அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். பூமி பூஜை முடிந்தபின், ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தர்கள், சாதி, மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டபின், இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பக்தர்களிடம் நன்கொடை வந்துள்ளது. ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. அவை இன்னும் வங்கியில் மாற்றப்படவில்லை. இதேபோல 200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது. கோயிலில் பதிக்கப்படும் மார்பில் கற்கள் அனைத்தும் கோயில் பகுதிக்குள் கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 3 கிரேன்கள், 10 டிரக்குகள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே அயோத்தி நகராட்சி ஆணையர் விஷார் சிங் கூறுகையில், ‛அயோத்தியில் நடந்துவரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பக்தர்கள் பார்ப்பதற்காக ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,’ என்றார்.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...