ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
கங்கையை தலையில் தரித்தவரின் தனிப்பெரும் தேவியே காளியம்மா
மங்களம் எங்கும் பொங்குக என்றே ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
வாழும் மனிதர் யாவருக்கும் வேண்டும் துணையாம் காளித்தாயே
ஆளும் கவலை ஓடிடவே, ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
அங்கே இங்கே சென்றாலும் எங்கும் அருளாய் நின்றிடுவாய்
பொங்கும் வாழ்வு மலர்ந்திடவே ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
கண்ணே தெரியாக் காட்டினிலே, கலங்கி தவிக்கும் அடியேற்கு
கருணை விழியினை காட்டிடவே ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
தாயே நீயும் இரங்காவிடில், சேயேன் உயிரும் வாழ்ந்திடுமோ
நாயேன் கருணை பொழிந்திடவே, ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
சங்கரி ஈஸ்வரி பைரவி பார்வதி பூரணி ஆதிகாரணியே
எங்கும் நிறைந்து நிலவிடவே, ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.
சீரடி வணங்கிட வந்துள்ளோம் காளித்தாயே காத்திடுவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள்