(அர்ச்சுனன் மகன் அபிமன்யுவுக்கும், விராடன் மகள் உத்தரைக்கும் பிறந்தவன் தான் பரிட்சித்து. இவன் கர்ப்பத்தினின்று இறந்தே பிறந்தான். கண்ணபிரானின் திருவடிகள் பட்டதனால் இறந்து பிறந்த இந்தக் குழந்தைக்கு உயிர் உண்டாயிற்று. “குலமெல்லாம் பரிஷீணமானபின் இவன் பிறந்ததனால் இவனுக்குப் ‘பரீட்சித்து’ பரீக்ஷித்து ) என்ற பெயர் துலங்கட்டும் என்று சுபத்திரை இப்பெயரை இட்டாள். அதனைப்பற்றி கூறும் சருக்கம் இது ).
வேத வியாசர், மற்றும் சிவ முனிவர் களுக்கெல்லாம் விடை கொடுத்தனுப்பிய பின் தர்மபுத்திரர், திருதராட்டிரர், காந்தாரி, குந்தி முதலியோர் புடை சூழ அஸ்தினாபுரி சென்று நன் முறையில் ஆட்சி புரிந்து வந்தார்.
தர்மபுத்திரர் அஸ்தினாபுரம் சென்ற பின் கண்ணபிரானும் அர்ச்சுனனும் “ஐயனே! தர்மபுத்திரரிடம் விடை பெற்றுக்கொண்டு இந்திர பிரத்தம் சென்று அங்கு சில காலம் தங்கியிருந்தனர். இந்திர பிரத்தத்தில் தங்கியிருந்த காலத்தில் அர்ச்சுனன் கண்ணபிரானை வணங்கி, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் போர் தொடங்கும் முன் தாங்கள் எனக்குக் கூறிய உபதேசங்கள் யாவை? கொடிய போர் நடந்த காரணத்தால் சிந்தனை அதனில் தோய்ந்து, தாங்கள் கூறியவை மறந்து விட்டன. மீண்டும் அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
கருணையுள்ளங் கண்ணபிரானும் கொண்டு கர்மபக்தி, ஞான பிரபத்தியாகிய தத்துவங்களின் பண்பு நிலைகளை நன்கு சாற்றிட, பார்த்தன் அவற்றை அறிந்து கொண்டு. “அடியேனுக்கு இத்தகைய மேன்மையான தத்துவங்களை உபதேசித்து அவற்றின் மூலம் மரணமிலாப் பெரு வாழ்வுக்கான உபாயத்தை கூறியதோடு இறுதியில் அடைய வேண்டி பற்றியும் தெளிய அறிவித்து ஆட்கொண்ட ருளினாய். அத்தனே! அனந்தநாதனே! பரந்தாமனே! பாற்கடல் வண்ணனே! வைகுந்த வாசனே! நின்னைப் பலகாலும் வணங்குகின்றேன்” என்று கூறித் தொழுதான். அடைய வேண்டிய முத்தியை
கண்ணபிரான் துவாரகைக்குச் செல்லல்
துவாரகையிலிருந்து வந்து நீண்ட நாட்கள் ஆயின ஆகலின் கண்ணபிரான் துவாரகைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அர்ச்சுனனிடம் வெளியிட் டார். அதன் காரணமாக இருவரும் அஸ்தினாபுரம் சென்றனர். கண்ணபிரான் தர்மபுத்திரரிடமும், அர்ச்சுனனிடமும், மற்றவர்களிடமும் விடை பெற்றுக்காண்டு சாத்தகியோடும். சுபத்திரையோடும் தேரேறி நால்வகைப் படையுடன் துவா ரகை நோக்கிச் செல்லலானார். வழியில் உதங்கர் ஆசிரமத்தை அடைந்தார். தேரினின்று இறங்கி அம்முனிவரை வணங்கினார்.
உதங்கர் கண்ணனை நிந்தித்தார். கெளரவர் நாசத்துக்குக் காரணமானவர் என எண்ணி அப்பெருமானுக்குச் சாபமிடப் போவதாகக் கூற, அப்பெருமான் நடந்தன அனைத்தையும் கூறினார். தம் சொல்லைக் கேளாமையால் துரியோதனாதியர் அழிந்தனர் என்றார். பின்னர் அவருக்கு விசுவரூபத்தை காட்டி உண்மை நிலையை உணர்த்தினார். நீர் வேட்கை வருந்தோறும் நீர் கிடைக்கும்படியான வரம் அளித்தார். பின்னர் இந்திரனை அணுகி அவருக்கு அமிர்தம் கொடுக்கச் சொன்னார். அவன் சண்டாள வடிவத்துடன் அமிர்தத்தை கொடுக்க அதனை ஏற்க மறுத்து விட்டார். அதனால் கண்ணபிரான் பாலை நிலத்திலும் நல்ல நீர் கிடைக்கும்படியான வரம் அளித்தார். அதன் பின் சுபத்திரையோடும் சாத்தகியோடும் துவாரகை அடைந்தார்.
துவாரகை அடைந்த கண்ணபிரான் தம் பெற்றோரை வணங்கினார். அதன் பின் தந்தை வகதேவர் முதலானவர்களுக்கு நடந்த பாரத யுத்தத்தைப் பற்றிச் சொன் னார். அந்த யுத்தத்தில் அபிமன்யு இறந்த தைக் கேட்டு வசுதேவர் பெரிதும் துக்க முற்றார். கண்ணபிரான் அவரைத் தேற்றி னார்.
மரித்தே பிறந்த உத்தரையின் குழந்தை
வியாசர் சொற்படி தர்மபுத்திரர் அசுவ மேத யாகம் செய்வதற்கு வேண்டிய திரவி யத்தைக் கொணர்வதற்காக தன் தம்பிய ருடன் மருத்தனுடைய திரவியத்தைப் பெற்று வரச் சென்றார். அச்சமயம் கண்ணபிரான் பலராமருடனும், சுபத்திரை யுடனும் யாகத்தின் பொருட்டு அஸ்தினா புரம் வந்தார். திருதராட்டிரரும் விதுரரும் முறைப்படி வரவேற்று மகிழ்ந்தனர்.
கண்ணபிரான் அஸ்தினாபுரத்தில் தங்கியிருக்கையில் உத்தரைக்கு ஆண் குழந்தையொன்று மரித்தே பிறந்தது அது கண்டு குந்தியுள்ளிட்ட அனைத்துப் பெண் களும் அழ, அந்த அழுகுரல் கேட்டு கண்ண பிரான் பிரஸவ அறைக்குள் நுழைந்தார்.
கண்ணபிரானைக் கண்ட உத்தரை கை கூப்பி வணங்கி “பெருமானே! இந்த குரு குலத்திற்கு ஒரே வாரிசாக விளங்கும் இக்குழந்தையை எப்படியாவது பிழைக்க வையுங்கள்” என்று முறையிட்டாள். உத்தரையின் முறையீட்டை அப்பெருமான் ஏற்றார்.
உயிர் பெற்ற குழந்தை
அதனால் அவர், எல்லா உலகங்களும் கேட்கும்படியாக “உண்மையும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுதும் இருப்பது உண்மையானல், ஒருபொழுதும் அர்ச்சுனனிடத்தில் பகையை எண்ணாமல் இருப்பது உண்மையானால், கம்சனையும், கேசியையும் நான் வதைத்துக் கொன்றது உண்மையானால் இக்குழந்தை பிழைக் கட்டும்” என்று சபதம் செய்து, தமது திருவடிகளால் அக்குழந்தையின் தலை முதல் பாதம் வரை தடவினார். கண்ண பிரானின் மலர்ப்பாதங்களின் ஸ்பரிசம் பட்டவுடன் குழந்தை உயிர் பெற்றது.
பரிக்ஷித்து
அபிமன்யுவின் புதல்வனான இப்புதல் வன், குரு குலமானது பரிஷீணமானபோது பிறந்தமையால் இவனுக்குப் ‘பரிக்ஷித்து’ என்ற பெயர் நிலை நிற்க வேண்டும் என்று சுபத்திரை கூற, கண்ணபிரானும் ‘அவ்வாறே ஆகட்டும்’ எனக் கூறி சென்றார் .
பரிக்ஷித்துப் பிறந்து ஒருமாதம் ஆனவுடன் தருமபுத்திரர் தம்பியரோடு இமயமலைக்குச் சாரல் சென்று மருத்தன் விட்டுச் சென்ற மிகுதியான செல்வத்தைக் கொண்டு வந்தார். அப்போது கண்ண பிரான் பாண்டவரை எதிர்கொண்டு வரவேற்றார்.
அதன்பின்னர் வியாசர் அசுவமேத யாகத்தைச் செய்யும்படி கூறியதோடு, “யாகக் குதிரையை உலகம் முழுவதும் சுற்றி வரும்படி செய்வாயாக”என்று தருமபுத்திரருக்குக் கூறினார். அந்த யாகக் குதிரைக்கு எந்தவிதத் தீங்கும் யாராலும் வராமல் பாதுகாக்க அதன் பின் செல்லுமாறு அர்ச்சுனனை நியமித்தார்.
பரிவலம் வந்தச் சருக்கம் (யாகக் குதிரை உலகைச் சுற்றி வந்த சுருக்கம்)
குதிரையின் பின்னால்
அர்ச்சுனன் வட திசை நோக்கிச் சென்றான். அங்கு எதிர்த்த மன்னர்கள் அனைவரையும் எளிதில் வென்றான். அடுத்து திரிகர்த்தர் களை வென்றான். அதன்பின்னர் மகத நாட்டுப் பிராக்ஜோதிஷ நகர் சென்று அந்நகர அரசனாகிய பகதத்தன் குமாரன் யஜ்ஞத்தனை வென்றான். பின்னர் அவர் களையெல்லாம் சித்ரா பவுர்ணமியில் அத்தினாபுரியில் நடக்க இருக்கும் அசுவமேதயாகத்துக்கு வரவேண்டுமென்று அழைத்தான்.
அடுத்து அர்ச்சுனன் சிந்து தேசம் சென்று அங்கிருந்த ஸைந்தவர்களிடம் கடும் போரிட்டான். அவர்கள் அர்ச்சுனன் மீது அம்புகளைச் சரமாரியாகப் பொழிந்தனர்.
அதனால் அர்ச்சுனன் கையிலிருந்த காண்டீபமும், கையறையும் கீழே விழுந்தன. தேவரிஷிகள் ஜப பலத்தால் மீண்டும் காண்டீபமும், கையுறையும் பெற்று உத்வேகம் அடைந்து கடும்போர் புரிந்தான். அதன்பின் திருதராட்டிரரின் கடைசிப் பெண்ணும் சிந்து தேச அரசன் ஜயத்திரதன் மனைவியுமான துச்சளை என்பாள், தன் பேரனாகிய பாலனைக் காண்பித்து, “அண்ணா, இவன் தந்தை யாகிய சுரதன் தன் தந்தையாகிய ஜயத்திர தன் உன்னால் கொல்லப்பட்டதைக் கேட்டு துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். நீ இப்பொழுது வந்திருக்கின்றாய் என்று அறிந்தவுடன் உயிர்துறந்தான். என் கணவரால் உன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டான் என்பதை மறந்து இவனுக்கு அருள்புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டபின் தங்கை ஆகையினால், அர்ச்சுனனும் அருள் புரிந்தான். இவ்விதம் பல மன்னர்களை வென்று, மேலும் குதிரையையும் பின்தொடர்ந்து சென்றான்.
அதன்பின் அர்ச்சுனன் கலிங்கம், குலிங் கம் முதலான நாடுகளை வெற்றிகரமாகக் கடந்து விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள நீலன் என்னும் அரசனை வென்று மணலூரை அடைந்தான். அங்கு அவனுக்குச் சித்திராங்கதை மூலமாக பிறந்த பப்ருவாகனன் என்பவன் தன் தந்தை வந்திருக்கிறார் என்பதைக் கேட்டு மரியாதையுடன் காண வந்தான்.
மகனிடம் வீரம் பேசிய அர்ச்சுனன்
தன் மகனைக் கண்ட அர்ச்சுனன் “பப்புருவாகன! என் தமையனார் தருமபுத்திரர் சிறந்த முறையில் அசுவமேத யாகம் செய்தவற்காகப் பல அரசர்களை வென்று இங்கு வந்துள்ளேன். அப்படி யிருக்கும்போது நீ என்னைப் போரில்தான் சந்திக்க வேண்டுமே தவிர தகப்பன் – மகன் என்ற உறவு முறையில் சந்திக்கக் கூடாது. அந்த நிலையில் நீ என்னை வரவேற்கவும் கூடாது” என்று வீரம் பேசினான்.
அர்ச்சுனன் மீது உலூபி கோபம்
அப்பொழுது அங்கிருந்த அர்ச்சுனனின் மற்றொரு மனைவி உலூபி என்ற நாகக் கன்னிகை பப்புருவாகனனை வீரம் பேசும் அர்ச்சுனனிடம் போரிடுமாறு தூண்டினாள். அவளது தூண்டுதலினால் பப்புருவாஹ னன் அர்ச்சுனன் மீது அம்புகளைத் தொடுத் தான். அந்த அம்புகள் அர்ச்சுனன் உடம்பில் பாய்ந்ததால் அவன் மயக்கமடைந்து கீழே வீழ்ந்தான்.
இதனைச் சித்ராங்கதை கேட்டுப் போர்க்களம் வந்து விழுந்து கிடக்கும் தன் கணவனைக் கண்டு ஆறாத் துயரோடு புலம்பி மயங்கி விழுந்தாள். எழுந்த அவள் உலூபியை நிந்தித்தாள். பப்புருவாஹனன் தன் செயலுக்கு வருந்தினான்.
பிதாவைக் கொன்ற கொடிய பாவியான எனக்கு என் தந்தையினுடைய தோலை யுடுத்து அவருடைய மண்டையோட்டில் பிச்சையெடுத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டுச் சஞ்சரிப்பதன் மூலம்தான் இந்தப் பாவம் தீரும் இதற்கு வேறு பிராயச் சித்தம் இல்லை என்று கூறி வருந்தினான்.
அவன் “உலூபியாகிய மேலும் மாற்றாந்தாய் தூண்டியதால்தான் என் தகப்பனாரைக் கொன்றேன். அவரைப் பிழைக்கவைக்கமாமல் போனால் நான் உயிர் பிழைக்க மாட்டேன்” என்றுகூறி ஈன்ற தாயாகிய சித்ராங்கதையோடு உயிர்விடத் துணிந்தான்.
அர்ச்சுனன் உயிர் பெற்று எழல்
இதனையறிந்த உலூபி தன் செயலுக்கு வருந்தி தன் தந்தையாகிய நாகராஜனை நினைத்தாள். உடனே நாகராஜன் அங்கு வந்து ஸஞ்சீவனம் என்னும் மணியை உலூபியிடம் கொடுக்க அவள் அவன் மார்பில் வைத்து “என் கணவன் உயிரை மீட்பாயாக” என வேண்டினாள். அதனால் அர்ச்சுனன் உறங்கியவன் போல விழித்து எழுந்தான்.
உயிர்பெற்றெழுந்த அர்ச்சுனன் தன் மனைவியர் சித்ராங்கதை, உலூபி, மகன் பப்புருவாஹனன், சேனையர், அந்தணர் முதலானோர் துக்கத்துடன் சூழ்ந் திருத்தலைக் கண்டு ஒன்றும் புரியாதவ னாக “நீங்கள் எல்லோரும் துக்கத்தோடு இருக்கக் காரணம் என்ன” என்று கேட்டான். பப்புருவாஹனன் தந்தையின் பாதங் களைப் பற்றி வணங்கி நடந்த நிகழ்ச்சியைக் கூற அங்கிருந்த அனைவரும் மகிழ்வுற்றனர்.
அப்போது அர்ச்சுனன் உலூபியைப் பார்த்து “தான் வந்திருந்த காரணத்தைக் கூறியதோடு பப்புருவாஹனனைத் தன்னோடு போரிடும்படி செய்ததனையும், தன்னைக் கொல்லச் செய்து பின்னர் பிழைப்பித்த வகையையும் அவற்றிற்குரிய காரணங்களையும் கூறுவாயாக” என்று கேட்க, உலூபி சொல்லலானாள்.
“நான் ஒருமுறை கங்கையில் நீராடச் சென்றேன். அவ்விடத்து ஏழு வசுக்களும் வந்து மந்தாகினியாகிய கங்கா தேவியைப் பார்த்து ”அர்ச்சுனன், நின் மகன் பீஷ்மரை நேரில் நின்று கொல்லாமல் சிகண்டியை முன்னிட்டு வைத்துக் கொன்றனன் ஆதலின் அவனுக்கு நாங்கள் சாபம் கொடுக்க உள்ளோம்” என்று கூறக் கங்கா தேவியும் அதனை ஏற்றுக்கொண்டாள். (தற்காலத்தில் கேதார்நாத் அருகில் உற்பத்தியாகி ருத்ர பிரயாக் என்ற இடத்தில் அலெக்நந்தாவுடன் சேரும் நதிக்கே மந்தாகினி என்று பெயர்) அதனை நான் அறிந்து என் தந்தை நாகராசனிடம் சென்று கூறினேன். அவர் மிக வருத்தம்கொண்டு ஏழு வசுக்களிடம் சென்று அவர்களை வணங்கி அர்ச்சுனன் மீது மகாபாரதம் – 63கொண்ட கோபத்தைத் தவிர்க்கும் படி நாகராஜனிடம் அவர்கள் “அந்த அர்ச்சுனன் அவன் பிள்ளை விடும் அம்பினால் மரித்துப் போவான். நீ உன் சஞ்சீவன மணியால் அவனை உயிர்ப்பிப்பாய். இது நடக்கவில்லை யென்றால் அர்ச்சுனன் நரகம் புகுவான்” என்று கூறிப்போயினர். கூற
நாகராஜனுக்கு நன்றி கூறிய அர்ச்சுனன்
”இந்த இரகசியத்தைத் தந்தையிட மிருந்து நான் அறிந்ததனால் பப்ருவாஹன னோடு போரிட்டு இறக்கும்படி செய்து பின்னர் உயிர் பிழைக்கச் செய்தோம். இதனைக் கேட்டு அர்ச்சுனன் பெரும் மகிழ்ச்சிக் கொண்டான். அர்ச்சுனன் தன்னை நரகம் புகாமல் செய்ததற்காக நாகராஜனுக்கு நன்றி கூறினான்.”அதன் பின்னர் சித்ரா பவுர்ணிமியில் அஸ்தினா புரத்தில் நடக்கின்ற அஸ்வமேத யாகத்திற்குச் சித்தராங்கதையோடும், பப்புருவாஹனனோடும், நின் தந்தை யோடும் வருவாயாக ” என்று கூறி உலூபியை அனுப்பிவிட்டு அஸ்வமேத யாகக் குதிரையின் பின் சென்றான். அதன்பின் பாண்டிய நாட்டிலேயே சிலகாலம் தங்கி மேலைக் கடல் வழியாக வடக்கே செல்லலானான். கிரிவிரசப்பதி புகுந்து சராசந்தன் பௌத்திரனும் சகா தேவனின் மைந்தனுமான மேக சந்தியை வென்று அவனோடு நட்புக் கொண்டான். அவனுக்கு அஸ்வமேத வருமாறு அழைப்புவிடுத்தான். யாகத்திற்கு
அவர்கள் அதன்பின் சேதி நாட்டு மன்னன் சிசு பாலன் மகன் சரபன் என்பவனை வென் றான். பின்னர் கோசலம் காசி தசார்ணவம் போன்ற பல நாட்டு மன்னர்களை வென்று அடிமைப்படுத்தினான். அனைவரையும் யாகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தான். பின்னர் காந்தார நாடு போய் சேர்ந்தான். அங்கு சகுனி மகனோடு போரிட்டு அவனைப் பணிய வைத்தான். அவனோடு நட்பு கொண்டு யாகத்திற்கு வரும்படி அழைத்தான். மச்சநாடு சென்று விராடன் மகனையும் பாஞ்சால நாடு சென்று திட்டத்துய்மன் மகனையும் யாகத்திற்கு அன்போடு அழைத்தான். வருமாறு
இவ்வாறு பாரத நாட்டு அரசர்கள் பலரையும் வென்று அவர்களிடம் நட்பு கொண்டு வேண்டிய திறைப் பொருளைப் பெற்று அனைவரையும் அசுவமேத யாகத் திற்கு அழைத்து இறுதியாக அத்தினாபுரம் வந்தடைந்தான்.