தொடர்ந்து, ஜூன் 11 முதல் ஆன்லைன் மூலமாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான கவுண்டர்கள் மூலமாக முன்பதிவு செய்த 3 ஆயிரம் பக்தர்கள் என மொத்தமாக 6 ஆயிரம் பேர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில், சுவாமி தரிசனத்திற்கு 1 மணி நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று 2 மணி நேரத்தில் 1200 பக்தர்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.