அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நாளை(ஆக.,5) நடைபெறும் நிலையில், அங்குள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு வழங்க, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
அயோத்தியில் குரங்குகள் அதிகம் உள்ளதால், விழாவுக்கு வரும் பக்தர்களை உணவுக்காக தாக்கக்கூடும். எனவே அயோத்தியில் உள்ள குரங்குகள் அனைத்துக்கும், அடிக்கல் நாட்டு விழா தினத்தில், பழங்கள், தானியங்களை உணவாக அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு ஏற்பாட்டை அரசு சார்பில் செய்யவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.