கைலாசா நாட்டின் மீது உயிர் போர்…. இந்து மதத்தை அழிக்க மர்ம விதை…. நித்யானந்தா அலறல்…! Bio war on Kailasa country …. Mystery seed to destroy Hinduism …. Nityananda Screaming..!

0
4

 

கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர் என நித்யானந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். அங்கு ஓட்டல் தொடங்க மதுரை இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்தார். கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும்   நித்யானந்தா   வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.
இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘’கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.
என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here