காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
சேவடியைக் காணவென்றே ஓடிவருவார்
முருகா – ஓடி வருவார் – அவர் சிந்தையிலே
உந்தனையே பாடி வருவார்
முருகா பாடி வருவார்
மச்சக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
ஏறாத மலையினிலே ஏறி வருவார், முருகா
ஏறி வருவார் -ஏறுமயில் வாகனனைக்
காண வருவார் – முருகா காண வருவார்
பூக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
உள்ளவரும் இல்லாதாரும் பேதமில்லையே முருகா
பேதமில்லையே – அருள் வள்ளல்
உந்தன் அன்பினுக்கோர் எல்லை இல்லையே
முருகா எல்லை இல்லையே
பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார்
முருகா – கூடியிருப்பார் – வள்ளிதெய்வயானை
அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா.. பாடல் Aanmeega Bhairav