அயோத்தியில் லட்சக்கணக்கான அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை நடத்த நாள் குறிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் அயோத்தி நகரம் மின்னியது.
முதல்வர் யோகி ஆதித்ய நாத் தனது அலுவலக இல்லத்தில் தீப ஒளி ஏற்றினார். பின்னர் மத்தாபூ கொளுத்தியும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார். நாளை கோலாகலமாக துவங்குகிறது பூமி பூஜை இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.