பதினேழாம் நாள் போர்… சல்லியன் தேர்ப்பாகனாதல்
10றுநாள் பொழுது புலர்ந்தது. பொழுது புலர்ந்தவுடன், கர்ணன் துரியோதனனிடம் சென்றான். அவனிடம், கர்ணன், “அரசே! இன்றைய போரில் அர்ச்சுனனைக் கொன் றாக வேண்டும். இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கடோத்கஜன் பொருட்டு இழந்தேன். அதனால் அர்ச்சுனன் என்னை தைரியத்துடன் எதிர்க்கின்றான். மேலும் பரசுராமர் எனக்கு வழங்கிய ‘விஜயம்’ என்ற என்னுடைய வில்லை விட அர்ச் சுனனிடம் இருக்கும் ‘காண்டீபம்’என்ற வில் உயர்ந்தது ஆகும். இவை இரண்டும் அல்லாது அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக அசாத்திய திறமை படைத்த கண்ண பெருமான் இருக்கின்றார். அவர் தேரோட்டியாக இருப்பது மட்டுமல்லாமல் அர்ச்சுனனுக்குத் தக்க நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். அவருக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு திறமையான தேர்ப்பாகன் எனக்கு இப்பொழுது வேண்டும். அத்தகைய திறமையுடையவர் மத்ர நாட்டு மன்ன னாகிய மாவீரன் சல்லியன் என்பவர் மட்டுமே. அவரை எனக்குத் தேர்ப்பாக னாக அமைத்துக் கொடுத்தால், அர்ச்சுனனை நிச்சயம் நான் வெல்வேன். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்க” என்று கூறினான்.
சல்லியனிடம் வேண்டுதல்
துரியோதனன் அதனைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து அவன் விருப்பப் படியே சல்லியனைத் தேர்ப்பாகனாக ஆக்குவதாக உறுதிகூறி, அச்சல்லியனைக் காணச் சென்றான். சென்ற துரியோதனன் சல்லியனைக் கண்டு வணங்கி, “மத்திர நாட்டு மன்னரே! வணக்கம். தாங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும் என்றதும், சல்லியன், “என்ன உதவி என்னால் செய்ய முடியும்?” என்று கேட்டான். அதற்குத் துரியோதனன். “அரசே! கண்ணபிரான் எப்படி அர்ச்சுன னுக்கு ஒரு திறமையான தேர்ப்பாகனாக விளங்குகின்றாரோ அது போலத் தாங் களும் கர்ணனுக்குச் சிறந்த ஒரு தேர்ப் பாகனாக விளங்க வேண்டும். அவ்வாறு இருந்தால் கர்ணன் அர்ச்சுனனை வெல் வான். இது கர்ணனின் பெருவிருப்பம். அதன் மூலம் எஞ்சியிருக்கும். நம் சேனையை நாம் காப்பாற்ற முடியும்” என்று கூறி வேண்டினான். துரியோதனன அதனைக் கேட்டவுடன் சல்லியன் மிகுந்த கோபங்கொண்டான். அவன் கண்கள் சிவந்தன; உதடுகள் துடித்தன; எரித்து விடுபவன் போலத் துரியோதன னைப் பார்த்தான். பாம்பு போலச் சீறினான். பின்னர் அவன், “உன்னைப் போல பேரரசனாக இருக்கும் என்னைப் பார்த்துத் தேர்ப்பாகனாக இருக்கவேண்டும் என்று கேட்கலாமா? இது தகுதியுடையது தானா? நியாயம்தானா? நீ அரசனாக இல்லையென்றால் இவ்வாறு கேட்டதற்கு உன் நாவினைத் துண்டித்திருப்பேன். நீ மனத்தை மாற்றிக் கொள். வேண்டு மென்றால் பாண்டவர் சேனையை இரு பகுதியாக்கி, ஒரு பகுதியைக் கர்ணன் வெல்ல வேண்டுமென்றும், மற்றொரு பகுதியை நான் வெல்ல வேண்டுமென்றும் நியதி செய்து கொடு; நான் என் பகுதியை முன்னர் வென்று, பின்னர் கர்ணன் பகுதி யையும் வென்று காட்டுவேன். மகாரதர், சமரதர். அதிரதர், அர்த்தரதர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர்க்கும் தேரோட்டுகின்ற அதிரதன் மகனாகிய கர்ணனுக்கு, மத்திர தேசத்து மன்னனாகிய நான் தேரோட்டுவதா? இது தகாது” என்று கடுமையாகக் கூறி மறுத்துரைத்தான்.
துரியோதனன் கெஞ்சல்
அதற்குத் துரியோதனன், “பெரியோனே! தேரினைத் திறம்படச் செலுத்தல் என்பது பல கலைகளின் துறைகளில் தேர்ந்த வர்க்கே சாத்தியமாகும். அது இழிவானது அன்று. கர்ணனைத் தேர்ப்பாகன் அதிரதன் மகன் என்று எண்ணி இகழாமல்,பகை வரது பலத்தை அறிந்து தொழில் புரியும் வீரன் என்று எண்ணிச் சாரத்தியம் செய்தால், அந்தச் சாரத்திய ஆற்றல் நன்கு வெளிப்படும்.
”திருமால் முதலான தேவர்களுக்கெல் லாம் நன்மை ஏற்பட அன்று திரிபுரத்தைச் சாம்பலாகும்படி புன்முறுவல் செய்த விரிசடைக்கடவுளாகிய சிவபெருமா னுக்குத் தேர்ப்பாகனாகி நின்றவன் இந்நில வுலகத்தைச் சிருட்டி செய்து கொண்டி ருக்கும் நான்முகன்தான், வேதங்களைக் குதிரைகளாகக் கொண்டு, பூமியைத் தேராகக் கொண்டு தேரூர்ந்தார் என்பர்.”
(நான்முகன் சாரதியான வரலாறு :-தாரகாசூரனது வலிமைமிக்க புத்திரர் களாகிய தாரகாட்சன், கமலாட்சன், வித்யுந் மாலி என்னும் அசுரர்கள், மிகுதியான அளவில் தவம் செய்து, அந்தத் தவ பலத்தினால் விண்வெளியில் சஞ்சரிக்கும் படியான தன்மையுடைய மூன்று கோட்டைகளைக் கட்டி, அவற்றோடும் மற்றும் பல அசுரர்களோடும் தாம் நினைத்த இடங்களில் எல்லாம் பறந்து சென்று பல இடங்களையும் பாழாக்கி வந்தனர்.
இதனைப் பொறுக்கமாட்டாத தேவர் கள், முனிவர்கள் முதலானோர் கயிலை யங்கிரி வாசனிடம் முறையிட்டனர். அவர்களின் முறையீட்டினை ஏற்ற அப்பெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களை அத்தேருக்குரிய இரு சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும், உலகவுயிர் களைச் சிருட்டிக்கின்ற நான்முகனைத் தேர்ச்சாரதியாகவும், ஆயிரந் தலைகளை யுடைய ஆதிசேடனை நாணாகவும், காத்தற் கடவுளான திருமாலை வாயுவாகிய சிறகமைத்து, அக்கினியை முனையாக வுடைய அம்பாகவும், மற்றைத் தேவர் களைப் பிறபோர்க் கருவிகளாகவும் அமைத்துக் கொண்டு, யுத்த சன்னத்தராகி, சென்று போர் செய்ய எத்தனித்துப் பின் மேல் கூறியவற்றைப் பயன்படுத்தாமல் புன்முறுவல் பூத்து, வல் பூத்து, அப்புன்முறுவல் ஒன்றைக் கொண்டே அத்திரிபுரங்களையும், அத்திரிபுராதிகளையும் ஒருசேர அழித்தார். அதன் பயனாகத்தான் சிவபெருமான், ‘திரிபுராந்தகன்’ என்ற சிறப்புப் பெய ரயும் பெற்றார்- இந்த வரலாற்றைத் தான் ரையு துரியோதனன் இங்கு சுட்டிக்காட்டிப் பேசினான் என்க.)
தேரோட்டும் தொழில் இழிவன்று!
“அதுமட்டுமா சல்லியமன்னரே! நாம் விராட நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருகின்ற காலத்து, அவற்றை மீட்பதற்காக வந்த விராட நாட்டு இளவல் உத்தர னுக்காகத் தேரோட்டி வந்தவன், சாட்சாத் அர்ச்சுனனே என்பதை மறந்தீரா? ஆகை யினால் தேரோட்டும் தொ வுடையதன்று. அஃ தொழில் இழி அஃது இழிவுடையது என்றால் அர்ச்சுனனுக்குக் கண்ணபிரான் தேரோட்டுவானா? சிந்தித்துப்பார். எனவே இந்த அரிய சிறப்புடைய தொழிலை என் பொருட்டுத் தானவீரன் கர்ணனுக்காகச் செய்வாயாக?” என வணங்காமுடி வேந்தன் துரியோதனன் வணங்கி, சல்லிய னைக் கேட்டுக் கொண்டான்.
விண்ணவர்க்கும். மண்ணவர்க்கும் மற்றவர்க்கும் வணங்காமுடியுடை வேந்த னாகிய துரியோதனனே தன்னை வணங்கிக் கேட்டுக் கொண்டதனால், மத்திர நாட்டு மன்னன் சல்லியன் ஒப்புக்கொண்டான். அதனால் துரியோதனன் மகிழ்ச்சியோடு விடைபெற்றான்.
கர்ணனின் மகிழ்ச்சி
சல்லியன் தனக்கு தேரோட்டியாக இருக்க இசைந்துவிட்டான் என்பதனைக் கர்ணன் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைத்தான்.
”சல்லியரே! நான், தங்களை என் தேர்ச்சாரதியாகப் பெரும் பேறு பெற்றத னால் பெற்றுள்ளேன். அதனால் இன்றைய போரிலேயே, பகைவர்களாகிய பாண்ட வர்களை அழித்தொழித்து இந்தக் குரு நாட்டை மீண்டும் தொடர்ச்சியாக ஆளும்படி என் உயிர் நண்பன் துரியோ தனனுக்குக் கொடுப்பேன். அப்பொழுது நீ என் வில் வலிமையை அறிந்து கொள் வாய்” என்று சற்றுக் கர்வம் தொனிக்கக் கூறினான்.
அதனைக் கேட்டுச் சல்லியன் சிரித்துக் கொண்டே, “கர்ணா! அர்ச்சுனன் தேருடன் உன் தேர் மோதிப் போரிடுகின்ற காலத்து, உன் வீரம் வெளிப்படையாக அனை வர்க்கும் தெரியவரும். அதற்கு முன்னே வீண் ஜம்பம் பேச வேண்டாம். சற்று வாயடங்கி இரு ” என்று முகத்தில் அறைந்தாற் போலக் கூறினான்.
அதனைக் கேட்டுக் கர்ணன் மிகுந்த கோபம் கொண்டான். தான் பாண்ட வர்களோடு போர் செய்யப் போவதையும் மறந்தான். சல்லியனைப் பார்த்து, “சல்லியா! தேரோட்ட வந்துவிட்டு, போர் செய்யும் வித்தையை, என்ன தகுதி பற்றிப் பேச வந்தாய்? வாயை மூடிக் கொண்டு என் தேரைச் செலுத்துக” என்று ஆணவத்தோடு பதிலுரைத்தான்
கர்ணனின் ஆணவவுரையைக் கேட்ட சல்லியனுக்கு அடங்காத கோபம் வந்து விட்டது. அதனால், அவன், “தேரோட்டி மகளே! கர்ணா! என்னை யார் என்று நினைத்துவிட்டாய் ? மத்திர தேசத்து மாமன்னனாகிய நான், அற்பதேரோட்டி மகனாகிய உனக்குத் தேரோட்டுவதோ? துரியோதனன் வேண்டிக் கேட்டதனால் இங்கு வந்தேன்.இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை. எடு உன் வாளை. இல்லையேல் என்னோடு போரிடு” என்று ஆக்ரோஷத்துடன் கூறினான்.
சல்லியனோடு மோதிய கர்ணன்
கர்ணனும் அவன் கூறி முடிப்பதற்கு முன்னேயே பெருங்கோபங்கொண்டான். வாளையுருவிக் கொண்டு சல்லியனோடு போர் தொடுக்க தேரினின்று இறங்கித் தரையில் நின்றான். சல்லியனும் தேரி னின்று இறங்கி, வாளினை ஏந்திக் கர்ண னோடு போரிடத் தயாராக நின்றான்.
இதனை ஏவலர் சொல்ல துரியோதனன் அறிந்தான். அந்தக் கணமே அஞ்சி அவ்விடத்திற்கு அவன் வந்து சேர்ந்தான். அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, இருவர் கோபத்தையும் போக்கினான். இனிய சொற்களைப் பேசி மெல்ல இருவரையும் தேரில் ஏறச் செய்தான்.
அதன்பின் போருக்கு ஆயத்தம் செய்வ தற்கு முன் வழங்கும் தானங்களைச் செய்த பின், கர்ணன் சல்லியனிடம் சில செய்திகளைக் கூறலானான் :
சல்லிய மன்னரே! முன் ஒருநாள் மேகங்கள் தவழ்கின்ற மகேந்திர மலை யினை நான் அடைந்தேன். அங்குள்ள ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்த பரசுராமரது திருவடி களை வணங்கி நின்றேன். அவர் என்னைப் பார்த்து, “நீ யார்? எதற்காக இங்கு வந்தாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “நான் ஓர் அந்தணன். என் பெயர் விப்பிரன் வில்வித்தைதனைத் தங்களிடம் கற்க வந்துள்ளேன்” என்றேன்.
அவரும் என்னை ஓர் அந்தணச் சிறுவன் என எண்ணி, பிரம்மாத்திரம் முதலான பல வகை அத்திரப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார். நானும் அவருடைய ஆசிர மத்தில் தங்கி, அவற்றை நன்கு பயின்றேன். அதோடு கணக்கற்ற தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் எனக்குத் தந்தருளினார்.
பரசுராமரின் சாபம்
இவ்வாறு கல்வி கற்று வரும் நாளில், ஒரு நாள் அந்தப் பெரியோராகிய பரசு ராமர், என் மடி மீது தம் தலைவைத்து உறக்கம் கொண்டார். அந்தச் சமயத்தில் தேவேந்திரன் சூழ்ச்சி கொண்டு ஓர் வண்டாகி, என் தொடையைப் புண்படுத்தி னான். இரத்தம் பெருகி வழியவும் ஆசார்யன் நித்திரைக்குப் பங்கம் வரக் கூடாதென்று எண்ணி நான் மிகவும் கஷ்டத்துடன் வண்டு துளைப்பதனால் உண்டாகும் பெருவலியைப் பொறுத்துக் கொண்டேன். இரத்தம் பாயவே அவர் உறக்கத்தினின்று எழுந்தார். வண்டு துளைக்கவும் நான் பொறுமையாய் இருத்தலைக் கண்டார். “அந்தணனுக்கு இந்தப் பொறுமை வராது” என்று முடிவு செய்து, என்னைப் பார்த்து, “நீ அந்தணன் இல்லை. நீ யார், உண்மையைக் கூறு” என்று கோபத்தோடு கேட்டார். நானும் எதனையும் மறைக்காமல், “நான் க்ஷத்திரிய ஜாதியனான அஸ்தினாபுரத்தைச் சார்ந்த அதிரதன் என்னும் தேரோட்டி வளர்த்த மகன்” என்றேன்.
இருபத்தோரு முறை பூமி முழுவதும் சுற்றி வந்து க்ஷத்திரியர்களையே வேரறுத்த அப்பரசுராமர் கடுங்கோபங்கொண்டு, “உனக்கு நான் கற்றுக் கொடுத்த வித்தை அனைத்தும் தக்க சமயத்தில் உதவிடாதபடி மறந்து போய்விடக் கடவது” என்று சாபங்கொடுத்தார் என்று கூறிவந்த அந்தக் கர்ணன் மேலும், “சல்லியா! மற்றொரு நாள் தெருவில் நான் விரைந்து தேரூர்ந்து செல்லுகின்ற காலத்து, திரிவிஜன் என்ற ஒரு முனிவரது பசுவின் கன்று தேர்ச் சக்கரத்தின் கீழ் அகப்பட்டு, நசுங்கி, இறந்து போய்விட்டது. அதனால் நான் மிக வருந்தி அம்முனிவரைச் சமாதானப்படுத்த முயன்றேன் .என்னால் முடியவில்லை. அவரோ கோபங்கொண்டு, “போர்க் களத்தில் உன் உடல் பகைவர் அம்பினால் சிதைந்து. உனது தேர்ச்சக்கரம் நிலத்தில் புதையுண்டு போகக்கடவது. என்று சாப மிட்டார்” என்று கூறிய அவன், இந்த இரண்டு சாபங்களும் பலிக்குமாயின் பாண்டவர்கள் என்னை வெல்லலாம். மற்றபடி யாராலும் என்னை வெல்ல முடியாது” என்று கூறினான்.
மீண்டும் கர்ணனை நிந்தித்த சல்லியன்
இவ்வாறு சொன்ன பின்னரும் சல்லியன் கர்ணனை நிந்தித்தே இகழ்வாகப் பேசி னான். இதனைக் கவனித்த துரியோதனன் மீண்டும் அவ்விடம் வந்து அவர்களிடம் அ பேசி சமாதானம் செய்வித்தான்.
அதன்பின் சல்லியன், சூரியனைச் செலுத்தும் தேர்ப்பாகனாகிய அருணன் போலக் லக் கர்ணனது தேரைச் செலுத்த முரசு முதலான வாத்தியங்கள் கடலொலி போல எங்கணும் முழங்கின; துரியோதனன் முதலான அரசர்கள், கிருபாசாரியார். அஸ்வத்தாமா போன்றோர; யானைகள், குதிரைகள், தேர்கள் காலாட்படைகள் ஆகிய இவர்களோடும் சூழ்ந்து வரக் கர்ணன் சூரியன் போலப் போர்க்களம் புகுந்தான்.
நால்வகைப் படைகளோடு கர்ணன் போர்க்களம் புகுதலைக் கண்டு மன்னர் களெல்லாம் புகழும்படியாகத் திட்டத் துய்மன் அக்கர்ணனைத் தாக்கினான். இருவரும் ஆக்ரோஷத்தோடு போர் புரிய லாயினர். ஆனால் கர்ணனின் தாக்குதலுக்கு ல் முன் திட்டத்துய்மன் ஈடுகொடுக்க முடி யாதவனாகி,தேருடன் ஓடிப்போனான். அப்பொழுது பாஞ்சால அரசர்கள் பலரை அஸ்வத்தாமன் கொன்றான். அதனைக் கண்டு மனம் சகியாமல் தருமபுத்திரர் பீமனை அனுப்ப, அவன் கர்ணவோடு கடும் போரிட்டான், கர்ணன் பீமனது தோள்களின் மீதும்; தொடைகளின் மீதும் அம்புகளைச் செலுத்தி வருத்த, சிங்கக் கொடியுடைய பீமன் மனம் நொந்து, வருந்தி, பின்னர் தெளிந்து, கர்ணனது தேகம் முழுவதும் இரத்தக் கறைகள் படும்படி அம்புகளை மழையெனப் பொழிந்தான். பின்பு சல்லியனை நோக்கி, “என் தம்பி அர்ச்சுனன் அன்று அரசவையில் செய்த சபதம் பழுதுபட்டுப் போகுமே என்று எண்ணியே இந்தக் கர்ணனுக்கு அவனது உயிரைத் தந்தேன்” என்று கூறி அவ்விடம் விட்டு நீங்கிச் சென்று, கௌரவர் படையை அழிக்கலானான்.
மற்றோர் இடத்தில் கண்ணனின் தம்பியாகிய சாத்தகியோடு கர்ணன் கனாகிய விடசேனன் என்பான் பெரிய யுத்தத்தைத் தொடங்கினான். அதே சமயம் சோழ மன்னனோடு மகதநாட்டு மன்னன் போரிட்டான். ஆனால் சோழன், தான் ஒரு காலத்தில் அசுரர்களை ஜெயித்து, இந்திரனுக்குத் துணை புரியுங்காலத்து, அவன் வழங்கிய அம்பினைக் கொண்டு அம்மகத மன்னனின் உயிரைப் போக்கி னான். அம்மன்னன் இறந்ததைக் கேட்ட வுடன் கெளரவர் சேனை அஞ்சி ஓடத் தொடங்கியது.
அஸ்வத்தாமனை விரட்டிய அர்ச்சுனன்
கெளரவர்படை புறங்காட்டி ஓடிப் போதலைக் கண்டு, அஸ்வத்தாமன் மனம் வெதும்பி, பாண்டவர் படைகளைக் கொடிய பாணங்களை ஏவி அழிக்கலா னான். அதனைக் கண்ட அர்ச்சுனன் தான் ஏவிய அம்புகளினால் அஸ்வத்தாமாவை ஓடும்படி துரத்தி, உயிர் பிழைக்கும்படி விடுத்தான்
இவர்கள் இவ்வாறு போரிட்டுக் கொண்டு இருக்கும்போது துரியோதனன் தம்பியர்களில் ஒருவனாகிய சுதக்கணன் (சுதக்ஷணன்) என்ற பெயரையுடைய வனோடு நகுலன் கடும் போரிட்டு, அவனைத் தோற்கடித்தான்.
இறந்தவர்கள் நீங்கலாகப் பிழைத்த வர்கள் ஒன்றாகக் கூடி பாண்டவ சேனை யுடன் கடும் போரிட்டுக் கொண்டிருக்க, சூரியன் புத்திரன் கர்ணனும் இயம தருமன் புத்திரன் தருமபுத்திரனும் எதிரெதிர் நின்று தங்கள் விற்களை வளைத்துப் பத்துத் திக்குகளும் மறையும்படி அம்புகள் ஏவிப்போரிட்டனர். அவ்விருவரும் எதிர்த்துப் போரிட்ட காலத்துப் பெருகிய இரத்த ஆறுகள் பலவாய் ஒடி கருங்கடலில் கலக்க, அக்கருங்கடல் செங்கடல் என மாறியதாம். அச்செங்கடலின் அலைகள் வீசி எறிவன யானைகளும், குதிரைகளும். காலாட் படைகளும் தேர்களுமே ஆகும்.
களைத்துப்போன கர்ணன்
இவ்வாறு இவர்கள் இருவரும் ஒரு பக்கம் போரிட்டுக் கொண்டிருக்க பீமன் தன் பங்குக்கு அன்றைய போரில் துரியோ தனன் தம்பியர் எழுவரைக் கொன்று குவித் தான். தருமபுத்திரனோடு போரிட வந்த கர்ணனை, திட்டத்துய்மன் தாக்க, அத் திட்டத்துய்மனோடு கடுமையாகப் போரிட்டு அக்கர்ணன் களைத்துப் போனான். அவனுக்கு உதவியாகத் துரியோதனன், கிருபாசாரியாரை அனுப்ப, அவர் படைகளுடன் கர்ணனுக்கு உதவிட வந்தார்.
துரியோதனன் தம்பியர்கள் எழுவர், பீமனால் மாண்ட அதே சமயத்தில் அர்ச்சுனன் எஞ்சிய சம்சப்தகர்களைப் போரிட்டு வென்றான்.
அதன்பின் கர்ணனைத் தருமபுத்திரர் எதிர்த்துப் போரிட்டு அவனது கச்சைக் கொடியினை அறுத்தார். மேலும் அவன் தேர்க்குதிரைகளை அழித்ததோடு தரும புத்திரர் மேலும் பல அம்புகளை ஏவி அக்கர்ணன் தோள்களிலும், மார்பிலும் இரத்தம் பெருகும்படியாக ஏவினார்.
கலிங்கர், மகதர்,ஓட்டியர் போன்ற பல வடதேசத்து அரசர்கள் மடியும்படி அம்பு களை ஏவியபின், தருமபுத்திரர் அநந்த விஜயம் என்னும் தன் சங்கினை எடுத்து வெற்றி முழக்கமிட்டார். அச்சங்கின் பேரொலியால் அட்டதிக்கு யானைகள் நடுங்கின; அவற்றின் காதுகள் செவிடா யின; அண்டங்கள் பிளந்தன; தேவர்கள் பிரளயகாலம் வந்துற்றதோ என அஞ்சினர். அதனால் பல உயிர்களின் உயிர்கள் நீங்கின.
அப்பொழுது அந்த அனந்த விஜயத்தின் பேரொலியினும் ஏழு மடங்கு அதிகமாகக் கர்ணன் தன் சங்கினை எடுத்து முழக்கினான்
இவ்வாறு சங்கெடுத்து முழங்குவதன் மூலம் வீரர்கள் போரிலுள்ள தங்கள் பேராற்றலை வெளிப்படுத்திக் கொண்டனர் எனலாம்.
மீண்டும் தருமபுத்திரரும் கர்ணனும் கடும் போரிட்டனர். தருமபுத்திரர் கர்ணனது தேர்ப்பாகனாகிய சல்லியனைத் தவிர அவனது தேர்.தேர்க்குதிரைகள், முதலானவற்றை அழித்தார். அதே போலக் கர்ணனும் தருமபுத்திரரின் தேர், குதிரைகள் கொடி, வில் முதலானவற்றை அழித்தான். அதனால் இருவரும் மீண்டும் சித்தம் செய்து கொண்டு போரிடலாயினர்.
பீமன் பின்வாங்குதல்
அப்பொழுது கர்ணன், தருமபுத்திரரது கிரீடம் தேர் முதலானவற்றை அழித்துப் பின் தன் தம்பியென மனத்தில் நினைத்துக் கொண்டு, ”பெரியவரே! போர்க்களத்தில் நீங்கள் புறங்காட்டி ஒடுதல் உங்கள் பெருமைக்குத் தகாது” என்று கூறினான். இதனைப் பீமன் கண்டான். அப்பொழுது சல்லியன் கர்ணனை நோக்கி, “இந்த பீமனோடு உன்னால் வெற்றிகரமாகப் போரிட முடியுமா?” எனக் கேட்டான். அதற்குக் கர்ணன், “இந்த பீமன் என்ன! இந்த பீமனோ (அல்லது) வேறு எவனும் என் எதிரில் வந்து போரிட்டாலும் அவனை என் அம்பினால் எரியுண்ணும்படி செய்வேன்; அப்பொழுது என் வீரத்தை அறிந்துகொள்ளலாம்; இப்பொழுது உன் னுடைய வேலையாகிய தேரை ஓட்டு வாய்” என்று கோபத்தோடு கூறினான்.
கர்ணன் கூறியதைக் கேட்டு, சல்லியன் ஆத்திரமுற்று தேரை பீமன் முன்கொண்டு போய் நிறுத்தினான். பீமன் தன் படை களுடன் கர்ணனுடன் கடும் போரிட்டுப் பின்வாங்கலானான். இதனைக் கண்டு மனந்தளராத அர்ச்சுனன் – கண்ணபிரான், தேரைச் செலுத்த அங்கு வந்து, பகைவர்கள் தோற்றோடும்படி போரிட்டான்.
சோர்வுற்ற அர்ச்சுனனைக் கண்ணபிரான் தேற்றி, தெளிவித்து, “இந்த அஸ்வத்தாமா அலட்சியமாக வெல்லத்தக்கவன் அல்லன்; வலிமையோடு போர் செய்து அவன் மார்பைப் பிளப்பாயாக” என்றான்.
அஸ்வத்தாமனுடன் போரிட்ட சித்திரவாக பாண்டியன்
உடனே அர்ச்சுனன் ஓர் அர்த்த சந்திர பாணத்தை எடுத்து விடுத்து, அஸ்வத் தாமன் தளர்ந்து விழும்படி செய்தான். அப்பொழுது அவனுக்குத் துணையாகத் துச்சாதனன் போரிட வந்தான். இதனைக் கண்டு அர்ச்சுனனின் மாமனாராகிய சித்திர வாக பாண்டியன், அஸ்வத்தாமனை எதிர்த் துப் போரிடலானான். சித்திரவாக பாண் டியன் அஸ்வத்தாமனின் கட்டமைந்த வில்லையும், தேரையும் சிதைத்து அப்பாற் போயினன். ஆனால் அஸ்வத்தாமனோ மீண்டும் ஒரு தேரின் மேலேறி வில்லை வளைத்து, அந்தச் சித்திர வாகன பாண்டிய னுடன் கடும்போர் புரிந்து, அவனது வில்லையும் தேரையும் அழித்து, அப்பாண் டியனைப் பின் வாங்கச் செய்தான். ஆனால் பாண்டியனோ யானையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அஸ்வத்தாமனின் அன்னக் கொடியை (அஸ்வத்தாமன் அந்த ணன் ஆதலின் அவனுக்கு அன்னக்கொடி ஆயிற்று) வீழ்த்தி, அவன் தேரையும் மணலில் புதையச் செய்தான். அதனால் அஸ்வத்தாமன் ஒன்றும் புரியாமல் செய லற்று நின்றான்.
செயலற்று நின்ற அஸ்வத்தாமனது உடல் முழுவதும் அம்புகளால் நிரப்ப. வெகுண்ட அஸ்வத்தாமன் ஓர் அம்பினைக் கொண்டு சித்திர வாகன பாண்டியனது யானையைக் கொன்றான். பின்னர் அஸ்வத் தாமன் எய்த வலிமைமிக்க அக்னியாஸ் திரத்தால் தரையில் நின்ற அப்பாண்டியன் வீரமரணம் அடைந்தான்.
சித்திரவாகன பாண்டியன் மாண்டதைக் கண்டு சோழன் கோபமுற்று அஸ்வத்தா மாவை நோக்கி, “பாவியே! வாகனமின்றித் தரையில் நின்று கொண்டிருந்த பாண்டிய னைக் கொல்லுதல் நேர்மையான செய லோ?” என நிந்தித்துக் கூறி அவனது தோள்களிலும், மார்பிலும் பதியும்படி அம்புகளை அச்சோழன் எய்தான். அந்தச் சோழனை அஸ்வத்தாமன் தனது அம்பு மழையால் அவன் உடம்பில் இரத்தம் பெருக்கெடுத்தோடச் செய்தான். அதன் பின்னர் அங்க நாட்டு வேந்தன் தான வீரன் கர்ணன் சேனைகளுடன் வந்து சோழ னுடன் போரிட்டுத் தன் அம்புகளின் மூலம் அவனைக் கொன்றான்.
கர்ணனைத் தருமபுத்திரர் என நினைத்து அர்ச்சுனன் போரிடாது திரும்புதல்
சம்சப்தகர்களையும் நாராயண கோபா லர்களையும் கொன்று அழித்த அர்ச்சுனன், தருமனையும் பீமனையும் வென்ற கர்ணன் மீது போருக்கு எழுந்தான். அர்ச்சுனன் வருதலைக் கண்ட சல்லியன் கர்ணனை நோக்கி, “கர்ணா! பீமனையும் தரும புத்திரரையும் வென்றது உமக்குக் கீர்த்தி ஆகாது. வருகின்ற இந்த அர்ச்சுனனை வென்றால் உனக்குப் பெருங்கீர்த்தி உண்டாகும் ” என்று கூற, அதனைக் கேட்காது கர்ணன் தன் அம்புகளின் மூலம் பாண்டவர் சேனையைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டான். அதனால் பாண்டவர் சேனை களைப்பு அடைந்து ஓட, அதனைத் தடுத்து அர்ச்சுனன் கர்ணனை எதிர்த்துப் போரிடலானான்.
இருவரும் பலவிதமான அம்புகளை எய்து, தத்தம் பகைவர் சேனைகளை அழித்தார்கள். அர்ச்சுனனுடைய கூரிய அம்புகள் பட்டதனால் கர்ணன் தளர்ச்சி அடைந்து தேரின் மீது நின்றான். அர்ச்சுனனும் அவன் மீது அம்பு எய்யாது வாளா நின்றான். அப்பொழுது கண்ண பிரான் அர்ச்சுனனைப் பார்த்து, ”அர்ச்சுனா! கர்ணனை கொல்லாமல் அமைதியாக ஏன் இருக்கின்றாய்?” என்று கேட்டான்.
தர்மபுத்திரரைப் பார்ப்பதைப் போல உள்ளது
அர்ச்சுனன் கண்ணனைப்பார்த்து. “கண்ணா! மணிவண்ணா! என்முன் நின்ற கர்ணனைப் பார்க்கிற போது என் முன்னவன் தருமபுத்திரரைப் பார்ப்பதைப் போல உள்ளது. அதனால் என் காண்டீபம் அவனை நோக்கி வளையாது நிற்கின்றது. அவன் மீது என்னை அறியாமல் என் உள்ளம் அன்பு கொண்டுள்ளது; காரணம் தெரியவில்லை. நான் என்ன செய்வேன்?” என்று வருந்திக் கூறினான்.
அதனால் கண்ணபிரான் அர்ச்சுனனோடு தேரைச் செலுத்திக் கொண்டு தருமபுத்திரர் இருக்குமிடம் தேடிச் செல்லலாயினார். அப்பொழுது நகுலன் எதிரே வந்து, “கண்ணா! அர்ச்சுன அண்ணா! கர்ணனது அம்புகளினால் தருமபுத்திர அண்ணா அடிபட்டு, மிகவும் நொந்து போனார். அதனால் நாங்கள் அந்த ஐயனைப் பாசறை யின் கண் கொண்டு போயுள்ளோம்” என்று வணங்கிக் கூறினான். அதனைக் கேட்ட கண்ணபிரான் பாசறைக்குத் தேரைத் திருப்பியோட்டி அங்கு சென்று வருத்தத் தோடு இருக்கும் தருமபுத்திரரைப் பார்த்து இருவரும் பணிந்தனர்.
எதிரே நின்ற கிருஷ்ணார்ச்சுனரைக் கண்டு தருமபுத்திரர் “அர்ச்சுனன் கர்ண னைக் கொன்றுவிட்டுப் பின் தன்னிடம் கண்ணபிரானோடு வந்துள்ளான்” எனக் கருதி “நன்று செய்தாய் தம்பீ! நன்று செய்தாய்” என்று பாராட்டினார்.
அப்பொழுது கண்ணபிரான், “தரும புத்திரரே! அர்ச்சுனன், கர்ணனோடு நேருக்கு நேராக நின்று போரிடும் பொழுது, அக்கர்ணன் உம்மைப் போலத் தோன்றியதனால் உமக்கு என்ன நேர்ந்ததோ என அஞ்சினான். அதனால் உம்மைப் பார்க்க நாங்கள் இருவரும் ஓடோடி வந்தோம்” என்று கூறினார்.
அதனைக் கேட்டு தருமபுத்திரர் அர்ச் சுனன் மீது மிகுந்த கோபங் கொண்டார். அதனால் அவர். “அர்ச்சுனா? இன்னுமா கர்ணனைக் கொல்லவில்லை; என்னைப் போலத் தோற்றம் அளிக்கின்றான் என்று கூறிப் போரைவிட்டு இங்கு வந்துவிட்டா யே/ இது உன் வீரத்திற்குப் பொருந்துமா? ‘கோழை’ என்றல்லவோ ஏசுவார்கள்! இனி உனக்கு, ‘விசயன்’ என்ற சிறப்புப் பெயர் எதற்கு? இந்தக் காண்டீபம் உனக்கு எதற்கு? இக்காண்டீபம் போரிடத்தகுதி யற்றது போலும்?” என்று பலவாறு கூச்ச லிட்டார்.
தர்மரைக் கொல்ல துணிந்த அர்ச்சுனன்
அர்ச்சுனன் தன்னைப் பழித்தாலும் பொறுத்துக் கொள்வான். ஆனால் காண்டீபத்தை யார் பழித்தாலும் அவர்களைக் கொன்றே தீர்ப்பான். அத்தகைய உறுதி கொண்டிருப்பவன் அர்ச்சுனன். ஆதலின் அவனுக்குத் தருமபுத்திரர் மீது அடங்காத கோபம் உண்டாயிற்று.
வெறித்தனம் மிகக் கோபம் வந்ததனால் அர்ச்சுனன் தன் காண்டீபத்தை எடுத்து வளைத்துத் தன் காண்டீபத்தைப் பழித்த தருமபுத்திரரைக் கொல்ல முன்னோக்கினான். கண்ணபிரான் அதனைப் பார்த்து, “அர்ச்சுனா! என்ன காரியம் செய்கின்றாய்! என்றும் பழி தரும்படியான காரியத்தைச் செய்யத் துணிந்தாயே” என்று கூறித் தடுத்து நிறுத்தினார். பின் அவர், “அர்ச்சுனா! உன் காண்டீபத்தைப் பழித்ததனால்தானே அண்ணன் என்றும் பாராது கொல்ல முனைந்தாய். அவர் செய்தது தவறுதான். என்றாலும் “பெரியோர்களைக் குறித்து இகழ்ந்து பேசுவதே அவர்களைக் கொன்ற தற்குச் சமமாகும் ‘ என்று சான்றோர் கூறுவர். சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆதலின், நீ தருமனை நோக்கி இழி சொற் களைக் கூறுக. அவ்வாறு கூறினால் அது அவரைக் கொன்றது போன்றதாகும். உன் வில்லைப் பழித்தவனைக் கொல்வேன் என்ற உன் சபதமும் நிறைவேறியதாகக் கருதலாம்” என்று கூறினார். கண்ணபிரான் கூறிய யோசனையை அர்ச்சுனன் ஏற்று. தருமபுத்திரரைப் பார்த்து, தன் தமையனார் என்றும் நினைக்காமல், “அரசே! நீ என்னைக் கண்டிக்கத் தகுதி அற்றவன்; போர்க்களத்திலிருந்து ஓடி வந்தவன்; போர் செய்து கொண்டிருக்கும் பீமன் வேண்டு மானால் என்னைக் கண்டிக்கலாம். எதிரிகளை வெற்றி கொள்ள முடியாது பாசறையில் வந்து தங்கியிருக்கின்ற உனக்கு, என்னை, என் காண்டீபத்தைப் பழித்துரைக்க தகுதி ஏது?
நீ ஒரு சூதாடி; அதனால் நாட்டை இழந்தவன்; எங்கள் உதவியால் நாட்டை அடைய முயல்கின்றாய். உன்னால் நாங்கள் எந்தச் சுகத்தையும் அடையவில்லை. சகாதேவன் தடுத்துக் கூறியும் இழிந்தோர் ஆடும் சூதாட்டத்தை ஆடி எங்களைத் துன்பப்படுத்திவிட்டாய். இனியும் இவ்வாறு பேசி என் கோபத்தைக் கிளறாதே ” என்று கூறி இகழ்ந்தான்.
தர்மபுத்திரர் கானகம் செல்லல்
அவற்றையெல்லாம் கேட்டுக் கொண் டிருந்த தருமபுத்திரர் கோபித்துப் பதி லேதும் கூறாமல் தவம் செய்யக் காட்டிற்குப் புறப்பட்டார்.
திடுக்கிட்ட கிருஷ்ணார்ச்சுனர்கள் அவரைப் போகவொட்டாது தடுத்தி நிறுத்தி, “வாய்மை தவறாத மன்னா! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். கோபத்தை நீக்குங்கள். நீங்கள் இப்பாசறை யின் கண் இருங்கள். போர்க்களத்திற்கு வர வேண்டாம். இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நீங்கள் விரும்பியபடி கர்ணனைக் கொன்றுவிட்டு உம்மிடம் வருவோம்.இஃது உறுதி’ என்று கூறி அவர் கோபமாற்றினர். பின்னர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு போர்க்களம் சென்றனர்.
துச்சாதனன் வீழ்ந்தான்
பாண்டவர் சேனைக்கும் கௌரவர் சேனைக்கும் போர் மிக கடுமையாக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிணமலை எங்கணும் குவிந்திருந்தது. நாய்களுக்கும் நரிகளுக்கும், பேய்களுக்கும் ஒரே கொண்டாட்டம்!
அந்நிலையில் விதியானது பிடர்பிடித்து உந்தித் தள்ள துரியோதனனின் அடுத்த இளவல் துச்சாதனன் தருமபுத்திரருடைய அடுத்த இளவல் பீமனுடன் போரிட முன்வந்தான். அவனைக் கண்டதும் பீமன் மு கடுங்கோபங்கொண்டான். பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டு, “அநாகரிகப் பேயே/ மன்னர் அவையில் எம் திரௌ பதியின் கூந்தலைத் தொட்டுப் பிடித்து இழுத்ததோடு, அவளின் ஒற்றையாடை யினை களைய முயன்ற முழுமூடா! என்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டாய். இன்று நிச்சயம் உன் உயிரைப் போக்கு வேன். உன்னுடைய இரத்தத்தைத் தண்ணீர் எனக் குடித்து, என் சபதத்தை நிறைவேற்று வேன். இஃது அன்னை பராசக்தி மீது ஆணை” என்று கூறி அவனுடன் போரிட லானான்.
துச்சாதனனோடு போர்
அவனைக் கொல்லுவதற்கு முன் அந்தத் துச்சாதனனின் தம்பிமார்கள் பதின்மரைக் கொன்றொழித்தான். அந்த ஈரம் புலராத தற்கு முன்னமே துச்சாதனன் வந்து வாய்த் தான். முதலில் பீமன் துச்சாதனனோடு விற்போர் செய்யலானான். துச்சாதனனும் சளைக்காது அம்புகளைவிட்டு பீமனு டைய தேரினை அழித்தான். அதனால் பீமன் தன் கதை கொண்டு துச்சாதனனுடன் போரிடலானான். இருவரும் மிக ஆவேச மாகக் கதைப்போர் செய்தனர். இடியென்னும்படி பேரொலி செய்து, கையிலேந்திய கதைகளை வேகமாகச் சுழற்றி மோதிக் கொண்டனர். இவ்வாறு போரிட்ட அவ்விருவருமே தத்தம் கதை களை இழந்தனர்.
கதைகளை இழந்ததன் காரணமாகத் தன்னிகரற்ற முறையில் மல்யுத்தம் செய்ய லாயினர். பதின்மூன்று ஆண்டு காலம் தான் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இப்பொழுது கனித்து வந்துள்ளது என்று பிமன் மகிழ்ந்து அந்தத் துச்சாதனன் மேல் பாய்ந்து குத்து குத்து என்று குத்துக்கள் பல விட்டான். பீமன் கொடுக்கும் குத்துக் களைத் தாங்க முடியாமல் துச்சாதனன் கீழே விழுந்தான். அதனால் தன் உயிருக்கு அஞ்சி அவனை விலக்கிவிட்டு ஓடலானான். பீமசேனன் அவனை விடவில்லை. துரத்திக் கொண்டு ஓடினான். சற்று நேரத்தில் அவனை தன்றாகப் பற்றிக் கொண்டு கர்ணன் முதலானோர் பார்த்திருக்க அவன் தலைமயிரைப் பிடித்து அன்று அத் துச்சா தனன் திரெளபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்தது போலத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து கீழே தள்ளினான். நெட்டைமரமென விழுந்து கிடந்த அவன் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொண்டான். பின் அவன்,
துச்சாதனன் மரணம்
”பாவியே! அன்று தீய துரியோதனனுடனும், கர்ணனுடனும் சேர்ந்து கொண்டு எங்கள் பெண்டு திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தாய்! அரசவையில் பலர் முன்னிலையில் அவள் ஆடைதனைப் பற்றித் துகிலுரிய முனைந்தாய்! “கோவிந்தா! கோவிந்தா!” என்ற திருநாமம் அன்றோ அவளைக் காத்தது. தாசி எனவும். வேசி எனவும் எங்கள் நெருப்புக் கொழுந்தை – திட்டத்துய்மன் உடன் பிறப்பை – பாஞ்சாலன் திருமகளை தகாத வார்த்தைகளால் ஏசினாய். “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பதற்கேற்ப அன்று விதைத்த தீவினை விதைகளை இப்பொழுது பாவப்பயன் பயிராக அறுவடை செய்கின்றாய்” என்று கூறி அவனை மற்றொரு காலால் நன்றாக உதைத்துத் தள்ளினான், துகில் உரிந்த அவன் கையைப் பலர் பார்த்திருக்க ஒடித்தான் துடிக்கின்ற துச்சாதனன் கழுத்திலே மீண்டும் கால் வைத்து அழுத்தி அழுத்தித் துடிக்கத் துடிக்கக் கொன்றான்.
நரசிம்மவதாரம் எடுத்த பீமன்
அப்பொழுதும் அவன் கோபம் தணிய வில்லை. அவன் மார்பைப் பிளந்தான். அன்றைய நர நரசிம்மாவதாரம் போலப் பிளந்த மார்பிலுள்ள ஈரலை லை எடுத்து மாலை யாகச் சூடினான். பெருகும் இரத்தத்தைச் சுவை நீர் எனக் குடித்து மகிழ்ந்தான். தன் சபதம் நிறைவேறினமையால் ஆடினான்; பாடினான். அவன் இரண்டு கால்களையும் பற்றிக் கொண்டு வானத்திலே சுழற்றிச் சுழற்றி வீசி வெறிபிடித்தவன் போல ஆனந்தக் கூத்தாடினான்.
பீமனுடைய இந்தக் குரூர செயலைக் கண்டவர்கள் திடுக்கிட்டு மயக்கமடைந் தனர். நரனின் இரத்தத்தைக் குடிக்கின்ற இவன் மனிதனே அல்லன் என்று கூறி அவனைப் பார்க்கவே அஞ்சி ஓடினர்.
இவனுடைய வெறிபிடித்த செயல் களைக் கண்டு கர்ணன் பெரும்பயம் கொண்டான். சல்லியன் அவனை, “கர்ணா! நீ பயம் கொள்ள வேண்டாம். நீயே பயந்தால் கெளரவர்களை இனி காப்பது யார்? துரியோதனனோ பீமனின் இந்தக் குரூர செயல்களைக் கண்டு ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருக்கின்றான். மனநிலை தவறியவன் ஆனான். அறிவு மயங்கிச் சோகத்தால் கிருபாசாரியார் போன்றோர் உன்னையே நம்பிக் கிடக் கின்றார். நீ அஞ்சவேண்டாம். நீ இவ்வாறு பயப்படுவது உன் ஆண்மைக்குப் பெருத்த இழிவை உண்டாக்கும். உன்னை நம்பித் தான் துரியோதனன் போரில் ஈடுபட்டான். இப்போது நீயே தளர்ந்துவிட்டால் அவனைக் காப்பது யார்? வீரத்துடன் அர்ச்சுனனை எதிர்த்து நில்; அவனைக் கொல். அதனால் உனக்குப் பெரும்புகழ் உண்டாகும். மடிந்தாலும் வீர சொர்க்கம் அடையலாம். வீண் பயம் வேண்டாம்” என்று பலவாறு கூறித் தேற்றினான்.
சல்லியனின் இந்த வார்த்தைகள் கர்ண னுக்குப் பெரும் உற்சாகத்தை உண்டாக்கின. மனத்தெளிவு பெற்றான். அர்ச்சுனனை எதிர்க்க ஆயுத்தமானான்.
கர்ணன் மகன்
விடசேனனின் வீரமரணம்
இந்த நிலையில் கர்ணனின் மகன் விடசேனன் என்பவனுக்கும், நகுலனுக்கும் மயான பே கடுமையான போர் நடக்கலாயிற்று. விடசேனனும் கர்ணனைப் போலச் சிறந்த வீரன். ஆதலின் நகுலனோடு கடுமையாகப் போரிட்டு அவன் தேரை அழித்தான். உடனே நகுலன் வேறொரு தேரின் மீது ஏறி கையில் விடசேனன் கையில் பிடித்திருந்த வில்லை யும், அவனது ஓங்கிப் பறந்து கொண் டிருந்த கொடியையும் அறுத்துத் தள்ளி னான். அதற்கு விடசேனன் அஞ்சவில்லை. வேறொரு வில்லை எடுத்துக் கொண்டு வளைத்து நகுலனைக் கீழே விழும்படி அம்புகளைப் பொழிந்தான். கீழே விழுந்த நகுலனைப் பீமன் எடுத்துத் தெளிவித்தான். அதனைக் கண்டான் அர்ச்சுனன். உடனே அவன் ஆத்திரமுற்று, தன் தம்பியாகிய நகுலனைக் கீழே தள்ளிய விடசேனன் மீது பாய்ந்தான். ஏராளமான அம்புகளை விடசேனன் மீது பொழிந்தான். விட சேனனோ அவற்றையெல்லாம் தடுத்தது மட்டுமல்லாமல் அர்ச்சுனன் மீதும், கண்ண பிரான் மீதும் ஏராளமான அம்புகளை ஏவி, அவர்களை மறையும்படி செய்தான். இதனைக் கண்ட அர்ச்சுனன் கோபித்து, தன் அம்பினால் அந்த இளையவன் தேரையும், வில்லையும் அழித்தான்.
அதன்பின் அர்ச்சுனன், விடசேனனின் தந்தை கர்ணன், துரியோதனன் போன்றோ ரைக் கூவி அழைத்து, “கர்ணா! உன் கண் முன்னாலேயே உன் மகனைக் கொல்லப் போகின்றேன் . இது நிச்சயம். என் அன்பிற்குரிய ஆற்றல் மிக்க மகனை – வீர அபிமன்யுவை, துரோணர், சகுனி அஸ்வத் தாமா போன்றோரோடு சேர்ந்து கொண்டு இரக்கமில்லாது, போர் நெறியைப் புறக்கணித்து ஒன்று சேர்ந்து கொன்றாய். அல்லவா! அந்தப் பழிக்குப் பழியாகவே உன் மகனை, உன்னைப் போலப் பலரோடு சேராது – தனியாகவே – போரின் மரபைப் பின்பற்றிக் கொல்லப் போகின்றேன். அப்பொழுதுதான், புத்திர சோகம் எத்தகைய கொடுமை வாய்ந்தது என்பது உனக்குப் புரியும். அதனால் உன்னால் முடிந்தால் உன் மகனைக் காப்பாற்றிக் கொள். அதன்பின்னர் என் சபதப்படி உன்னையும் கொல்வேன். இந்தப் போருக்கு முக்கிய காரணமாக விளங்கும் அந்தத் துரியோதனனை தன் சபதப்படியும், எங்கள் பெண்டு திரெளபதி சபதப்படியும் அண்ணன் பீமசேனன் கொல்வார்” என்று உரக்கச் சிரித்தபடி கூறினான்.
இவ்வாறு ஆவேசமாகக் கூறியபின் அர்ச்சுனன் காண்டீபத்தை வளைத்து நாணேற்றிப் பத்துப் பாணங்களால் விடசேனனை குறிவைத்துத் தாக்கினான். அதன்படி அந்த விடசேனனின் இரண்டு கைகளோடு அவன் தலையையும் அறுத்துத் தள்ளினான். பெரிய ஆலமரம் ஒன்று இடியினால் தாக்கப்பட்டுப் பூமியில் வீழ்ந்து அழிந்ததைப் போல விடசேனன் தேரினின்று கீழே விழுந்து வீரமரணம் அடைந்தான்.
தன் மகன் தன் கண்ணெதிரிலேயே மாண்டு, தேரினின்று தரையில் வீழ்ந்ததைக் கண்டவுடன் கர்ணன் தாங்கமுடியாத துக்கத் தால் துடித்தான். அரற்றினான். அவன் கண்கள் கண்ணீரை ஆறாகப் பெருக்கின.
கர்ணன் மகன் விடசேனன் மாண்டான் என்பதை பாண்டவர் சேனைகள் வெற்றிச் சங்கங்கள் எடுத்து ஊதின. பெருத்த ஆரவாரம் செய்தனர். அதனால் அர்ச்சுன னும் உற்சாகம் அடைந்து கர்ணனைக் கொன்று விட வேண்டுமென்ற முனைப் புடன் இருந்தான்.
பெரும் வில்லாளிகளான அர்ச்சுனனும், கர்ணனும் போர்க்களத்தில் இரண்டு சூரியன்கள் போலக் கோபத்துடன் காட்சி அளித்தனர். இருவருமே ஆற்றல் மிக்க வெள்ளைக் குதிரைகளையும், அழகிய தேர்களையும் பெற்றிருந்தார்கள். இருவர் களின் தேர்ப்பாகர்களும் முறையே பார்த்தனுக்குச் சாரதியாக விளங்கிய கண்ண பிரானும், அப்பெருமானுக்கு கொடுக்கக் கூடிய முறையில் கர்ணனுக்குத் தேர்ப்பாகனாக அமைந்த அமைந்த மத்திர நாட்டு மன்னன் சல்லியனுமே ஆவர். இருவருமே சமபலம் உடையவர்கள், நிரம்ப அஸ்திரப் பயிற்சியும் குறைவில்லாத ஆற்றலு முடையவர்கள்.
அர்ச்சுனனை உற்சாகப்படுத்துதல்
திட்டத்துய்மன், நகுலன், சகாதேவன் போன்றோர் அர்ச்சுனனைச் சுற்றி நின்று கொண்டு உற்சாகப்படுத்தினார்கள். அதே போலக் கெளரவ வீரர்கள் கர்ணனை உற்சாகப்படுத்தினார்கள். இருவரும் போர் செய்யும் தன்மையைக் காண விண்ணில் தேவர்களும் அசுரர்களும் இரு பிரிவாகப் பிரிந்து, பார்க்கத் தொடங்கினர். யார் வெல்லுவார் என்று சொல்ல முடியாத நிலை அப்பொழுதிருந்தது.
அப்பொழுது கர்ணன் சல்லியனிடம். “மத்திரதேச மன்னா! சல்லியா! நான் அர்ச்சுனனுடன் போரிடப் போகின்றேன். ஒரு வேளை இப்போரில் நான் கொல்லப் பட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டான். அதற்கு அம்மத்திர தேசத்து மன்னன் சல்லியன், “கர்ணா! உன்னை அர்ச்சுனன் கொன்று விடுவானேயானால் நான் என் தேரின் உதவியைக் கொண்டே அந்த அர்ச்சுனனையும், கண்ணபிரானையும் கொன்றுவிடுவேன்” என்று கூறினான்.
அதே நேரத்தில் கண்ணபிரானைப் பார்த்து, அர்ச்சுனன் கர்ணன் கேட்ட அதே கேள்வியைக் கேட்டான். அதற்குப் பரந்தாமன். “அர்ச்சுனா! ஒரு வேளை உலகமே தலை கீழாகப் போனாலும் போகும். ஆனால் இக்கர்ணனால் உன்னை வெல்ல முடியாது. அவ்வாறு நேர்ந்தால் என் சபதத்தை மீறி கர்ணனையும், சல்லிய னையும் நானே கொன்றுவிடுவேன்” என்று கூறினான்.
சமாதானத்தை விரும்பிய அஸ்வத்தாமா
அதனைக் கேட்டு அர்ச்சுனன் சிரித்துக் கொண்டே ”மாதவா! கேசவா! கர்ணனும் சல்லியனும் என் ஆற்றலுக்கு நிகரானவர் அல்லர்; கர்ணன் ஒரு மூடன்; சிந்திக்கத் தெரியாதவன்; அதனால்தான், எங்கள் பெண்டு திரெளபதியை அன்று இகழ்ந்து பேசினான். அதனை நான் மறக்கவில்லை. தற்பெருமைமிக்க அவனைத் தங்கள் அருளால் கொல்லத்தான் போகிறேன்” என்றான்.
அதன்பின் அர்ச்சுனனும், கர்ணனும் எதிரெதிர் நின்று போரிடலாயினர். அட்ட திக்கு யானைகளும் அதிர்ந்து பிளிறும் படியாகப் போரிட்டனர்; தேவர்கள் “இது போன்ற போரை யாம் கண்டதில்லை என்று சொல்லும்படியாகப் போரிட்டனர். இருவருடைய போராற்றலும் சமநிலையில் இருந்தன.
அப்பொழுது அஸ்வத்தாமா துரியோதன னிடம், “குரு நாட்டு மன்னா! நான் சொல்லும் வார்த்தைகளைக் கேள். பகை வேண்டாம். மகாரதரான பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டுள்ளார். மற்றொரு மகாரதரான என் தந்தை துரோணரோ போரில் வீர மரணம் அடைந் தார். அதனால் இனி கிருபாசாரியார், கர்ணன் போன்றோராவது உயிர் பிழைக் கட்டும். பாண்டவர்களுடன் சேர்ந்து நாட்டை ஒற்றுமையுடன் ஆள்வாயாக.
”யுதிஷ்டிரர் சமாதானத்தையே விரும்பு பவர்; எனவே நாம் அவரிடம் பேசி ஒரு நல்ல முடிவு எடுப்போம். அதன் காரண மாக மிச்சம் இருப்பவர்களாவது பிழைப் பார்கள். உன் தந்தை தாய் ஆகியவர்களை எண்ணிப்பார்த்தாவது சமாதானத்துக்கு ஒப்புக்கொள்; நீங்கள் இருவரும் சமாதானமாகப் போனால் குடிமக்கள் மேன்மை அடைவர். உங்களை மனமாரப் போற்றுவர்.”
“குருகுல வம்சத்தின் நன்மைக்காக நான் தங்கட்குக் கூறுகின்றேன். கர்ணனால் அர்ச்சுனனை வெல்லமுடியாது. எனவே என் சொற்களை ஏற்று நடப்பாயாக” என்று பலவாறு அறிவுரைகள் கூறினாள், கூறிய அறிவுரைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கெனப் பயனற்றுக் போயின. அவன் அவற்றை ஏற்றுக் கொள்ளாது. படைவீரர்களைப் பார்த்து, ‘வீரர்களே! விரைந்து செல்லுங்கள்; எதிரிகளைக் கொல்லுங்கள். அதன் காரணமாக நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்” என்று ஆவேசமாகக் கூறி அனுப்ப, படைவீரர்கள் உற்சாகத்துடன் ஆக்ரோஷமாகக் கடும் போரிட்டனர்.
அர்ச்சுனனும், கர்ணனும் சமநிலையில் போரிட்டுக் கொண்டிருந்தனர்; மேகம் மேகத்தை எரிப்பது போன்றும்;மலை மலையோடு மோதுவது போன்றும், யானை யானையோடு மோதுவது போன்றும் கடுமையாக இருவருமே போரிட்டனர்.
இந்த அரிய போரினைக் காண சிவ பெருமான், திருமால், பிரம்மன், இந்திராதி தேவர்கள், விண்ணிலே தத்தம் வாகனங் களிலே குழுமியிருந்தனர். அப்பொழுது சிவபெருமானை, நான்முகன் வணங்கி “கயிலையங்கிரி வாசா| உமையொருபாகா! இந்த இருவர்க்கத்தினரும் மனம் மாறி ஒன்றுபட்டுச் சண்டையை நிறுத்தினால் அது இரு வர்க்கத்தினர்க்கும் நன்மை உண்டாகும் அல்லவா! அதற்குரியவற்றைத் தாங்களே செய்யலாமே” என்று கூறி வேண்டினான். அதற்குச் சிவபெருமான். ”உந்தித் தாமரை நாயகனே! வானத்தில் வீசி எறிந்த கல் கீழே விழாது ஒரு வேளை அங்கேயே தங்குமாயின் இப்போரினை நிறுத்தலாம்” எனப் பதில் கூறினான்.
கர்ணன் மோட்சம்
அதன்பின்னர் தேவேந்திரன் சிவபெரு மானை வணங்கி, ”ஐயனே! எம்பெரு மானே! கர்ணன், அர்ச்சுனன் ஆகிய இருவரும் சம நிலையில் போரிடுகின் றார்கள். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் அவர்கள் பெரும் போர் செய் கின்றார்கள். நீங்களே கூறுங்கள். இறுதியில் வெற்றி பெறுபவர் யார்?” என்றான்.
அதற்குச் சிவபெருமான், “ஆயிரங் கண்ணனே! நிச்சயம் நின் மகன் அர்ச்சுனன் வெல்வான். எம்மிடம் பாசுபதம் பெற்ற காலத்து, ‘நீ வெற்றி பெறுவாய் என்று நான் அன்று வரத்தினைத் தந்ததனால், அர்ச்சுனனே வெற்றி பெறுவான். கர்ணன், கைம்மாறு கருதாத கொடைத் திறனில் மிக்கவனாயிருத்தலால் அவன் அர்ச்சுன னால் மாண்டாலும் கூட என்றும் அழியாத மோட்சத்தை அடைவான்” என்று கூறினார். தேவர்களும் ‘அவ்வாறே ஆகுக’ என ஆசீர்வாதம் செய்தனர். அர்ச்சுனன் தேர் மேல் மலர் தூவினர்.
அர்ச்சுனன் – கர்ணன் போர்
கண்ணபிரான், அர்ச்சுனன் தேரை வலிமைமிக்க யானைகளும், குதிரைகளும் ஒன்றோடொன்று மோதி அழியும்படி செலுத்தினார். அதே சமயத்தில் கதிரவன் காளையாகிய கர்ணனின் தேரை, சல்லியன் இடப்பக்கமும், வலப்பக்கமுமாக மாறி மாறிப் பம்பரம் போலச் சூழலும்படி செலுத்தினான். அர்ச்சுனன் விடுகின்ற பாணங்களைக் கர்ணன் தடுத்திட்டு, சலித்துக் கொள்ளாது, தன் அம்புகளை ஏவி அவற்றை அறுத்துத் தள்ளினான்.
அப்பொழுது அர்ச்சுனன், “இதுதான் கர்ணனைக் கொல்வதற்கு உகந்த சமயம்” என்று எண்ணி, அம்புகளைக் கர்ணன் மீது மழையெனப் பொழிந்தான். அவற்றை யெல்லாம் கர்ணன் தன் அம்புகளை ஏவி அறுத்துத் தள்ளினான். அர்ச்சுனன் சிந்தித்து கர்ணன் மீது வாயுவாஸ்திரத்தை ஏவினான். கர்ணன் அதற்கு எதிராக ஆதிசேடன் கொடுத்த சர்ப்பாஸ்திரத்தை ஏவினான். அச்சர்ப்பாஸ்திரம் சீறிக் கொண்டு சென்று அர்ச்சுனன் ஏவிய வலிமைமிக்க வாயு வாஸ்திரத்தை உட்கொண்டது. (சர்ப்பம் வாயுவை உணவாக உட்கொள்ளுதலால் கர்ணன் அர்ச்சுனன் அனுப்பிய வாயுவாஸ், திரத்திற்கு மாற்றாக சர்ப்பாஸ்திரத்தை ஏவினான் என்க.
அடுத்து அர்ச்சுனன் மேகம் போல எங்கணும் இருளை உண்டாக்கும் காராஸ் திரத்தை ஏவினான். வறியவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் வேண்டியவற்றை வேண்டியாங்கு ஈயும் கர்ணனும், அதற்கு மாற்றாக எங்கணும் ஒளியைச் செய்யும் சந்திராஸ்திரத்தை ஏவினான். கர்ணன் விடுத்த சந்திராஸ்திரத்தால் அர்ச்சுனன் விடுத்த காராஸ்திரம் வலிமை இழந்து சிதைந்துபோனது.
அடுத்து அர்ச்சுனன் மேகத்திற்குத் தலைவனாகிய இந்திரனது அஸ்திரமாகிய ஐந்திராஸ்திரத்தை கர்ணன் மீது விடுத்தான். அதனைக் கண்டு பகலவன் புதல்வனாகிய கர்ணன் சூரியனது அஸ்திரமாகிய சூரியாஸ் திரத்தை ஏவினான். அந்த இரண்டு அஸ்திரங்களும் முட்டி மோதி, நெருப் பினைக் கக்கி, பேரோசையை எழுப்பிப் பயனின்றிக் கீழே விழுந்தன. தான் விடுத்த ஐந்திராஸ்திரத்தைக் கர்ணன் தன் சூரியாஸ் திரத்தால் முட்ட வைத்து பயனற்றுப் போகச் செய்ததைக் கண்டு அர்ச்சுனன் கர்ணனின் வில்லாற்றலை வெகுவாகப் பாராட்டினான்.
கர்ணனின் வில்லாற்றலுக்குமுன் அர்ச்சுனன் சற்றுக் குறைவுபட்டவன் போல் தென்பட்டதைக் கவனித்துப் பீமன் பெருங் கோபங்கொண்டான். கையைப் பிசைந்து தன் கொண்டான். அர்ச்சுனனைப் பார்த்து, “அர்ச்சுனா! கூர்மையான அம்புகளைக் கொண்டு கர்ணன் உன்னைத் தாக்குகின்றான். உன் பாணங்கள் யாவற்றையும் நாசம் செய்து வருகின்றான். காண்டவ தகனத்தின் போது காட்டிய வீரத்தைப் பயன்படுத்திக் கர்ணனைக் கொல். அல்லது என் கதையினால் இவனை அடித்து நொறுக்கு கின்றேன். எப்படி இருப்பினும், இவன் உயிருடன் திரும்பக் கூடாது என்று கூறினான்.
பீமன் கூறியதைக் கேட்டு வாசுதேவரும், அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! உன் னுடைய அம்புகளைக் கர்ணன் பயனற்ற வையதாக்குகின்றான். இது நல்லதன்று. ஏன் மயக்கத்துடன் போர்புரிகின்றாய்? எங்கே போயிற்று உன் வீரம்? நீ வீரத்தால் சிவபெருமானையே மகிழ்வித்தவன் ஆயிற்றே! அப்படிப்பட்ட நீ இந்தக் கர்ணனிடம் இவ்வாறு தயக்கத்துடன் போரிடலாமா? இந்தக் கர்ணனை உடனே கொல். இந்த நாட்டைத் தருமபுத்திரருக்குச் சொந்தமாக்கு” என்று சொன்ன அப்பெருமான், “அர்ச்சுனா! காண்டீபத்தை வளைத்து நாண் கயிற்றை இறுக்கி,கர்ணன் மீது பிரம்மாஸ்திரத்தை விடுவாயாக ” என்று ஆலோசனை கூறினார்.
பிரம்மாஸ்திரத்தைக் கர்ணன் மீது ஏவுதல்
கண்ணபிரானாலும், பீமனாலும் தூண்டப்பட்ட அர்ச்சுனன் உற்சாக மடைந்தான். அதனால் அவன் போர் இன்றோடு முடியவேண்டுமென்று கருதி உரிய மந்திரத்தைக் கூறி, வழிபட்டு, பின்னர் பிரம்மாஸ்திரத்தைக் கண்ணபிரான் ஆலோசனைப்படி கர்ணன் மீது ஏவினான். அந்த அஸ்திரம் யுகாந்தகாலத்து அக்னி யைப் போலப் பேரொளி வீசிக்கொண்டு கர்ணனை நோக்கிப் பாய்ந்தது.
அதனைக் கண்ட கர்ணன் அதற்கு மாற்றாக சிவனுடைய அஸ்திரமாகிய சிவாஸ்திரத்தை உரிய மந்திரங்களைச் சொல்லி, ஏவினான். அர்ச்சுனன்விட்ட பிரம்மாஸ்திரமும், கர்ணன்விட்ட சிவாஸ் திரமும் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு, பேரொலி செய்து, பின்னர் அகன்று போயின. அதன்பின் அவர்கள் இருவரும் விட்ட தெய்வாஸ்திரங்களால் அந்த இருவருடைய உடம்பிலிருந்தும் இரத்தம் ஆறாகப் பெருகிக் கடலை நோக்கிப் பாயலாயிற்று. அந்த அளவுக்குக் கடுமையான, உக்கிரமான ஆக்ரோஷமான, ஒருவரையொருவர் வெல்ல முடியாத அளவுக்குப் பெரும்போர் செய்தனர்.
அப்பொழுது சூரிய குமாரனாகிய கர்ணன், தனக்குத் தன் குருநாதர் பரசுராமர் வழங்கிய வில்லை வளைத்து, அர்ச்சுன னின் உயிரைக் கவரும்பொருட்டு, இந்திர னுக்காகக் காண்டவவனத்தை அர்ச்சுனன் அழிக்கின்ற காலத்து, அந்த வனத்திலிருந்து தப்பி வந்து சரண் அடைந்த அசுவசேனன் என்னும் நாகக் கணையை ஏவ எண்ணி அதனை எடுத்தான். (இந்த அசுவசேனன் என்னும் நாகக்கணைக் கர்ணனைச் சரணடைந்த வரலாறு, ஆதிபருவத்தில் சொல்லப்பட்டுள்ளது.)
சல்லியனின் ஆலோசனை
எடுத்த அந்த நாகக்கணையை தன் வில்லில் தொடுத்து ஏவ முனைந்த பொழுது, தேர்ப்பாகனாகிய சல்லியன் கர்ணனை நோக்கி, ”கர்ணா! நான் சொல் வதைக் கேள். உன் எதிரே உள்ள பார்த்த னுக்குச் சாரதியாக இருப்பவன் கண்ண பிரான். அவன் மாயைகள் புரிவதில் வல்லவன். அதனால் உன் நாகக் கணையை அர்ச்சுனனின் மார்பினை இலக்காகக் கொண்டு செலுத்துவாயாக”என்று தெளிந்த நல் ஆலோசனை ஒன்றைக் கூறினான்.
ஆனால் கர்ணனோ, தேர்ப்பாகன் சல்லியன் கூறியதை ஏற்காமல், செருக்குக் கொண்டு, அர்ச்சுனன் கழுத்துக்குக் குறி வைத்து அந்நாகக்கணையைச் செலுத்தினான்.
வில்லில் இருந்து விடுபட்ட அந்த நாகக்கணை வானத்தை அடைந்து பேரொளி வீசிப் பிரகாசித்தது. சூரியனைப் போன்று ஒளி சிந்தியபடி அர்ச்சுனன் கழுத்தை நோக்கிச் சீறிக் கொண்டு பாய்ந்தது. இதனைக் கண்ணபிரான் கவனித்தார். உடனே அவர் தேர்ச் சக்கரத் தைப் பன்னிரண்டு அங்குலம் அளவு பூமியில் பதியும்படி தன் கால் பெரு விரலால் தேரை அழுத்தினார். அதனால் அந்தத் தேர் பன்னிரண்டு அங்குலம் அளவு பூமியில் புதைந்தது. தேர் மண்ணில் புதைந்ததன் காரணமாக, வேகமாக வந்த நாகாஸ்திரம், அர்ச்சுனனின் பொன் கிரீடத்தை மட்டும் மட் பலமாகத் தாக்கி, அதனைத் தூக்கிக் கொண்டு அப்பால் போயிற்று.
அசுவசேனனைத் துண்டுகளாக்கிய அர்ச்சுனன்
கிரீடத்துடன் வானத்தில் சென்று கொண் டிருந்த அசுவசேனனைக் கண்ணபிரான் சுட்டிக்காட்டி, “அர்ச்சுனா! காண்டவ வனத் தகனத்தின் போது உன்னிடமிருந்து தப்பி வாலறுந்த அசுவசேனன் என்னும் நாகம், உன் மேல் கொண்ட கோபத்தின் காரணமாக, உன் எதிரி கர்ணனைச் சரண் அடைந்தது. இப்பொழுது உன்னைக் கொல்ல முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. மீண்டும் அது உன்னைத் தாக்கும் ” என்று கூற அர்ச்சுனன் ஆறு பாணங்களை விட்டு வாலறுந்த அசுவ சேனனை இரண்டு துண்டுகளாக்கினான்.
ஐந்து தலைகளோடு கூடிய அந்நாகம் உயிர் போகும் அந்நிலையிலும் கர்ண னிடம் வந்து, “தயவு செய்து மற்றொரு முறை செலுத்துங்கள்; இந்த முறை நிச்சயம் அர்ச்சுனனைக் கொல்வேன்” என்று கூறி மன்றாடியது. ஆனால் கதிரவன் மைந்தனா கிய கர்ணனோ, தான், தன் தாய் குந்தி தேவிக்குக் கொடுத்த, ‘ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது முறை, நாகக் கணையை விடுவதில்லை’ என்ற வாக்குறு தியை நினைவில் கொண்டு, “இனி உன்னை ஏவமாட்டேன். மேலும் இரண்டாம் முறை உன்னையே செலுத்து தல் வீரனுக்கு அழகன்று ” என்று கூறி மறுத்து விட்டான். தன் எண்ணம் கைகூடாமல் போகவே அந்நாகம், மிகவும் வருந்தி அவ்விடத்திலேயே உயிரை விட்டது.
இந்திரன் வாழ்த்து
நாகக் கணையின் காரணமாகத் தேரைப் பன்னிரண்டு அங்குலம் அழுத்தியதனால், தேரானது அந்த அளவு புதைந்திருந்தது. அதனால் கண்ணபிரான் மீண்டும் அத்தேரைப் பூமியின் மேல்வரச் செய்தான். அதே நேரத்தில் இந்திரன் வந்து தலை தட்டிப் போன கிரீடத்திற்குப் பதிலாக வேறொரு கிரீடத்தைச் சூட்டி, ”வெற்றி உண்டாகுக” என வாழ்த்திச் சென்றான். நாகாஸ்திரத்திலிருந்து அர்ச்சுனன் தப்பிய தனால் பாண்டவர்களும் அவர்கள் சேனையும் பெருமகிழ்ச்சி அடைந்து பேராரவாரம் செய்தார்கள். கௌரவர்களும் அவர்கள் சேனையும் சோர்ந்து போயினர்.
கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கண்ணபிரானுக்கு நிகராகத் தேரோட்டுதலில் வல்ல மத்திரநாட்டு மன்னன் சல்லியன், “கர்ணா! நான் முன்னெச்சரிக்கையாகவே நாகக்கணையை அர்ச்சுனன் கழுத்திற்குக் குறிவைக்காதே. மார்பிற்குக் குறிவை என்று நான் சொல்லிக் கொண்டே இருக்கவும், நீ அதனை அலட்சி யப்படுத்தினாய். இப்பொழுது என்ன ஆயிற்று? கண்ணன் தன் மாயத்தினால் அர்ச்சுனனைத் தப்ப வைத்தார். கர்ணா! ஒன்று கேள்; பாவத்தைத் தருமம் வெல்லு மென்றால் நீ அர்ச்சுனனை ஜெயிப்பாய்; மற்றபடி அர்ச்சுனனை எக்காலத்தும் எவ்விடத்தும் வெல்ல முடியாது. உன்னைத் துணையாகப் பெற்றுப் பாண்டவர்களை வென்று துரியோதனன் இந்நாட்டை ஆளவே முடியாது. ஆதலால் இனி நான் உனக்குத் ‘தேர்ச்சாரதியாக இருக்க மாட்டேன் ” என்று கூறித் தேரினின்று இறங்கி, மந்தரமலை போன்ற தன் தேரின் மீது ஏறிக்கொண்டு தனியாகப் போர் செய்யலானான்.
கர்ணன் அப்பொழுதும் மனம் தளர வில்லை. வேறொரு பாகனைக் கொண்டு தேரைச் செலுத்தி அர்ச்சுனன் மேல் அம்புகளை மழையெனப் பொழிந்தான். அர்ச்சுனனோ, கண்ணபிரான் லாவகமாகத் தேரினைச் செலுத்த அர்த்தசந்திர பாணங் களைச் செலுத்தி அவனொடு கடும் போரிட் டான். அப்பொழுது திடீரென்று கர்ணனது தேரானது குதிரைகளும் இழுக்க முடியாமல் தளர்ந்து நிற்குமாறு பூமியில் ஆழமாகப் புதையுண்டது. இஃது அவனுக்கு விதியின் விளைவே!
முனிவரின் சாபம்
கர்ணன் ஒரு நாள் தேரின்மீது அமர்ந்து விரைந்து வீதியில் சென்று கொண்டிருக்கையில், ஒரு முனிவரது பசுவின் கன்று தேர்ச்சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசுங்கி இறந்து போய்விட்டது. அதனால் அம்முனிவர் மிக்க கோபங் கொண்டார். கர்ணன் பலவாறு சமாதானப்படுத்தியும் அவர் கோபம் தணியவில்லை. அதனால் அவர், “கர்ணா போர்க்களத்தில் உன் உடல் பகைவர் அம்பினால் இக்கன்றினைப் போலச் சிதைந்து போகவேண்டியது. அது மட்டுமல்லாது, அப்பொழுது உனது தேர்ச்சக்கரம் பூமியில் புதையுண்டு போகக் கடவது” என்று சாபமிட்டார்.
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது” (திருக்குறள் – நீத்தார் பெருமை)
(என்றார் போல அம்முனிவன் கோபம் இருந்தது ஒரு சுணமாயினும், அஃது கர்ணனின் வாழ்க்கைச் சக்கரத்தையே அழித்துவிட்டது.)
கர்ணனும் ”இஃது முனிவரின் சாபத்தின் விளைவே” என்பதை உணர்ந்து, மன மனம் தளர்ந்து,தேரினின்று கீழிறங்கி, புதை யுண்ட சக்கரத்தை மேலும் புதையாதபடி மேலே தூக்க முயலலானான்.
தரையில் நின்றான் மேல் தேரில் நின்றவன் அம்பெய்தல் ஆகாது என்ற மரபையும் மீறி அர்ச்சுனன் கர்ணன் மீது சரமாரியாக அம்புகளை விடலானான். ஆனால் கர்ணன் உடனே வேறொரு தேரில் ஏறிக்கொண்டு அர்ச்சுனன் மீது அம்புகளை எய்ய முனைந்தான்.அப்பொழுது அர்ச்சுனன் விட்ட அம்புகளினால் இரத்தம் ஆறெனப் பெருக நின்ற கர்ணன் தன் குரு பரசுராமன் இட்ட சாபத்தால் அஸ்திர சாத்திர வித்தையை மறந்து போனான். அதனால் மனம் சோர்வடைந்தான்.
பரசுராமர் சாப வரலாறு
க்ஷத்திரியனாகிய கர்ணன் இளம் பிராயத்தில் பிராமண வடிவங்கொண்டு. பரசுராமரிடம் சென்று “தான் ஒரு பிரா மணன்” என்று பொய் கூறி வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்து வந்தான். ஒரு நாள் இந்திரன் செய்த சூழ்ச்சியினால் “கர்ணன் பிராமணன் அல்லன்; க்ஷத்திரியனே” என அறிந்து கடுங்கோபங் கொண்டு, “நீ பொய் சொல்லி கற்றதனால் தக்க சமயத்தில் அக்கல்வி உனக்கு உதவாதபடி மறந்து போகட்டும்” என்று சாபமிட்டார்.- (இ (இக்கதையின் விளக்கம் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.)
அஸ்திரத்தை மறந்து போனதும், தேர்ச்சக்கரம் புதையுண்டதும், நாகக் கணை குறிதவறிச் சென்றதும் முதலான நிகழ்ச்சி களைப் பார்த்தவுடன் கர்ணன் தனக்கு மரண காலம் சமீபித்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு மனச் சோர் வடைந்தான். ஆனாலும் கர்ணன் தயங்காது அம்புகளை அர்ச்சுனன் மீது விடலானான்.
சூரியன் மறைதற்கு இரண்டு விற்கிடை தூரம் இருந்த மாலைக் காலத்தில், முத்திப்பதத்தை நாடும், ஞானியர் களுக்கு மூலப் பொருளாயும், வேதத்தின் முதற் பொருளாகவும், அவ்வேதத்தைக் தழைத்தோங்கச் செய்யும் முதற்பொருளாக வும் விளங்கும் முதன்மைப் பொருளான கண்ணபிரான்
போர்த்திறன் மிளிரும் காண்டீபத்தைக் கையில் ஏந்திய அர்ச்சுனனைப் போரைச் சிறிது நேரம் நிறுத்துமாறு செய்து, அவனையும் தேரில் இருக்கச் செய்து
முதிர்ந்த தவத்தினனாய், வேதிய வடிவந்தாங்கி, பகலவன் புதல்வனாகிய கர்ணனை அடைந்தான்.
வேதியர் வடிவத்தில் சென்ற கண்ண பிரான், “சூரிய குமாரனே! தான வீரனே! கர்ணனே! இந்த உலகததில் வேண்டியவர் களுக்கு வேண்டியாங்கு கொடுக்கக்கூடிய கைம்மாறு கருதாத கொடைவள்ளல் எனக் கேள்விப்பட்டேன். நான் மேரு மலைச் சாரலில் தவம் செய்து வாழ்கின்றேன். இப்பொழுதும் வறுமையால் துன்பத்தோடு வாழ்கின்றேன். உன்னால் இயைந்த பொருளை எனக்குக் கொடுப்பாயாக” என்று வேண்டி நின்றார்.
ஈந்துவக்கும் கர்ணன்
அந்தணன் கூறிய உரைகளை அமுதெனக் கேட்டு, விசயன் வெங்கணையால் நொந்த கர்ணன், “இந்த நிலையில் தான் தானம் செய்யக்கூடிய ஒரு பேறு கிடைத் ததே என்று எண்ணி, மகிழ்ந்து புன்முறுவல் பூத்து, ‘கேளுங்கள்’ என்று கேட்க, வேதியனாக வந்த அந்தக் கண்ணபிரான், “இப்பொழுது உன்னிடம் ஒன்றிவிளங்கும் நின் புண்ணியம் அனைத்தையும் கொடுத்து உதவுக” என்றான். ஈத்துவக்கும் இன்பத்தை முழுமையாக அறிந்த கர்ணன் அதனைக் கேட்டு மகிழ்ந்தான்.
”என் உயிர் ஒரு நிலையில் இல்லாது இவ்வுடம்பிற்கு உள்ளே உள்ளதோ, வெளியோ தள்ளப்பட்டதோ என அறியாத நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. நான் அங்க நாட்டு அதிபனாக இருக்கும் சமயத்தில் நீ வரவில்லை. இப்பொழுது என்னால் எதையும் உனக்குக் கொடுக்கும் நிலையில் நான் இல்லை என்றாலும் தவத்தில் சிறந்தவனே? ஓய்வில்லாது இப்பிறவியில் யான் செய்த புண்ணியம் அனைத்தையும் பெற்றுக்கொள்க” என்று கூறித் தம் கரம் குவித்து வணங்கினான். பின்னர் அவன் வேதியனை வணங்கி, தன் மார்பில் புதைந்த ஓர் அம்பினை எடுத்து, அதன் வழியாக வெளிப்பட்ட குருதி யையே நீராகக் கொண்டு அளித்து மகிழ, முன்னர் மாபலிச் சக்கரவர்த்தியின் செங்கையால் தாரைவார்த்துக் கொடுக்க, மூவடி மண் பெற்று மூன்றுலகங்களையும் அளந்தவனான கண்ணபிரான் ஏற்றான்.
பின்னர் அவ்வேதியன் மகிழ்வோடு கர்ணனைப் பார்த்து, ”கர்ணா! வேண்டிய வரங்களைக் கேள்.தருகின்றேன்” என்று அன்போடு கூற, கர்ணன், ”கொடிய தீவினையால் இன்னமும் நான் இன்னல் தரும் பிறவிகள் உற்றாலும் அந்தப் பிறவிகளில் எல்லாம் இல்லையென்று இரப்பார்க்கு இல்லை யென்னாத இனிய இளகிய இதயம் நீ அளித்திடுதல் வேண்டும்” என்று வேண்டி னான்.
மைத்துனன் உரைத்த வாய்மை நிறைந்த வார்த்தைகளைக் கேட்டு கண்ணபிரான் அக மகிழ்ந்து, அவனைத் தழுவிக் கொண்டு, “கர்ணா! எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ வேண்டிய செல்வங்களையும், அவற்றை வாரி வழங்கக் கூடிய ஈகைப் பண்பையும் அத்துணைப் பிறவிகளிலும் பெறுவாயாக. முடிவில் முக்தியையும் பெறுவாயாக” என்று அவன் விரும்பிக் கேட்ட வரங் களையே தந்தான்.
இதன் மூலம், அக்குரன், அந்திமான். சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் என்ற அறுவரோடு இக் கர்ணனும் சேர்ந்தான். இடையேழு வள்ளல்களில் ஒருவன் ஆனான்.
வரங்கொடுத்தபின் வேதியன் வடிவத்தி லிருந்த கண்ணபிரான், கார் மேகம் போன்ற நிறமுடையவனாகி, சுதர்சனம் (சக்கரம்), பாஞ்ச சன்னியம் (சங்கு), கௌமோதகி (கதை), நாந்தகம் (வாள்), சார்ரங்கம் (வில்) என்னும் பஞ்சாயுதங்களும் கரங்களில் விளங்க. இயமனைப்போன்று பெருந் துன்பம் செய்த நீரில்வாழ் முதலை வாயின் பிடியிலிருந்து தப்ப ‘ஆதிமூலமே’ என்று அழைத்த கஜேந்திர ஆழ்வானுக்கு, அருள் புரிந்து அதனைக் காத்து அம்முதலையை வீழ்த்திய கருட வாகன ரூபராகக் காட்சி தந்தருளினார்.
இத்திருக்காட்சியைக் கண்ட இந்திராதி தேவர்களும், முனிவர்களும் நான்முகனும் பொன் போன்ற மலர்களைத் தூவிப் போற்றி மகிழ்ந்தார்கள். அர்ச்சுனனுடைய கணையால் உயிர்துறக்கும் நிலையில் இருந்த கர்ணன் இத்திருக்கோலக்காட்சி யைக் கண்டு பெருமகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அவன் ஆனந்தத்திற்கு எல்லை யேது? அந்தப் பேரானந்த எல்லையீ லிருந்து கர்ணன் அப்பெருமானைப் பலவாறு போற்றலானான். இதனை வில்லிபுத்தூராழ்வார் நான்கு பாடல்களில் மிக அழகாக இனிய முறையில் எடுத்துக் காட்டுகின்றார். அவை : –
1) அருந்தழல்மா மகம்புரிந்தும் கடவுள்
கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அலை யோகத்து இருந்துமணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே
திருந்தநிலை பெறக்கண்டும் போகம் எல்லாம்
சிறுகி அனைத்து உயிருக்கும் செய்ய வொண்ணாப்
பெருந்தவங்கள் மிகப்பயின்றும் பெறுதற்கு எட்டாப்
பெரும்பயன் நின் திருவருளால் பெறப்பெற் றேனே.
(முத்தீ வளர்த்து வேள்விகள் புரிந்தும் கங்கை ஆதியா தீர்த்தங்களில் நீராடியும், தியானம் முதலான யோகத்தில் பொருந் தியும், மலர் தூவி நின் திருத்தாள் போற்றிப் பூசனைகள் செய்தும், அரிதான பெருந் தவங்கள் பயின்று செய்தும், பெறுதற்கு அரிதான பெரும்பயனை நின் திருவருளால் நான் அடையப்பெற்றேன் )
2) நீல நெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்வெங் கதைவாளம் சங்கு நேமி கோதண்டம் ஏனும் படையும் குழைத்த வாச
மாலை நறுந் துழாய்மார்பும் திரண்ட தோளும் மணிக்கழுத்தும் செவ்விதழும் வாரி சாதக் காலமலர் எனமலர்ந்த முகமும் சோதிக் கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே.
(நெடிய மலை போன்றும், கார்மேகம் போன்றும், கடல் போன்றும், காயாம்பூ போன்றும், நிறமுடைய கருமை நிற வண்ணத்துடன் பஞ்சாயுதங்களை ஏந்தி, மணம் கமழும் துளபமாலை திகழ்மார்பும். திரண்ட தோள்களும், சுடர் விடும் கழுத்தும், செவ்விதழும், வளமான தாமரை முகமும், ஒளிவீசும் திருமுடியும் நான் இப்பிறவியிலேயே காணப் பெற்றேன்.)
3) தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு அமர்மலைந்து தறுகண் ஆண்மைச் செருவில்எனது உயிரனைய தோழற் காகச் செஞ்சோற்றுக் கடன்கழித் தேன்தேவர் கோவுக்கு உரைபெறுநற் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்றபெரு நல்வினைப் பேறு உனக்கே தந்தேன் மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்த வாறே.
(செங்கண்மாலே! தருமன் முதலான என் அன்பு தம்பியர் ஐவரோடு போர் செய் தேன். போர்க்களத்தில் என் உயிரனைய என் நண்பன் துரியோதனனுக்காகச் செஞ் சோற்றுக் கடன் கழித்து உயிரைத் துறக்க லானேன்; தேவேந்திரனுக்குக் கவச குண்ட லங்களை ஈந்தேன்; நான் பெற்ற நல் புண்ணியம் அனைத்தையும் உனக்கே தந்தேன் ; இவ்வாறு எப்பொழுதும் ஒப்பற்றவனாக வாழ்ந்த என் வாழ்வுதான் என்னே!)
4) வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்.
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன் . தேன்பெற்ற துழாய் அலங்கல் தீண்டப் பெற்றேன் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன் ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன் யான்பெற்ற பெருந்தவப்பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற்றாரே.
(அன்று உலகினை அளந்த காலத்து, நான் முகன் நின் திருவடியைத் தன் கமண்டல நீரால் திருமஞ்சனம் செய்ய அதுவே ஆகாய சுங்கையாகி மலர்ந்தது. அத்தகைய புனித திருப்பாத மலரை நான் சேவிக்கப் பெற்றேன். சந்திரனைத் தோற்றுவித்த உன் திருமனத்தால் துளப மாலையும் சந்தனமும் அணியப்பெற்ற நின் திருத்தோள்களால் தழுவப்பெற்றேன். அர்ச்சுனனுடைய அம்புகள் துளைத்து வாடியிருந்தாலும் நின் திருநாமத்தை உரைக்கும் நற்பேறு பெற்றேன். யான் பெற்ற இந்தப் பெருந்தவப் பயனை இந்தவுலகத்தில் பிறந்தவர்கள் யார் பெற்றார்கள்?)
இவ்வாறு கண்ணபிரானைக் கர்ணன் புகழ்ந்து ஏத்திப்போற்றி உரைக்கின்ற காலத்து, பரந்தாமன் இனிமையுடன், “கர்ணா! உன்னுடைய கவச குண்டலங் களை இந்திரன் மூலமாகத் தானம் பெறச் செய்தவனும், ஒரு முறைக்கு மேல் இரண் டாவது முறை நாகக் கணையை விடுக்க லாகாது என்று குந்தி அன்னையின் மூலமாக வரங்கேட்கச் செயதவனும் யானே” என்றான். இவை மட்டுமா! தான வீரனே! தட்சகன் மகனான அசுவசேனன் என்னும் நாகக் கணை தாக்காதபடி தேரைப் பூமியில் புதையச் செய்து. அதன் மூலம் அர்ச்சுனனைக் காப்பாற்றியவனும் நானே” எனக்கூறி, பின் தேரின் மீது வந்து அமர்ந்து கொண்டான்.
கர்ணன் மார்பை ஊடுருவிய அஞ்சரீகம்
பின்னர், அப்பெருமான் அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! பகலவன் புதல்வ னைப் பகலவன் மேற்குத் திக்கில் படுவதற்கு முன் உள்ள பகற்பொழுதிலே வீழ்த்துவாயாக” என்று கூற, அர்ச்சுனனும் உறுதியுடன் அஞ்சரீகம் என்ற அம்பினை கர்ணனின் மார்பினைக் குறிவைத்துச் செலுத்தினான். அந்த அம்பும், சான்றோர் மொழி போன்று குறி தவறாது, விரைந்து சென்று கர்ணன் மார்பை ஊடுருவியது. பின்னர் வெளியே வந்து பூமியினுள் புதைந்தது. மாவீரன் கர்ணனும் கண்ணபிரானின் திருநாமத்தை நாவால் ஏத்தி மகிழ்ந்தவாறே கீழே விழுந்தான். உயிர் நண்பன் துரியோதனன் துன்பத்தின் உச்சியிலே கிடக்கக் குற்றுயிராய்க் கிடக்க லானான்.
“அர்ச்சுனன் தொடுத்த அம்பால் பாண்டவர் ஐவருக்கும் மூத்தவன் மூத்தவ கர்ணன் இன்று போர்க்களத்தில் முடி சாய்ந்து வீழ்ந்தான்; இன்று மாலை நேரம் கழிப்ப தற்குமுன் அவன் உயிர்பிரிந்து விடும் என்று அசரீரி வான்வழியாகக் கூறக் கேட்டாள் அன்னை குந்திதேவி.
உடல் துடிக்க, உள்ளம் உருக, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக, நெடிய கூந்தல் சரிய ‘கோ’ வென்று புலம்பிக்கொண்டே போர்க்களத்தை அடைந்து, தலையைக் கைகளால் அடித்துக்கொண்டு, கன்னிப் பருவத்தில் பெற்றெடுத்த கதிரவன் மைந்தன், தன் மூத்த மகன் கர்ணன் மீது விழுந்து ”மகனே! மகனே!” என்று புலம்பினாள்.
“என் ஆருயிர் மைந்தனே! என் தந்தையின் அரண்மனைக் கன்னிமாடத்தில் கன்னியாய் இருக்கும்போது சூரியன் திருவருளால் கவச குண்டலங்களோடு உன்னைப் பெற்றேன்; அன்றைய தினமே பொற் பேழையொன்றில் இரக்கமின்றி உன்னை வைத்துக் கங்கையாற்றில் விட்டேன். அங்கநாட்டு அரசனாகி, துரியோதனனின் உயிர் நண்பனாகி இருப் பதைப் பார்த்து மனம் பூரித்துப்போனேன். இப்பொழுது விண்ணுலகத்தை ஆளச் சென்றாய் போலும்!
“மழை மேகமும் நாணுமாறு தான தருமங்களைச் செய்யும் தான வீரனே! வள்ளலே! தருமன் முதலான ஐவரும் துரியோதனன் முதலான நூற்றுவரும் உன் தம்பியர்கள் தான்; அவர்கள் அனைவரை யும் தழுவிக்கொண்டு நீ ஒருவனே ஆட்சி புரியும் தல் வாய்ப்பு இருந்தும் ஐயோ! அப்பேற்றினைப் பெறாமல் சென்று விட்டாயே! தேவர்களின் மாயையால் இம் மரணத்தை நீ அடைந்தாய்” என்று பலவாறு கூறி, போர்க் களத்தில் இருந்த வர்கள் எல்லாம் அதிசயிக்கும்படி புலம்ப லானாள். அவளின் நிலை கன்றினை இழந்த தாய்ப் பக கதறுகின்ற நிலை போன்று பரிதாபமாக இருந்தது.
தாயின் மடியில் உயிர்நீத்த கர்ணன்
தாயின் மடியிலும், கைகளிலும் அங்க நாட்டு மன்னன் தான வீரன் கர்ணன் உடல் சாய்ந்திருக்க, அவன் உயிர் எந்தவிதத் தடுமாற்றமுமின்றி, தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, தந்தை சூரியனைக் காண்பான் போல மேலு மேலுலகம் சென்றது.
கர்ணன் இறந்ததைக் கேட்டு துரியோ தனன் பெரிதும் துயர் அடைந்தான். “என்னுடைய இன்ப துன்பங்களில் எல்லாம் உடனிருந்து பழகிய உயிர் நண்பனே! உன்னை இன்று இழந்தேனே! உன்னைப் போல நிகரற்ற ஆற்றலுடைய ஒரு வீரனை இனி எங்கு காண்பேன்? என் வாழ்வாகவும், என் மன வலிமையாகவும் இருந்தவனே! இனி இந்த நாட்டை நான் ஆள்வேனா? அல்லது பீமனால் அடிபட்டு மாள்வேனா? உன்னையும் இழந்து, தம்பியர்களையும் இழந்து நான் தனியனாய் எவ்வாறு வாழ்வேன்” என்று பலவாறு கூறிப் புலம்பினாள்.
மத்திர நாட்டு மன்னன் சல்லியன் வந்து துரியோதனனைப் பார்த்து, ‘அரசே! உன்னுடைய சேனையானது எமனுலகை அடைந்தது போல அச்சத்தோடு காணப் படுகின்றது. கர்ணனுக்கும், அர்ச்சுன னுக்கும் நடந்த போரைப் போன்ற உக்கிர மான போரை நான் இதுவரையில் கண்ட தில்லை. தெய்வ அனுகூலத்தால் தான் அர்ச்சுனன் வெற்றி பெற்றான். உனக்காகப் போரிட்ட பல மன்னர்கள் மாண்டு போனார்கள் அதற்காக நீ துயரப்பட வேண்டாம். வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. வெற்றியைக் கண்டு ஆனந்தப்படுவதும், தோல்வியைக் கண்டு துயரப்படுவதும் வீரர்களின் செயல்கள் ஆகா.வெற்றி பெற்றவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம் இல்லை. கர்ணன் அர்ச்சுனனால் கொல்லப் பட்டு வீர சொர்க்கம் அடைந்துள்ளான். அதனால் நீ வருந்தாதே” என்று மன வருத்தத்துடன் கூறித் தேற்றினான்.
துரியோதனனின் துயரம்
இதனைக் கேட்டுத் துரியோதனன் மேலும் துக்கத்தை அடைந்தான். “கர்ணா’ கர்ணா! என் உயிர்த் தோழா! தான வீரா! எனக் கூறிக் கூறிப் புலம்பினான். அஸ்வத் தாமா, சகுனி போன்றோர் அவனுக்கு ஆறுதல் மொழிகள் கூறித் தேற்றினர்.
காதல் புதல்வன் கர்ணன் உற்ற இறப்பை அறிந்த சூரியன் அவனைக் காணத் தேடிச் செல்பவன் போல மேற்குத் திக்கில் சென்று மறைந்தான்.
பெருமை பெற்ற தருமபுத்திரர் முதலான பாண்டவர்கள் ஐவரும், தம்மைப் பெற்ற அன்னையாகிய குந்தியின் அழுகுரல் கேட்டு, அதற்குரிய காரணம் யாது ? எனக் கண்ணபிரானைக் கேட்க, அவர் உண்மை யைக் கூறிவிட்டார்.
அதைக் கேட்டுப் பாண்டவர்கள் ஐவரும் இடி விழுந்த நாகம் போலவும், கண் ணிழந்தான் பெற்றிழந்தான் என உழந்தான் போலவும், கைக்கு வந்த கற்பகக் கனியை நழுவ விட்டது போலவும் பெருந்துயர்க் கடலில் மூழ்கினர். இதுவரை, ”கர்ணனைக் கொன்றுவிட்டோம் என்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்கள் இப்பொழுது “பெறற்கரிய மூத்தவனை, முன்னவனைக் கொன்று விட்டோமே” என்று துயரக் கடலில் மூழ்கினார்கள். இமைப் பொழுதில் அழுது கொண்டிருந்த தாயினை வந்தடைந்தார்கள். இறந் கிடந்த கர்ணனைப் பார்த்து வாய்விட்டு அலறிப் புலம்பினார்கள். ‘அண்ணாவோ’ என்று அலறித் துடித்தார்கள்.
அப்பொழுது தருமபுத்திரர், “அன்னையே! கன்னிபருவத்தில் கதிரவன் அருளால் தங்களுக்குப் பிறந்தவன் இத்தலைமகன் என்பதை ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை, தாயே! ஏன் சொல்ல வில்லை. இந்தச் செயல் எந்த அறிவு வகையைச் சேர்ந்தது? இந்த இடத்தில் பெற்ற தாயே மகனிடத்தில் அந்நியரைப் போன்று இருந்து பெருந்தவறு செய்ததை யான் இதுவரை அறிந்திலம்” என்று கூறிப் பலவாறு புலம்பினார்.
கர்ணனைப் பார்த்து பீமன் கதறல்
தாய் மடியில் விழுந்து கிடந்த கர்ணனைப் பார்த்து பீமன், “கர்ண அண்ணா! உன்னைப் பெற்ற அன்னை னங் கலங்கித் துடிக்கின்றாள். உன் உடம்பு முழுவதும் ‘உன் உயிர் எங்குள்ளது. என்று தேடுவது போல அர்ச்சுனன் கணைகள் பதிந்துள்ளனவே! ஆனால் அக்கணைகள் அந்த உயிர் இயமன் இருக்குமிடம் தேடிச் சென்றது என்பதை அறியவில்லை போலும்! எங்கள் ஐவர்க்கும் அரசனாக இருந்து ஆட்சி புரியும் பேற்றினை அண்ணா! நீ விதியினால் இழந்தாயே” என்று கூறி உயிர் துடிக்க உடல் துடிக்க அழுதான்.
‘கர்ணனுடைய இறப்புக்குத் தான் காரணமாக ஆகிவிட்டதை எண்ணிப் பெரிதும் மனம் நொந்தான் அர்ச்சுனன். ”கதிரவன் காதலனே! என் அண்ணனே! உன் மீது எத்துணை வலிமையான அம்புகளை எத்தனை ஆயிரம் செலுத்தியுள்ளேன் நான். உண்மையிலேயே நான் பெரும்பாவி. கர்ண அண்ணா! நீ தொடுத்த நாகக் கணைக்கு உயிர் பிழைத்தேன் என்று நான் அப்பொழுது மகிழ்ந்தேன். ஆனால் உன் அழகிய திருமார்பில் நான் தொடுத்த ஆயிரக்கணக்கான கொடிய அம்புகள் என்னையே இப்பொழுது துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை அப்போது அறிந்தி லேனே! போர்க்களத்தில் உன் முகத்தைப் பார்க்கும்போது தரும அண்ணா போல எனக்குத் தெரிந்தது. உண்மையிலேயே என் முதல் அண்ணா என்பதனால் தான் போலும்! இதனை நான் அன்று உணர வில்லையே! எத்தகைய எத்துணை கொடுமைகளை அண்ணா! உனக்கு நான் செய்துள்ளேன். ‘உன்னைக் கொல்வேன்’ என்று அரசவையில் சபதம் செய்த கெடுமதியாளர்கள் என்னையன்றி வேறு யார் இருக்கின்றார்கள்? என்னை மன்னிப்பாயா. என்னை மன்னித்துக் கொள் அண்ணா” என்று பலவாறு கூறிக் கூறிப் புலம்பிப் புலம்பி மனம் நொந்தான்.
கண்ணனை குற்றம் சாட்டிய நகுலன்
அதன்பின் நகுலன், “பூதனை என்பவள் தாயென்று சொல்லி முலைப்பால் ஊட்ட அவன் உயிரைக் கொண்டபித்தனே! அசரீரி யாலும், அன்னை குந்தியாலும் அன்றோ உண்மை உணர்ந்தோம். எங்களைப் பெற்ற தாய் எவ்வாறு இந்த அண்ணன் விஷயத்தில் அந்நியளாய் இருந்தாளோ அதுபோலவே நீயும் இப்பெருமகன் விஷயத்தில் எங்களுக்கு அந்நியமாய் நடந்து கொண்டாயே. அதை விடக் கொடுமை எங்கள் தமையனை எங்களைக் கொண்டே அழித்து விடச் செய்தாயே! இது நன்றோ.இவையெல்லாம் உன் திருவிளை யாடல் தானே” என்று கண்ணபிரானைக் குற்றம் சாட்டிப் புலம்பினான்.
இறுதியாக சகாதேவன், “கண்ணா! உன் செயல் மிக நன்றாக உள்ளது! இரணியனை அவன் மைந்தனாகிய பிரகலாதனைக் கொண்டே அழியச் செய்தாய். தென் னிலங்கை வேந்தனான இராவணனை அவன் தம்பியான வீடணனை அவனுக்குப் பகையாக்கிச் சுற்றத்துடன் அழியுமாறு செய்தாய்/ அவ்வாறே உலகு அறிய எமக்குத் தமையனாக இருந்து எங்களை யெல்லாம் ஆட்கொள்ள வேண்டிய எம் தலைவனை – எங்கள் கர்ண அண்ணனை எம்மவருள் ஒருவனான அர்ச்சுன அண்ணா வின் கையில் உள்ள காண்டீபத்தால் அழியச் செய்து எங்கள் பெருமையைக் குலைத்தாயே. இவை எல்லாம் தேவர் களின் மாயச் செயல்கள் போலும்!” என்று உள்ளம் வருந்திக் கூறித் துடிக்கலானான்.
இவ்வாறு தன் தமையன் கர்ணன் இறந்ததனால் துயருற்று, அவன் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய பாண்டவர் ஐவரும் குந்தியோடு பாசறை அடைந்தார்கள். அதே போல உயிர் நண்பனை இழந்த சோகத்தோடு விளங்கிய துரியோதனனை சகுனி, சல்லியன், முதலானோர் தேறுதல் கூறித் தங்கள் பாசறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஆக இந்தப் பதினேழாம் நாள் யுத்தம் இரு தரப்பினர்க்கும் பெருந்துயரம் விளை விப்பதாய் இருந்தது.
மகாபாரதம் – 52 பதினேழாம் நாள் போர்… தாயின் மடியில் உயிர்நீத்த கர்ணன்… இந்திரன் வாழ்த்து