திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதன் பிறகு மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்தி பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் விண்ணை முட்டியது.
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...