ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து பயணச்சீட்டுடன் திருப்பதியில் தரிசனம்

0
3

 

சென்னை மாதவரத்திலிருந்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் பேருந்து மற்றும் கார்கோ சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான ஆன்லைன் சீட்டுக்கள், பேருந்து பயணச்சீட்டுடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் நாள்தோறும் 1000 ஆன்லைன் சீட்டுக்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பயணச்சீட்டு பெறும் போதே, தரிசனத்திற்கான ஆன்லைன் சீட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே இந்த வாய்ப்பை பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி கொள்ளலாம் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here