சூரியன் வருவது யாராலே? பாடல்

0
56

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதை நாம் எண்ணிட வேண்டாவோ?
தண்ணீர் விழுந்ததும் விதையின்றி தரையில் முளைத்திடும் புல் ஏது?
மண்ணில் போட்டது விதையொன்று மரஞ் செடியாவது யாராலே?
கண்ணில் தெரியா சிசுவையெல்லாம் கருவில் வளர்ப்பது யார் வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம் ஏதோ ஒரு விசை இருக்குதன்றோ?
அருகன் கணபதி ஆறுமுகன்
அன்னை அம்பிகை ஸதாசிவன்
ஸ்ரீ ராம க்ருஷ்ண கோவிந்தன்
ஸ்ரீ லக்ஷ்மி துர்கை ஸரஸ்வதி
அய்யனார் ஹநுமன்
என்றெல்லாம் பேசும் தெய்வம் பலவுண்டு
ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றே உண்மையன்றோ?
அந்தப் பொருளை நாம் நினைத்தே அனைவரும் அன்பாய் குலவிடுவோம்
எந்தப் படியாய் எவர் அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல்
செய்யாமல் வந்திப்போம் அதை வணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

சூரியன் வருவது யாராலே? பாடல் Aanmeega Bhairav

Facebook Comments Box