வீட்டியின் நீளம், அகலம் ஏற்ற அளவுகள்:
6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 74, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119.
இந்த அளவுகள் நன்மையையும், சுபிட்சத்தையும் தருவன ஆகும்.
மற்ற அளவுகள் தீய பலன்களை தரும். வீடுகளுக்கு தாழ்வாரம் 5 அடி 6 அங்குலத்திற்கு மேல் தான் அமைய வேண்டும். வீடுகளில் அமைக்கும் கூடம், அறைக்களுக்கு 10, 16, 22, 29 அடி அகலமும் அதற்கு சமமான நீளமும் வைக்க வேண்டும்.
இப்போது அறை, ரேழி, கூடம் ஆகியவற்றிற்கான அளவு முறைகளின் பற்பலன்களை விரிவாகக் காண்போம்.
6 அடி:
இறைவனின் அருள் சேரும். குல தெய்வ வழிபாடு சிற்ப்பாகும். பொன், பொருள், யோகம் உண்டாகும்.
7 அடி:
வறுமை தாண்டவமாடும். நோய் வரும். வரவுக்கு மேல் செலவு வரும். கடன் மிகும்.
8 அடி:
செல்வம் கொழிக்கும். தெய்வ பார்வைகிட்டும். இன்பம் வந்து சேரும். பதவி கிடைக்கும். பிறறை அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
9 அடி:
தோல்விகள் தொடர்கதை ஆகும். துன்பம் வரும். துணைவரோடு பிணக்கு ஏற்படும்.
10 அடி:
அறுசுவை உணவு உண்ணலாம். ஆடம்பரமான ஆடை அணியலாம். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.
11 அடி:
எந்த காரியமும் துணிந்து செய்யலாம். வெற்றி பெறலாம் செழிப்பான வாழ்வு பெறலாம்.
12 அடி:
எதிர்பாராத துர்மரணங்கள் உண்டாகும். எந்த காரியமுமே வெற்றி பெறாது. தகுதி இருந்தாலும் வேலை கிடைக்காது. ஏழ்மையின் எல்லையைக் காண நேரும். புத்திரர் இழப்பு உண்டாகும்.
13 அடி:
தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாது. விதம் விதமாக துயரங்கள் வந்து தாக்கும். நோய் நட்பு கொள்ளும். வருவாய் காணாமல் போகும்.
14 அடி:
கவலை தொடர்ந்து முகாம் இடும். அன்னியரால் இடைஞ்சல் ஏற்படும். எந்த நேரமும் ஆபத்து வரும். ஏக்கம் வரும். தூக்கம் வராது.
15 அடி:
வறுமை சூழ்ந்து கொள்ளும். இல்லாமை இருக்கும். எதிரிகளினால் துன்பம், துயரம் ஏற்படும்.மனைவருத்தம் மிகும்.
16 அடி:
மகிழ்ச்சி கூத்தாடும். பொருள் மலை போல் பெருகும். புகழ் தேடி ஓடி வரும். செல்வம் சேரும்.
17 அடி:
வெற்றி மீது வெற்றி வந்து சேரும். போட்டியாளர் வந்து பணிவர், எடுக்கும் காரியம் தானாக ஜெயம் ஆகும். தொழில் சிறப்பாக நடக்கும்.
18 அடி:
திருடர்களாலும், மற்றவர்களாலும் பொன், பொருளுக்கு ஆபத்து நேரிடும். செலவு கட்டுப்படுத்த முடியாமல் போகும். வீடு இடிய நேரிடும். மன வேதனை தரும்.
19 அடி:
இல்லாமை இருந்து கொண்டே இருக்கும். புத்திரர்களால் கவலை உண்டாகும். நம்முடன் துணையாக கவலையும், சோகமும் குடியேறும்.
20 அடி:
தொழில் தடையின்றி நடக்கும் இலாபம் குறைவின்றி கிடைக்கும். வருமானம் பெருகி சொகுசான வாழ்வு கிடைக்கும்.
21 அடி:
எங்கெங்கு காணிணும் வெற்றியாகவே இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பார்த்ததெல்லாம் பொருளாகும். மகிழ்ச்சி கூத்தாடும்.
22 அடி:
எவரும் குறை சொல்ல முடியாத வாழ்வு அமையும். பழிகள் விலகும். எதிரிகள் தான் இழிவு பெறுவர். சுய கெளரவம் பெருகும். எவருக்கும் பணிய வேண்டி இருக்காது.
23 அடி:
உயர முயற்சித்தால் முடியாது. உறவினர் பகை கொள்வர். நிம்மதியை தேடினாலும் கிடைக்காது. துன்பமும், துயரமும் சொத்தாக விளங்கும்.
24 அடி:
சேமிப்பு காலியாகும். கவலை தரும். நோய் தரும். முயற்சிக்கேற்ற வெற்றியும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது. எந்த காரியமும் பாதியிலேயே நிற்கும்.
25 அடி:
இல்லறம் நல்லறம் ஆகாது. துணைவரால் துன்பம் நேரிடும். அவமானமும் நேரிடும். பிரிவு தரும்.
26 அடி:
பொன்மகள் தேடி வருவாள். பொருள் செழிக்கும். யோகம் பெருகும். வாழ்வில் இன்பமே காண நேரிடும்.
27 அடி:
தகுதிக்கேற்ற பதவி கிடைக்கும். பதவி உயர்வும் உண்டாகும். நல்ல மனிதர்களின் தொடர்பும், உதவியும் கிடைக்கும். பெயரும். புகழும் சிறப்பாக இருக்கும்.
28 அடி:
இதுவரை இருந்த வேதனைகள் கதிரவனைக் கண்ட பனி போல் விலகும். வெற்றி கிட்ட ஆரம்பிக்கும். தோல்விக்கு மூடு விழா நடக்கும். எவரும் நட்பு கொண்டாடுவர். தெய்வ கடாட்சம் பரிபூர்ணமாக கிடைக்கும்.
29 அடி:
கால்நடை, விவசாயம் விருத்தியாகும். உயர்வான அந்தஸ்து கிடைக்கும். வாழ்க்கை வளம் பெரும்.
30 அடி:
அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும். சந்தானம் பெருகும். பூர்விகச் சொத்து கிடைக்கும். யோகம் நிரந்தரம் ஆகும்.
31 அடி:
யோகம் கிடைக்கும். நல்லவர்களே நண்பர்கள் ஆவர். உயர்வான நிலை அடையலாம். மிகுந்த புகழ் கிடைக்கும்.
32 அடி:
எவரையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். பொது நலச்சேவையில் புகழ் கிடைக்கும். இதுவரை இழந்தவைகளை இனிமேல் பெறலாம்.
33 அடி:
எல்லோரிடமும் அன்பு பிறக்கும். வருவாய் அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு பெருகும்.
34 அடி:
தீய பலனே நடக்கும். மேலான காரியங்களில் ஈடுபட நேரிடும். அதனால் பிரச்சனையாகி அவமானம் அடைய நேரிடும். ஊரை விட்டு ஓட நேரிடும். முன்னோர் சேர்த்து வைத்த பெயரும், செல்வமும் இலக்க நேரிடும்.
35 அடி:
செல்வ செழிப்பு உண்டாகும். தொழில் மேன்மை உண்டாகும். எல்லோரிடமும் பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்திறன் உண்டாகும்.
36 அடி:
உயர்வான பதவி கிடைக்கும். வீரத்தீரச் செயல்கள் செய்ய நேரிடும். அதில் புகழ் கிடைக்கும்.
37 அடி:
எந்த காரியமானாலும் வெற்றி கிடைக்கும். கால்நடை விருத்தி ஆகும். பண்ணைத் தொழில் மேன்மை பெறும்.
38 அடி:
இடையறாத இன்னல்கள் ஏற்படும். ஏழ்மை நிலை கொள்ளும். எந்த காரியமும் செய்ய இயலாது. எதிலும் தடங்கல், இழுபறி நிலைதான் ஏற்படும்.
39 அடி:
அமைதியான வாழ்வு அமையும். பொருள் நிலைக்கும். பொது இடத்தில் மரியாதை கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பர்.
40 அடி:
எதிர்ப்பு மிகும். இடைஞ்சல்கள் இருக்கும். எடுத்து காரியங்கள் நிறைவேறாமல் போகும். எல்லா வேலையும் பாதியிலேயே நிற்கும்.
41 அடி:
தொழில் சிறப்பாக நடந்து பொன், பொருள் மிகும். கொடுக்கல், வாங்கல் நன்றாக நடக்கும்.
42 அடி:
சகல சுகபோகமும் அனுபவிக்கலாம். இல்லாமையே இருக்காது. அன்பு நடமாடும் கலைக்கூடமாக குடும்பம் இருக்கும். வாழ்வில் சகலமும் கிடைக்கும்.
43 அடி:
தடை தடையின்றி கிடைக்கும். எதிலும் ஏமாற்றம் கிடைக்கும். ஒரு அடி உயர்ந்தால் பல அடி சறுக்கும்.
44 அடி:
நோய்களுக்கு கொண்டாட்டம் தான். கண்பாதிப்பு நேரிடும். ஏக்கம் தான் மிஞ்சும். துன்பமும், துயரமும் போட்டி போடும்.
45 அடி:
மிகுந்த பொருள் கிடைக்கும். புகழ் பெருகும். நன்மைகள் கிடைக்கும்.
46 அடி:
முடியப் போகிற காரியங்கள் முடியாமல் பெருகும். வறுமை குடிபுகும். எந்த பெரிய காரியமும் செய்ய முடியாது. வேதனை மிகும்.
47 அடி:
சேமித்த பொருள் செலவழிந்து போகும். வரவு நின்று போகும். கடன் சுமை ஏறும். கவலை தரும்.
48 அடி:
பகைவர்கள் துன்பத்தை உண்டாக்குவார்கள். தீ விபத்து நடக்கும். விபத்து தரும். வறுமை மிகும்.
49 அடி:
திருட்டு நடக்கும். அவமானங்களை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்க பகை, தண்டனை உண்டாகும்.
50 அடி:
உற்றார், உறவினர்களின் தொல்லை தாங்க முடியாது. காரியங்கள் அப்படியே நிற்கும்.
51 அடி:
வழக்கு, அடிதடி நிலைகள் ஏற்படும். துன்பம் தொல்லை நேரிடும்.
52 அடி:
விவசாயம் இலாபம் தரும். மகசூல் சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும்.
53 அடி:
தீய நடத்தையுடைய பெண்களின் தொடர்புகள் உண்டாகும் பெண்களால் அவமானமும், பிரச்சனையும் நேரிடும்.
54 அடி:
அரசாங்க தண்டனை கிடைக்கும்.
55 அடி:
சுற்றத்தாரிடம் பகைமை, சண்டை உண்டாகும். கொடுமையான சம்பவங்கள் நடக்கும்.
56 அடி:
ஏழு தலைமுறைக்கு நலம் விளையும். பெருமையும், புகழும் நிரந்தரமாகும். நன்மைகள் நடக்கும்.
57 அடி:
புத்திர தோஷம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மோதல் பிரிவு ஏற்படும்.
58 அடி:
எதிர்பாராத செலவு, இழப்பு ஏற்படும். துயரமும், துன்பமும் நிரந்தரமாகும்.
59 அடி:
கஷ்டப்பட்டு சேர்த்து பொருள் தீய வழியில் காணாமல் போகும் முகம் வாட்டத்துடன் இருக்கும். எதுவும் நடக்காமல் ஏக்கம் தான் மிஞ்சும்.
60 அடி:
தொழில் சிறப்பாக நடக்கும் திரவியங்கள் சேரும். பெருகும் தொட்டதெல்லாம் துலங்கி நன்மைகள் சேரும்.
61 அடி:
கலவரம் உண்டாகும். மனதில் அமைதி இருக்காது. பிறரிடம் அடிமையாக நேரிடும்.
62 அடி:
வறுமை, வாட்டம், வறுத்தம் இதுவே சொத்தாகும்.
63 அடி:
பொன், பொருள் விருத்தியடையும். போற்றத்தக்க வாழ்வு அமையும். துறவிகள் அருளாசி, நல்லோர்கள் ஆதரவு கிடைக்கும்.
64 அடி:
அரசு உதவி, அரசாங்க ஆதரவு உண்டாகும். பரிசு கிடைக்கும். பட்டங்கள், பதவிகள் தேடி வரும். புகழ் மிகும். பூரண மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடக்கும்.
65 அடி:
இல்லற வாழ்வு கசக்கும். வாழ்க்கைத் துணையிடம் பரிவு, பாசம் இருக்காது. பிரச்சனைகளை உண்டாக்கி மனைவி பிரிந்து செல்வாள்.
66 அடி:
எல்லா நன்மையும் ஒருங்கே சேர்ந்து விளங்கும். மன அமைதி, மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் விருத்தி ஆகும்.புகழ் பெருகும்.
67 அடி:
திருடர்களால் தொந்தரவு ஏற்படும். தீய சக்திகள் குடியேறும். பேய், பிசாசு தாண்டவமாடும். வஞ்சகர் துன்பம் தருவர்.
68 அடி:
நினைத்த காரியங்கள் நடக்கும். எதிர்பாராமல் பொருள் வரவு நடக்கும். துறவிகள் தொடர்பு, ஆன்மிகவாதிகள் ஆதரவு கிடைக்கும்.
69 அடி:
செல்வம் நலமடயும், புகழ் சேதமாகும், தீயால் சேதம் உண்டாகும். தீயோரால் துன்பம் உண்டாகும்.
70 அடி:
சென்ற இடமெல்லாம் சிறப்பும், மரியாதையும் உண்டாகும். செல்வம் தாராளாமாக வந்து சேரும். தொண்டு செய்து புகழ் பெறலாம்.
71 அடி:
செல்வம் கொழிக்கும். நல்லவர்கள் ஆதரவு கிடைக்கும். அனைவரின் பாராட்டையும் பெறலாம்.
72 அடி:
அனைத்து செல்வங்களும் வந்து சேரும். ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.
73 அடி:
வம்ச விருத்தி தடைபடும். சுற்றத்தார்க்கு செலவழித்தே ஏழையாக நேரிடும். புகழ், பொருள் விரயம் ஆகும்.
74 அடி:
பரிசு கிடைக்கும், பட்டம் கிடைக்கும். பதவி கிடைக்கும். பலரும் பாராட்டுவார்கள். பொன், பொருள் சேர்க்கை நடக்கும்.
75 அடி:
கெட்ட பெயரே கிடைக்கும். சேமிப்பு காலியாகும். அருங்குணம் மாறும். அன்பு மனதிலிருந்து வெளியேறும். அல்லல் சேரும்.
76 அடி;
எதிரிகளாலும், நண்பர்களாலும் தீமை விளையும். எவர் உதவியும் கிடைக்காது. கொடியவர்கள் பயமுறுத்தல் இருக்கும். பயமே வாழ்க்கை ஆகும்.
77 அடி:
எவ்வளவு பெரிய பிரச்சனை, துன்பம் ஆனாலும் சமாளிக்க முடியும். தேவையான பொருள்கள் கிடைக்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்.
78 அடி:
வாரிசுக்கு தீங்கு உண்டாகும். எதிர்காலம் சூன்யம் ஆகும். அவமானங்கள் நேரும். இன்னல்கள் தரும்.
79 அடி:
கால்நடை விருத்தியாகும். பால் தொழில் நன்மை தரும். பண்ணைத் தொழில் சிறப்பாக இருக்கும். எல்லோரும் பாராட்டும் தன்மை ஏற்படும்.
80 அடி:
யோகம் நிறைந்த மகிழ்வான வாழ்வு உண்டாகும். சுகபோக வாழ்வு கிடைக்கும். மங்கையர் உறவு, நன்மை உண்டாக்கும். சொகுசு வாழ்வு அமையும்.
81 அடி:
விபத்து, ஆபத்து உண்டாகும். செல்வம் நஷ்டமாகும்.
82 அடி:
மழை, வெயில், காற்று, தீயால் தீமை உண்டாகும்.
83 அடி:
சுகமில்லாத வாழ்வு அமையும். வீடு பாழடையும். ஏழ்மை மட்டும் தான் குடியேறும். இன்னல்கள் சூழ்ந்து இருக்கும்.
84 அடி:
ஏற்றம் உண்டாகும். எதிர்பாராமல் உதவியும், நன்மையும் உண்டாகும். வருவாய் பெருகும் பதவி உயரும்.
85 அடி:
அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆளும் கட்சி உறவும் நன்மை தரும். சொந்த தொழில் மேன்மை தரும்.
86 அடி:
ஆபத்து உண்டாகும். துன்பங்கள் தொடர்கதை ஆகும். பிறர் இகழ்வாக பேச நேரிடும். தொல்லை, துயரங்கள், அல்லல்கல் மிகும்.
87 அடி:
பிரயாணங்கள் அடிக்கடி நேரும். பிரயாணங்கள் பெருமை தரும். எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். கால்நடை நலம் தரும்.
88 அடி:
எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். இறை அருள் கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
89 அடி:
விருந்து அடிக்கடி கிடைக்கும். நல்வாய்ப்புகள் தேடி வரும் முன்னேற்றத்திற்க்கு அடிக்கல் நாட்டலாம்.
90 அடி:
செல்வம் செழிப்பாக சேரும். சிறப்பான தன்மைகள் வந்து சேரும். அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும்.
91 அடி:
கல்வியில் சிறப்பான நல்ல பலன்கள் உண்டாகும். நல்லவர்களின் நேசமும் ஆதரவும் உண்டாகும். தெய்வ அருள் கிட்டும், காரியங்கள் ஜெயமாகும்.
92 அடி:
பரிசு, பட்டயம் கிடைக்கும். அரசாங்க மற்றும் ஆளும் கட்சியால் நன்மை உண்டாகும்.
93 அடி:
அரசாங்க தொந்தரவு, தண்டனை ஏற்படும். அரசாங்க ஆணைகளுக்கு அடி பணிய நேரிடும்.
94 அடி:
வறுமை தாண்டவமாடும். செல்வ செழிப்பு காணாமல் போகும். நிம்மதி நிலை குலைந்து போகும்.
95 அடி:
பொருள் சேரும். விருத்தி அடையும். புகழ் சேரும். பெரிய மனிதர்கள், செல்வம் படைத்தவர்கள் தொடர்பு நன்மை உண்டாகும்.
96 அடி:
கைப்பணம் காலியாகும். சேமிப்பு செலவழியும். ஆபரணங்கள், பொன் சேதம் ஆகும். திருடர்களால் தீமை ஏற்படும்.
97 அடி:
நீரினால் நன்மை உண்டாகும். வியாபாரம் செழித்து பொருள் விருத்தி அடையும்.
98 அடி:
சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல உறவு உண்டாகும். நன்மைகள் புரிய நேரிடும்.
99 அடி:
கல்விமான்கள், செல்வந்தவர்கள் நட்பு, தொடர்பு, உதவி கிடைக்கும். அரசாங்க ஆளும் கட்சியினால் நன்மை உண்டாகும்.
100 அடி:
தெய்வ கடாட்சம் பூரணமாக கிடைக்கும். பொன், பொருள் விருத்தி அடையும். எல்லா நலன்களும் விளையும்.
101 அடி:
வருவாய் விருத்தி ஆகும். சேமிக்க முடியும். புகழ் கிடைக்கும். மன மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும்.
102 அடி:
பரந்த நோக்கம் வளரும். நன்மைகள் தேடி வரும். பிறறை கவரும் வசீகர சக்தி உண்டாகும்.
103 அடி:
தீய நன்பர்களின் உறவு ஏற்பட்டு துன்பங்கள் மிகும். திருடர் பயம் ஏற்படும். நேர்மை குணம் மறையும்.
104 அடி:
வருவாய் விருத்தி அடையும். துணை கிடைக்கும். இலாபம் தரும். உறவினர்களால் செலவு ஏற்படும். மன அமைதி குறையும்.
105 அடி:
இல்லறம் நல்லறம் ஆகாது. மனைவியால் துன்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும்.
106 அடி:
பொருள் வரவு உண்டாகும். ஆற்றல் பெருகும். அறிவு வளரும். அன்புள்ளம் கொண்டவர் நட்பு ஏற்படும்.
107 அடி:
சம்பாதித்த பொருளை இழக்க வேண்டி வரும். ஈன குணமுள்ள மனிதர்களின் தொடர்பு ஏற்படும். வறுமை தாண்டவமாடும்.
108 அடி:
ஆன்மிக வாதிகளின் அன்பும், தொடர்பும் ஏற்படும். மன அமைதி உண்டாகும். எதிபாராத நன்மைகள் வந்து சேரும்.
109 அடி:
ஈடுபட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம். மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
110 அடி:
எந்த வகையிலும் சேமிப்பு ஆகும். உடல் நிலத்தில் உற்சாகம் பிறக்கும். பொருள் தேடி வரும்.
111 அடி:
நிறைவேற முடியாத காரியங்களும் நிறைவேறும். சுப நிகழ்வுகளே அதிகமாக நடக்கும்.
112 அடி:
நினைத்தது நிறைவேறும். தடங்கல்கள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை சிறப்பாக இருக்கும்.
113 அடி:
எதையும் தைரியமாக செய்யலாம். வரவுகள் மிகுதியாக இருக்கும். யோகம் நிறைவாக இருக்கும்.
114 அடி:
தொழில் காரணமாக பயணங்கள் நிறைவாக இருக்கும். பெரிய நகரங்களில் வாழும் நிலை ஏற்படும். உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்வார்.
115 அடி:
பணம் வரவு சிறப்பு தரும். குதூகலமான குடும்ப வாழ்க்கை உண்டாகும். அமைதியான சூழ்நிலை நிலவும்.
116 அடி;
குன்றாத செல்வமும், குறைபடாத வாழ்வும் கிடைக்கும். வாழ்வில் துன்பங்களே நெருங்காது.
117 அடி:
வணிகம் நன்றாக இருக்கும். பண்ணைத் தொழில் சிறப்பு தரும். கால்நடை செல்வங்கள் பெருகும்.
118 அடி:
தீயபலனே வரும். செல்வம், சொத்து அழியும். மன நிலை பாதிப்பு தரும். வறுமை நட்பு கொள்ளும்.
119 அடி:
சுகவாழ்வு புகழ் உண்டாகும். புகழ் வரும்.
120 அடி
சிறப்பானதே ஆகும். அதற்கு மேல் எந்த அளவாக இருந்தாலும் அதற்கு தோஷம் கிடையாது என்பது மனையடி சாஸ்திர விதி ஆகும்.