நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான துர்க்கையளே!

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்
சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து
நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே
அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

Facebook Comments Box