உபவேதங்கள் என்பது ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாக தோன்றிய நான்கு துணை வேதங்களாகும். இவை ஒவ்வொரு வேதத்திலிருந்தும் கிளையாக உருவாக்கப்பட்டு, ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (போர் மற்றும் ஆயுதங்கள்), காந்தர்வவேதம் (இசை), அர்த்தவேதம் (அரசியல், பொருளாதாரம், கலை) போன்ற பல துறைகளுக்கான செயல்முறை அறிவை வழங்குகின்றன.

உபவேதங்களின் பிரிவுகள்:

  • ஆயுர்வேதம்: மருத்துவம் தொடர்பான அறிவு.
  • தனுர்வேதம்: போர்கலை, ஆயுதங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கும் நூல்.
  • காந்தர்வவேதம்: இசை, நடனம் மற்றும் கலைகள் மூலம் தெய்வத்தை வழிபடும் முறையைச் சொல்வது.
  • அர்த்தவேதம் (அர்த்தசாஸ்திரம்): பொருளாதாரம், அரசியல், கலை போன்ற சமூக மற்றும் நிர்வாக துறைகளை கையாளும் நூல்.

முக்கியம்:
இவை வேதங்களின் செயல்முறை சார்ந்த அறிவை வழங்கும் துணை நூல்களாகக் கருதப்படுகின்றன.

சமூகத்திற்குத் தேவையான ஆரோக்கியம், பாதுகாப்பு, கலை, பொருளாதாரம் ஆகியவற்றை சீரமைப்பதற்கான வழிகாட்டுதலை உபவேதங்கள் வழங்குகின்றன.


உபவேதங்கள் என்னென்ன?

ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களை நாமெல்லாரும் பொதுவாக அறிந்தவர்கள். ஆனால், உபவேதங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறோம்? இந்து மதத்தில் “ஸ்மிருதி நூல்கள்” எனப்படும் இரண்டாம் நிலை நூல்கள் உண்டு. அவற்றின் அடிப்படையிலேயே உபவேதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உபவேதங்கள் நான்கு என்று சொல்லப்படுகிறது. அவை:

  1. தனுர்வேதம் (போரியல் அறிவு)
  2. காந்தர்வ வேதம் (கலை அறிவு)
  3. ஆயுர்வேதம் (மருத்துவ அறிவு)
  4. ஸ்தபத்ய வேதம் (கட்டடக் கலை அறிவு)
  5. அர்த்தசாஸ்திரம் (அரசியல்–பொருளாதார அறிவு)

சில சமயங்களில் ஸ்தபத்ய வேதத்துக்கு பதிலாக அர்த்தசாஸ்திரமே உபவேதமாகக் கொள்ளப்படும்.


தனுர்வேதம்

“தனு” என்றால் வில்; “வேதம்” என்றால் அறிவு. எனவே தனுர்வேதம் என்பது போர்க்கலை மற்றும் தற்காப்புக் கலைகளின் அறிவு. இது ரிக் வேதத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்து மத நூல்களில் பல்வேறு போர் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயுதங்களோடு நடத்தப்படும் போர், ஆயுதமின்றி செய்யப்படும் மோதல் – இவை இரண்டும் தனுர்வேதத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

மல்யுத்தம் போன்ற உடல் போராட்டங்கள், முட்டிக்கால் தாக்குதல், தலை குத்துதல், கழுத்தைப் பிசைந்து வீழ்த்துதல் போன்ற யுத்த முறைகள் மகாபாரதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பீமனும் ஜராசந்தனும் 27 நாட்கள் மல்யுத்தத்தில் ஈடுபட்ட நிகழ்வு புகழ்பெற்றது.

அக்கினி புராணத்தில் “ரத–கஜ–துராக–பதாதி” எனப் போர்வீரர்கள் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, படைவீரர் என நான்காகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பயிற்சிகள் சொல்லப்பட்டுள்ளன.

பண்டைய காலத்தில் மன்னர்களும் வீரர்களும் தனுர்வேதத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பிறகு முஸ்லீம் படையெடுப்புகளுக்குப் பின் பொதுமக்களும் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொண்டனர். மல்யுத்தம், வில்வித்தை, தேரோட்டம், குதிரைப் பந்தயம், சிலம்பம் போன்றவை முக்கிய வீரவிளையாட்டுகளாக இருந்தன. பெரும்பாலும் இவை சுயம்வரங்களிலும் திருவிழாக்களிலும் நடந்தன.

புறநானூற்றுப் பாடல்களில் வேல், வாள், கேடயம், வில், சிலம்பம் போன்ற ஆயுதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் சுஷ்ருத சம்ஹிதை நூலில் உடலில் 107 முக்கிய புள்ளிகள் எவ்வாறு தாக்கினால் எப்படிப் பாதிப்பு ஏற்படும் என வர்மக்கலை தொடர்பாகத் தெளிவாக உள்ளது.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு களரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் தடைசெய்யப்பட்டன. மக்கள் போர்திறமையற்றவர்களாக இருந்தால் தான் ஆட்சி எளிதாகும் என்பதற்காகவே அதைச் செய்தனர். இன்றும் இந்தக் கலைகள் மெதுவாக மறைந்து போவது வருத்தத்திற்குரியது.


காந்தர்வ வேதம்

“காந்தர்வம்” என்பது கலை. காந்தர்வ வேதம் இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளைப் பற்றியது. இது சாமவேதத்தின் உபவேதமாகக் கொள்ளப்படுகிறது. பரத முனி எழுதிய “நாட்டிய சாஸ்திரம்” காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் தோன்றியது.

காந்தர்வ வேதம் 36,000 ஸ்லோகங்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உலகில் அமைதியும் இயற்கையில் சமநிலையும் நிலவவேண்டும் என்பதே இதன் நோக்கம். பல்வேறு இசைக்கருவிகள், ராகங்கள், இசை முறைகள் பற்றிய குறிப்புகள் இதில் உள்ளன.


ஆயுர்வேதம்

“ஆயுஸ்” என்பது நீண்ட ஆயுள்; “வேதம்” என்பது அறிவு. எனவே ஆயுர்வேதம் என்பது ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் சார்ந்த அறிவு. இந்தியாவில் மிகவும் பழமையான மருத்துவ முறையாகும். சுஷ்ருதர், சரகர், வாக்பட்டர் போன்ற முனிவர்கள் இதை வளர்த்தனர்.

மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தத்துவங்கள் சமநிலையில் இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. மேலும் அறுவை சிகிச்சை, கண்–காது–மூக்கு மருத்துவம், குழந்தை மருத்துவம், மனநலம், ஆயுள் நீட்டிக்கும் மருந்துகள், புத்துயிர்ப்பு மருத்துவம் போன்ற பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

தன்வந்திரி பகவான் ஆயுர்வேதத்தின் கடவுள் எனக் கருதப்படுகிறார்.


ஸ்தபத்ய வேதம்

“ஸ்தபத்யம்” என்பது நிலைநாட்டல். எனவே இது கட்டிடக் கலை மற்றும் வாஸ்து சார்ந்த அறிவு. இயற்கையுடன் இணைந்த கட்டட வடிவமைப்பு இதன் முக்கியக் கொள்கை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பண்டைய கோவில்கள் அனைத்தும் ஸ்தபத்ய வேத முறையில் கட்டப்பட்டவை. வாஸ்து சாஸ்திரம் இத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கிழக்குநோக்கி வாசல் வைத்தால் காலை சூரிய ஒளி உடலுக்கு விட்டமின் D தரும் என்று இதில் சொல்லப்பட்டுள்ளது.


அர்த்தசாஸ்திரம்

“அர்த்தம்” என்பது பொருள். அர்த்தசாஸ்திரம் என்பது அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய நூல். சாணக்கியர் (கௌடில்யர்) எழுதிய இந்த நூல் மௌரியப் பேரரசின் அடித்தளமாக அமைந்தது.

இதில் 15 அதிகாரங்கள் உள்ளன. அரசு அமைப்பு, சட்டம், உளவு, போர், கூட்டமைப்பு, அயல் நாட்டுச் சாசனம், கோட்டை கைப்பற்றும் தந்திரம், இரகசிய நடவடிக்கைகள் என விரிவாக விவரிக்கப்படுகிறது.

ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இதில் கூறுகிறது – பிறர் மனைவியிடம் விருப்பம் கொள்ளக்கூடாது, பிறர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது, அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், பொய்மை–வஞ்சகம்–ஊதாரித்தனம் தவிர்க்க வேண்டும் என்பன அதில் உள்ள முக்கியக் கொள்கைகள்.

Facebook Comments Box