அரிட்டாபட்டி மக்களுக்களை நாளை சந்திக்கிறார் அண்ணாமலை…. காரணம் இதோ…!?
கந்த புராணம் – 7 தேவேந்திரனின் இந்த ஆலோசனை பிரம்மனுக்கு உசிதமாகத் தெரிந்தது… திருமுருகன் அவதரித்தான்
vivekabharathi - 0
எம்பெருமானின் திருக்கல்யாணம் முடிந்த கையோடு அவரவர்கள் உல்லாசமாக தத்தம் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் தேவாதி தேவர்கள் மட்டும் அசுரர்களின் அச்சத்தினால் அஞ்சி நடுங்கி மேருமலையில் பதுங்கி வாழத் தொடங்கினார்கள்.
அமரேந்திரனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்துகொண்டிருந்தது. திங்கள் பல தாண்டியும் இறைவனின் திருவருளால் தெய்வத்திருமகன் அவதரிக்காதது அமரனுக்கு அளவுக்கு மீறிய பயத்தைக் கொடுத்தது.
திக்கு பாலகர்கள், அஷ்ட வசுக்கள், தவமுனிவர்கள் என்று தேவர்கள் ஒவ்வொரு வரும் இதே சங்கடத்தில் மிதந்து கொண்டிருந்தனர். எந்த நேரம் எப்படி வருவானோ சூரன் என்ற பயம் அவர்கள் நிம்மதியைக்...
முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும்
கருடன், ஸ்ரீ வாசுதேவனைத் தொழுது, "ஸ்வாமீ!! உலகத்தில் தோன்றும் ஜீவர்களில் ஒரு சில குறிப்பிட்ட ஜீவர்களை, இந்த ஜீவன் பூர்வ ஜன்மத்தில் இன்ன பாவத்தை செய்தவன். இந்த ஜீவன் இன்ன புண்ணியம் செய்தவன் என்பதைப் பகுத்தறியும் அறிவாற்றலால் அறியலாமோ? பாபஞ் செய்தவரைத் தண்டிப்பவன் யமனைத் தவிர வேறு ஒருவரும் இல்லையா? இந்த விஷயத்தைப் பற்றி அடியேனுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டினான்.
அதற்குப் பரந்தாமன், பக்தனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்: காசிப முனிவரின் மகனே! இந்த ஜீவன்...
ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்:
"காசிபன் மகனே! புத்திரன் முதலியோர், தன் தாய்தந்தையர்களைக் குறித்து ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தை தன் மகனுக்கும், தமையன் தன் தம்பிக்கும் சிரார்த்தம் செய்யும்படி நேரிட்டால், தன் தலைமுறையில் உள்ளவரைக் குறிக்காமல், இறந்தவனைக் குறித்து மட்டுமே செய்யவேண்டும். ஆசௌசம், விருத்தி முதலியவை நேரிட்டால், அவை: நீங்கிய தினத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மரித்தவனுக்குக் கிருத்தியம் செய்யும் பொழுதே. சபிண்டீகரணம் செய்யாமல் மாசிகம் மட்டுமே செய்து வரும்போது, ஆசௌசம் நேர்ந்து மாசிகம் நிறுத்தப்படுமானால், அந்த...
வாசுதேவன், விநுதையின் மகனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:
"வைனதேயா! நான்கு வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் செய்கின்ற பாவங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரையே சேரும். தாய் தந்தையரில்லையென்றால் அக்குழந்தைகளை ரட்சிப்பவர்களைச் சாரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். பாபஞ்செய்யும் குழந்தைகளுக்குப் பாபமில்லை. குழந்தைகளை அரசன் தண்டிக்கக்கூடாது. இது நிற்க.
"பிணியால் பீடிக்கப்பட்டு, ஸ்நானம் செய்ய முடியாமல் இருப்பவனுக்கு ஆசௌசம் நேர்ந்தால் ஆசௌசம் இல்லாத ஒருவன், பத்தரவர்த்தி ஸ்நானம் செய்து, ஓராவர்த்தி அவனைத் திண்டி, மீண்டும் அவ்வாறு பத்தரவர்த்தி ஸ்நானம் செய்து...
கருட புராணம் – 28 காமியா விருஷோற்சர்க்கம், இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும்
vivekabharathi - 0
புராணிகரான சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி, "மறந்து புறந்தொழாத வைணவ ஆசார, நைமிசாரணிய வாசிகளே!" என்று கூறலானார்.
சர்வக்ஞரான பெருமான், கருடனை நோக்கிக் கூறியது:
"வைனதேயா! விருஷோற்சர்க்கத்தைப் பற்றிய வேறொரு வகையையும் சொல்லுகிறேன்" கேள் .
"முன்பு சொன்ன தினங்களில் ஒரு நாள், ஸ்தல சுத்தி செய்த பிறகு, அக்கினிப் பிரதிஷ்டை செய்து, ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும் அதற்குச் சிறிதான கிடாரிக் கன்று ஒன்றையும் கொண்டு வந்து அவ்விரண்டையும் மஞ்சள் நீராட்டி ஆடையாபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்து...