குருக்ஷேத்திரப் போரினால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ளும் விதத்தைப் பற்றி தர்மர் கேட்க,வியாச பகவான் அசுவமேத யாகம் செய்ய கூறுதலைக் கூறும் பருவம் ஆகும்.

இப்பருவம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. (1) மருத்துயாகச் சருக்கம் (2) (3) பரிவலம் வந்த சருக்கம் (4) வேள்விச் சருக்கம் (5) நகுலோபாக்கியாயனச் சருக்கம். பரிட்சித்துற்பவச்சருக்கம்

(மருத்தன் என்னும் மன்னன் யாகம் செய்ததை கூறும் சருக்கம் ஆகும். இந்த மருத்துவராஜன் மனுவம்சத்தில் பிரசித்தி பெற்ற கரந்தமன் என்பவனுக்கு மகனான அவிஷித் என்பானுடைய புத்திரன். இவன் செய்த யாகத்தில் மிஞ்சிய பொருளைக் கொண்டு வரச் சொல்லி, வியாசர், தர்மபுத்திரரை அசுவமேத யாகம் செய்யச் சொன்னார்).

தர்மபுத்திரர் கங்கபுத்திரனாகிய பீஷ்மருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை யெல்லாம் குறைவறச் செய்து முடித்தார். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார்.

மனம் வருந்திய தர்மபுத்திரர்

அப்பொழுது கண்ணபிரான் அங்கு வந்து தர்மபுத்ரரிடம் “அஸ்தினாபுரம் சென்று மீண்டும் அரசை ஏற்க வேண்டும்” என்று கூறினார். அதற்குத் தர்மபுத்திரர், “கண்ணபிரானே! பிதாமகர் பீஷ்மரையும், ஆசார்யர் துரோணரையும், மூத்தவன் கர்ணனையும் கொன்ற பின்பு என்ன அரசு வேண்டிக் கிடக்கிறது? இனி எப்படி அரசு ஏற்பது” என்று மனம் வருந்தி கூறினார்.

அப்பொழுது வேதவியாசர், “மனிதனுடைய காரியங்கள் இறைவன் ஆணை யினால் நிர்ணயிக்கப்படுகின்றன.அதனால் அவை அவனுக்குத் தோஷமுண்டாக்காது; அப்படி தோஷம் ஏற்பட்டால் அது கண்ணனுக்கே. எனவே தளர்ச்சியை நீக்குவாயாக” என்று கூறித் தர்மபுத்திரரின் தளர்ச்சியைப் போக்கினார். (பூபாரந்தீர்க்கப் பிறந்தவனாதலின் கண்ணனையும் அத்தோஷம் தீண்டாது என்க).

அதற்குத் தர்மபுத்திரர், “கடவுளின் காரியம் என்று கொண்டாலும் உலகில் பழி எனக்குத்தானே ஏற்படுகின்றது. நூற்றுவரைக் கொன்றவன் என்று என்னைத் தானே கூறுவர்” என்று மனந்தளர்ந்து கூற, வியாச பசுவான், “தர்மபுத்திரரே! அந்தணர் களுக்கும். முனிவர்களுக்கும் பொன்னை யும், மணிகளையும் தட்சிணையாகக் கொடுத்து அசுவமேத யாகத்தைச் செய்வாயானால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார். வியாசர் கூற்றை அனைவரும் ஏற்றனர். கண்ணபிரானும், ”அரசே! வெற்றி பொருந்திய அசுவமேத யாகம் செய்வாயானால் அனைத்துப் பாவங்களும் அப்பொழுதே தொலைந்து போகும்” என்றார். தர்மபுத்திரர் அதனைக் கேட்டு மகிழ்ந்து,”அசுவமேத யாகம் செய்ய வேண்டுமென்றால் நிறைய பொன்னும் பொருளும் வேண்டுமே அதற்கு என்ன செய்வது?” என்று கேட்டார். அதனைக் கேட்டு கண்ணபிரான் குறுநகை செய்ய வியாச பகவான். “உம் கருவூலத்தில் செல்வம் குறைந்திருப் பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்குத் தர்மபுத்திரர், “பகவானே! போரில் வெற்றி பெறும் நோக்கோடு. துரியோதனன் மாந்தரைத் தன் வசப் படுத்திப் பெருநிதியம் வழங்கி ஒழித்தான்; மிச்சம் இருந்ததை நானே போரில் இறந்தவர்களின் சுற்றம் வருந்துதல் கண்டு, அச்சுற்றத்தார்க்கு வழங்கி, அவர்களின் செல்வக் குறையை போக்கினேன். இந்த இரு வகையால் நிதிக் குறைவு ஏற்பட்டது” என்று தர்மபுத்திரர் கூறினார்.

தர்மபுத்திரர் கூறியதைக் கேட்ட வியாச பகவான் அத்தர்மபுத்திரரை நோக்கி, ‘தர்ம நந்தனா! தாமரைக்கண்ணனாகிய சூரிய சூரியனின் னுக்குத் த் தன்னிகரற்ற மனு என்னும் மகன் தோன்றினான்.அந்தச் மகனாகிய மனு என்பவனின் எட்டாம் பேரன் மருத்தன் என்பவன் ஆவன். அவன் தேவர்கள் வாழ்த்தும்படி இப்பூவுலகை ஒரு வெண் கொற்றக் குடைக்கீழ் ஆட்சி செய்து வந்தான்.

அத்தகைய சிறப்புடைய அவன் ஒரு யாகத்தை அழகு பெறச் செய்வான் வேண்டி, அங்கிரசு என்பானின் மூத்த மகனாகிய வியாழன் என்னும் பிரகஸ் பதியைத் (தேவகுரு) தம் புரோகிதராக நியமித்தான். இதனை அறிந்த இந்திரன் பிரகஸ்பதியிடம் வந்து, தன் குரு “ஆசார்யரே! நானோ மூவுலகங்களுக்கும் தலைவனாக இருக்கின்றேன். மருத்தனோ பூவுலகத்திற்கு மட்டும் அதிபதியாக இருக்கின்றான். அது மட்டுமல்லாது மரண மில்லாத எனக்குப் புரோகிதராக இருந்து விட்டுச் சின்னாள். பல் பிணிச் சிற்றறி வுடைய மருத்தனுக்குப் புரோகிதராக இருக்க தாங்கள் எப்படி இசைந்தீர்? அது முறையன்று என்பன போலக் கூறித் தடுத்து விட்டான்.

இந்திரன் வார்த்தையைக் கேட்டு மறுத்துவிட்ட பிரகஸ்பதி

அறியாத மருத்தன் இதனை பிரகஸ்பதியிடம் வந்து,”குருவே! என் தந்தை அவிக்ஷித் என்பவர்க்கு, உன் தந்தையாகிய அங்கிரசு முனிவர் செய்தற்கரிய யாகத்தைப் புரோகிதராக இருந்து செய்து கொடுத்துள்ளார். எனவே அடியேன் செய்யும் இந்த யாகத்தையும் தாங்கள் இப்போதே வந்து முடித்துத் தருதல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ஆனால் பிரஹஸ்பதியோ இந்திரன் வார்த்தையைக் கேட்டு கொண்டு அம்மருத்தன் யாகத்தை முடித்துக் கொடுக்க மறுத்து விட்டார்.

அதனால் மனம் நொந்த மருத்தன், நாரதரிடம் அனைத்தையும் கூறி வருந்தினான். அதனைக் கேட்ட நாரதர், “அரசே! வருந்தாதே. நான் ஒரு வழி சொல்கின்றேன். அங்கிரசு முனிவர்க்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவர் தான் பிரகஹஸ்பதி இளையவர் சம்வர்த்தனர். அவரைக் கொண்டு யாகத்தை நடத்திக் கொள்ளலாம். அந்த சம்வர்த்தனரைப் பற்றி கூறுகின்றேன் கேள்.

”சம்வர்த்தனர் பிரகஸ்பதியிடம் கோபித்துக் கொண்டு எல்லாவற்றையும் துறந்து விட்டு திகம்பரராகி காசிக்குச் சென்று விட்டார். ஆகலின் நீ இப்பொழுதே காசிக்குச் செல்வாயாக அங்கு, அனைவரும் நீராடும் கங்கை நீர்த்துறையில் ஒரு பிணத்தைப் போட்டு உட்கார்ந்திரு. சம்வர்த்தர் நீ பிணத்தின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஓடிப் போவார். நீயும் அவரை விடாது பின் தொடர்ந்து செல்க. அப்பொழுது அந்தச் சம்வர்த்தர் எவ்வளவு பழித்தாலும் வைதாலும் முனிந்தாலும் கோபிக்காதே. தளர்ச்சியடையாது பின்னே செல்க. பிறகு உன்னிடம் அவர் வந்து, “நீ யார்? என்னிடம் எப்படி வந்தாய்?” என்று பற்பல கேள்விகள் கேட்பார். அதற்கு நீ, “நான் மருத்தன் என்னும் சூரிய குல மன்னன். உன் சரிதத்தையெல்லாம் நாரதர் சொல்லி உன்னிடம் என்னை அனுப்பினார். பின்னர் அவர் நெருப்பினில் புகுந்து விட்டார். அதனால் நான் இங்கு வந்தேன்” என்று சொல்வாயாக. உடனே அந்தச் சம்வர்த்தர் மனம் இரங்கி உன் யாகத்தை நிறைவேற்றுவார். நீ எண்ணிய எண்ணம் இனிது நிறைவேறும். நன்றாக நினைவில் கொள். “சம்வர்த்தர் எது செய்தாலும் மனஞ்சலியாது பின் தொடர்வாயாயின் அவர் மனமிரங்கி நீ செய்ய எண்ணும் யாகத்தை இனிதே முடிப்பார்” என்று ஓர் உபாயங் கூறி நாரதர் சென்று விட்டார்.

நாரதர் சொன்னபடியே மருத்தன் சம்வர்த்தனரிடம் நடந்து கொண்டான். அதனால் அவர் மகிழ்வுற்று, “அரசே! மழுப்பாமல் வந்த காரியத்தைக் கூறுக” எனக் கூற, மருத்தன் தான் வந்ததற்குரிய காரணத்தை மறைக்காது எல்லாவற்றையும் கூறினான். அதனைக் கேட்ட சம்வர்த்தர், “அரசே! நான் யாகம் செய்யும் பொழுது என் தமையனார் பிரகஸ்பதியால் பல இடையூறுகள் வந்து சேரும். அதற்கு அஞ்சாமல் தைரியமாக இருப்பாயானால் உன் யாகத்தைப் பழுதுபடாமல் முடித்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அதற்கு மருத்தன், “யார் எதைச் செய்தாலும் நான் அஞ்சேன்” என்று உறுதி கூறினான்.

சம்வர்த்தர் மகிழ்ந்து, “யாகத்திற்கு வேண்டிய நிதியைப் பெறுவதற்கு என் பின் வருவாயாக” என்று கூறி, அம்மருத்த மன்னனை அழைத்துக் கொண்டு. இந்திரனும் பார்த்தறியாத இமயமலைச் சாரலில் உள்ள முஞ்சவான் மலையை அடைந்தார். அந்த மலையிடத்து வாசம் செய்கின்ற சிவபெருமானின் திருப்பாதங் களை வணங்கி, தான் மனத்திலே எண்ணிவந்த கருத்தைச் சொல்லி, அந்த மலையின் பக்கத்தில் விளங்குகின்ற பெருநிதியைச் சிவபெருமான் கொடுக்கப் பெற்றுக் கொண்டார்.

சம்வர்த்தன் ஆரம்பித்த யாகம்

சிவபெருமான் கொடுத்த பொன்னை யும், மணிகளையும் ஒட்டகங்கள், ஆண் யானைகள், வண்டிகள் முதலியவற்றின் மூலம் சம்வர்த்தன் வரவழைக்க இமய மலைத் தெற்குப்பகுதியில் மேருமலை யென மருத்தன் குவித்தான். இரவலர்க்கு வாரி வழங்கினான். அங்கு ஒரு வட்ட ஏற்படுத்தி வடிவமான யாகசாலை சம்வர்த்தன் பெரிய யாகம் செய்ய ஆரம்பித்தான்.

மருத்தன் யாகம் செய்யத் தொடங்கி யதை அறிந்து பிரகஸ்பதி தன்னை யாகம் செய்ய வொட்டாது தடுத்து விட்டானே என்று இந்திரன் மேல் கோபங்கொண்டான். இதனை அறிந்த இந்திரன் யாகத்தைத் தடுக்க அக்கினியை ஏவினான்.

அந்த அக்கினிதேவன், “புகழ் பெற்ற மருத்தராஜனே! பிரகஸ்பதியை புரோகிதராகக் கொள்ளாமல் மற்றவர்களைப் புரோகிதராக கொண்டு இந்த யாகம் செய்தல் தகுதியுடையது ஆகாது. ஆகலின் பிரகஸ்பதியைக் கொண்டே முடிக்கவும்” என்று கூறினான். ஆனால் அக்னிதேவன் கருத்தை மருத்தன் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் இந்திரன் கோபங் கொண்டு மருத்தனைக் கொல்லுவதற்கு தன் வச்சிராயுதத்தை ஏவினான்.

ஆனால் சம்வர்த்த முனிவரோ உரிய மந்திரங்களை உச்சரித்து, அந்த வச்சிரா யுதத்தைப் பயனற்றதாக்கி அம்மருத்த னுயிரைக் காப்பாற்றினார். மருத்தன் சம்வர்த்தரை நோக்கி, “என் உயிரை காத்தீர். நான் தங்களுக்கு அடியேன்” என்று கூற, சம்வர்த்தர் மகிழ்ந்து, “நீ கேட்டவரம் கொடுப்பேன் கேள்” என்றார்.

“நான் செய்யும் யாகத்தின் அவிர்ப்பாகத்தை தேவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்” என்று மருத்தன் கேட்க, சம்வர்த்தரும் ‘அப்படியே ஆகுக’ என்றார். பின்னர் இந்திரன் முதலான தேவர்களை வரும்படி அம்முனிவர் செய்து, அவர்களின் கோபத்தை மாற்றி அவிர்ப்பாகத்தைப் பெற்றுக் கொள்ளும்படி செய்து யாகத்தை இனிது முடித்திட்டார்.

யாகத்தை முடித்தபின் மருத்தன், சம்வர்த்தர் முதலான வந்திருந்தோர்கள் மனமகிழும்படி வேண்டிய நிதியைக் கொடுத்து எஞ்சிய நிதியை முஞ்சவான் மலையிடத்தே புதைத்து போயினன்” என்று கூறிய வேதவியாசர். வைத்துப்

தர்மபுத்திரரை நோக்கி, “தர்மராசரே! இமயமலைச் சாரலில் உள்ள முஞ்சவான் மலையில் புதைத்து வைத்திருக்கும் பெரு நிதியம் நீ சென்றால் உன் விழிக்குத் தென்படும். அதனைக் கொண்டு வந்து அசுவமேத யாகத்தைச் செய்வாய்” என்று கூறினார். தர்மபுத்திரரும் அதனைக் கேட்டுப் பெருமகிழ்வுற்றார்.

மகாபாரதம் – 63 மருத்துயாகச் சருக்கம்… மனம் வருந்திய தர்மபுத்திரர்..! Asha Aanmigam

Facebook Comments Box