ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
அருண கிரண மணி கோடிகள் ஒளிசெய
அமுத மதுரமலர் அரியணை மீதினில் வாலா
அகில முழுதும் கொலு வீற்றிருந்தருள் தரும் வாலா
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
கருணையின் பெருமை என்னென்பேன் வாலா
இந்த கடையனெனக்கும் அருள் செய்தாய் வாலா
அருகிலிருந்து துணைதரும் மலைமகளே வாலா
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
துன்பம் மிகுந்து வந்தபோதும் வாலா
மனம் சோர்ந்து மதி மயங்க மாட்டேன் வாலா
அன்பர் துணையும் நினதருளும் இங்கில்லையே வாலா
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
சக்தி விளங்கும் அருள் வாக்கும் வாலா
மஹா சாந்தி விளங்கும் அருள் நோக்கும் வாலா
பக்தி புரியும் அருள் வாழ்க்கையும் தருவாய் வாலா
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
தஹிக்கும் கொடுமை பல தாங்கிய வாலா
நான் தனித்து புரிந்த தவப்பெருமை வாலா
தரணி முழுதுமொரு காலம் நன்கறியும் வாலா
ஆதி தேவி வாலை அம்மா…
நான் அடிமையல்லவோ வாலை அம்மா
எமை ஆளவாவா, வாலை அம்மா…
ஆதி தேவி வாலை அம்மா… நான் அடிமையல்லவோ வாலை அம்மா… பாடல் Aanmeega Bhairav