Home Blog

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்… பாடல்

0

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்
எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்
முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம்

ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிது
ஆதிமூல நாயகனைக் கண்ட மதமிது
ஓதிஓதி உண்மைதனை உரைத்த மதமிது
நீதிதேவன் கோயில்கொண்டு நிலைத்த மதமிது

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

அன்புவழி காட்டுவதும் ஹிந்து தர்மமே
இன்பநிலை கூட்டுவதும் ஹிந்து தர்மமே
முன்பு உலகை உயர்த்தியதும் ஹிந்து தர்மமே
துன்ப நிலை நீக்கியதும் ஹிந்து தர்மமே

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

பெற்ற தாயைப் பிறந்த மக்கள் வெறுப்பதுமுண்டா
உற்ற தந்தை இல்லையென்று உரைப்பவருண்டா
முற்றும் உணர்ந்து ஹிந்த தர்ம முறையறியாமல்
தெற்றுக் கூறும் தீயர்மனம் திருந்தச் செய்குவோம்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

உனது நாடு உனது வேதம் உரிமைக்காக வா
தனது மானம் தனது மதம் தர்மம் காக்க வா
இனிய பூமி எங்கள் பூமி என்று சொல்ல வா
புனித மதம் ஹிந்து மதம் என்று புகழ வா

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா.. பாடல்

0

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார்
முருகா – ஓடி வருவார் – அவர் சிந்தையிலே
உந்தனையே பாடி வருவார்
முருகா பாடி வருவார்

மச்சக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

ஏறாத மலையினிலே ஏறி வருவார், முருகா
ஏறி வருவார் -ஏறுமயில் வாகனனைக்
காண வருவார் – முருகா காண வருவார்

பூக்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

உள்ளவரும் இல்லாதாரும் பேதமில்லையே முருகா
பேதமில்லையே – அருள் வள்ளல்
உந்தன் அன்பினுக்கோர் எல்லை இல்லையே
முருகா எல்லை இல்லையே

பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார்
முருகா – கூடியிருப்பார் – வள்ளிதெய்வயானை
அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா
ஆட்டத்திலே – உந்தன் ஆடல்கண்டு மெய்
மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா.. பாடல் Aanmeega Bhairav

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா… பாடல்

0

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

குருநாதன் துணை செய்க ஸந்ததம்
திருநாமங்கள் நாவின் மேலெப்பொழும்
பிரியாதெ இரிக் கேணம் நம்முடே
நர ஜென்மம் ஸபலமாக் கீடுவான்.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

கண்டு கண்டங் ஙிரிக்கும் ஜனங்களே
கண்டில்லெந்து வரித்துந்நதும் பவான்
ரண்டு நாலுதினம் கொண்டொருத்தனே
தண்டிலேற்றி நடத்துந்நதும் பவான்.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

மாளிகா முக ளேறிய மன்னன்றெ
தோளில் மாராப்பங் ஙாக்குந்நதும் பவான்
கண்டா லொட்டறியுந்து சிலரிது
கண்டாலும் திரியா சிலர்க்கே துமே.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

கூடியல்லா பிறக்குன்ன நேரத்தும்
கூடியல்லாமரிக்குன்ன நேரத்தும்
மத்தியே யிங்ஙனே காணுன்ன நேரத்து
மத்ஸரிக்குன்ன தெந்தினு நாம் விறுதா.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயண ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயண ஹரே .

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்தனா… பாடல் Aanmeega Bhairav

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

0

தமிழரின் கடவுள் நீயேதானே
சூரனை வென்ற தமிழன் நீயேதானே
கந்தன் மலையை காக்க வந்தோம் முருகா
எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
உன்னை தவிர வேறு யாரையா?

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

அயோத்தியில் ராமனடா, மலைஎல்லாம் கந்தன் குமரனடா
அயோத்தியில் ராமனடா, மலைஎல்லாம் கந்தன் குமரனடா
நாத்து கடலில் நட்டதில்லை, முருகன் மலையை தொட்டவனை விட்டதில்ல
நாத்து கடலில் நட்டதில்லை, முருகன் மலையை தொட்டவனை விட்டதில்ல

எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
உன்னை தவிர வேறு யாரையா?

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

பிராமணன் செருப்பால் அடிப்பான்
பிள்ளையார் சிலையை தரையில் உடைப்பான்
தமிழன் காட்டுமிராண்டி என்பான்
கடவுள் இல்லை என்பான்
தேர்தல் வந்தால்
கடவுள் பெயரை சொல்லி ஓட்டு பிச்சையெடுப்பான்
“அவன் பெயர் என்ன?” என்றால்
“சாமி என்றே முடியும்” என்பான்

கர்வரை நான் இருந்தேன் கந்தையா
முருகா உன்னை காண வந்தேன் வேலையோ
தமிழுக்கு இலக்கணம் நீ முருகா
இப்போதும் குன்றத்தை காக்க வந்தோம் வேலையோ
பிறக்கும்போது சொன்ன வார்த்தை கந்தையா
நாம் போகும்போது சொல்லும் வார்த்தை நீயே முருகா
கண்கலங்கி நிற்கிறேன் நான் முருகா
வேறு கதி எனக்கு இங்கு வேறு யாரோ கந்தா?

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
செந்தூர் குமரனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றம் கந்தனுக்கு அரோகரா
அரோகரா

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா | Aanmeega Bhairav

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி… பாடல்

0

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டு
கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டு

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

புன்னை மரம் மீதிலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி
புன்னை மரம் மீதிலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி

புல்லாங்குழல் ஊதுறாண்டி வேணுகாணம் செய்யுறாண்டி
புல்லாங்குழல் ஊதுறாண்டி வேணுகாணம் செய்யுறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

பஞ்சுமெத்தை மீதிலே கோபாலக்கண்ணன் நித்திரை செய்யுறாண்டி
பஞ்சுமெத்தை மீதிலே கோபாலக்கண்ணன் நித்திரை செய்யுறாண்டி

நித்திரை செய்யுறாண்பு காரணங்கள் பேசுறாண்டி
நித்திரை செய்யுறாண்பு காரணங்கள் பேசுறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

கட்டின உரலோடு கோபாலக்கண்ணன் கட்டி கட்டி இழுக்குறாண்டி
கட்டின உரலோடு கோபாலக்கண்ணன் கட்டி கட்டி இழுக்குறாண்டி

கட்டி கட்டி இழுக்குறாண்டி காரணங்கள் பேசிறாண்டி
கட்டி கட்டி இழுக்குறாண்டி காரணங்கள் பேசிறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

புன்னை மரத்தின் மேலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி
புன்னை மரத்தின் மேலே கோபாலக்கண்ணன் புல்லாங்குழல் ஊதுறாண்டி

புல்லாங்குழல் ஊதுறாண்டி பெண்களை தடைசெய்யுறாண்டி
புல்லாங்குழல் ஊதுறாண்டி பெண்களை தடைசெய்யுறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

ஆற்று மணலின் மீது கோபாலக்கண்ணன் அள்ளி விளையாடுறாண்டி
ஆற்று மணலின் மீது கோபாலக்கண்ணன் அள்ளி விளையாடுறாண்டி

அள்ளி விளையாடுறாண்டி துள்ளி களி ஆடுறாண்டி
அள்ளி விளையாடுறாண்டி துள்ளி களி ஆடுறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

ஆயர்பாடி தனிலே கோபாலக்கண்ணன் ஆடு மாடு மேய்க்குறாண்டி
ஆயர்பாடி தனிலே கோபாலக்கண்ணன் ஆடு மாடு மேய்க்குறாண்டி

ஆடு மாடு மேய்க்குறாண்டி ஆனந்தம் கொண்டாடுறாண்டி
ஆடு மாடு மேய்க்குறாண்டி ஆனந்தம் கொண்டாடுறாண்டி

கொண்டு வா கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி

எழுத்து – இயக்கம் : வித்யாஜோதி.சுமா சிவபாலன்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

0

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா

0

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும் பலன் கொடுப்பாய்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் – இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

வடவேட்டு எல்லையிலே குடி இருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே – அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலேல

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்… முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

0

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் – அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் – அவள்
மஞ்சள் நிற ஆடை கட்டி வந்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

திரிசூலம் கையில் கொண்ட திரிசூலியாம் – அவள்
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடு வாளாம் – அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
நெய் விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கி வரும் முரசங்களை கேட்டிடுவாளாம் – அவள்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்
சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் – அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா… சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி… பாடல்

0

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

பெண் தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா
அன்னையாக நீ இருந்து அருளென்னும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… பாடல்

0

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும், தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி

உற்றார் சுற்றம் உறவினர் பார்த்தது
யானை சேனை படையுடன் வேந்தது

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயிலாத பிள்ளையென்று வாயில்லாத
ஊமையென்று ஆயிரங்களான கல்வி
வாய்திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன் தேவி

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி