இராமாயணம் இதிஹாசம் ஏற்றிய வால்மீகி
பண்டைக் காலத்தில் நம் நாட்டிலே முற்றிலும் பண்பாடு அடைந்துள்ள மேன்மகன் ஒருவனை ரிஷி என்று அழைப்பது வழக்கம். அந்த இலட்சியம் மங்கிப் போகாது இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. ரிஷி ஸ்தானம் பெறுவதற்குப் பிறப்புரிமை ஏதுமில்லை. மக்களுள் யார் வேண்டுமானாலும் ரிஷி ஆகலாம். ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, அந்தப் பண்பின் பொருட்டு முழுமனதோடு முயல வேண்டும். அடக்கம் பழகுதலின் விளைவாக அன்ன வனுக்கு ஞானக்கண் வாய்க்கிறது. ரிஷி ஒருவன் ஞான வடிவினன் ஆகிறான். ஞானம் மனத்தகத்தினின்று தானாக உதயமாகிறது; புறத்தினின்று அது ஊட்டப் படுவது அன்று. சுயமுயற்சியைக் கொண்டு வால்மீகி ஒரு மஹரிஷியானார். தத்துவ தர்சனம் தானாக அவருக்கு வந்து வாய்த்தது. அவர் இயற்றியிருக்கும் இராமாயணமே அதற்கு அத்தாக்ஷியாகிறது. அத னிடத்து எளிமையும் இனிமையும் மகிமையும் ஒன்றுசேர்ந்து அமைந்திருக்கின்றன.
வால்மீகி ஒரு ஞானியர் வமிசப் பரம்பரையில் வந்தவர் அல்லர். அவர் பிறப்பெடுத்தது ஒரு பாமர னாக, வழிப்போக்கர்களைக் கொள்ளையடிக்கும் திருடனாக அவர் தமது ஜீவிதத்தைத் துவக்கினார். வழியில் போன நாரத மஹரிஷியைத் தாக்கி அவரைக் கொள்ளையடிக்க அத்திருடன் முயன்றான். நல்லான் ஒருவனுடைய போக்கு அத்தகையதன்று என்று மஹரிஷி அவனைத் திரஸ்கரித்தார். எப்படியாவது தன் குடும்பத்தைக் காப்பாற்றி வரவேண்டும் என்று திருடன் தன் செயலை ஆதரித்துப் பேசினான். நல்வழியில் செல்வம் சம்பாதிக்க இயலாவிட்டால் கெட்ட வழியிலாவது அதைத் தேடித்தான் ஆகவேண்டும் என்பது அவன் கருத்து.
திருடுதலும் கொலை புரிதலும் மகா பாபங்கள். உற்றார் உறவினர் அப்பாபத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்று நாரதர் அவனுக்கு எச்சரிக்கை பண்ணினார். இப்படி அவர் இயம்பியது உண்மையா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள அவன் தன் வீட்டுக்குப் போனான் அவனுடைய சுற்றத்தார் அவன் சம்பாதித்த செல்வத்துக்கே உரிமையாளர் என்றும் அவனுடைய பாபத்துக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும் இயம்பினர். இதைக் கேட்ட அம்மனிதன் திகைத்துப் போனான். மானுட வாழ்க்கைக்குரிய இப்பேருண்மைஅவன் உள்ளத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. அவனுக்கு நல்லறிவு வந்தது. நாரதரிடம் திரும்பி ஓடிவந்து தான் செய்த தீமைக்குக் கழுவாய் வேண்டி நின்றான். அந்தத் திருடன்மீது இரக்கம் கொண்ட தேவரிஷி ‘ராம’ என் னும் மந்திரத்தை ஜபிக்கும்படி அவனுக்கு உபதேசம் பண்ணினார். ஆனால் அந்தப் பாமரனுக்கு அந்த மந்திரத்தை ‘மரா’ என்று மட்டும் தலைகீழாக உச்சரிக்க இயன்றது. அப்படியே செய்யும்படி அவனுக்கு உற் சாகம் ஊட்டிவிட்டு ரிஷி தம்போக்கில் போனார். மரா, மரா என்று அவன் உச்சரித்தான். நாளடைவில் அந்த உச்சரிப்பு ‘ராம, ராம’ என்று தானாகவே மாறி விட்டது. அது அவனுடைய மனத்தை மாற்றியமைத்தது. தூய வாழ்வு வாழ அவன் ஆரம்பித்தான். கெட்ட கனவினின்று விழித்துக் கொள்வதற்கு நிகராக இந்த மாறுதல் தானாக அவனுக்கு அமைந்தது. ராம நாம உச்சரிப்பில் அவன் ஆழ்ந்து ஈடுபட்டான். உடல் ஞாபகத்தை அவன் தாண்டியவன் ஆனான். ராம நாம உச்சாரணையில் அவனுக்குப் பேரானந்தம் உண்டா யிற்று அந்தச் சப்த பிரம்ம தியானத்தில் அவன் அமர்ந்தான். நாட்டம் அந்தர்முகப்பட்டது. நாளடை வில் புற்று ஒன்று கிளம்பி அவன் உடலை மூடி விட்டது. சமாதியில் இருந்த அன்னவனுக்கு அது ஒன்றும் தெரியவில்லை. அக்காரணத்தை முன்னிட்டே அவ்விப்ரருக்கு வால்மீகி என்னும் பெயர் வந்தது. புற்றின்கண் பரிபக்குவம் அடைந்த சான்றோன் என்பது அந்த நாமத்தின் உட்பொருள்.
ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன். ராம என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வால்மீகி மஹரிஷி பரிபக்குவம் அடைந்தார். ஸ்ரீ ராமனுடைய பூலோக வரலாறு முழுதும் அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. அப்படி உதயமானதை இராமாயணம் என்னும் ஆதி காவியமாக அவர் அமைத்தார். அவதார மூர்த்தி ஒருவர் உலகத்தில் தோன்றும் பொழுது அவருடைய வரலாற்றைக் குறிக்க மஹரிஷி ஒருவரும் அதே காலத்தில் தோன்றி வருகிறார். அக்கோட்பாட்டின்படி ஸ்ரீ ராமனுடைய பூலோக லீலையைக் குறித்துவைக்க வால்மீகி மஹரிஷி தோன்றினார். நூலாசிரியரும் கதாநாயகனும் ஆகிய இருவரும் தெய்விகம் நிறைந்த மூர்த்திகள். அதை முன்னிட்டு இராமாயணமும் தெய்விகம் நிறைந்த இதிஹாசம் ஆகிறது.
இராமாயணம்
பூவுலகில் பண்பாடே வடிவெடுத்துள்ள இலக்கியங்களுள் இராமாயணம் தலைசிறந்ததாகத் திகழ்கிறது. இது உருவெடுத்தது இந்தியாவில் எனினும் மானுட வர்க்கம் முழுவதின் மனதைக் கவரவல்லதாக இது இருக்கிறது. குழந்தை ஒன்று இராமாயணம் கேட் பதில் உற்சாகம் பூணுகிறது. பாமரன் ஒருவன் இராமா யணம் கேட்டுப் பண்பாடு அடைகிறான். பண்டிதர் ஒருவரின் சிந்தனா சக்தியை இது வளர்க்கிறது. ஆத்ம சாதகன் ஒருவனுக்கு இது அருள் நாட்டத்தை ஊட்டுகிறது. ஞானி ஒருவனுடைய ஞானத்தை இது உறுதிப்படுத்துகிறது. திரும்பத் திரும்பப் படிப்பதால் இராமாயணத்தில் யாருக்கும் சலிப்புத் தட்டுவதில்லை. நீரினுள் மூழ்கி நீராடுவதால் மேனி தெளிவடைகிறது. அதேவிதத்தில் இந்த இதிஹாச ஆராய்ச்சியால் மனது தெளிவடைகிறது. உணவு உடலைப் பேணுவது போன்று இந்நூல் அறிவை வளர்க்கிறது. பண்பாடடைய முயல்கின்றவனுக்கு வாழ்நாள் முழுதும் துணையாய் அமைந்திருப்பது இராமாயணம்.
அழிவற்ற இந்நூல் ஸ்ரீராமன் என்னும் மூர்த்தியை நடுநாயகமாகக் கொண்டுள்ளது. ஆகையினால் இது இராமாயணம் என்னும் பெயர் பெற்றிருக்கிறது. ராம சரிதம் என்பது இதன் பொருள். இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் உலக வாழ்வில் ஈடுபட்டிருப் பவர்களுக்கும் ஆத்ம ஞானத்தில் திளைத்திருக்கும் தபஸ்விகளுக்கும் ஸ்ரீராமன் முன்மாதிரியாகிறான். அறநெறியே வடிவெடுத்தவன் அவன். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அறத்தைக் கடைப்பிடிப்பவனாக அவன் இலங்குகிறான். மண்ணுலகில் தோற்றத்துக்கு வந்துள்ள அவன் யாண்டும் பரத்திலேயே நிலை பெற்றவனாகப் பொலிகின்றான்.
இராமனுக்கேற்ற கற்பு வாய்ந்த மனைவி சீதை. சீதை என்னும் சொல் படைச்சால் எனப் பொருள்படு கிறது. இச்சிறுமிக்குப் பெற்றோர் இல்லை. பூமகளின் செல்வியாகப் படைச்சாலில் இவள் கண்டெடுக்கப் பட்டு ஜனக மகாராஜாவினால் வளர்க்கப்பட்டாள். சீதை புனிதத்திற்கும் பெண்மைக்கும் உறைவிடமானாள். அமைதியுடன் சகித்துக்கொள்ளுதல் வாயிலாக அவள் துயரத்தை வென்றாள். பெண்ணின் பண்புக்கு முடிந்த குறிக்கோளாக சீதை இலங்குகின்றாள்.
நலம், கேடு ஆகிய இரண்டையும் இயற்கை உடைத் திருக்கிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள போராட் டம் எங்கும் புலனாகிறது. இராமாயணத்தில் நல்லவர் கள் ரிஷிகள் என்றும் கெட்டவர்கள் ராக்ஷசர்கள் என் றும் கூறப்படுகின்றனர். இது உலகைப் பற்றிய மற்றோர் உண்மை. தனக்கு எதிரியில்லாத ஜீவ ஜந்து உலகில் இல்லை. எனவே எதிரியைச் சமாளிப்பது யாண்டும் வாழ்க்கைப் பிரச்னையாக இருந்து வருகிறது. எதிரி யைச் சமாளிப்பது வாழ்க்கைப் பயிற்சியாகிறது. வலிவு படைத்ததே வாழ்க்கைக்குத் தகுதி உடையதாகிறது. வலிவைப் பெறுவதும் எதிரியைச் சமாளிப்பதும் இராமாயணம் கொடுக்கும் பாடங்களாகின்றன. ராமபாணம் வலிவுக்கும் நேர்மைக்கும் சின்னமாகிறது.) அது வீண்போவதில்லை. அறநெறி காப்பவனுக்கு வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். அவைகளை முறையாகச் சமாளிப்பவன் வாழ்க்கையில் வெற்றி யடைகிறான். இது இராமாயணம் புகட்டும் பாட மாகிறது. காமமும் பொருளாசையும் மனிதனைக் கெட்ட வழியில் தூண்டுகின்றன. இவ்விரண்டினுள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு இராமாயணம் உருவெடுக்கிறது. அயோத்யாபுரி, கிஷ்கிந்தை, இலங்கை ஆகிய மூன்றும் தலைமைப் பட்டணங்கள். அயோத்யா புரியில் தசரத மன்னன் தனக்கு வாய்த்த மனைவிமார் மூவரிலும் கைகேயியினிடம் அளவு கடந்த அன்பு காட்டினான். அதன் விளைவாகச் சிறிதளவு தீங்கு வடி வெடுத்தது. கிஷ்கிந்தையில் காமம் ஓரளவு அதிகரித் திருந்தது. அதன் விளைவாக வாலியும் சுக்ரீவனும் சிறிது காலம் பிரிந்திருந்தார்கள். லங்காபுரியிலோ இராவணன் காமநோய்க்கு முற்றிலும் வசப்பட்டு இருந்தான். அதன் விளைவாக இராவணனும் அவ னைச் சார்ந்திருந்தவர்களும் அழிந்துபட்டுப் போயி னர். ஸ்ரீ ராமன் இந்த மூன்று இடங்களில் மூன்று தியான முறைகளைக் கையாண்டு காமநோயைத் துடைக்கிறான் சமுதாயத்திலுள்ள தீங்குகள் பலவற் றிற்குக் காரணம் காமம். அவைகளை இராமாயணம் எடுத்துக் காட்டுகின்றது.
காமத்தை வெல்லுதற்கு ஏற்ப மனிதன் தெய்வத் தன்மையில் ஓங்குகிறான். இராமன் ஏகபத்தினி விரதம் பூண்டிருந்தான். இல்வாழ்வு வாழ்ந்ததற்கிடையில் அவன் காமத்தை வென்றவன். இராமனும் சீதையும் நெடுங்காலம் தவத்தில் ஈடுபட்டிருந்தனர். சந்தானத்தின் பொருட்டு அவர்களிருவரும் ஒரே ஒரு தடவை கூடினர். பெற்றோரின் புனிதத்தையும் பரிபாகத்தையும் முகாமை யாகக் கொண்டு அவர்களுக்கு வாய்த்த சந்தானம் தெய் விகமே வடிவெடுத்திருந்தது. சந்தானத்தைப் பெறும் விஷயத்தில் இவ்வுலகமானது சீதாராமனைப் பின் பற்றுமானால் அது புனிதம் நிறைந்த நல்லுலகம் ஆகும்.
ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன். ராம என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வால்மீகி மஹரிஷி பரிபக்குவம் அடைந்தார். ஸ்ரீராமனுடைய பூலோக வரலாறு முழுதும் அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. ‘அப்படி உதயமானதை இராமாயணம் என்னும் ஆதி காவியமாக அவர் அமைத்தார். அவதார மூர்த்தி ஒருவர் உலகத்தில் தோன்றும் பொழுது அவருடைய வரலாற்றைக் குறிக்க மஹரிஷி ஒருவரும் அதே காலத்தில் தோன்றி வருகிறார். அக்கோட்பாட்டின்படி ஸ்ரீராமனுடைய பூலோக லீலையைக் குறித்துவைக்க வால்மீகி மஹரிஷி தோன்றினார். நூலாசிரியரும் கதாநாயகனும் ஆகிய இருவரும் தெய்விகம் நிறைந்த மூர்த்திகள். அதை முன்னிட்டு இராமாயணமும் தெய்விகம் நிறைந்த இதிஹாசம் ஆகிறது.
இராமாயணம்-1 வால்மீகி, ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன்..!