செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அனைத்து கடன் தொல்லைகளும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.
அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு மிகவும் உகந்த காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும்.
விநாயகரை வழிபட்டாலும் கடன் தீரும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன்களும் தீரும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், மன நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம்
தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்
ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் உள்ளது. அந்த வகையில் எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
1. ராகு தோஷம் – 21 தீபங்கள்
2. சனி தோஷம் – 9 தீபங்கள்
3. குரு தோஷம் – 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு – 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
6. திருமண தோஷம் – 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் – 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
9. காலசர்ப்ப தோஷம் – 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் – 108 தீபங்கள்..
சாஸ்திரங்களில் கூறியிருக்கும் இந்த வழிகளை பின்பற்றி, நம்பிக்கையுஅடன் கடவுளை வணங்கினால், நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.