மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் சிறுசிறு இழப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்து மோதல் உருவாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள்பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதி காரிகளுடன் பிரச்சினைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதார்த்தமாக பேசி கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்பு கூடும் நாள்.
கடகம்
கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்று கொள்வீர்கள். அலுவல கத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி பொங்கும். மனைவி வழிஉறவுகளால் ஆதாயம் உண்டு.புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள்.நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்களும் உடனே முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப் பதால் வேலைச்சுமையால் சோர்வாககாணப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்ந்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
துலாம்
துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் உதவி உண்டு. விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர் நண்பர்கள்உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபா ரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில்பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.
தனுசு
தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோ கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்
மகரம்
மகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம்வந்து போகும். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்
கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.