ரங்கநாத பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திர திருவிழா நடந்தது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகாசி மாத திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பச்சை அரிசி மாவு, உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் மற்றும் ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.சங்கடஹர சதுர்த்திஉடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. தீராத சங்கடங்களை தீர்த்து வைக்கும் விநாயகருக்கு, ஒவ்வொரு மாதமும் சிறப்பு நாளாக, சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் இந்நாட்களில் விரதமிருந்து, விநாயகருக்கு வேண்டுதல் வைக்கின்றனர். இம்மாத சங்கடஹர சதுர்த்தி நேற்றுமுன்தினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.