ஒன்பது கிரகங்களாலும் மனிதர்களின் வாழ்வில் உயர்வு ஏற்படுவதற்கான வழிமுறைகள் உள்ளன. அவை பொதுவாக அனைவருக்கும் தெரிவதில்லை. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றன.
நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
காய்ச்சாத பசும்பாலை 15 நாள்கள் தொடர்ந்து அருகிலுள்ள ஆலயங்களுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம்.
இரவு படுக்கப் போகும்போது ஒரு செம்பில் நீர் நிரப்பி அதனை தலையணை அருகே வைத்து விட வேண்டும். அந்த நீரை காலையில் ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். இப்படி தொடர்ந்து 43 நாள்கள் செய்யவேண்டும்.
வியாழனன்று பூண்டு, வெங்காயம் உண்பதைத் தவிர்க்கலாம். அந்த நாளில் கோயில்களில் இனிப்பு நைவேத்தியம் படைத்து, அனைவருக்கும், பிரசாதமாக வழங்கலாம்.
விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு, கிரக தோஷங்களை போக்க சிறந்த பரிகாரம் ஆகும். மாதப்பிறப்பு நாள்களில் சர்க்கரை, கடலைப் பருப்பு, உப்பு, நெய், மாவு போன்றவற்றை தானம் அளிக்கலாம்
இன்று மாதப் பிறப்பு மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டும் புதிதாய் பிறக்கிறது. எல்லா வளங்களும் பெற்று வாழ மேற்சொன்னவற்றில் உங்களுக்கு உகந்தவற்றை பின்பர்றி வளமாய் வாழவும்.