வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
பாவம் எல்லாம் தீர்ப்பதற்கு பராசக்தி வருகிறாள்
பக்தர்களைக் காப்பதற்கு பத்ரகாளி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு இச்சாசக்தி வருகிறாள்
கீர்த்தியோடு புகழ் வழங்கிட கிரியாசக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
ஞானமழையைப் பொழிவதற்கு ஞானசக்தி வருகிறாள்
நம்பும் நம்மை காப்பதற்கு தேவி ஓடி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
சமயபுரத்தில் வாழும் அம்மை சாந்தி வழங்க வருகிறாள்
சஞ்சலங்கள் தீர்ப்பதற்கும் சாம்பவியும் வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
சோட்டாணிக்கரை பகவதியும் சோகம் தீர்க்க வருகிறாள்
சொர்க்க போக வாழ்வை வழங்க தேவி ஆடி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
மாயைவிலகி மனம் திருந்த மஹாதேவி வருகிறாள்
மாதுளம்பூ மேனிகொண்ட மஹாகாளி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
மோகம் எல்லாம் மறைவதற்கு மூகாம்பிகை வருகிறாள்
முக்திநலம் தந்திடவே சக்தி ஓடி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
பஞ்சம் ஓட பாவம் ஒட பஞ்சபாணி வருகிறாள்
பாம்பணிந்த பரமனோடு பார்வதியாள் வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
மகிடன் தலையின் மீதிலேறி துர்க்கையாக வருகிறாள்
மலைமகளாய் கலைமகளாய் அலைமகளாய் வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்… பாடல் | Aanmeega Bhairav