திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏற்கனவே ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திர சுற்றுலாத் துறைகள் சாலை மார்கமாக ஒரு நாள் சுற்றலாத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
தற்போது முதல் முறையாக டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் ரயில் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்லும் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கிருந்து ரயில் மூலம் திருப்பதி ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு பக்தர்கள் தங்களது சொந்த செலவில் வந்துவிட வேண்டும். அங்கிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவில் ரயில் மூலம் ஊர் திரும்பும் வகையில் ஒரு நாள் திருப்பதி சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி கொண்டு வந்துள்ளது.
ரயிலுக்கு முன்பதிவு செய்யும் போதும், டிவைன் பாலாஜி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் போதும் ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் ஆண்கள், வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமா போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணியலாம். டிசர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அனுமதிக்கப்படாது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தங்கும் வசதி கிடையாது. அசல் அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பல வளங்கள் தந்திட,விசுவாவசு வருகிறாள்!வண்ண மேகம் விரித்து வந்து,வாழ்த்தி நாம் வரவேற்போம்! பல வளங்கள் தந்திட,விசுவாவசு வருகிறாள்!வண்ண மேகம் விரித்து வந்து,வாழ்த்தி நாம் வரவேற்போம்! சித்திரையைச் சீராக்கி,...
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி தமிழர்களின் பாரம்பரியம் என்பது காலம் கடந்தும் அழியாதது. காலத்தால் சோதிக்கப்பட்டு பல தலைமுறைகள் அனுசரித்துவரும்...
தாலி கயிறு மாற்றம்: ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் திருமணமான பெண்களின் வாழ்க்கையில் தாலி என்பது மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. திருமணத்தின் போது...