i)ஹரிபஜனம் ஹரிபஜனம் ஹரிபஜனம் ஒன்றே கலியுகத்தில் ஔஷதமாய் கருணைசெய்யும் இன்றே

ii) பக்தரெல்லாம் பரவசமாய் பாடுகின்ற நாமம் சித்தசுத்தி தந்தருளும் தெய்வமணி நாமம்.

iii) உடல் முழுதும் இன்பரசம் ஊட்டுகின்ற நாமம் இடையறாமல் என்னுளத்தே இலங்குகின்ற நாமம்

iv) கமலமுகம் கருணைவிழி காட்டுகின்ற நாமம் எமபயத்தை நீக்கவல்ல எம்பெருமான் நாமம்.

v) பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்ட நாமம் ஆச்சரியமாயையெல்லாம் அகற்றுகின்ற நாமம்

vi) ஆதிசேஷ சயந நாமம் ஆதியான நாமம் ஜோதியான நாமமிதே சுந்தரமாம் நாமம்.

vii) மாமுனிவர் காதலிலே வளர்ந்த ஹரி நாமம் பூமகளின் திருவுளத்தே பொங்கி வரும் நாமம்.

viii) நீலமேக வடிவழகை நித்தியமும் காண்போம் நேரமெல்லாம் பாடியாடி நிர்ப்பயமாய் வாழ்வோம்.

ix) ஹரிபஜனம் ஹரிபஜனம் ஹரிபஜனம் செய்வோம் இடைவிடாமல் எண்ணி எண்ணி இப்பொழுதே உய்வோம்

x)ஒம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய்
உலகெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
ஊரெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
தெருவெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
வீடெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
நாடெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
வாயெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்
நாவெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய்

Facebook Comments Box