ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
வெத்தலயில் மால கட்டுங்க மால கட்டுங்களே
உங்க வேண்டுதல சொல்லி வட மால கட்டுங்களே
துளசியில கொழுந்தெடுத்து கோர்த்து கட்டுங்களே
ராம தோத்திரத்த சொல்லி வட மால கட்டுங்களே
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
கோடி பணம் கேட்பதில்ல மாருதி ராஜா
கோடி பணம் கேட்பதில்ல மாருதி ராஜா
அவன் கொட்டும்பனி நேரத்திலும் புத்திடும் ரோஜா
ராம ஜெபம் சொன்னீங்கன்னா வந்திருப்பானே
தினம் ராமநாத சாமி பேர பாடி நிப்பானே
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
ஆசையெல்லாம் வேரறுத்த அற்புத சாமி
அவன் ஓசைதரும் மணியிருக்கும் வால்கொண்ட சாமி
காத்தடிச்சா புயலடிச்சா கலங்கிடலாமா
அந்த கட்டித் தங்க மனசிருக்க தவிப்பதும் ஏம்மா?
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
பொட்டு வச்சி பொட்டு வச்சி பூச செஞ்சாலே
அவன் எட்டடிவச்சி வாசக்கதவ தட்டி நிப்பானே
மெட்டெடுத்து ராமனுக்கு பாட்டிசைத்தாலே
அவன் மெல்ல வந்து தாளமிட்டு கேட்டு நிப்பானே
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
கும்மி கொட்டி கும்மி கொட்டி தாளங்கள் போடு
எங்க கோமகனாம் மாகுதிக்கு சரணங்கள் பாடு
நம்பி வந்து நம்பி நின்று நல்லத கேளு
இனி வெம்பி வெடிக்கத் தேவயில்ல வெற்றி உன்னோடு
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
வெத்தலயில் மால கட்டுங்க மால கட்டுங்களே
உங்க வேண்டுதல சொல்லி வட மால கட்டுங்களே
துளசியில கொழுந்தெடுத்து கோர்த்து கட்டுங்களே
ராம தோத்திரத்த சொல்லி வட மால கட்டுங்களே
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் ஹனுமான்
ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராமா… வெத்தலயில் மால கட்டுங்க மால கட்டுங்களே… Aanmeega Bhairav