப்பவர்களுக்குப் பங்கு ஏதேனும் உண்டோ என்றால், ஒரு சிறிதும் இருப்பதில்லை. அவர்கள் பாவத்தின் பயனில் பங்கு கொள்வதில்லை. அந்தப் பாபச் செயலைச் செய்து பிறர் பொருளையோ உரிமையையோ அல்லது உழைப்பையோ, கவர்ந்தவன் யாவனோ, அவன் ஒருவனே, அந்தப் பாவம் முழுமைக்கும் பாத்தியமுடையவனாகி, தீய நரகத்தை அடைவான்.
அவ்வாறு, தீய தொழில்களைச் செய்து அவன் ஈட்டிய பொருளாவது அவன் மாண்ட பிறகு அவனோடு செல்லுமோ என்றால், அதுவும் கொஞ்சங்கூடச் செல்லாமல், அவனை விட்டு விட்டு, அவன் வீட்டிலேயே தங்கி விடும்! உறவினர் முதலி யவர்களும் அவனது சவத்தோடு. மயானம் வரை சென்று விட்டு, உடனே தம் வீடு மீண்டு விடுவார்கள். இறப்பதற்கு முன்பு அவனவன் செய்த பாவ புண்ணியங்களே மயானத்தையும் தாண்டி அவனவனுடன் செல்வனவாகும். எனக்கு பக்தனாகித் தொண்டு புரியும் செந்தண்மை பூண்ட அந்தணனுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்படவில்லையோ, அந்தப் பொருள், அதை உடையவனுக்குச் சொந்தமல்ல;
உலோபியிடம் இருக்கும் பெரும் பொருள். ‘ஐயகோ! நாம் நல்ல அந்தணர்களின் கையில் தானமாகக் கொடுக்கப்படவில்லையே! தீர்த்த யாத்திரைகளுக்கும், தல யாத்திரைகளுக்கும் நாம் பயன்படவில்லையே! புண்ணியச் வில்லையே! செயல்களுக்குப் பயன்படுத்தப்பட கிருமிக் கூடாகி உடலானது அநித்தியமாயிற்றே! மலக் குடலாகிய மனித உடல் எரிந்தோ அழிந்தோ போகக் கூடியதாயிற்றே! நம்மை வைத்திருக்கும் உலோபி இந்த உண்மையை அறியாமல் இருக்கிறானே! அவன் இறந்த பிறகு நம்மை வேறு எவன்தான் கவர்ந்து செல்வானோ? அவன் ஒருங்கே கவர்ந்து. நம்மை எந்த விலை மகள் கையிலே கொடுப்பானோ என்று கதறும்.
பூர்வ ஜன்மத்தில் தானதர்மங்களைச் செய்தவனே, மறு பிறவியில் மஹாபாக்கியவானாகிறான். ஆகையால், அந்த ஜன்மத்திலும் அவன் தான தர்மங்களைச் செய்தால், அதற்கடுத்த பிறவியில் அதிக தனவானாக இருப்பான். எவன் ஒருவன், தானதர்மங்களைப் பக்தி சிரத்தையின்றிச் செய்தாலும் அந்தத் தானதர்மங்களைச் செய்தவனாக மாட்டான். தானதர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன்தான் எண்ணியவற்றை எல்லாம் எண்ணியவாறே எய்துவான். அரும்பெரும் பேறான மோக்ஷமும் அவனுக்குக் கிடைக்கும். பக்தி சிரத்தையோடு செய்யப்படும் தருமமோ தானமோ தினையளவே சிறிதாக இருந்தாலும் மலையளவு பெரிய நன்மையைத் தரும்.
ஒரு பொருளும் இல்லாத முனிவர்களெல்லாம் தம் நல்ல மனம், நற்செய்கைகளாலேயே நிரதிசய இன்ப வீடாகிய எம்முலகை அடைகிறார்கள். ஆகையால் உள்ளத் தூய்மையும் பக்தியும் இல்லாமல். தானம், தவம், தருமம் முதலியவற்றைச் செய்தாலும் அவை ஒரு சிறிதும் பயன்படாமற் போய்விடும். முக்திக்குச் சாதனமான பரம பக்தியையாவது, பிரபக்திமார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை (திருத்தொண்டுகளையாவது) செய்வதும் தான தர்மங்களைச் செய்வதுமே உத்தமமாகும் ! இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்.