கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்? நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த பிரபஞ்சம். பஞ்ச பூதங்களைப் படைத்த இறைவனை, பஞ்ச பூதங்களும் அடங்கிய கருங்கல்லினால் விக்கிரகமாக வடித்து வழிபடுகிறோம். நீர்: பாறைகளை உடைத்துத்தானே நீர் (water) ஊற்றுகளை கண்டறிய முடிகிறது. மேலும் நீரின் தன்மை குளிர்ச்சி, பாறைகளில் நீரின் குணம் இருப்பதால்தான், அவை இயற்கையாக குளிர்ச்சியை வெளிப்படுத்தும். நிலம்: கல்லும் மண்ணும் சேர்ந்துதானே நிலம். நெருப்பு: இரண்டு கற்கள் உராயும் போது, நெருப்புப் பொறிபறப்பதிலிருந்து இவைகளில் நெருப்பு அடக்கம் என்று தெரிகிறது.
காற்று: கல்லினுள் தேரையும் வசிக்கும் என்றால், காற்று இருக்க வேண்டுமல்லவா? ஆகாயம்: பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் சப்த அலைகள் நிறைந்தது. கற்கள் சப்தங்களை எதிரொலிக்கச் செய்வதால், கருங்கல்லில் ஆகாயத் தத்துவம் அடங்கியுள்ளது. அசையாத்தன்மை கொண்ட கல்லினால் ஆன விக்கிரகங்களை வழிபடும்போது அவனின்றி அணுவும் அசையாது என்பதை புரிந்துகொள்கிறோம்.
கோவிலில் மூலவர் விக்கிரகம் கல்லால் வடிக்கப்பட்டிருந்தாலும், உற்சவ மூர்த்தி செம்பினால் ஆனதாக இருக்கும். மின் சக்தியை ஈர்க்கவும், தக்கவைத்துக்கொள்ளவும், வெளிப்படுத்தவும், மற்ற உலோகங்களை விடவும் செம்புதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. கல்லால் விக்கிரகம் அமைத்து வழிபடுவது உயர்வானது. உலோக சக்தி, மனோ சக்தி, மந்திர சக்தி, எந்திர சக்தி, ஆன்ம சக்தி இவைகளால் அது தெய்வ சக்தி பெறுகிறது. வி+க்ரகம் * விக்ரம், வி_ விசேஷமான க்ரகம் _ இருப்பிடம், இறைவன் சிறப்புடன் இயங்கும் இடம்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
கன்யாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு நகரில் உள்ள சிவன் கோயில். மூலவர் பிரதிபனி லிங்க வடிவில் உள்ளார். கோயில் வளாகத்தில் சிவன் மற்றும் திருமால் கோயில்கள்...
ஸநாதனம் - ஒரு சவால் அழியாதது ஸநாதனம் எனும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு என்றும் உள்ளது என்பது பொருள். என்றும் உள்ளது எனும்பொழுது அழியாதது என்பது தெளிவு. அழியாதது...
நெல்லி மரத்தை வீடு மற்றும் தோட்டத்தில் வளர்ப்பதின் ஆன்மீக, பரம்பரிய மற்றும் துறவறக் குணங்களின் விரிவான விளக்கம் நெல்லி மரத்தின் முக்கியத்துவம் நெல்லி மரம் என்பது பாரம்பரிய...
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு: ஒரு விரிவான ஆய்வு வாரத்தின் முதல் நாளாக ஞாயிற்றுக்கிழமை (Sunday) இருக்கும் காரணம் ஆன்மீக, ஜோதிட, சாஸ்திர மற்றும் தொல்பொருளியல் அடிப்படையில்...