வெள்ளி முகக்கவசம் அணிந்து, பத்து கைகளில் சானிடைசரை ஆயுதமாகக் கொண்டு கொரோனா வைரஸ் என்ற நவீன அரக்கனை வதம் செய்யப் புறப்பட்ட துர்கை…
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்பது மிகவும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. அங்கு அன்னை துர்கையின் வழிபாடு மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அந்த அன்னை முகக்கவசம் அணிந்து காட்சியளித்து கொரோனாவின் தாக்கத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறார்.
இதைப் பார்ப்பதற்கு, வெள்ளி முகக்கவசம் அணிந்து, பத்து கைகளில் சானிடைசரை ஆயுதமாகக் கொண்டு கொரோனா வைரஸ் என்ற நவீன அரக்கனை வதம் செய்யப் துர்கை அன்னை புறப்பட்டு விட்டதாகவே பக்தர்கள் பரவசப்படுகின்றனர்.
வழக்கமாக Khuti puja கொண்டாடப்படுவது பாரம்பரியமாக தொடர்வது. ஒரு மரச்சட்டத்தில் களிமண் சிலை கட்டப்பட்டு செய்யப்படுவது Ulta Rath Puja என்பதாகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்த பூஜை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய திருவிழாவான துர்கா பூஜை வழக்கம் போல் கோலாகலமாக நடக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜா என்ற அமைப்பானது, கோவிட் -19 குறித்து ஒரு செய்தியைக் கொடுக்க ஒரு புதுமையான கருப்பொருளைக் கொண்டு வந்துள்ளது.
Khuti puja என்ற பூஜை இன்று செய்யபப்ட்டது. அப்போது வைக்கப்பட்ட துர்கா சிலைக்கு வெள்ளி முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த பூஜையானது, துர்கா பூஜா தொடங்குவதற்கு முன்னதான பந்தல் அமைப்பதற்கான மூங்கில் சாரக்கட்டுகளை அமைக்கும் வழக்கமான சடங்காகும்.
அன்னை துர்கையின் சிலைக்கு சுமார் நான்கு கிராம் எடையுள்ள ஒரு வெள்ளி முகக்கவசம் அணிவிக்கப்பட்டு, அன்னையின் பத்து கைகளிலும் ஆயுதங்களுக்குப் பதிலாக சானிடைசரும் வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் விழிப்புணர்வை அன்னையே ஏற்படுத்துவதாக மக்கள் நம்புகின்றனர்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....