ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
குறைகள் தீர்க்க வருவாய் -உன் மலையை நாடி வந்தேன் முருகா மனமிரங்கி வருவாய் பல படிகள் ஏறி வந்தேன் முருகா பரிவடைந்து வருவாய் கிரிகள் ஏறி வந்தேன் முருகா பெரிய வாழ்வு தருவாய் கவிகள் பாடி வந்தேன் முருகா கருணையோடு வருவாய்
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
பல துதிகள் பாடி வந்தேன் முருகா துணைவனாகி வருவாய் அடிமையாகி வந்தேன் முருகா அதிபனாகி வருவாய் அருமை கண்டு வந்தேன் முருகா அகமகிழ்ந்து வருவாய் வினைகள் நீங்க வந்தேன் முருகா வேலெடுத்து வருவாய் என்பவ’ மழிக்க வந்தேன்
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
முருகா பதமளிக்க வருவாய் அன்னை தந்தையானாய் முருகா அரியசெல்வம் ஆனாய் என்னை ஆளும் முருகா, முருகா உன்னை என்றும் மறவேன் அன்பரோங்க வேண்டும் முருகா அவனி ஓங்க வேண்டும் துன்பம் நீங்க வேண்டு முருகா இன்பம் ஓங்க வேண்டும்
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
தருமம் ஓங்க வேண்டும் முருகா தானம் ஓங்க வேண்டும் தவமும் ஓங்க வேண்டும் முருகா சாந்தி ஓங்க வேண்டும் அன்பர் கூடவேண்டும் முருகா துதிகள் பாடவேண்டும் துதிகள் பாடவேண்டும் முருகா நீயும் ஆட வேண்டும்
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
உமையும் ஆடவேண்டும் முருகா உலகம் ஆட வேண்டும். தமையன் ஆடவேண்டும் முருகா உனது தந்தை ஆட வேண்டும் ஞான ஜோதி மயமே முருகா எங்கும் நாம கீத மயமே நாமகீத மயமே ஜெயமே, முருக நாம மயமே.
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா,முருகா ஞானஜோதி முருகா கோவில் நாடி வந்தேன் முருகா
ஆதிமூல முருகா, முருகா ஆதிதேவ முருகா ஞானபால முருகா… பாடல் Aanmeega Bhairav