நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு – இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு

செங்கொடியைக் கையிலேந்தி, மே தினத்தக் கொண்டாடி உரிமைகள் மட்டும் கோரும் காமரேடு காலம் போச்சு காவியின்கீ ழணிவகுத்து கட்டுப்பாட்டுடன் உழைத்து கடமையாற்றி உரிமை யேற்கும் நேரம் வந்தாச்சு

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு – இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு

அந்நியத்திலே திளைத்து வன்முறையை வழியாக்கும் நாளைய குடிமகனின் கூட்டம் காணோம் எங்கோ போச்சு
பாரதத்துப் பண் இசைத்து பண்பாட்டில் ஊறி நிற்கும் இன்றைய குடிமகனின் கோஷம் கேட்கும் காலம் வந்தாச்சு

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு – இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு

தன்னலத்தினை பெருக்கி தன்மானத்தை யொழித்து
அடிமைகள் வளர்க்கும் வயிற்றுக்கல்வி மடியலாச்சு
மண்ணிதன் புகழ் அறிந்து மண்ணிதற்காய் வாழ்வதென்று
முடியும் மைந்தரை வளர்க்கும் கல்வி வந்தாச்சு

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு – இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு

ஜாதிகளின் பூசலென்ன குறுகிய பல வெறிகளென்ன?
ஹிந்து ஒன்றுபடுவதாஙூ ஹா என்ற காலம் போச்சு
நாடு மொத்தம் ஒரு குடும்பம் கூறு போட அனுமதியோம்
ஒருங்கிணைந்து நாடுயர்த்தும் மாட்சி வந்தாச்சு

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு – இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு

Facebook Comments Box