Home Aanmeega Bhairav Today Rasi Palan Tamil : இன்றைய ராசி பலன்கள் (16 ஜனவரி 2021)

Today Rasi Palan Tamil : இன்றைய ராசி பலன்கள் (16 ஜனவரி 2021)

0

மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மனைவி வழியில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துபேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
கன்னி: சமயோஜிதமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பை ஏற்பீர்கள். புதுமை படைக்கும்நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்:  நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். பணம்நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவோ பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம்  வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்
களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here