பல நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பாருங்கள்.
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான நாளந்தா பல்கலைக்கழகம், தலைநகர் பாட்னாவில் இருந்து தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் பீகாரின் ராஜ்கிருதம் பகுதியில் அமைந்துள்ளது.
மகதப் பேரரசின் போது இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் குமார குப்தா I என்பவரால் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது, நாளந்தா பல்கலைக்கழகம் “மகாவிஹாரா” என்ற சிறப்புப் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
நாளந்தா பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனம் மட்டுமல்ல, சிறந்த புத்த மடாலயமும் கூட. நாளந்தா உலகின் முதல் குடியிருப்புப் பல்கலைக்கழகம் மற்றும் உலகின் முதல் சர்வதேச பல்கலைக்கழகம் ஆனது.
பிரபல சீன பயணி யுவான் சுவாங் இந்த பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் படித்தார். யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில், நாளந்தாவில் 10,000 க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் 2,000 ஆசிரியர்கள் இருப்பதாகவும், சீனா, திபெத், கொரியா, இந்தோனேசியா, பெர்சியா, துருக்கி மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு தனித்தனி பாட சாலை வளாகங்கள், 10 கோவில்கள், பல தியான மண்டபங்கள், வெவ்வேறு பாடங்களுக்கு தனி வகுப்பறைகள், 3 ஒன்பது மாடி நூலகங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என, நாலந்தா பல்கலைக்கழகம், பல லட்சம் ஓலைச் சுவடுகளைக் கொண்டிருந்தது.
கிபி 1193 இல், டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக்கின் படையின் தலைவரான பக்தியார் கில்ஜியால் நாளந்தா பல்கலைக்கழகம் தாக்கப்பட்டது.
ஆயுர்வேதத்தின் அனைத்து அறிவையும் அழித்து, இந்து மதத்தையும் பௌத்தத்தையும் அழித்து இஸ்லாத்தை நிலைநாட்ட நாலந்தாவை அழித்த கில்ஜி, சுமார் 90 லட்சம் சுருள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய நாளந்தாவின் நூலகங்களுக்குத் தீ வைத்தார். பழங்கால வேத ஞானம் அறிஞர்களிடமிருந்து மற்றவர்களுக்கு செல்வதை விரும்பாத கில்ஜி, நாலந்தாவில் வாழ்ந்த துறவிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரையும் கொன்றார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பேரழிவிற்குப் பிறகு, நாளந்தா 1812 இல் ஸ்காட்டிஷ் சர்வேயரான பிரான்சிஸ் புக்கனன்-ஹாமில்டனால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1861 இல் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இது நாலந்தாவின் பண்டைய பல்கலைக்கழகமாக அடையாளம் கண்டார்.
1915 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போது, 11 மடங்கள் மற்றும் 6 செங்கல் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பழங்கால நாணயங்கள், செம்புகள், நைட்ராக்கள் மற்றும் சிற்பங்கள் போன்ற பல்வேறு சின்னங்கள் கிடைத்தன. எனவே, நாளந்தா பல்கலைக்கழகம் 1980 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி 2006 இல் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் முயற்சியால், 2010ல் அப்போதைய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரையின் பேரில் நாளந்தா பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், நாலந்தா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் முதல் புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பீகார் மாநில அரசு நாளந்தாவின் புதிய வளாகத்திற்காக 455 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழுவின் முதல் தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் இருந்தார்.
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம், பிரபல கட்டிடக் கலைஞர் பத்ம விபூஷன் மறைந்த பி.வி., தோஷி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. பழங்கால வாஸ்து கொள்கைகளுடன் சுற்றுச்சூழல் நட்பு கட்டிடக்கலையை ஒருங்கிணைத்து, இது 100 ஏக்கர் பசுமையான நீர்நிலைகளுடன் பூஜ்ஜிய கார்பன் ஃபோகஸுடன் கட்டப்பட்டுள்ளது.
6.5-MW DC-கிரிட் சோலார் பேனல், 500-KLD நீர் சுத்திகரிப்பு நிலையம், 400-KLD நீர் மறுசுழற்சி ஆலை மற்றும் ஒரு புதுமையான 1.2-MW AC பயோகேஸ் அடிப்படையிலான கழிவு-ஆற்றல் ஆலை ஆகியவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் 40 வகுப்பறைகள், கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் தங்கும் இரண்டு கல்வித் தொகுதிகள், இரண்டு நிர்வாகத் தொகுதிகள், 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய அரங்குகள் மற்றும் 550 மாணவர் விடுதிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வசதிகளுடன் கூடிய பிரத்யேக குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
மேலும், விருந்தினர் மாளிகை, சர்வதேச மையம், 1,000 பேர் அமரக்கூடிய சாப்பாட்டு கூடம், 2,000 பேர் அமரக்கூடிய பிரத்யேக தியேட்டர் மற்றும் விளையாட்டு வளாகம், மருத்துவ மையம், வணிக மையம் மற்றும் ஆசிரியர்களுக்கான பொழுதுபோக்கு அறைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஹர்ஷவர்த்தனா, நாகார்ஜுனா, வசுபந்து போன்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கிய நாளந்தா பல்கலைக்கழகம் இன்றும் 800 ஆண்டுகால பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.
பூஜ்ஜியத்தை உலகுக்குக் கண்டுபிடித்த மாபெரும் கணிதவியலாளரான ஆர்யபட்டா தலைமை வகித்து, இந்த நாளந்தாவின் மறுமலர்ச்சி உலகக் கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.