திருப்பதியில் நாளை முதல், பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரடி தரிசன டோக்கன் முன்பதிவுகள் இன்று துவங்க உள்ளது.
திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பளக்சில் மொத்தம், 18 கவுன்டர்களில் காலை, 5:00 மணி முதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.இங்கு, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. தரிசனத்திற்கு முன்தினம், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை அளித்து, டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.