கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டு

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
புன்னை மரம் மீதிலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி

புல்லாங்குழல் ஊதுறாண்டி வேணுகாணம் செய்யுறாண்டி
புல்லாங்குழல் ஊதுறாண்டி வேணுகாணம் செய்யுறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
பஞ்சுமெத்தை மீதிலே கோபாலக்கண்ணன் நித்திரை செய்யுறாண்டி

நித்திரை செய்யுறாண்பு காரணங்கள் பேசுறாண்டி
நித்திரை செய்யுறாண்பு காரணங்கள் பேசுறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கட்டின உரலோடு கோபாலக்கண்ணன் கட்டி கட்டி இழுக்குறாண்டி

கட்டி கட்டி இழுக்குறாண்டி காரணங்கள் பேசிறாண்டி
கட்டி கட்டி இழுக்குறாண்டி காரணங்கள் பேசிறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
புன்னை மரத்தின் மேலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி

புல்லாங்குழல் ஊதுறாண்டி பெண்களை தடைசெய்யுறாண்டி
புல்லாங்குழல் ஊதுறாண்டி பெண்களை தடைசெய்யுறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
ஆற்று மணலின் மீது கோபாலக்கண்ணன் அள்ளி விளையாடுறாண்டி

அள்ளி விளையாடுறாண்டி துள்ளி களி ஆடுறாண்டி
அள்ளி விளையாடுறாண்டி துள்ளி களி ஆடுறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
ஆயர்பாடி தனிலே கோபாலக்கண்ணன் ஆடு மாடு மேய்க்குறாண்டி

ஆடு மாடு மேய்க்குறாண்டி ஆனந்தம் கொண்டாடுறாண்டி
ஆடு மாடு மேய்க்குறாண்டி ஆனந்தம் கொண்டாடுறாண்டி
கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
எழுத்து – இயக்கம் : வித்யாஜோதி.சுமா சிவபாலன்