Home Aanmeega Bhairav இன்றைய ராசிபலன் – Latest Astrology…! 10-02-2021

இன்றைய ராசிபலன் – Latest Astrology…! 10-02-2021

0

 

மேஷம்:
இன்று பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்:
இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.
மிதுனம்:
இன்று குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். 
கடகம்:
இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். 
சிம்மம்:
இன்று எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது. எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். 
கன்னி:
இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால்  தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள்  தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.
துலாம்:
இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். 
விருச்சிகம்:
இன்று மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. 
தனுசு:
இன்று குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்:
இன்று புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.
கும்பம்:
இன்று சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். 
மீனம்:
இன்று குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம்.  வீண்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here