Home Blog

மகாபாரதம் – 62 உமாமகேசுவர சம்வாத சருக்கம்… சூட்சுமமான தர்மம் எது? Asha Aanmigam

0

(உமையம்மைக்கும் ஈசுவரனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை பற்றிக் கூறும் சருக்கமாகும். இச்சருக்கத்தினால் உலக முதல்வன் சிவபிரான் என்பதும், இல்லறத்தின் மாண்பும், கொல்லாமையின் உயர்வும், இல்லறத்தான் அறம் செய்யும் ஆறுகளும், செல்வர் – வறியவர் நிலை களும், தண்டனை செய்தவன் இயல்பும், சிவ வழிபாடும் அறியப்படுகின்றன).

தர்மபுத்திரர் அடுத்து பிதாமகர் பீஷ்மரை நோக்கி, “பிதாமகரே! பிறவிப்பிணி அகலவும், இரு வினையிருள் ஒழியவும் ஐம்புலன்களை வெல்லவும் ஆன மறையொழுக்கத்தை கூறுவதோடு மோட்சத்தைக் கொடுக்கும் தகுதி பெற்ற கதையொன்றும் சொல்வீராக என்று கேட்டார்.

“முற்காலத்தில் கண்ணபிரானால் நீ கேட்ட உண்மைகளை நாரதர் அறிந்தார். பீஷ்மனாகிய நான் அக்கண்ணபிரானால் உணர்ந்தபடி கூறுகின்றேன் கேள்” எனப் பிதாமகர் பீஷ்மர் கூறலானார்.

கயிலாய மலையில் ஓர் அழகிய பூங்காவில் வில்வ மரத்தின் நிழலில் சிவபெருமான் உமையம்மையுடன் வீற் றிருந்தார். அங்கு, சித்தர்கள், இயக்கர்கள் கந்தர்வர்கள், தேவர்கள், முனிவர்கள், கின்னரர், கிரும்புருடர், வித்தியாதார், பூத கணங்கள் முதலானோர் போற்ற வெள்ளி மலைக்கேற்பவுள்ள வெண்மையான ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது சிவபெருமானைப் பார்த்து, சக்தியாகிய உமாதேவி, “உலகத்திலுள்ள உயிர்களை உண்டாக்கியது யார்? காப்பவர் யார்? இறுதியில் அழிப்பவர் யார்? உலகத்தில் முச்சுடராய் விளங்கும் அவர்கள் யார்? கூறுவீராக” என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான், “அளவற்ற உயிர்க் குலத்தின் முத்தொழிலையும் புரி பவன் நானே! என் உருவினுள் அழிக்கும் தொழிலையுடைய உருத்திரனும், காக்கும் தொழிலையுடைய விஷ்ணுவும், படைக் கும் தொழிலையுடையவனும், விஷ்ணு வின் உந்திக்கமலத்தில் தோன்றியவனும் ஆகிய பிரம்மனும் அடக்கம். பிரம்மனால் உயிர்க்குலம் படைக்கப்பட்டுப் பல்வகை யாய் விரிந்தன; பிரமன் படைத்த உயிர் களைக் காப்பவன் விஷ்ணுவாவான். அந்த ஜீவராசிகளை அழிப்பவன் உருத்திரன் ஆவான். சந்திரனும், சூரியனும், அக்னியும் என்னுடைய முக்கண்களாகும்” என்று கூறி னார். அதற்கு உமையம்மை, “ரிஷப வாகன ரூடரே! அப்படியென்றால் உங்களு டைய கண்களை மூடிப் பார்க்கலாமே! அப்பொழுது உலகம் ஒளியில்லாது போய் விடுமா? அதனையும் பார்த்து விடுவோம்” என்று சிவபெருமானின் (முக்கண்ணனின்) இருகண்களை உமையம்மை தன் இரு கைகளால் மூடினாள்.

உடனே மூன்றுலகங்களையும் இருள் சூழ்ந்தது. தேவர்களும், முனிவர்களும் மாந்தர்களும் நீண்ட காலம் இருளில் தவித்தார்கள். விண்ணுலகமும் மண்ணுலக மும் செயலற்று போயின.

இந்த இன்னல்களைக் களைய முக் கண்ணன், மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண்ணைத் திறக்க, அதன் கோடிக் கணக்கான சூரிய ஒளி பிரகாசமானது எங்கணும் வெளிப்பட்டுப், பாய்ந்து படர்ந்திருந்த இருளைப் போக்கியது. அதனால் உயிர்க்குலங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று தழைத்தன.

அதன்பின் உமையம்மை பெருமானின் இரு கண்களை மூடிய தன் இரு கைகளை விலக்கிக் கொண்டு, “ஐயனே! தவறு செய்து விட்டேன். பொறுத்துக் கொள் வீராக” என்று வேண்டினாள். பின்னர் அப்பெருமாட்டி, உயிர்க்குலம் தழைக்கும் படியாகச் சில வார்த்தைகளைக் கூறலா னாள்.

இல்லறத்தில் இருக்க வேண்டிய பண்புகள்

”மனையாளொடு வாழும் இல்லறத்தில் இயல்பாக இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றைக் கூறுவீராக” என்று கேட்க அதற்குச் சிவபெருமான், “கல்வி யைக் கரையிலாக் காஞ்சி மாநகரில் இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்து’ அறப்பெருஞ் செல்வி, எனப் பெயர் பெற்றவளே! பார்வதியே! தீய வழியில் அல்லாது நல்வழியில் பொருளைத் திரட்டி, காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும் பிரம்மச்சாரி, துறவறத்தான் முதலானவர்களுக்கும், தூய விருந்தினர்க்கும், அன்னத்தைப் புசிக்கும் படி கொடுத்த சிறந்த தர்மவானாகிய இல்லறத்தானை, பெற்றெடுத்த தாய் தந்தையரை வணங்கிப் பாதுகாக்கின்ற நல்ல தன்மையை காட்டிலும் வேறு சிறந்த பேறு உண்டோ?

(இல்லறத்தார்) தம் பெற்றோர் இறந்த பின்னர் பிதுரர்களுக்கு செய்ய வேண்டிய அரிய கடமைகளைச் செய்து வருகின்ற விருந்தினரிடத்து இன்சொல் கலந்து முகமலர்ந்து உபசரித்தல் வேண்டும். இதுவே இல்லறத்தார் செய்ய வேண்டிய சிறந்த தர்மம் ஆகும்.

“மனைவியராகிய பெண்டிரோ மணந்த கணவன் இறந்த பின்பு, அந்த கணவன் சென்ற கதியிலேயே தானும் சென்று கூடுவதற்கான விரதங்களைச் செய்து கொண்டு தங்கள் உள்ளத்தை இறைவனைத் தியானிக்கும் தவத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

(கைம்பெண்டிர் கடைப்பிடிக்கும் விர தங்கள் (1) தரையின் கண் பாயின்றிப் படுத்தல் (2) நெய் போன்றவற்றைத் தொடாத எளியவுணவு (3) இடைவிடாது தியானத்தில் ஈடுபடல் (4) அழகிய சேலைகளைத் தவிர்த்தல் (5) தலை முண்டித்தலும் உண்டு)” என்று கூறினார்.

சூட்சுமமான தர்மம் எது?

அதன் பின் பார்வதி, “அனைவரும் அறிந்து கொள்ளும்படியான சூட்சுமமான தர்மம் ஒன்றினை கூறுக” என்றாள்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து “அறங்களுக்கெல்லாம் சிறந்த அறம் கொல்லாமையே” என்றார். அதற்கு உமையம்மை, “ஓர் உயிரையும் கொல்லாத மார்க்கத்தில் நிலைத்து நிற்றல் முடியாததாகும். அத்தகைய கொல்லா மையைக் கடைப்பிடித்து, செய்கின்ற விதம் எப்படி? சொல்வீராக” என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், “ஐம்புலன் களையும் அடக்கி, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற அறுவகைப் பகைகளைச் செற்று, சஞ்சாரம் புரியாமல் ஒரே இடத்தில் இருந்து தவம் புரியும் மகான்களிடத்தில் இந்தக் கொல்லா விரதத்தைக் காணலாம்” என்றார்.

ஆனால் இந்த கொல்லா விரதநெறி மற்றவர்களால் பின்பற்ற முடியாது. உதாரணமாக மன்னனானவன் போரினா லும், தீயவர்க்குத் தண்டனை அளித்தலினா லும், வேட்டையினாலும், கலப்பைக் காரின் முனையினாலும், தன்னை மறந்த நிலையினாலும், பிதுரர்களுக்குச் செய்யும் கருமாக்களினாலும், வேத நெறிச் சடங்கு களினாலும், கொல்லும் உயிர்களுக்காக கொலை பாவம் கிட்டாது. இவை அறத்தின் பாற் பட்டவையே. ஏற்றி வைத்த விளக்கினில் தாமாக வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளுக்காக அந்த விளக்கினை ஏற்றி வைத்தவர்களுக்குப் போலத்தான் கூறியதும்” என்றார். பாவம் மேலே இல்லாதது

பிறர் (கசாப்புக்கடைக்காரன்) கொன்ற பிராணியை நாவின் சுவைக் காரணமாக வாங்கியுண்பார். அந்தப் பாவத்திற்காக பூமியில் மறுபடியும் பிறந்து, சரீரத்துக்கு ஏற்படக்கூடிய எல்லா வகைத் துன்பங் களையும் அனுபவித்து, எல்லாவகை நாகப்படுகுழியிலும் வீழ்ந்து அல்லலுறு வர். இனி தொடக்கத்து மாமிசம் உண்டிருந்து, பின்னர் பாவத்திற்கு அஞ்சி உண்ணாது கைவிட்டவர் தேவலோகத்தை அடைவர். எக்காலத்துமே ஊன் உண்ணா தவர் நிரந்தரமாகச் சுவர்க்கத்தை அடைந்து இன்புறுவர்.

தன் உயிர் போல் பிற உயிர்களையும் காக்க வேண்டுமென்று நினைத்து ஓர் உயிரையும் கொல்லாததோடு பிறர் கொன்ற மாமிசத்தை உண்ணாதவரை, எல்லா ஜீவ ராசிகளும் தமது பெரிய கைகளைக் கூப்பிக் கொண்டு மாதா வயிற்றிலிருந்து தொழுது கொண்டு ஜனிக்குமாகில் அவர் பெருமையை அறிய வல்லார் யாரே! (ஒருவருமிலர்) (“கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்” என்ற திருக்குறள் இங்கு பொருத்தமாக இருப்பதை எண்ணிப் பார்த்து மகிழ்க.)

”அரிசி முதலாய உணவுப் பொருள் களையும், பழங்களையும் பறித்து தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்தால் தீமை நேராது; பாவம் சேராது. ஆனால் தெய்வத்துக்கு என்று சொல்லிக் கொண்டு இனிய உயிர்க்கொலை செய்தல்தான் பெரும் பாவமாகும். அதனை அத்தெய்வத் துக்குப் படைத்தல் அதனைவிட பாவ மாகும்” என்று கொல்லாமையின் இன்றி யமையாமை பற்றியும், அதன் சிறப்பினைப் பற்றியும் கூறலானார்.

“இல்லறத்தார்க்கு செல்வம் இருக்கு மானால் எவ்வகைத் தர்மங்களில் உதவ வேண்டும் என்பதை கூறுவீராக” என்று உமையம்மை கேட்டாள்.

அதற்குச் சிவபெருமான். “அறவழியில் திரட்டிய செல்வம் இருக்குமானால் அதனை இல்லறத்தார். தன் மனைவி, சுற்றம், விருந்தினர், துறந்தார், வழிபடுந் தெய்வம், பிதுரர் போன்றவர்களுக்குக் கொடுத்து தாமும் நுகர்ந்து, வருந்தி வந்த வர்களுக்கு உதவி செய்து யாரிடத்திலும் இன்சொல் பேசி இருத்தலே சிறந்த அறநெறியாகும். இத்தகைய தர்ம நெறி நால்வகை வருணத்தார்க்கும் உரியது ஆகும்.

(இவ்விடத்து, ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்ற திருக்குறளையும், முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்” என்ற திருக்குறளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் )

வறுமைக்குக் காரணம் என்ன?

உமாதேவி மீண்டும் சிவபெருமானைப் பார்த்து “உலகில் சிலர் செல்வ வளம் பெற்றும், சிலர் செல்வ வளம் இல்லாது வறுமையில் தவழ்ந்தும் விளங்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்குச் சிவபெருமான், “பல சாத்திரங் களையும் ஆராய்ந்தறிந்த ஞானிகளுக்கு முற் பிறப்பில் செல்வத்தைக் கொடுத்தவர்கள் இப்பிறப்பில் அளவற்ற செல்வத்தை உடையவர்கள் ஆவார்கள். முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் கொடுக்காத உலோபி யரே இப்பிறப்பில் தரித்திரத்தில் உழன்று, வருந்தி பிச்சை எடுப்பவர் ஆவார். ஆகவே மேதினியில் நல்வினையைச் செய்தோர் சுகம் பெறுவர். தீவினையைச் செய்தோர் வறியராகித் துயரம் அடைவர்” என்று கூறினார்.

முற்பிறப்பின் கர்மமா?

”சிவபெருமானே! அரசன் தண்டிக்கும் படியான விளைவு ஒரு குற்றவாளிக்கு அவன் செய்த முற்பிறப்பின் கர்மத்தாலா அல்லது அவன் எடுத்துள்ள இந்த பிறவியின் கர்மத்தாலா கூறுவீர்களாக” என்று உமையம்மை கேட்டாள்.

அதற்கு அப்பெருமான், “உமாதேவி! அரசன் தண்டனை முற்பிறவியின் செயலாலே விளைவது. இயம தண்டனை இப்பிறப்பின் செயலாலே விளைவது. இருவர் தண்டனையாலும் சிறிது பாவமே கழியும். எஞ்சிய பாவங்கள் பல பிறவிகள் எடுத்து அனுபவித்தால் தான் கழியும் அல்லது நீங்கும்” என்று கூறினார்.

உமையம்மை கேட்ட கேள்விகளுக் கெல்லாம் சிவபெருமான் பதில் கூறினார். அச்சிவபெருமான் உமையம்மையை நோக்கி, “பார்வதியே! இவ்விடத்து உன் அருகில் நின்று உன்னைப் போற்றுகின்ற மாதரார் அறிந்து கொள்ளும்படி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பற்றிக் கூறுவாயாக” என்று கேட்டார்.

அங்ஙனமே தன்னைப் போற்றுகின்ற மாதர்களுக்கு “பெண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை” விவரித்து உமை யம்மை கூறினார். கேட்ட மாதரார்கள் அனைவரும் உமையம்மையை மனதாரப் போற்றினர். வணங்கினர்.

”பின்னர் சிவபெருமான் உமையம்மை யோடு தன் இருப்பிடம் சேர்ந்தான்” என்று யாழிசை வல்லான் நாரதர் சாற்றிட, அதனைக் கண்ணபிரான் கேட்டுப் பீஷ் மருக்குச் சொல்ல, பீஷ்மர் தர்மபுத்திரரிடத் தில் கண்ணபிரான் தனக்கு கூறியவையாக எடுத்துக் கூறினார்.

அதற்குப் பீஷ்மர். “தர்மபுத்திரரோ சிவ பெருமான் பார்வதிக்குச் சொள்ள இக்கதையை கேட்டறிந்தவர்கள் கொடிய தீவினைகள் நீங்கி, மிகுதியான செல்வத்தை எளிதாகப் பெற்று, மேன்மையாகப் பூமியில் வாழ்ந்து இறுதியில் பிறப்பிறப் பில்லாத மோட்சத்தை அடைவார்கள்” என்று கூறிய அவர், மேலும்,

“தர்ம நந்தனா! சிவபெருமானை நாள்தோறும் சிந்தனை செய்தால் எந்தத் தீவினையும் சுலபமாக நீங்கி விடும்” என்ற உண்மையை எடுத்து கூறினார். கேட்டவர் அனைவரும் பீஷ்மரை மனமாரப் போற்று வாராயினர்.

அதன்பின் திருமாலாகிய கண்ணபிரான், முனிவர்கள், தருமபுத்திரர் முதலாய மன்னர்கள், பீஷ்மர் மற்றுமுள்ளோர் உள்ளம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, மனமாகிய தாமரை மலரை அப்பெருமான் திருவடிகளில் சாத்தி, பிரம்ம தேவன் விதிக்கும் விதியையும் மாற்றும் வல்லமை படைத்த மேலான ஆதியாம் பரம்பொருளை, பிறைச்சந்திரனை அணிந்த பெம்மானை, கொன்றை மாலை அணிந்தவனை. சிவபெருமானைத் தோத்தரித்து தத்தம் வசங்களை இழந்து, சுவை குன்றாத பேரின்பக் கடலில் மூழ்கித் திளைத் திட்டார்கள்.

வீடுமன் முத்தி அடைந்த சருக்கம்

(இச்சருக்கம் பீஷ்மர் மோட்சம் அடைத் ததைக் கூறும் பகுதியாம். மோட்சம் என்பதற்கு அந்தமில் இன்பத்து அழி வில்லாத வீடு எனப் பொருள் கொள்வர்).

பீஷ்மர் தர்மபுத்திரரிடம், ”தர்மபுத்திர நல்வினையால் செல்வம் ஒருவனுக்குச் சேரும். அந்த நல்வினை அவனுடைய நற்செய்கையால் வரும். அந்த நற்செய்கை அவனுக்கு திருமாலின் திருவருளால் ஏற்படுவதாகும். ஆதலால் பூமியில் பிறந்த அனைவரும் இலக்குமியின் கணவனும், யது குலத்தில் உதித்தவனும், பிரம்மனைப் படைத்தவனும், கஜேந்திரன் என்னும் யானையை முதலையின் வாயினின்று காத்தவனும், பாற்கடல் வண்ணனும், வைகுந்த வாசனும், ஆலிலை மேல் அன்று பாலகனாய் அறிதுயில் கொண்டவனும் ஆகிய பரந்தாமனை, திருமாலை, ஸ்ரீமந் நாராயணனைப் பக்தி சிரத்தையோடு இரவு பகல் பாராது வணங்க வேண்டும். தோத்திரம் செய்து போற்ற வேண்டும். மேலான மோட்சம். அவன் அருளின்றி எய்த முடியாது” என்று கூறினார்.

“மோட்சம் கொடுப்பவன் திருமாலே யாதலின் அந்த திருமாலை நாள்தோறும் பணிந்து ஏத்தி உன்னுடைய வினைகளை அகற்றிக் கொள்வாய்” என்று அன்புடன் உரைத்தருளிய பீஷ்மரைத் தர்மபுத்திரர் மகிழ்ச்சியுடன் பார்த்து, “பிதாமகரே! வழிபடுதற்குரிய தகுதி பெற்றவர் யார்? சொல்வீர்” என்று கேட்டார்.

மோட்சத்தை அடையும் வழி

அதற்குப் பீஷ்மர், “தர்மபுத்திரரே! பல்வகை நூல்களைப் பாங்குடன் கற்றுத் தேர்ச்சி பெற்று, சிறந்த ஞானமும் பெற்ற மேதையரே வழிபடும் தெய்வத்திற்கும் மேலாகப் போற்றத்தக்கவர் ஆவர். அத்தகைய மேதையர்க்கு பூசை செய்து அவர் விரும்புகின்ற பொருள்களைக் கொடுத்து இனிய சொற்களைப் பேசி உபசரித்தோர் எல்லாவித செல்வங்களை யும் பெற்று அனுபவித்து இறுதியில் மோட்சத்தை அடைவர்” என்று கூறினார்.

அதன்பின்னர் தர்மபுத்திரர், ‘ஞானவானே! இந்தப் பூமியில் அத்தகைய மேதையரேயன்றி இன்னும் மரியாதை காட்டி வழிபாடு செய்தல், வரவேற்றல், உணவு படைத்தல் முதலிய சிறப்புகளுக்கு உரியவர் யாவர்?” எனக் கேட்க.

உடனே பீஷ்மர், “மேதையுரைவிட மிகச் சிறப்புக்குரியர் புனிதமான வேதங் களை யோதும் அந்தணப் பெருமக்களே யாவர்” என்று கூறி அவர்களைப் பற்றி விவரமாகக் கூறினார். ஆக ஞானியரைவிட வேதியரே ஆற்றலுடையவர் என்றார் பீஷ்மர் என்க.

அந்த வார்த்தையைக் கேட்ட தர்ம புத்திரர் உள்ளம் மகிழ்ந்து, “தூயவரே! என் மனத்தில் எழுந்த சந்தேகங்கள் யாவும் தங்களால் நீங்கப் பெற்றன. மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறி அப்பிதாமகரின் திருவடிகளில் விழுந்து வங்கினார்.

அப்பொழுது வேதவியாசர் அங்கு வந்து, “பீஷ்மரே! தர்மபுத்திரருக்கு உறுதி யளிக்கும் உண்மையான உரைகளை எடுத்துச் சொல்லி அவரைப் புனிதராக் கினீர். இனி, தர்மபுத்திரர் முதலாக உள்ள அனைவரும் தத்தம் இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதி கொடுப்பீராக” என்றார்.

அதன்பின் பீஷ்மர் தர்மரைப் பார்த்து, “தர்மபுத்திரா பிறர் மனைவியை விரும்பாதே! தாய் தந்தையராகிய குந்தி, திருதராட்டிரர், காந்தாரி ரி ஆகியவர்களை விருப்பத்தோடு பாதுகாப்பாயாக. எம்பெருமான் கண்ணபிரான் உரைகளை சிரமேற்கொண்டு அவற்றின்படி இனியும் நடப்பாயாக; நல்லாட்சி செய்து இனிது வாழ்வாயாக. உத்தராயணம் வந்தபின் என்னிடம் வருவாய் ” என்று கூறி அனைவர்க்கும் விடை கொடுத்தார்.

(உத்தராயணம் என்பது சூரியன் வடக்கு முகமாக செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலமாகும். அவ்வாறே சூரியன் தெற்கு முகமாக செல்லும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனம் எனப்படும்).

அஸ்தினாபுரி அடைதல்

அதன்பின் தர்மபுத்திரர் மற்றவரோடு பீஷ்மரை நமஸ்கரித்து, கண்ணபிரா னோடும் மற்றவரோடும் அஸ்தினாபுரி அடைந்தார். தவம் செய்யும் முனிவர்கள் தங்கள் தங்கள் சென்றார்கள். இருக்கைகளுக்குச்

தருமபுத்திரர் அஸ்தினாபுரத்திற்கு வந்து பெற்றோர்களின் (குந்தி, திருதராட்டிரர், காந்தாரி) பாதங்களை வணங்கி, சிம்மா சனத்தில் வீற்றிருந்து, சில நாட்கள் பூமியை யாண்டு உலகினைக் காப்பாற்றி வந்தார். அதன் பின் சூரியன் வடக்கு முகமாகச் செல்லத் தொடங்கியபின், உத்தராயணத் தில் பீஷ்மரிடத்துச் செல்லும் பொருட்டு அனைவரும் சூழ்ந்து வரத் தேர் மேல் ஏறித் தருமபுத்திரர் சென்றார்.

தான் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் வந்து சேர்ந்த முனிவர்களோடும். மற்றவர்களோடும் தர்மபுத்திரர் பீஷ்மரை வணங்கி நின்றார். அப்பொழுது தர்மபுத் திரர், “பரிசுத்த ஞானியே! தெளமிய முனி வர், கிருபாசாரியார், முனிவர்கள், பெரிய தந்தை திருதராட்டிரர், என் தம்பிமார்கள், சித்தப்பா விதுரர், யுயுத்சு, பெண்கள், கண்ணபிரான் முதலானவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அவர்களை அருளோடு நோக்குவாய்” என்றார். (யுயுத்சன்-திருதராட்டிரருக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர். திருதராட்டிர ருக்குப் பின் இந்திரப் பிரத்தத்தை ஆண்டவர்).

தர்மபுத்திரர் இவ்வாறு கூறியவுடன் பீஷ்மர் கண் விழித்துப் பார்த்து அங்கு நின்ற முனிவர் முதலானோர்க்கு இன்சொல் கூறி, சூழ நின்ற தம் குலத்தினோர்க்கு நல்லறிவு சொல்லி, துளபமாலை அணிந்த பரந்தாமனைப் பலமுறை போற்றி இது காறும் மூச்சு அடக்கினதை விடுத்து, தன் உடலில் பொருந்தியிருந்த உயிரை வெளியேறச் செய்தார். அப்போது அந்த உயிர் பேரொளியாய் எழுந்து விண்ணில் சென்று மறைந்தது.

மாயன் அருளால், பீஷ்மர் மீண்டும் என்றும் அழியாத முன்னர் இழந்திருந்த எட்டாம் வசுபத பதவியைப் பெற்று யாவரும், ‘பிரபாசனன்’ என்று கூறி போற்றும்படி விளங்கினார்.(குறிப்பு: பீஷ்மர் ஐம்பத்தெட்டுத் தினங்கள் அம்பு படுக்கையில் கிடந்து பின்னர் சுவர்க்கம் புகுந்த நாள் மாசி மாதம்- சுக்கில பக்ஷம் -அஷ்டமிதிதி என்று கூறுவர்).

அப்பொழுது தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள். வானத்தில் துந்துபி. பேரிகைகள் முழங்கின; எல்லோரும் நேயமொடு பாண்டவர்களும், விதுரரும் யுயுத்சும் பல சந்தனக்கட்டைகளையும், பலவித வாசனைப் பொருள்களையும் கொண்டு வந்து கொடுத்தனர். சிதையை முறைப்படி அடுக்கி, அமைத்தனர். பின்னர் விமானத்தில் எழுந்தருளப் பண்ணி, அக்னிக்கு நைவேத்யம் செய்து, பின் செய்ய வேண்டிய முறைகளைப் பின்பற்றி ஈமச் சடங்குகளைச் செய்தார்கள். பலவகைத் தானங்களை செய்தார்கள். அதன்பின் கங்கை நதியை அனைவரும் அடைந்து ஸ்நானம் செய்து, செய்ய வேண்டிய ஈமக் கிரியைகளைச் செய்யக் கங்கை நதிக் கரையில் தர்மபுத்திரரும் கண்ணபிரானும் தங்கியபோது அவ்விருவர் முன்னே கங்கா தேவி பெண்ணாகி முன்வந்து நின்றாள்.

கங்கை என்பதை அறிந்த அனைவரும் அவளைப் பணிந்து வணங்கினர். அப்பொழுது கங்காதேவி தொழுது, அவர்களை நோக்கி, “தான் சங்கற்பித்த நாளிலன்றி மரணமில்லாதபடி தன் தந்தையாகிய சந்தனுவிடம் வரத்தைப் பெற்ற பீஷ்மர், பேடியாகிய சிகண்டி வில்லிலிருந்து விடுக்கப்பட்ட அம்பினால் உயிர் நீங்கும்படியான ஒரு தாழ்வு நிலை எப்படி உண்டாயிற்று? என்று மனமுருகி கண்ணபிரானிடம் முறையிட்டாள். (பீஷ்மர் தந்தை சந்தனு, பீஷ்மருக்கு ‘ஸ்வச்சந்த மரணம்’ என்னும் வரம் ஈந்தான் என்பர்).

அப்பொழுது கண்ணபிரான், “கங்கா தேவி! கடம்ப மாலையைத் தரித்த முரு கனைப் போன்ற சிகண்டி, முற்பிறப்பில் அம்பை என்ற பெண்ணாயிருந்து அப்போதே பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என்று கோரியபடி இப்பிறப்பில் சிகண்டி என்ற பெயருடையவளாய்த் தோன்றி, சிறப்புப் பொருந்திய பத்தாம் நாளில் உன் மகன் பீஷ்மரைக் கொன்றான். அதற்கு உண்மை காரணம் வசிட்ட மாமுனிவர் இட்ட சாபத்தால் பூமியில் மானிடனாகப் பிறந்து, இறந்தானேயல்லாமல் போரில் மும்மூர்த்திகள் கொல்ல முயன்றாலும் அவன் மரணத்தை அடைய மாட்டான். பெண்ணே? கவலைப்பட வேண்டாம். இப்பொழுது அட்டவசுக்களில் உன் மகன் ஒருத்தனாகச் சேர்ந்து விட்டான். அதாவது உயர்ந்த வசுபதம் பெற்றுள்ளான்” என்று கூறியவுடன் கங்கா தேவி மன ஆறுதல் அடைந்து கங்கை நதியில் இறங்கிப் போனாள். தர்மபுத்திரரோ தன் பாட்டனார் இறந்தமைக்காக வருந்தி கண்ணபிரான் உதவியுடன் ஈமக்கடன் செய்து முடித்தார்.

மகாபாரதம் – 62 உமாமகேசுவர சம்வாத சருக்கம்… சூட்சுமமான தர்மம் எது? Asha Aanmigam

ஆச்சரியம் தரும் அருகம்புல் – ஆன்மீகம், மருத்துவம், புராணம் ஆகியவற்றில் அதிசயமான புல்

ஆச்சரியம் தரும் அருகம்புல் – ஆன்மீகம், மருத்துவம், புராணம் ஆகியவற்றில் அதிசயமான புல்

இந்த உலகத்தில் பிறந்த மூலிகைகளில் முதன்மையானது அருகம்புல் எனும் புல் எனப் பழமொழிகள் சொல்கின்றன. நம் முன்னோர்கள் இயற்கையை அடிப்படையாக வைத்து வாழ்ந்தவர்கள். அதில் அருகம்புல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒரு புல் எனலாம். இதற்கு மருத்துவம், ஆன்மீகம், பாரம்பரிய ஒப்பீடுகள் அனைத்திலும் தனி இடம் உண்டு. குறிப்பாக விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் சாற்றும் மரபு, இதன் பின்னணி, நன்மைகள், நோய் தீர்க்கும் சக்தி மற்றும் புராண வரலாற்று ஆதாரங்களை இங்கு விரிவாகப் பார்ப்போம்.


அருகம்புல்லின் ஆற்றல்கள் மற்றும் சத்துக்கள்

அருகம்புல் என்பது பார்ப்பதற்கே சாதாரண புல்போல தெரிந்தாலும், அதற்குள் அடங்கியுள்ள உயிர்ச்சத்துக்களால் இது ஒரு அதிசய மூலிகை. இதன் சத்துக்களில்:

  • மாவுச்சத்து, நார்ச்சத்து, உப்புச்சத்து, கொழுப்புச்சத்து
  • அசிட்டிக் அமிலம், ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், மெக்னீசியம், பொட்டாசியம்
  • பால்மிட்டிக் அமிலம், செலினியம், வைட்டமின் C
  • P சிட்டோஸ்டர், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, டைட்டர்பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம்

என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை உடலுக்கு சக்தி அளிக்கும் மூலிகை உணவாகவும் பயன்படுகின்றன.


மருத்துவ நன்மைகள்

1. உடல் எடை குறைப்பு:
அருகம்புல் சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலிலுள்ள தண்ணீர்த் திரவங்கள் சீராகச் செயல்பட்டு, உடல் எடை குறையும். மேலும், அதன் மூலம் கெட்ட கொழுப்பு (bad fat) நீங்கும்.

2. நினைவாற்றல் வளர்ச்சி:
அருகம்புலை நிழலில் உலர்த்தி தூளாக்கி, கஷாயமாக செய்து குடித்தால், நரம்பியல் பலம் பெருகி நினைவுத்திறன் மேம்படும்.

3. நோய் எதிர்ப்பு சக்தி:
அருகம்புல், நோய்களுக்கு எதிராக போராடும் திறனை உடலுக்கு தரும். இது அலர்ஜி, மூச்சுத் திணறல், போன்றவற்றிற்கு நல்ல தீர்வாகும்.


ஆன்மீகத்தில் அருகம்புலின் சிறப்பு

விநாயகருக்கு அருகம்புல் ஏன் விருப்பமானது?
பிள்ளையார் மூர்த்திக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எந்த வேண்டுதலும் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், அருகம்புல் வழியாக க Negative energy (தீய சக்தி) விலகி, Positive energy (நல்ல சக்தி) சேரும்.

குபேரனும் அருகம்புல் குறித்து கூறியது:
பொருளாதார தெய்வமான குபேரன் கூட, தன்னுடைய செல்வத்திற்கு மேலாக அருகம்புலின் மதிப்பை புகழ்ந்துள்ளார். இது அருகம்புலின் ஆன்மீக வலிமையை உணர்த்துகிறது.

அமிர்தம் அருகம்புல் மீது விழுந்த கதை:
பாற்கடலைக் கடையும்போது, வெளியே வந்த அமிர்தம் அருகம்புலின் மீது விழுந்ததால், அது அழியாத சக்தி பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புராணக் காரணங்கள்

  1. யாஷினி தேவி கதையால் உருவான மரபு:
    யாஷினி தேவியுடன் திருமணம் செய்ய விருப்பம் இல்லாத விநாயகர், அருகம்புலாகவே மாறி “இதை வைத்து வழிபடுங்கள்” என வரம் வழங்கினார். இதனால் அருகம்புல் விநாயகரின் ஆகம வழிபாட்டில் சேர்க்கப்பட்டது.
  2. நந்தியின் சாபவிமோசனம்:
    சிவபார்வதி தாயம் விளையாடும் போது, நந்தி நடுவராக இருந்து சிவனுக்கு ஆதரவாகச் சொன்னதால், பார்வதி கோபத்தில் சாபம் இடுகிறார். பின்னர் விநாயக சதுர்த்தியன்று, அருகம்புல் கொண்டு வழிபாடு செய்ததால், சாபவிமோசனம் பெற்றதாக நம்பப்படுகிறது.

சந்திர/கேது திசை தோஷ நிவாரணம்

சங்கடஹர சதுர்த்தி, சதுர்த்தி, துவாதசி போன்ற நாள்களில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வணங்கினால், சந்திர தோஷம், கேது தோஷம் போன்ற கிரக தோஷங்கள் விலகும் என்பது ஆன்மீக நம்பிக்கை.


பொருளாதார பரிகாரம்: கடன் தொல்லை நீக்கும் முறை

  1. 16 அருகம்புல்களை பசுந்தயிரில் இரவில் ஊறவைக்க வேண்டும்.
  2. 3 நாள்கள் கழித்து, அதை விநாயகருக்கு
    “ஓம் ருண விமோசன கணபதியே போற்றி” என கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
  3. இம்முறை 27 நாட்கள் தொடர்ந்து செய்வது கடன் தொல்லையிலிருந்து விடுபட உதவும் என நம்பப்படுகிறது.

அருகம்புல் மற்றும் அனலாசுரன் கதை

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை பலப்படுத்த, விநாயகர் அவரை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவரை விழுங்கிவிட்டார். ஆனால் அனலாசுரனின் உள் வெப்பம் விநாயகரைத் தாங்க முடியாமல் செய்தது. அந்த வெப்பம் தணிய அருகம்புல் தான் துணை வந்தது.

முனிவர் ஒருவர் அருகம்புல் கொண்டு விநாயகரின் தலையில் வைத்தார். உடனே விநாயகரின் வெப்பம் தணிந்து, அமைதி கிடைத்தது. அப்போது விநாயகர், “என்னை தொடர்ந்து அருகம்புல் கொண்டு வழிபடவேண்டும்” என கட்டளையிட்டார். இது தான் அருகம்புல் சாற்றும் மரபின் தொடக்கக் காரணம்.


தீர்மானம்

அருகம்புல் என்பது பசுமை பூமியின் அற்புதமான படைப்பு. இது ஒரு புறம் மருத்துவ மூலிகை, மறுபுறம் ஆன்மீக அடையாளம், மூன்றாம் புறம் புராண புண்ணியம் என பல பரிமாணங்களில் நம் வாழ்வில் பின்னியிருக்கிறது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது என்பது ஒரு சிறந்த ஆன்மீக வழிபாடாகும் மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நன்மைகளை அழைக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் திகழ்கிறது.


விநாயகர் வழிபாட்டில் அருகம்புலுக்கு உள்ள முக்கியத்துவம், அதன் ஆயுள், சத்துக்கள், நோய் தீர்க்கும் மருந்தாகும் திறன், புராண வரலாறுகள் அனைத்தும் சேர்ந்து, அதை ஒரு ஆழ்ந்த ஆன்மீகப் பொருளாக்குகின்றன. இன்று கூட வீட்டில் அருகம்புல் இல்லாத பிள்ளையார் பூஜை பூரணமாக இருக்காது என்பதே நம் பாரம்பரியத்தின் சான்று.


சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம்… பாடல்

0

சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

அண்ணாமலை சிவ சிவாய நம ஓம் அருணாசல சிவ சிவாய நம ஓம்

ஆலங்காடா சிவாய நம ஓம். ஆருர் அரசே சிவாய நம ஓம்

இன்னம்பர் ஈசா சிவாய நம ஓம் இன்றெனக் கருள்வாய் சிவாய நம ஓம்

ஈங்கோய் மலையாய் சிவாய நம ஓம் ஈங்கெழுந்தருள்வாய் சிவாய நம ஓம்

உண்ணாமலை சிவ சிவாய நம ஓம் உண்மைப்பொருளே சிவாய நம ஓம்

ஊனம் ஒன்றில்லாய் சிவாய நம ஓம் ஊழி ஏழானாய் சிவாய நம ஓம்

எழுத்தறி நாதரே சிவாய நம ஓம் என்றும் இளையாய் சிவாய நம ஓம்

ஏகம்பம் மேயாய் சிவாய நம ஓம் ஏடகத்துறைவாய் சிவாய நம ஒம்

ஐந்தெழுத்து உருவாய் சிவாய நம ஓம் ஐயாறு மேயாய் சிவாய நம ஓம்’

ஒற்றியூர் உள்ளாய் சிவாய நம ஓம் ஒண்பொருளே சிவ சிவாய நம ஒம்

ஓண காந்தேஸ்வர சிவாய நம ஓம் ஒலம் அடிகேள் சிவாய நம ஒம்

சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம் அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம்

உபாயம் அறிவோம் உள்ளமது தெளிவோம் உள்ளமது அறிவோம் சிவாய நம் ஒம்

சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம் ஹர ஹர என்போம் அவன் தாள் பணிவோம்.

சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம்… பாடல் | Aanmeega Bhairav

வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் கனவு நனவாகி வருகிறது..!!

வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் கனவு நனவாகி வருகிறது..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்கிற தாரக மந்திரத்தை தனது வாழ்நாள் முழுவதும் ஹிந்து சமுதாயத்திற்கு உபதேசம் செய்து வந்தார்..!!

ஹிந்துக்களின் எழுச்சியே தேசியத்தின் எழுச்சி என்கிற ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் பரமபூஜனீய ஸ்ரீடாக்டர் ஜி கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களின் உபதேசத்தை தமிழகமெங்கும் ஹிந்துக்களிடம் கொண்டு சென்றார்..!!

ஹிந்து நன்றாக வாழ்ந்தால் இந்த தேசம் நன்றாக வளரும் என்றார்..!!

ஹிந்துக்களின் ஒற்றுமையே தேசத்தின் வலிமை என்கிற தாரக மந்திரமே ஹிந்துக்களின் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்..!!

தனது வாழ்வையே வேள்வியாக்கி ஹிந்து சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார்..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும் என்கிற தாரக மந்திரம் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் சங்கமித்ததைக் காணும் போது வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்கள் கண்ட கனவு நனவாகி வருகிறது என்பதை நமக்கு உணர்த்துவதாக இருந்தது.

வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் ஆன்மாவும், ஹிந்து சமுதாயத்திற்காக பணி செய்து பாரத அன்னையின் பணிக்காக பலிதானம் தந்த மாவீரர்களின் ஆன்மாக்களும் என்றென்றும் நம் அனைவரையும் ஆசீர்வசித்து தேசப்பணியில் நம்மை நல்வழி நடத்தும்..!!

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்!
பாரத் மாதாகீ ஜெய்!! வெற்றிவேல்! வீரவேல்!

மகாபாரதம் – 61… கன்னியாதானம் வரன் பெருமிதம் உரைத்த சருக்கம்… உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அஷ்டாவக்கிரன்

0

(கன்னியைத் தானமாகத் திருமணத்தில் பெற்ற மணமகனின் மேம்பாட்டினைக் கூறும் சுருக்கம் என்று பொருள்படும். கன்னியை ஆடவனுக்கு மணம் புரிந்து கொடுக்கும் அறம் கன்னியாதானம் ஆகும். இது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று.

இச்சுருக்கத்தில் தெரிவையர் இயல்பு அவர்களைப் புரக்கும் வகை, சகவாசத்தின் மேன்மை. பசுக்களின் மேன்மை, பல் வகைத் தானங்கள், அறநெறி வாரா பொருளை ஏற்றவர் எய்தும் பயன் முதலியனவும் கூறப்பட்டுள்ளன)

“ஒரு தந்தை தன் பெண்ணை எப்படிப் பட்ட எண்ணமுடையவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் நலம் பயக்கும்?” என்று தரும புத்திரர் கேட்க பிதாமகர் பீஷ்மர் அஷ்டாவக்ரன் கதை மூலம் பதில் கூறுகின்றார்.

”தருமபுத்திரரே சொல்கின்றேன் கேள். ஒரு முனிவருக்கு அஷ்டாவக்கிரன் என்னும் ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு பிரம்மச்சாரி. அந்த அஷ்டாவக்கிரன் வதான்யர் என்னும் ஒரு முனிவரிடம் சென்று “உன் பெண் சுப்ரையைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு இங்கு வந்துள்ளேன். அதனால் எனக்கு வேதமந்திரங்கள் முழங்கிட அக்னி அருந்ததி சாட்சியாக உங்கள் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பீராக” என்று கூறினான். அதற்குப் பெண்ணைப் பெற்ற தந்தையாகிய வதான்யர் “நம்பி! இமயமலை காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணியோடு உரையாடி நேர்மை தவறாமல் வருவாயானால் என் மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுப்பேன்” என்று கூற, அஷ்டாவக்கிரன் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அஷ்டாவக்கிரன்

அஷ்டாவக்கிரன் சங்கநதி, பதும நிதிக்குத் தலைவனாகிய குபேரனுடைய அளகாபுரி சென்று அங்குள்ள அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து ஓர் ஆண்டுக்காலம் அங்கு இருந்தான். பின்னர் பார்வதி தவம் செய்யும் தவச் சாலையை அடைந்தான். அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடினான்.அங்கிருந்து ஒரு காட்டகத்தை அடைந்து அங்கு ஒரு வீடு இருப்பதைப் பார்த்து உள்ளே போனான். அங்கு வசித்த அழகான நங்கையொருத்தி இவனைக் கண்டு உபசரித்தாள். உபசரிப்பை ஏற்றுக் கொண்ட அஷ்டவக்கிரன் அவள் பக்கம் திரும்பாமல் உறங்கி எழுந்தான். இதனைக் கண்ட அந் நங்கை “ஐயா, நான் பக்கத்தில் படுத்திருந்தும் நீங்கள் என்னை விரும்பாது திரும்பிக் கொண்டது ஏன்?” என்று கேட்டாள். அதற்கு அஷ்டாவக்கிரன் ”பெண்ணே! நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டவன். பிரம்மச்சரிய விரதம் பூண்டவர்கள் பிற பெண்களை விரும்பார். ஆகவே நான் உன்னை விரும்பவில்லை. நான் ஊருக்குச் சென்று அங்கு எனக்காகக் காத்திருக்கும் பெண்ணை மணந்து கொள்வேன். எனவே நீயே விரும்பி வந்தாலும் நான் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று பதிலுரைத்தான். பொழுது விடிந்தவுடன் அவன் தன் தகரம் போய்ச் சேர்ந்தான்.

அஷ்டாவக்கிரனின் உள்ள உறுதியை அறிந்த வதான்யர் தன் மகள் சுப்ரையை அந்தப் பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஆகையால் “தருமபுத்திரா! இத்தகைய கருத்தினையுடையவனுக்கு அயல் பெண்ணை விரும்பாதவனுக்கு இராம பிரான்போல ஏகதார விரதனாக இருப்ப வனுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொடுத்தால் அவள் நலமுடன் வாழ்வாள்” என்று பிதாமகர் பீஷ்மர் கூறினார்.

பெண்கள் எல்லாம் தீவினையின் படிவங்களா?

  1. ‘தெரிவையர் எல்லாம் பாவவுருவம் (பெண்கள் எல்லாம் தீவினையின் படிவங்கள்) என்று உரைப்பர் உலகினர். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று தரும புத்திரர் கேட்டார்.

அதற்கு பிதாமகர் பீஷ்மர் ” ஒரு முறை நாரத மாமுனிவர் உலகை வலம் வந்த காலத்தில் அவர் எதிரே ‘பஞ்ச சூடை’ எனும் அழகான பெயரை உடைய பெண் ஒருத்தி வந்தாள். அவளை நோக்கி நாரதர், “பஞ்ச சூடை/ பெரியோர்கள் பெண் களைப் பற்றி நல்லபிப்பராயம் கொள்ள வில்லை என்றாலும் கற்றுணர்ந்தோர் பெண்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? மறைக்காமல் சொல்லுவாயாக என்று கேட்டார். அப்போது அந்தங்கை நாரத முனிவரிடம்,

“தூய்மையானவரே! “நீராழம் கண்டாலும் காணலாம். மங்கையரின் மன ஆழத் தைக் காண முடியாது” என்பர். அவர்கள் நகை, நல்லாடை, நற்சாந்து, நற்பூ, நல்லுணவு முதலியவற்றின் மேலேயே அன்பு வைப்பர். ஆடவர் யாராக இருந் தாலும் அவருடன் சேர விரும்புவர்.

தம்மை விரும்பும் ஆடவர் முன் தம் அழகு காட்டி மயக்கித் திரிவர். கரும்பு போல இனிக்கப் பேசும் அப்பெண்களிடத்து பஞ்சமா பாதகங்களும் குடியிருக்கும் என்று கூறி அந்த பஞ்ச சூடை போயினாள்.

“இதனை நீ உணர்ந்து கொள்க” என்று பீஷ்மர் தருமபுத்திரர் கேட்ட கேள்விக்குப் பதிலாகக் கூறினார்.

“அத்தகைய பெண்களை எவ்வகையில் காப்பது? கூறுவீர்களாக” என தருமபுத்திரர் கேட்டபோது பீஷ்மர் விபுலன் கதைமூலம் அவர்களைப் பற்றிக் கூறலானார்.

“முன்னொரு காலத்தில் தேவசர்மா என்னும் முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி பெயர் ‘ருசி’ என்பதாம். அவள் மேல் இந்திரன் மோகம் கொண்டு அவளைச் சேர விரும்பினான். இதனைத் தேவசர்மா அறிந்து இல்லாளைப் பாதுகாத்து வந்தார்.

ஒருநாள் தேவசர்மா ஒருத்தருக்கு யாகம் செய்து கொடுக்கும்பொருட்டு வெளியே போனார். மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் அந்த முனிவர் தன் சீடன் விபுலனை அழைத்து தன் மனைவி ருசியைத் தான் திரும்பி வரும்வரை நன்கு பாதுகாத்திருக்குமாறு கூறிச் சென்றார்.

அவர் போனதைப் பார்த்து இந்திரன் தேவசர்மா மனைவியுடன் சேர்ந்து மகிழ அங்கு வந்து அவளுடன் பேசலானான். இதனை அறிந்த விபுலன் ருசியின் தேகத்துள் அவள் அறியாமல் பிரவேசித்து ‘ஆயிரங்கண்ணனே! என்னைச் சேரும் பொருட்டுத் தகாத வார்த்தைகளைப் பேசு கின்றாய். இப்போதே இவ்விடத்தைவிட்டு போவாயாக” என்று ருசியைப் போலவே பேசினான்.

பின்னர் விபுலன் பழைய தன் வடிவத்துடன் இந்திரன் எதிரே வந்து “இந்திரா நீ என் குரு பத்தினியைத் தழுவ வந்துள்ளாய் என்பது எனக்குத் தெரியும். எனவே நீ இங்கிருந்து போய்விடு. இல்லையேல் நான் உன்னை சபிப்பேன்” என்றான். உடனே இந்திரன், “விபுலா! உணவு பெற வேண்டி இங்கு வந்துள்ளேன். என்னைக் கோபித்துக் கொள்ளாதே.” என்று கூறி வணங்க விபுலன் அவனுக்கு நல்ல அறிவுரை கூறி குரு பத்தினியைக் காப் பாற்றினான்.

பின்னர் வந்த குருவை வணங்கி நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான். தேவசர்மாவாகிய அக்குரு மகிழ்ந்து மெச்சி தன் சீடனுக்கு வேண்டிய வரம் கொடுத்து தன் மனைவியுடன் மகிழ்ந்து வாழ்ந்திருந் தார்.

அதனால் “தருமபுத்திரரே! பெண்களின் கற்பினைப் பாதுகாத்தல் எல்லார்க்கும் கடமையாக இருக்க வேண்டும். இதனை நீ தெரிந்து கொள்வாயாக” என்றார்.

இங்கு ‘சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை.” என்ற திருக்குறளை நினைவு கூர்க.

பசுக்களின் சிறப்பு

4) பசுக்களின் சிறப்பினைக் கூறுக என்று தருமபுத்திரர் கேட்க பிதாமகர் பீஷ்மர் சியவன முனிவர் கதையை எடுத்துக் காட்டலானார்.

குளிர்ந்த யமுனை கங்கை நதிகளினுள் பன்னிரெண்டு ஆண்டு காலம் வசித்துக் கொண்டு சியவன முனிவன் கடுந்தவம் செய்து வந்தான். ஒருநாள். வலைஞர்கள் மீன் பிடிக்க கங்கை ஆற்றில் வலையை வீசினார்கள். தண்ணீருக்குள் தவம் புரிந்த கொண்டிருந்த சியவன முனிவர் வலையில் அகப்பட்டுக் கொண்டு மீனுக்குப் பதிலாக வலையோடு வெளியே வந்தார். செம்பட வர்கள் “புனிதரே, தெரியாமல் தங்களை மீனென நினைத்துப் பிடித்து விட்டோம் பொறுத்துக் கொள்க; எங்களைக் காப்பாற்றுவீராக” என வேண்டி நின்றனர்.

அப்போது அந்த முனிவர் “வலைஞர் களே உங்கள் பால் எந்தவிதக் குற்றமும் இல்லை. உங்கள் குலத்தொழிலைச் செய்து என்னைப் பிடித்தீர்கள். எனவே மீன் களோடு மீன் போல என்னையும் ஒரு மீனாக எண்ணி விலைபேசி விற்று அக் காசினை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மீனவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அந்த விவகாரத்தை அந்த நாட்டை அப்போது ஆண்டுவந்த நகுஷ மகாராஜாவிடம் மீனவர்கள் எடுத்துச் சென்றனர். அரசன் இதனைக் கேட்டு அறிந்து சியவன முனிவரிடம், “முனிவரே! அறிவில்லாத மூடர்கள் தவறுதலாகத் தங்களை மீன் என எண்ணிப் பிடித்து விட்டார்கள்; பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றான். அதற்குச் சியவனமுனிவன், “அரசே! வலையில் அகப்பட்ட மீன்களை யெல்லாம் விற்கும்போது என்னையும் விற்க வேண்டுமல்லவா! ஆனால் என்னை மட்டும் விற்காது விட்டு விடுகிறார்கள். இது நியாயமா? தர்மந்தானா?”என்று கேட்டார்.

அதைக் கேட்ட நகுஷ மகாராஜன் சிறிது நேரம் யோசித்தான். பின்னர் “உங்க ளுக்காக, உங்களை பிடித்த வலைஞர் களுக்கு ஆயிரம் பொன் தருகிறேன்.” என்றான். அதனைக் கேட்ட முனிவர், “என் மதிப்பு இவ்வளவு தானா?” என்றார். பின் ”ஒரு லட்சம் பொன் தருகிறேன்” என்றான் மன்னன். அப்பொழுதும் முனிவன் திருப்தி அடையவில்லை. பின்னர் ஒரு கோடி பொன் கொடுப்பதாக நகுஷன் கூறினான். அதற்குச் சியவனன் “என்னுடைய மதிப்பு எவ்வளவு என்பதை மற்ற முனிவர்களைக் கலந்தாலோசித்து பின்னர் கொடுங்கள்” என்றார்.

மன்னன் நகுஷன் என்ன செய்வது என்று யோசித்திருக்கும் வேளையில் கோவிடம் (பசுவிடம்) பிறந்தவராகிய கவிஜாதன் (கவிஞன் எனவும் கூறுவர்) என்ற முனிவர் நகுஷனை அணுகி, “நகுஷ மன்னா! இந்த சியவனமுனிக்கு உலகம் ஏழினை கொடுத்தாலும் ஈடாகாது. தேவர்களுக்குச் சிறந்த ஹவிஸாக உதவுவது பசுக்களே. அதனால் அவர்கள் ஒளியோடு விளங்கு கின்றனர். யாகமும், ஹோமமும் எப்போ தும் பசுக்களைப் ளைப் பொறுத்தே அமை கின்றன. யாகத்தை நடத்துவதும் அவை தான். மனிதர்களுக்குச் சுகத்தை கொடுப் பவையும் அவையே. பசுக் கூட்டம் எந்த விடத்தில் அச்சமின்றி மூச்சு விடுகின்றதோ அந்தத் தேசத்தின் பாவத்தையே அந்த பசுக் கூட்டம் போக்கி விளங்கச் செய்கின்றது. பித்ரு லோகத்திற்கு அழிவில்லாத சுவர்க்க மாகிய அமிர்தத்தை பெருக்குபவை பசுக்களே. இம்மை, மறுமை, வீடு என்ற மூன்று நிலைகளை அறிந்த அந்தணர்களின் மனத்து இடைவிடாது செபிக்கும் மந்திரங் களும் பசுக்களே. ஆதலின் அந்தணர் குலமும் பசுக்கள் குலமும் ஒன்றே. ஒன்றே இரண்டாகப் பகுக்கப்பட்டிருக்கின்றது. அந்தணர் குலத்தில் மந்திரங்கள்:- பசுக்கள் குலத்தில் உண்டாகும் நெய் முதலாகிய ஹோமத் திரவியங்கள் ஆகையால் இம்முனிவனுக்குப் பசுவை விலையாக கொடுக்க முயல்வாய்.” இன்னும் சொல்கின்றேன் கேள்.

தேவர்களில் உயர்ந்த மும்மூர்த்திகள்

“தேவர்களில் உயர்ந்தவர்கள் பிரம்ம. திருமால், ருத்திரர் என்ற மும்மூர்த்திகள் ஆவர். அவர்கள் தூயவர்கள். அம்மூவரினும் சிறந்தவர் தவசியர். அவர் கொண்டொழுகும் நடைமுறைகள் பசுவினால் சித்திக்கின்றன” என்று கூறிய கவிசாதமுனி மேலும்,

“அத்தகைய பசுவொன்றை சியவனர் போன்ற புனிதர்க்கு மனமகிழ்ந்து ஈந்தவர். அப்பசுவின் தேகத்திலுள்ள ஒரு மயிருக்கு ஓர் ஆண்டு காலம் தேவலோகத்தை அடைந்து, எல்லா நற்பேறுகளையும் பெற்று, அனுபவித்து, பின் சுவர்க்க லோகத்தை அடைவர். இது மட்டு மல்லாது, சிவபெருமான் தன் மேனி முழுதும் பூசும் விபூதியும், அவன் இடபக் கொடியும், இடப வாகனமும் பசுவினால் தான் உண்டாக்கப்பட்டன. அதனால் இந்த புனித சியவன முனிவருக்கு நிகராவது பசுவேயாகும். அதனைச் சியவன முனிவரின் விலைக்கீடாக சொல்லி வலைஞர்க்குக் கொடுத்து உதவுக” என்று சொல்லி முடித்தான்.

பின்னர் நகுஷராஜன் சியவன முனிவரோடு நன்கு ஆலோசித்துப் பேசி அவர் இசைந்தபடியே அவ்வலைஞர்க்கு ஒரு பசுவினைக் கொடுத்து உதவினான். வலைஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட பசுவை அந்த முனிவனுக்குக் கொடுத்தார்கள்.

சொர்க்கம் சென்ற மீனவர்கள்

சியவன முனிவரும் பசுவை ஏற்றுக் கொண்டு, வலைஞர்களை நோக்கி. “உங்களிடத்திலிருந்து பசுவைப் பெற்றுக் கொள்கின்றேன். நீங்கள் பாவத்தை விட்டு வலையினால் எடுக்கப்பட்ட மீன்களோடு சுவர்க்கத்திற்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். பரிசுத்த ஆத்மாவான அந்த முனிவரின் மகிமையால் அவர் சொன்ன படியே, அந்த வலைஞர்கள் தங்கள் மீன்களுடன் சொர்க்கம் சென்றனர்.

அதன்பின்னர் சியவன முனிவர், கோதானம் செய்த நகுஷ மகாராஜனி டத்தில், “நீ இறந்த பின் தேவலோகத்தை ஆளும் இந்திரன் ஆவாய்” என்று சொல்லி வரமளித்து காட்டிற்குச் சென்றார். அதனால் நகுஷன் இந்திர பதவி பெற்றான் என்பது வெளிப்படை.

அந்தச் சியவன முனிவர் பன்னிரண்டு ஆண்டு காலம் மீன்களோடு ஒருசேர வசித்துப் பழகி வந்த பழக்கத்தால், அந்த மீன்கள், வலையில் அகப்பட்டுப்படுகின்ற துன்பத்தை கண்டார். ஆகையால் தானும் அங்ஙனமே பன்னிரண்டு ஆண்டு காலம் வலையில் அகப்பட்டு அவற்றின் துன்பத்தை அறிந்தார். அனுபவித்தார். அந்தச் சியவன முனிவருடன் சேர்ந்து வாழ்ந்த பழக்கத்தால் அந்த மீன் கூட்டம் வலைஞரோடு சொர்க்கம் சேர்ந்தது.

இந்தக் கதையினால், “தர்மபுத்திரரே! சேர்விடத்தின் மேன்மையையுணர்ந்தாய். பசுக்களின் மாண்பினை அறிந்தாய் ” என்று பிதாமகர் பீஷ்மர் கூறினார்.

பூமியில் செய்ய வேண்டிய தானங்கள் ”பூமியில் தகுதியுடன் செய்ய வேண்டி எல்லாத் தானங்களையும் எனக்குச் சொல்வாயாக” என்று தர்மபுத்திரர் அடுத்த ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தர்ம புத்திரரே! பொன், வெள்ளி, செம்பொன் னாடை, ஒளியுள்ள மணி வகைகள், தேர், பல்லக்கு, யானை, குதிரை போன்ற வற்றைத் தானம் செய்யலாம். இவற்றினும் சிறந்தது கன்னிகா தானம். அதனினும் சிறந்தது அன்னதானம். அஃதாவது பசி போக்க சோறிடுதல் ஆகும். அதனினும் சிறந்தது குளத்து நீரை குடிக்கத் தந்திடுதல் (குளம் வெட்டல்). அதனினும் நன்மை பயக்கக் கூடியது தான் கற்றறிந்த வித்தையை மற்றவருக்குக் கற்பித்தல் ஆகும். (வித்தியாதானம்) அவற்றினும் சிறந்தது எள்ளைத் தானம் செய்தல்; அதனினும் சிறந்தது பூமிதானம்; அதனி னும் சிறந்தது கோதானம். அதைக் காட்டிலும் வருகின்ற விருந்தினர்க்கு அவர் விரும்பிய பொருளைக் கொடுத்தல் சிறந்தது ஆகும். அதனினும் சிறந்தது ஞான சமுத்திரத்தில் மூழ்கி கலைக்கடலைக் கடந்தவர்க்கு தானம் செய்தல் ஆகும். அதனினும் சிறந்தது வறியோர்க்கு அவர் விரும்பிய பொருளை கொடுத்து உதவுதல் ஆகும். அதனைவிட சிறந்த தானம் வேறொன்று மில்லை” என்று கூறினார்.

(குறிப்பு: பூமிதானம் செய்பவன்

தேவலோகத்தில் தேவர்களாலும், கந்தர் வர்களாலும் பூஜிக்கப்பெற்று சுகமடைந்து மகிழ்ந்திருப்பான். அவனிடத்தில் எப்போ தும் புண்ணியங்கள் சேரும். இதனால் எல்லோரும் பூமியில் கொஞ்சமாவது தானம் செய்ய வேண்டும். கோதானம் செய்பவன் உயிர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவன் ஆகின்றான். ஏனெனில் பசுக்கள் பிராணிகளின் உயிர் என்று சொல்லப்படுகின்றன. அவை பாலினா லும், தயிரினாலும், நெய்யினாலும், கோமயத்தினாலும், தோலினாலும், எலும் பினாலும், கொம்புகளினாலும், வால்களினாலும் உபசாரம் செய்கின்றன. கோதானம் செய்து நல்ல லோகங்களை அடைந்த அரசர்கள் பலராவர். தேவர்கள் கோக் களிடத்தில் வசிக்கின்றனர் என்பர். வேதங்களும் உப நிஷத்துக்களும் பசுக் களின் படிவங்களாயிருக்கின்றன. அத்தகைய பசுவைத் தானம் செய்தல் சிலாக்கியமாகும். வறியார்க்கு ஒன்று ஈதலை வள்ளுவர் “வறியார்க்கொன்றீவதே ஈகை ” என்றார். அன்னதானம் பலத்தைக் கொடுப்பது உயிரை கொடுப்பது உலக வாழ்க்கையும், யாகங்களும் அன்னத்தை பொறுத்தவை. ஒளியும் பராக்கிரமும் அன்னத்தினால் உண்டாகின்றன. அன்னமே சிறந்த திருமகளாகக் கருதப்படுகின்றது. அதனால் தான் பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைத் தானம் செய்வதைவிட அன்னதானம் சிறப்புடையது எனக் கருதப்படுகின்றது. ஆகலின் அன்னத்தை யாருக்கும் எந்த நேரத்திலும் தானம் செய்தல் மேன்மையாகக் கருதப்படு கின்றது. பொன்னே சிறந்த தக்ஷிணை யாதலின், பரிசுத்தமாக விளங்கலின் அதனைதானம் செய்தல் சிறந்தது ஆகும்).

குளம் வெட்டல் சிறந்ததா?

அதன்பின் தர்மபுத்திரர், குளம் வெட்டல்’ சிறந்தது என்று கூறுவர். அதன் காரணத்தைக் கூறுக என தர்மபுத்திரர் கேட்டார்.

அதற்கு பீஷ்மர், ”குளம்தான் எல்லா உயிர்களுக்கும் சிறந்த ஆதாரமாகும். ஒருவன் வெட்டுவித்த குளத்திலுள்ள நீரை மனிதர்களும், பசுக்களும், மான்களும். பறவைகளும் குடிக்கும் என்றால் அந்த குளத்தை வெட்டிய அந்த மாபெரும் மனிதன் தன் குலத்தவரோடு சுவர்க்கப் பேற்றினை நிச்சயம் அடைவான். மேலும் நாலாம் வருணத்தவராகிய சூத்திரர்கள் யாகம் செய்ய வொண்ணாது; ஆதலின் அந்த வேள்விப் பயனைப் பெற அவர்கள் பரந்த குளத்தினை வெட்டுதல் அவர் களுக்கு பெருநன்மை பயக்கும்’ என்று கூறியருளினார்.

மகாபாரதம் – 61 கன்னியாதானம் வரன் பெருமிதம் உரைத்த சருக்கம்… உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அஷ்டாவக்கிரன்

சூரியன் வருவது யாராலே? பாடல்

0

சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் படுவன அவை என்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதை நாம் எண்ணிட வேண்டாவோ?
தண்ணீர் விழுந்ததும் விதையின்றி தரையில் முளைத்திடும் புல் ஏது?
மண்ணில் போட்டது விதையொன்று மரஞ் செடியாவது யாராலே?
கண்ணில் தெரியா சிசுவையெல்லாம் கருவில் வளர்ப்பது யார் வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம் ஏதோ ஒரு விசை இருக்குதன்றோ?
அருகன் கணபதி ஆறுமுகன்
அன்னை அம்பிகை ஸதாசிவன்
ஸ்ரீ ராம க்ருஷ்ண கோவிந்தன்
ஸ்ரீ லக்ஷ்மி துர்கை ஸரஸ்வதி
அய்யனார் ஹநுமன்
என்றெல்லாம் பேசும் தெய்வம் பலவுண்டு
ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றே உண்மையன்றோ?
அந்தப் பொருளை நாம் நினைத்தே அனைவரும் அன்பாய் குலவிடுவோம்
எந்தப் படியாய் எவர் அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல்
செய்யாமல் வந்திப்போம் அதை வணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

சூரியன் வருவது யாராலே? பாடல் Aanmeega Bhairav

கோவில் அழிந்து கொண்டு வருவது… இந்துகோயில்களில் உள்துறை ஊழியர்கள் சார்ந்த மோசடிகள்

0

கோவில் அழிந்து கொண்டு வருவது

படிக்ககூட நேரமில்லாமல் கடந்து போகும் மக்களே அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் என் உறவுகளே…

இந்துகோயில்களில் உள்துறை ஊழியர்கள் சார்ந்த மோசடிகள்

தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாளர்கள் மூன்று வகை,…

1) கமிஷனர், JC, AC, EO, செலக்ஷன் கிரேடு EO.

2) கோயில் அலுவலக மேனேஜர், சூப்பிரண்டட், கணக்குப்பிள்ளை, (கிளார்க்) மற்றும் அலுவலக பணியாளர்கள்.

3) குருக்கள், பர்சாரகர், ஓதுவார், தவில் நாதஸ்வரம், பூக்கட்டி, பண்டாரம், வேத சாஸ்திரிகள், மெய்க்காவல், வண்ணார் என்பர். இவர்களே உள்துறை பணியாளர்கள்.

இவற்றில் முதலில் உள்ளவர்கள் கோயில் பணத்தில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரம் கொண்டவர்கள். உண்டியல் பணத்தில் கார்வாங்கி, அர்ச்சனை பணத்தில் பெட்ரோல் போட்டுக் கொண்டு காரில் வருபவர்கள்.

இரண்டாவதாக உள்ளவர்கள் இந்துசமய அறநிலையத் துறையால் நேரடியாக நியமிக்கப் பட்டவர்கள், மற்றும் தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்கள் என உண்டு. இவர்களுக்கு அரசு சம்பளமும் உண்டு. மேலும் கோயில் அலுவலகத்திலேயே அமர்ந்தபடி ஒரு துளி வியர்வை சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் மேற்படி வகையில் வருமானமும் உண்டு.

பெரிய கோயில்களில் இந்த அலுவலக பணியாளர்கள் வைத்ததே சட்டம். அலுவலகத்தில் இருந்து சுவாமிக்கு எந்த பொருளும் போகாது. ஆனால் நாம் உண்டியலில் பணம் போடாமல் இருந்தால் போதும் காலபூஜை நடைபெற இவர்களுக்கும், குருக்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு.

ஒரு உபயதாரர் வேண்டுதலுக்காக அலுவலகத்தில் பணம் கட்டினால், அந்த பணம் அலுவலகத்தோடு சரி. பெயருக்கு ஒரு ரசீது கிழித்துவிட்டு முறைப்படி பங்கு போடப்பட்டுவிடும்.

மறுநாள் அந்த உபயதாரர் அந்த வேண்டுதலை செய்ய வரும்பொழுது, குருக்கள் எப்பாடு பட்டாவது உரிய பொருட்களை சேகரித்து அந்த வேண்டுதலை நிறைவேற்றி தந்துவிட வேண்டும். குருக்கள் அவர் சாமார்த்தியத்திற்கு ஏதாவது உபயதாரரிடம் வாங்கிக் கொள்ளலாம்.

குருக்கள் இப்படி சமர்த்தாக நடந்து கொள்ளாமல் உங்கள் உபயத்திற்காக அலுவலகத்தில் இவ்வளவு பணம் கட்டினீர்கள். ஆனால் அலுவலகத்தில் இருந்து எந்த பொருளும் வரவில்லை என்று கூறினார் அவ்வளவுதான். அதன்பின் அந்த குருக்களை ஆயிரம் கண்கள் பின்தொடரும். ஏதாவது தவறு கண்டிப்பிடித்து பழி வாங்குதல் நடைபெறும்.

கிராமக் கோயில்கள் வகையில் சுமார் நூறு கோயிலுக்கு ஒரு கிளார்க் இருப்பார். இந்த கிளார்க் யார் என்றால், அந்தப் பகுதியில் பெரியசாதி எதுவோ, அந்த சாதியை சார்ந்தவராக இருப்பார்.

இந்த நூறு கோயிலுக்கும் எவ்வளவு நிலம் உள்ளது என்பது இந்த கிளார்க்கிற்கு அத்துப்படி. அதிகபட்சம் இந்த நிலங்கள் எல்லாம் இந்த கிளார்க் சார்ந்த சாதிக்காரனிடம் இருக்கும். நாளை அந்த கிளார்க்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்த சாதிக்காரன் வந்து பாதுகாப்பான்.

அடுத்து மூன்றாவதாக உள்ளவர்களே உள்துறை ஊழியர்கள். இந்த உள்துறை ஊழியர்களுக்கு பிரதானமாக தேவை ஜால்ரா.

ஜால்ரா போடத் தெரிந்தால் இந்த உள்துறை ஊழியர்கள் பிழைத்துக் கொள்ளலாம். இல்லையேல் பிழைப்பு காலி. காரணம் பணிப் பாதுகாப்பு இல்லை.

கோவில் ஊழியர் ஒரு குருக்கள் அல்லது நாதஸ்வரம் 60 வயது ஆகி ஓய்வு பெற்றுவிட்டால் அதன் பின் முறைப்படி குருக்களையோ நாதஸ்வரம் வாசிப்பவரை ஓதுவார்களையோ நியமிப்பதில்லை இது அறமற்ற துறை அதிகாரிகள்.

ஏற்கனவே, உள்துறை ஊழியர்களில் வேதம் ஓதும் சாஸ்திரிகளை நாற்பது ஆண்டு முன்பே திராவிட ஆட்சிகள் கோயிலை விட்டு விரட்டி விட்டனர்.

கோயில் நந்தவனத்தில் இருந்து தினம்தோறும் பூக்கட்டி தரும் பூக்கட்டியை அவருக்குரிய மாணிய நிலத்தை பிடுங்கி அனுப்பியாயிற்று.

அடுத்து கோயில்களில் நித்தம் சங்கு இசைக்கும் பண்டாரம், இறைவன் துணிகளை சுத்தம் செய்யும் வண்ணார் என அவர்களுக்குரிய மாணிய நிலங்களையும் பிடுங்கி வெளியே துரத்தியாயிற்று.

அடுத்து மீதி இருப்பது குருக்கள், ஓதுவார், நாதஸ்வரம். இதில் பல கோயில்களில் ஓதுவார் நியமிக்க படவில்லை அதேபோல் பல கோயில்களில் நாதஸ்வரமும் நியமிக்கப்படவில்லை. சில கோயில்களில் என் தந்தை நாதஸ்வரம் வாசித்தார் என்ற முறையில் நான் வாசிக்கின்றேன் என்ற முறையிலும், இன்ன கோயில் நாதஸ்வரம் என்ற அடையாளத்திற்கு நாதஸ்வர பணி நடைபெறுகின்றது.

மீதி இருப்பது குருக்கள். அவருக்கு வேறு வழி இல்லை. கோயில் பூஜை விட்டால் வேறு எதுவும் தெரியாது.

பெரிய கோயில்களில் குருக்களுக்கு 60 வயது என்று ஓய்வு பெற்றால் அடுத்து முறைபடி வேறு அர்ச்சகரை நியமிக்காமல், இருக்கும் அர்ச்சரை கொண்டு அல்லது எதிர்காலத்தில் நமக்கு அர்ச்சக நியமனம் கிடைக்கும் என்ற நினைப்பில் வாரிசுகள் தட்டு காசு வருமானத்தை நம்பி பணி செய்வார்.

இதில் ஒரு சில பெரிய கோயில்களில் வாரிசு அர்ச்சகர் நியமனத்திற்கு பல லட்சங்களில் பேரம் நடைபெறும்.

இவற்றுக்கெல்லாம் மசியாமல் ஏதோ ஒரு குருக்கள் சட்டம் பேசி, சட்டரீதியாக போராட்டம் மேற்க்கொண்டால் ஒட்டு மொத்த துறையே அவரை பழி வாங்கக் துடிக்கும்.

இப்படி கோயில்களில் உள்துறை பணியாளர்களை நியமிக்காமலேயே, ஒரு துறை கோயில் வருமானத்தை சுரண்டிக் கொண்டிருக்கின்றது. பல கிராமத்து கோயில்களில் அர்ச்சகர் நியமனம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை ஆனால் கிராம கோயில்கள் சொத்துகளை ஏலம்விட்டு கொள்ளையடிக்க மட்டும் முதலில் வந்து நிற்கும் இந்த துறை.

இந்துக்களிடமும் பக்தர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படாதவரை இதற்கு விமோசனம் இல்லை பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் நம்முன்னோர்கள் வழிபட்டு வந்த இந்துகோவில் அனைத்தும் ஒருவேளை பூஜைகள் இல்லாமலும் கோவில் கட்டிடம் எந்த வித பராமரிப்பு இல்லாமல் அழிந்து கொண்டு இருக்கிறது பல கோவில்கள் 50 ஆண்டுகள் ஆகியும் 12ஆண்டுக்கு ஒருமுறை நடை பெரும் மகா கும்பாபிசேகம் வழிபாடு செய்யாமல் கோவில் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு கோவில் மட்டும் அழிந்து வருகிறது

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விதமான நவீன இயந்திரங்களும் இல்லாத காலத்தில் வெறும் உளி, சுத்தியல் கொண்டு கடினமான பாறையில் நுட்பமாக செதுக்கப் பட்ட அற்புதமான கலை நயமிக்க மன்னர்கள் கட்டிய கலை நயமிக்க கோவிலை காப்பாற்ற வேண்டும் நாம் உண்டியலில் பணம் போடாமல் இருந்தால் போதும்.அறநிலைத்துறை கலைக்கப்படும்

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி தர்கா தேவி சரணம்… பாடல்

0

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி தர்கா தேவி சரணம்
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்
துர்கை அம்மனைத் துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும்

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி தர்கா தேவி சரணம்
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மைச் சுற்றிவரும் பகைவிரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையை காட்டும்
ஆயிரங்கண்கள் உடையவளே ஆதி சக்தியவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய்போல் நம்மைக் காப்பவளே

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி தர்கா தேவி சரணம்
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்

சங்கு சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலுடன் சூலமும் தங்கக் கைகளில் தாங்கி நிற்பாள் சிங்கத்தின்மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடிமேல் சூடி நின்றாள் மங்கள் வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்க் கரசியும் அவளே அங்கையற் கண்ணியும் அவளே

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்.

ஜய ஜய தேவி ஜய ஜய தேவி தர்கா தேவி சரணம்… பாடல் Aanmeega Bhairav

மகாபாரதம் – 60… இந்திர மதங்க சம்வாத சருக்கம்

0

இஃது இந்திரனுக்கும் மதங்கன் என்பவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைத் தெரிவிக்கும் பகுதியாகும். இந்தச் சருக்கத்தின் மூலம், ‘பிராமணியம் என்பது உயர்ந்த நிலை; அது பெறுதற் கரியது; ஒருவேளை பெற்றாலும் பிராமணி யத்தை ஒழுங்காகக் காப்பாற்றுவது கடி னம். எனவே க்ஷத்திரியர் முதலாக உள்ள மூன்று வர்ணத்தார் பிராமணர் ஆவது என்பது சிறிதளவும் முடியாது. ஆத்ம சுத்தி பிராம இல்லாதவர்கள் பெறக்கூடாத பிராமணத் தத்துவத்தை வேண்டி முயன்றால், அவர் அழிந்து போவர்; எனவே அந்தப் பிராமண தன்மை என்பது ஜன்மத்தினால் வருவதேயன்றி இடையில் வராது” என்பது அறிய வேண்டிய ஒன்றாகும்.

தன் தந்தை சந்தனு மன்னன் கொடுத்த வரத்தினால், தான் நினைத்த அன்று உயிரை விடும் அரிய பேற்றைப் பெற்ற பீஷ்மரை நோக்கி, தர்மபுத்திரர், “பிதாமகரே! குரு க்ஷேத்திரப் போர் மூலம் யான் செய்த பாவங்களை உம்முடைய தேவாமிர்த மாகிய வார்த்தைகளினால், ஒலித்து அருள் செய்தீர் இனி க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் பின் வருணத்தோர் மூவரும், முதல்வருணவத்தவராகிய பிராமணரோடு இசைந்து ஒரு நிகராகப் பிராமணத்தன்மை அடைதல் முடியுமா? சொல்லுங்கள் ” என்று கேட்க அதனை ஒரு கதை மூலம் பீஷ்மர் விளக்கலானார்.

ஓர் அந்தணன் தன் மைந்தன் மதங்கன் என்பவனை யாக நிமித்தமாகத் தர்ப் பையைக் கொணர்தற்குக் காட்டிற்கு அனுப்பினான். போகின்ற பொழுது எதிரே வந்த ஒரு கழுதைக் குட்டியினை அவன் அடித்து விட்டான். அந்தக் கழுதைக் குட்டியோ தன் தாயிடம் தன்னை மதங்கன் அடித்ததைக் கூறியது.

அதைக் கேட்டு தாய்க்கழுதை, “பிரா மணக் குலத்துக்கும் சூத்திரப் பெண்ணுக் கும் பிறந்த புலையன் (சண்டாளன்) அவன், பிராமணன் என்றால் உன்னை அடித்திருக்க மாட்டான், பிராமணன் என்பவன் எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதி அன்பு பூண்டொழுகுபவன். அவன் உண்மையான பிராமணன் அல்லன், ஆகையால் உன்னை அடித்திட்டான்” என்றது.

தவத்தை மேற்கொண்ட மதங்கன்

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மதங்கன் தாய்க்கழுதையிடம் சென்று. ”வேதியனாகிய என்னை ஒரு சண்டாளன் என்று சொன்னது எதனால்?” என்றான். அதற்கு அக்கழுதை, “உனது தாய் உன்னைச் சூத்திரன் ஒருவனுக்குப் பெற்றெ டுத்தாள். எந்த வருணமும் இல்லாதிருக் கின்ற காரணத்தினால்தான் நீ சண்டாளன் ஆயினாய்! அதனால் தான் உன்னைச் சண்டாளன் என்று கூறினேன்” என்றது.

தனக்கு வந்த பழியைக் கண்டு அஞ்சி, அவன் தன் தந்தையை நோக்கி, ‘இனி நான் காட்டிற்குச் சென்று தவத்தினை மேற் கொண்டு பிராமணியம் பெற்று, பிரா மணன் ஆவேன்” என்று கூறிக் காட்டிற்குச் சென்று தவத்தைச் செய்தான். மதங்கனின் தாய், முன்னர் வேதியனை மணந்திருந்தும் சோரம் போய், சூத்திரனிடத்துப் பிள்ளை (மதங்கனை) பெற்றதனால், மதங்கன் முன் மணந்த தந்தையை நோக்கப் பிராமணன் ஆயினும், தாய் பிராமணத்தன்மை இழந்து விட்டதனால், அப்பிராமணத் தன்மையை மீண்டும் பெற அரிய தவத்தை மேற் கொண்டான்.

நூறாண்டுக்காலம் தவம்

தவத்தை மேற்கொண்ட மதங்கன் முன், இந்திரன் தோன்றி, “ஒற்றைக்காலில் நின்று கொண்டு ஆகாயத்தை நோக்கியவண்ணம் நூறாண்டுக் காலம் கோரமான தவத்தை எதன் பொருட்டுச் செய்கின்றாய்?” என்று கேட்டான். அதற்கு மதங்கன், “நான் பிராமணன் ஆக வேண்டும் ” என்றான். அதற்கு இந்திரன் “அது நம்மால் ஆகாது வேறு வரம் வேண்டுமென்றால் கேள் என்றான். அதற்கு மதங்கன், ‘எனக்கு வேறு வரம் வேண்டா. இது தான் வேண்டும்” என்று பதில் சொல்ல “அது எம்மால் முடியாது” என்று மீண்டும் சொல்லி அவ்விந்திரன் போய் விட்டான்.

மீண்டும் மதங்கன் கால் கட்டை விரலை மட்டும் தரையில் வைத்து உடல் இளைத்து, கீழே விழும் அளவுக்குத் தளர்ந்து போகும் வண்ணம் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தான். அப்பொழுதும் இந்திரன் தோன்றி, “எதற்கும் பயன்படாத விரதத்தை மேற்கொண்டு தவத்தைச் செய்து உடலை ஏன் வீணாகக் கெடுத்துக் கொள்கிறாய்? இந்த ஒரு பிறப்பினால் பிராமணத்துவத்தை பெற்று நீ பிராமணன் ஆக முடியாது. பல பிறவிகள் எடுத்தபின் ஒரே ஒரு தடவை பிராமணப் பிறவி கிடைக்கும். மதங்கா! இன்னும் சொல்லு கின்றேன் கேள்.

“பொறுமையை மேற்கொண்டு தவத்தை நூறு மடங்கு செய்பவர்கள், புலையர்களாகவும், சண்டாளர்களாகவும் சூத்திரர்களாகவும் பிறப்பார்கள்; அந்த சூத்திரர்கள் இன்னும் நூறு மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் வைசியர் ஆகலாம். அந்த வைசியர்களோ இன்னும் ஆயிரம் மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் க்ஷத்திரியர் ஆகலாம். அந்த க்ஷத்திரியர்கள் இன்னும் ஆயிரம் மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் பிராமணர் ஆகலாம். அந்தப் பிராமணர்கள் இன்னும் பத்தாயிரம் மடங்கு பொறுமை யுடன் தவம் செய்தால் பிராமண சிரேட்டர் ஆகலாம்.

‘எனவே இத்தகைய மிக அரிதான தவம் செய்வதை விட்டு விடு; அது பெறுதற் கரியது. இதுவரையில் செய்த தவத்திற்கே நீ நல்ல அழகு பெற்று, உலகிலுள்ள பெண்கள் அனைவரும் உன்னை ‘சந்தோ தேவன்’ என்று போற்றும் வண்ணம் புகழ் பெற்றுத்திகழ்வாய். அவர்கள் செல்வத் தைக் குறித்து செய்யும் கர்மாக்களில் உன்னையே பூஜிப்பார்கள். நீ போய் விடுக” என்று கூறினான்.

இந்திரன் சென்ற பின் மதங்கன் சிறந்த மேனியழகு பெற்று, பல பெண்கள் போற்ற இப்புவியில் நீண்ட காலம் வாழ்ந்தான்.

சண்டாளன் என்றால் என்ன?

பிராமணப் பிறப்பை பற்றி, “விலங்கு ஜாதியில் பிறந்தவை அனைத்தும் மானிட ஜன்மத்தை அடைந்தால் சண்டாளனாக பிறப்பது திண்ணம் (கலப்பு ஜாதியில் பிறந்தவர்களை சண்டாளன் என்பர் அக்காலத்தோர்) ஆயிரம் தடவை ஜனித்த பிறகு சூத்திர ஜாதியில் அவன் பிறப்பான்) முப்பது முறை சூத்திர ஜாதியில் பிறந்த பிறகு வைசிய ஜன்மத்தை அடைகிறான்; அறுபது முறை வைசிய குலத்தில் பிறந்த பிறகு, பிராமண ஜாதியில் தாழ்வான ஜன்மத்தை அடைகிறான். தாழ்வான பிராமணன் இருநூறு முறை அக்குலத்தில் பிறந்த பிறகு, அவன் ஆயுதம் பிடித்து ஜீவிக்கும் பிராமணன் ஆகிறான். அவன் முந்நூறு முறை தவம் செய்த பிறகு ஜபம் செய்யும் பிராமணனாகப் பிறக்கிறான். அந்த ஜபம் செய்யும் பிராமணன் நானூறு முறை பிறந்த பிறகு வேதங்களைப் பொருளுடன் அறிந்து அவற்றை வாழ்க்கை யில் அனுஷ்டிக்கின்ற ச்ராத்திரன் ஆகின்றான். ஆகலின் பிராமணன் ஆவது கடினம்” என முதல் நூலாகிய வியாச பாரதம் கூறுகிறது.

அதன் பின்னர் தர்மபுத்திரர், “மதங்கன் பிராமணன் ஆகாமலிருந்தது சரி; க்ஷத்திரியனாகிய விசுவாமித்திரன் வேறு தேகம் புகாமல் பிராமணரானது எப்படி?என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்.

ஸத்தியவதியை மணந்த ரிசீகன்

காதி என்னும் அரசனுக்கு ஸத்தியவதி என்றொரு பெண் இருந்தாள். அவளை, ரிசீகன் என்றொரு பிரமரிஷி, ஒற்றைக்காது கறுத்தும். மற்றைய மேனி முழுவதும் சந்திர கிரணக்கதிர் போல பிரகாசித்தும் விளங்கக் கூடிய வாயு வேகமுள்ள ஆயிரங்குதிரைகளை வருண பகவான் அருளால் பெற்று அவற்றைக் காதி என்னும் அரசனுக்குத் தந்து ஸத்தியவதியை மணந்தார். ரிசீகனின் பெருமையை உணர்ந்ததால் காதி அரசன் மனைவி தனக்கு ஒரு புத்திரன் அருளும்படி வேண்டினாள். அதனால் அவர் யாகம் செய்து, இரு ஹவிஸ்களை உண்டாக்கித் தன் மனைவி ஸத்தியவதியிடம் கொடுத்து, ருது ஸ்நானம் செய்த பிறகு உன் தாய் அரச மரத்தையும், நீ அத்திமரத்தையும் தழுவிக் கொண்டு, பின்னர் மந்திரத்தினால் ஜபிக்கப்பட்டு பரிசுத்தமாயுள்ள இந்த ஹவிஸ்களை உண்ணுங்கள்; அதனால் இருவரும் புத்திரர்களை அடைவீர்கள்” என்று கூறிக் கொடுத்தார்.

அவர்களோ, அவர் கூற்றுக்கு மாறாக இருவரும் தத்தம் ஹவிஸ்களை மாற்றிக் கொண்டனர். தழுவுகின்ற மரங்களையும் (தாய்-அத்தி மரம்; சத்தியவதி- அரசமரம்) மாற்றிக் கொண்டு, மாற்றிக்கொண்ட ஹவிஸையும் உண்டனர்.

அதன் விளைவாக பிரம்மதேஜஸ் கொண்டிருந்த ஹவிஸை ஸத்தியவதியின் தாய் உண்ண ஸத்தியவதி க்ஷத்திரிய சக்தி முழுவதும் கொண்டிருந்த ஹவிஸைத்தான் உண்ணும்படி நேர்ந்தது.

ஆகவே காதியின் மனைவி க்ஷத்திரிய ஸ்திரீயாயினும் அவள் வயிற்றில் ரிசீக மஹரிஷியின் அனுக்கிரகத்தினால் விஸ்வா மித்திரர் பிராமண்யம் பெற்று பிரம்மரிஷி ஆனார். எனவே க்ஷத்திரியராயிருக்கும் பிராமணத்துவத்தை அடைந்து பின்னர் அவர் பிராமண சந்ததியை உருவாக்கிக் காட்டினார்.

தர்மராசனே! அதனால் தான் க்ஷத்திரிய ரான விஸ்வாமித்திரர் சிறந்த தவமுள்ள பிரம்மரிஷியானார் என்று பதில் கூறினார். (இந்த வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்டி ருந்தும் தெளிவாக அறிந்து கொள்ளும் பொருட்டு மீண்டும் இங்கு சொல்லப் பட்டுள்ளது).

எது சிறந்தது?

அடுத்து தர்மபுத்திரர் பீஷ்மரை நோக்கி. “பிதாமகரே! ஊழ்வினை, முயற்சி என்னும் இரண்டினுள் எது சிறந்தது” என்று கேட்டார்.

அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தொடக்கத் தில் நாம் ஊழ்வினையால் உந்தப்பட்டு ஒரு காரியத்தில் புகுகின்றோம். ஆகவே அவ்வூழ்வினை சிறிதளவு நிறைவேறுமே யன்றி முற்றிலும் நிறைவேறாது. முற்றிலும் நிறைவேற முயற்சி தேவை. மிகச் சிறிய நெருப்பு காற்றினால் தூண்டப்பட்டு பெரிதாகும். காற்றில்லையேல் நெருப்பு எங்கணும் பரவிப் பெரிதாக எரியாது. இரண்டும் சேர வேண்டும். அஃதே போல் ஊழ்வினை முயற்சியுடன் சேர்ந்து நன்றாக அபிவிருத்தி அடைகிறது. எடுத்தகாரியம் முயற்சி இன்றேல் முற்றிலும் நிறை வேறாது” என்று பதில் கூறினார்.

பீஷ்மரின் கருத்தினை,

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் பிரதிபலிப்பதை காண்க.

“ஒருவன் நல்ல நிலையிலிருக்கும்போது அவன் உதவி பெற்றும் அவனை அண்டி வாழ்ந்தும் உள்ள சிலர் அவனுக்குத் துன்பம் வருங்கால் விலகி நிற்கின்றனர். சிலர் மட்டும் உடனிருக்கின்றனர். இவற்றில் எது சரி? என்று உலகில் பெரு வழக்காக இந்த நிலைகள் இருத்தலின் தர்மபுத்திரர் இவ்வினாவை எழுப்பினார். வேடன் ஒருவன் கொடிய அம்பொன்றை, இலை, கனி, காய்கள் இருக்கக் கூடிய மரத்தின் மீது ஏவினான். கொடிய விஷம் தடவிய அம்பு பாய்ந்ததால் அம்மரம் இலை, காய்கள் உதிர்ந்து கீழே விழுந்து வற்றல் மரமாகியது.

அம்மரப் பொந்திலேயே நீண்ட காலம் வாழ்ந்திருந்த கிளியொன்று மரம்,வற்றல் மரமாகியும், அம்மரத்தை விட்டுப் போகா திருந்தது. அம்மரத்திலேயே இருந்ததால் காய், கனிகள் கிடைக்கப் பெறாது பெரிதும் துன்பத்தை அனுபவித்தது.

இந்திரனிடம் கிளி கேட்ட வரம்

அப்பொழுது அந்தண வடிவத்தில் அங்கு வந்த இந்திரன், ‘அக்கிளியிடம் வந்து, “கிளியே! பழுத்த மரங்களை விரும்பி அவற்றின்பால் தாவிச் செல்லும் பறவைகள் நீங்கள்; அப்படியிருக்க, பழுத்த வேறோர் மரத்திற்குப் போகாமல், இந்த உலர்ந்த மரத்தையே விடாமல் ஏன் இங்கேயே இருக்கின்றாய்? சொல்” என்றார். அதற்கு அந்தக் கிளி, இந்த மரத்திலுள்ள பழங்களையும், காய்களையும் அன்போடு அளவற்ற நாட்கள் உண்டேன். இப்பொழுது இந்த மரம் உலர்ந்து விட்டது. இத்தகைய துன்பம் இந்த மரத்திற்கு வந்து விட்டதைப் பார்த்தும் இன்பம் தேடி வேறு மரத்திற்குச் செல்வது சிறந்த தோ? நீயே கூறுவாயாக” என்றது.

உடனே அந்தண வடிவத்தை விட்டு இந்திரனாக அக்கிளி முன் நின்று, “கிளியே! இந்த மரம் உலர்ந்து வாடி வதங்கி போயிருத்தல் போல நீயும் பசியால் வாடி வதங்கிப் போதல் நன்றாக இல்லை உனக்கு ஒரு வரம் தருகின்றேன் கேள்” என்று கூறினான். அதற்கு அந்தக் கிளி, “இந்த மரம் முன்னைப் போலவே காய்கனிகளுடன் செழித்து இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டது. இந்திரனும் அந்த மரத்தின் மேல் தேவாமிர் தத்தைப் பொழிந்தனன். உடனே அம்மரம் இலைகளும், காய்களும், கனிகளும் உடையதாய் செழித்து விளங்கியது. “ஆதரவு அளித்தவரை விட்டு ஒருபோதும் பிரியக்கூடாது” என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா” என்று பீஷ்மர் பதில் கூறினார்.

ஞானத்தில் உயர்ந்த பரஞானம் எது?

“ஞானத்தில் உயர்ந்த பரஞானம் என்பது எது? சொல்வாயாக” என்று தர்மபுத்திரர் கேட்சு, பீஷ்மர், “விஷ்ணுவின் அழகிய திருவடிகளை தரிசித்தலாகும் ” என்று கூறிய அவர் மேலும், ‘சிவபெருமான், நான்முகன், திருமால் என்னும் மும்மூர்த்தி களை முதலாகக் கொண்ட எல்லா தேவர் களும் தொழ விளங்குகின்ற துவாரகை நாதனாகிய கண்ணனே ஞானத்திற்கும் மேலான பரஞானம் ஆகும்” என்று கூறி முடித்தார்.

அப்பொழுது அங்கிருந்த சில முனிவர் கள், “சில நாட்களுக்கு முன் ஒருத்தி (தேவகி) மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி (யசோதை) மகனாய் வளர்ந்து இன்று நம்மோடு இருக்கும் கண்ணபிரானா பரஞானம்?” என ஐயுற்றுக் கேட்டவர் களைப் பார்த்து, பீஷ்மர், “உளி சிறிய தாயினும் பெரிய மலையையே பிளக்கும். அஃதே போல நம் கண்ணபிரான் தேவகி புத்திரன் ஆனாலும், நம்மோடு கூடிக் குலவுகின்றவன் ஆனாலும் அவனை எளியன் என்று எண்ணாதீர். அவன் பரஞான ஸ்வரூபன்; எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் ஆற்றலுடைய வன்; மேலும் அவன் பரப்பிரம்மம் என்பதை குருசேக்ஷத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு, தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்ததும், அந்த அர்ச்சுன னுக்கு விசுவரூப தரிசனம் தந்ததையும் கொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அப்பரம்பொருள் தன் சங்கற்பத் தின் படியே தர்மபுத்திரர் செய்த பாக்கியத் தால் நம்முள் ஒருவனாகப் பழகி வருகின்றான்” என்று சொல்ல, கண்ண பிரான் அப்போது குறு நகையுடன் ஒன்றுமே அறியாதவன் போல இருந்தான். முனிவர்கள் மகிழ்ந்தனர். அனைவரும் உளம்

”பிதாமகரே! சிலர் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பதும், வேறு சிலர் அற்ப ஆயுள் உள்ளவராய் இருப்பதும் எதனால்?” என்று தர்மபுத்திரர் கேட்டார்.

அதற்கு, பிதாமகர் பீஷ்மர், “நல்லொ ழுக்கத்தினால் மனிதன் நீண்ட ஆயுளை அடைகிறான். பெருஞ்செல்வத்தையும் அடைகின்றான். அதோடு புகழையும் அடைகின்றான்.”

மனிதன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

(1) மனிதன் விடியுமுன் எழுந்திருக்க வேண்டும். வாயையும் முகத்தையும் நன்கு கழுவ வேண்டும். குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். ஆடையின்றிக் குளித்தல் கூடாது.காலை வணக்கம் செய்ய வேண் டும்.

(2) சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், நண்பகல் நேரம், கிரகணம் பிடிக் கும் நேரம் போன்ற சமயங்களில் சூரியனை யும், தண்ணீரில் சூரிய பிம்பத்தையும் காணக்கூடாது.

(3) கையிலே தர்ப்பையை வைத்துக் கொண்டு, மௌனத்துடன், பரிசுத்த உள்ளத்தனாகி, மனத்தில் இறைவனையே நினைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

(4) பிறர் பயன்படுத்திய ஆடைகளை உபயோகிக்கக்கூடாது.

(5)அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தசி. அஷ்டமி, துவாதசி, தான் பிறந்த நாட்களில் மனைவியோடு சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

(6) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் நாவினால் சுட்டவடு ஆறாது, ஆதலின் எவரையும் கடுஞ் சொற்களால் தூஷிக்கக் கூடாது.

(7) தினந்தோறும் வேதங்களையும். இதிகாசங்களையும் படிக்க வேண்டும். உறங்கி எழுந்தவுடன் தாய் தந்தையரையும், பின்னர் ஆசாரியரையும் வணங்க வேண் டும்.

(8) வடக்கு, மேற்கு போன்ற திசைகளில் தலை வைத்து படுக்கக் கூடாது.

(9) எப்பொழுதும் மௌனமாய் கிழக்கு முகமாய் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஈரக் கால்களுடன் படுக்கக்கூடாது. ஈரக்கால் களுடன் சாப்பிட வேண்டும்.

(10) உணவு உண்ட பின் தயிர் குடிக்கக் கூடாது. இரவில் அதிகம் சாப்பிடக்கூடாது.

“இவை போன்றவற்றை கடைப்பிடித் தால் ஆயுள் வளரும்” என்று கூறினார்.

“சிறந்த உபவாசகங்களின் பெயர்களை யும், பலன்களையும் சொல்ல வேண்டும் ” என்று தர்மபுத்திரர் கேட்க பீஷ்மர் கூறலானார்.

(1) சித்திரை மாத துவாதசி இரவிலும் பகலிலும் ‘விஷ்ணு’ என்ற திருநாமத்தை சொல்லிப்பூஜிக்க வேண்டும். அவன் பௌண்டரீகயாக பலனை அடைவதோடு, தேவலோகத்திற்கும் செல்வான்.

(2) வைகாசி மாத துவாதசியில் ‘மதுசூதனன்’ என்ற திருநாமத்தை சொல்லி பூஜிக்க வேண்டும். அவன் அக்னிஷ் டோமயாக பலனை அடைவதோடு சந்திர லோகத்திற்கும் செல்வான்.

(3) ஆனி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘திரிவிக்ர நாமத்தை பூஜிக்க வேண்டும். அவன் கோதகம் என்னும் யாகத்தின் பலனை அடைவதோடு தேவ லோகக் கன்னியரை அவன் அடைவான்.

(4) ஆடி மாதத் துவாதசியில் ‘வாமனா’ என்று சொல்லி வணங்க வேண்டும். அவன் நரமேத யாகத்தின் பலனை அடைவதோடு பெரும் புண்ணியத்தை அடைவான்.

(5) ஆவணி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘ஸ்ரீதரன்’என்ற நாமத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.

அவன் பஞ்ச மகாயக்ஞங்களின் பலனை அடைவதோடு, தேவவிமானம் ஏறும் வாய்ப்பும் கிடைக்கும்.

(6) புரட்டாசி மாத துவாதசியில் இரவும் பகலிலும் ‘ரிஷிகேசா’ என்ற அவன் திரு நாமத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும். அத்தகையவன் ‘சௌத்ராமணி’ என்ற யாகத்தின் பலனை அடைவதோடு, ஆத்ம சுத்தியுள்ளவனாகவும் இருப்பான்.

(7) ஐப்பசி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘பத்மநாப’ என்ற அவன் திருநாமத்தைச் சொல்லிப் போற்ற வேண் டும். அதனால் அவன் ஆயிரம் கோதானங் களைச் செய்த பலனை அடைவான்.

(8) கார்த்திகை மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘தாமோதரா’ என்னும் திருநாமத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அவன் கோமேதக யாகத்தின் பலனை அடைவான்.

(9) மார்கழி மாத துவாதசியில் ‘கேசவ’ நாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அத்தகையவன் அஸ்வமேதயாகம் செய்த தன் பயனை அடைவான். அவனுடைய பாவம் நீங்கும்.

10) தை மாதம் துவாதசியில் ‘நாராயணா’ நாமத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும். அத்தகையவன் வாஜபேய யாகத்தின் பயனை அடைவான். தவப்பலனையும் பெறுவான்.

11) மாசி மாதம் துவாதசியில் ‘மாதவ’ மாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அவள் இராஜசூயயாகம் செய்ததன் பயனைப் பெறுவான்.

12) பங்குனி துவாதசியில் ‘கோவிந்த’ நாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அவ் அதிராத்ராயாகத்தின் பயனைப் பெறுதலோடு சந்திர லோகத்தையும் அடைவான். இவ்வாறு ஆண்டு முழுவதும் தாமரைக் கண்ணனைப் பூஜிப்பவன் பூர்வ ஜென்ம ஜானத்தைப் பெறுவதோடு செல்வத்தையும் பெறுவான்.

இதன்படி ஒவ்வொரு நாளும் விஷ்ணுவைப் பக்தியுடன் மனதார பூஜிக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

வாக்குத்தத்தம்

(10) ‘வாக்குத் தத்தம் செய்த பொருளைப் பிராமணனுக்குக் கொடுக்காம லிருந்தால் என்ன விளையும்?”

நரியானது ஒரு பிணத்தின் மாமிசத்தைத் தின்ன முயன்றது. அதனைக் குரங்கொன்று நோக்கி, “உனக்குப் பிணத்தின் மாமிசத்தை பிடுங்கித் தின்னும் பாவம் எவ்வாறு நேர்ந்தது?” என்று கேட்டது.

அதற்கு நரியானது, “முன் ஜன்மத்தில் பிராமணன் ஒருவனுக்குப் பொருள் கொடுப்பேன் என்று வாக்குத் தத்தம் செய்து விட்டு பின்னர் இறந்து போனேன். “அந்த பாவத்தால் இந்த ஜன்மத்தில் நரியாய் பிறந்தேன்” என்றது. அதனைக் கேட்டு குரங்கானது, “இதுதான் உன்னு டைய கதையா!” என்று கூறி இகழ்ந்து சென்றது. இதிலிருந்து வாக்குத் தத்தம் செய்த பொருளைப் பிராமணர்க்குக் கொடுக்காமல் தவிர்த்தால் பிணம் தின்னும் நரியாகப் பிறப்பர்” என்பது தெரிகிறது” என்று பீஷ்மர் கூறினார்.

நற்கதி கிடைக்குமா?

(11) “கருதிய மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றை தாழ்ந்த வருணத்தவராகிய சூத்திரர்கள் கற்றறிந்தால் அவர்கள் நற்கதி அடைவரோ?” என்று தர்மபுத்திரர் கேட்டார்.

”தர்மபுத்திரரே! கருதிய மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றை நாலாம் வருணத் தைச் சேர்ந்த சூத்திரருக்கு உபதேசம் செய்யக் கூடாது. அதனால் உபதேசம் செய்து வைத்த ஆசார்யனுக்கு இடுக்கண் உண்டாகும். அதற்கு மாறாக அந்தக் குருவை வணங்கி, அந்தணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தார் உபதேசம் பெற்றால் அவர்கள் முத்தி அடைவர். மேலும் பிராமணக் குலத்தில் பிறந்தோர் யாவரும் பிராமணக் குலத்துக் குரிய – ஒழுக்கத்தில் தளர்ந்தவனுக்கு உபதேசம் செய்தல் கூடாது. மாறாக உபதேசித்தால் உபதேசம் பெற்ற இழிந்த பிராமணனோடு உபதேசித்த ஆசாரியரும் தாழ்வான ஜெ ஜென்மத்தை அடைவான்” என்று கூறினார்.

திருமாலின் மாண்பு

(12) “நிலையாகக் காக்கும் தொழிலை செய்கின்றவனும், கங்கையைத் தன் திருவடியில் வைத்திருப்பவனும் ஆகிய விஷ்ணுவின் மாண்பினை கூறுக” என்று தர்மபுத்திரர் கேட்க, அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “கருடனானவன் தன் தாயார் வினதையின் துயரம் நீங்கும் பொருட்டு. தேவலோகம் சென்று, இந்திரனை வன்று, தேவாமிர்தத்தைக் கொணரும் ளில், திருமால் அவன் முன்னே தோன்றி, அவனுடைய முயற்சியைப் பாராட்டினார். பின்னர் அவர் அக்கருடனைத் தனக்கு வாகனமாகவும் (பெரிய திருவடி) தாம் தேரிலிருக்கும் போது கொடியாகவும் விளங்கும்படி அருள் பாலித்தார்.

இந்நிகழ்ச்சியை கருடன் தன்னைப் பெற்ற தந்தையான காசியப முனிவருக்கு சொல்ல, தந்தையாகிய காசியப முனிவரும் மனமகிழ்ந்து, நீ செய்துள்ள நற்பேறு வேறு எவருக்குக் கிடைக்கும் ? சாத்திர முறைப்படியே பத்திரி காசிரமம் சென்று பத்ரி நாராயணனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கி ஈடேறுவாயாக என ஆசீர்வதித்து அனுப்பினார்.

தந்தையாகிய காசியப முனிவர் விடை கொடுத்தனுப்ப, கருடன் பத்ரி காசிரமத்தை அடைந்து, விஷ்ணுவைத் தரிசித்து, வணங்கி நிற்க, துளப மாலை அணிந்த திருமால் மகிழ்வோடு, “என்னோடு என்றும் இருத்தி நீ” என்று கூறி, அந்த கருடனுடன் ஒரு பக்கம் சென்றான். சென்றான். அந்த இடம் ஒரே இருட்டாக இருப்ப, கருடன் திகைத்து நின்றான். அதனால் திருமால் கருடனுக்கு ஞானக்கண் கொடுத்து, “பற்பல அதிசயங்களாய்த்தான் சஞ்சரித்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி பிரகாசமோடு இருப்பதைக் காண்பித்தான். கருடனும் ஞான விழியால் அதனைக் கண்டான். ஆனாலும் அனேக கோடி சூரிய பிரகாசத்தையும், விஞ்சியுள்ள திவ்விய தேஜசும், திவ்விய சக்தியும் கொண்ட விஷ்ணுவின் ஸ்வரூபத்தையும் கருடனால் முற்றிலும் காண முடியவில்லை. பின் அவ்விஷ்ணுவின் அருளால், விண்ணை யும், மண்ணையும் அடங்க நடந்தவனாகிய விஷ்ணுவும், பத்ரிகாசிரமும், அதனுள் அடங்கிய அம்மாயன் நிலமும் ஆகிய நர நாராயணாச்சரமமும் கண்ணெதிரில் தெரிய அதிசயித்து ஆச்சரியமுற்றான்.

அப்பொழுது “இந்த அற்புதத்தின் தன்மையை விளக்கி எனக்குச் சொல் வாயாக” என்று கருடன் வேண்ட எம்பெரு மான், “ஞானக்கண் கொண்ட ஞானியரும் விளங்கிக் கொள்ளார்” என்று கூறுவானே யானால் “கண்கள் ஒளி மழுங்கியுள்ள, உயிர் போகும் நிலையிலுள்ள நான் அவ்வெம் பெருமானின் அற்புதங்களை எவ்வாறு விளக்கமாகக் கூற முடியும்?” என்று பத்ரி காசிரமம் என் திவவியதலம் ஒன்றைக் கொண்டு எம்பெருமானின் மாண்பினை கூறினார். திருமாலின் பெருமையை இங்கு பறை சாற்றிய பத்ரி காசிரமத்தைப் பற்றி இங்கு காண்போம்.

இஃது இமயமலைப் பிரதேசத்து ரிஷி கங்கா, அலெக்நந்தா என்ற இரண்டு நதிகள் கூடுகின்ற இடத்தில் சமுத்திர மட்டத்திற்கு 10,000 அடிக்கு மேல் உள்ளது. ‘பத்ரி’ என்பது இலந்தையைக் குறிக்கும். இந்த இலந்தை மரத்தின் கீழிருந்து ஸ்ரீமந் நாராயணன் நரனுக்கு அரிதான திருமந் திரத்தை உபதேசித்து அருளினான். இங் குள்ள இரண்டு குன்றுகள் நரன் என்றும், நாராயணன் என்றும் பெயர் பெற்றுள்ளன. இவ்விரண்டுக்கும் இடை வெளியில் நோக்கினால் நீலகண்ட மலைச்சிகரம் பனி மூடியபடி அதிகாலையில் நீல நிறமாகத் தெரியும். இதனை இந்திர நீலப்பருப்பதம்’ என்பர்.

இங்கு நாரத குண்டம், சூரியகுண்டம் என்ற இரு உஷ்ணமான நீரைக்கொண்ட குளங்கள் (தப்த குண்டம்) உள்ளன. இங்குள்ள பத்ரி நாராயணர் சாளக் கிராமத்திலானவர்; பத்மாசனம் கொண்டி ருப்பவர். இவர் ‘பத்ரி விசால்’ எனப்படு வார். இங்குள்ள தாயார் அரவிந்த வல்லி. ஆறு மாத காலந்தான் இந்த கோயில் திறந்திருக்கும். மற்றைய காலங்களில் பனி மிகுந்த காரணத்தால் இக்கோயில் மூடியிருக்கும். பிரம கபாலம் என்பது இந்த அலெக் நந்தா நதியின் கரையில் உள்ளது. இந்துக்கள் சிராத்தம் செய்து பிண்டமிடும் இடம் இதுவேயாகும்.

இங்கு பத்ரி நாராயணரோடு அவரு டைய திருவடியின் கீழ் கருடன் நின்று கொண்டு கை கூப்பி இருப்பதை இன்றும் காணலாம். இங்கு முக்கியமாக தரிசிக்க வேண்டியவர்கள் நரனும் நாராயணனு மாகிய இருவரே ஆவர். இவர்கள் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கின்றார் கள்; ஆசார்ய-சிஷ்ய கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்கும் பொருட்டு நரனென்னும் சிஷ்யனும், நாராயணன் என்னும் ஆசார்யனுமாக திருமாலே தோன்றி, சிஷ்யனுக்கு, ஆசார்யன் தத்துவ பொருளை உபதேசிப்பதாக வீற்றிருக் கின்றார். இதனால் இதனை ‘நர நாரா யணாச்ரமம்’ எனவும் வழங்குவர். ‘பத்ரி நாத்’ என்று இக்காலத்தில் வழங்குகின்ற னர். வேறொன்றிலும் பற்றில்லாத ஞான சிரேட்டர்களே இவ்விறைவனை தியானம் செய்து அறிய முடியும். திருமங்கை யாழ்வார் இப்பத்ரிகாசிரமத்தை மங்களா சாசனம் செய்துள்ளார்.

திருமங்கையாழ்வார் பாசுரங்கள்

திருவதரி

(அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

1) முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி

நோக்கி வளைந்து இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கு இளையா முன் பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கியுண்ட வாயான் வதரி வணங்குதுமே.

2] முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்னொரு கோலூன்றி விதிர்விதிர்த்துக் கண்சு ழன்று மேற்கிளை கொண்டிருமி ‘இதுவென் னப்பர் மூத்த வாறு’என் றிளையவர் ஏசாமுன் மதுவுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.

3] உறிகள் போல் மெய் நரம்பெழுந் தூன் தளர்ந் துள்ளமெங்கி நெறியை நோக்கிக் கண்சு ழன்று நின்று நடுங்காமுன் அறிதி யாகில் நெஞ்சம்! அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.

4) பீளை சோரக் கண்இ டுங்கிப் பித்தெழ மூத்திருமி தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவாமுன் காளை யாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத் தன்று நின்றான் வாளை பாயும் தண்த டஞ்சூழ் வதரி வணங்குதுமே.

5) பண்டு காம ரான வாறும், பாவையர் வாயமுதம் உண்ட வாறும், வாழ்ந்த வாறும், ஒக்க வுரைத்திருமி தண்டு காலா வூன்றி யூன்றித் தள்ளி நடவாமுன் வண்டு பாடும் தண்துழாயான் வதரி வணங்குதுமே.

6) எய்த்த சொல்லோடு ஈளை யேங்கி இருமி இளைத்துடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ்கட லைக்கடைந்த மைத்த சோதி எம்பெ ருமான் வதரி வணங்குதுமே.

7] ‘பப்ப அப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சித்திரனை ஒப்ப ஐக்கள் போத வுந்த; வுன்தமர் காண்மின் என்று செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே.

8) “ஈசி போமின் ஈங்கி ரேன்மின்; இருமி இனைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர்’ என்று பேசும் குவளையங் கண்ணியர்பால் நாச மான பாசம் விட்டு நன்னெறி நோக்கலுறில் வாசம் மல்கு தண்து ழாயான் வதரி வணங்குதுமே.

9] புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந் துள்ளமென்கி கலங்க ஜக்கன் போத வுந்திக் கண்ட பிதற்றாமுன் அலங்க லாய தண்துமு ழாய்கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலங்கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே.

10] வண்டு தண்தே னுண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலிமாலை கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில் அண்ட மல்லாமல் மற்ற நவர்க்கோர் ஆட்சி யறியோமே. திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பதிகம்-2

திருவதரியாச்சிரமம்

1) ஏனமுன் ஆகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க தானவன் ஆகம் தரணியில் புரளத் தடஞ்சிலைகுனித்த எம் தலைவன் தேன்மர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.

2) கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து கண்டுமுன் கொடுந்தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்தனம் ஒருவன் தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள் ளானே,

3) இலங்கையும் கடலும் அடலருந்துப்பின் இருநிதிக்குஇறைவனும், அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் – கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண்துகில் கொடியன விரிந்து வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள் ளானே

4] துணிவினி உனக்குச் செல்லுவன், மனமே! தொழுதெழு தொண்டர்கள் தமக்கு பிணியொழித் தமரர் பெருவிசும்பு அருளும் பேரரு ளாளன்எம் பெருமான் அணிமலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து,அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.

5)பேயிடைக் கிருந்து வந்தமற் றவள்தன் பெருமுலை சுவைத்திட பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்தஎந் தலைவன் சேய் முகட் டுச்சி அண்டமும் சுமந்த செம்பொன்செய் விலங்கலில் இலங்கு வாய்முகட் டிழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே

6)தேர் அணங்கு அல்குல் செழுங்கயல் கண்ணி திறத்தொரு மறத் தொழில் புரிந்து பாரணங்கு இமிலேறு ஏழும் முன்அடர்த்த பனிமுகில் வண்ணன்எம் பெருமான் காரணந் தன்னால் கடும்புனல் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.

7) வெந்திறல் களிலும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க் கரசும் இந்திரற்கு அருளி எமக்கு ஈந்து அருளும் எந்தைஎம் அடிகள்எம் பெருமான் அந்தரத் தமரர் அடியினை வணங்க ஆயிர முகத்தினால் அருளி மந்தரத் திழிந்த கங்கயிைன் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே

8) மான்முனிந்து கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ஊன்முனிந் தவன துடலிரு பிளவா உகிர்நுதி மடுத்து அயன் அரனைத் தான்முனிந்த திட்ட வெந்திறல் சாபந் தவிர்த்தவன் தவம்புரிந் துயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே

9) கொண்டல் மாருதங்கள் குலவரை தொகுநீர்க் குரைகடல் உலகுடன் அனைத்தும் உண்டமா வயிற்றோன் ஓண்சுடர் ஏய்ந்த உம்பருர் ஊழியு மானான் அண்டமூடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்தங்கு அவனியாள் அலமர பெருகும் மண்டுமர மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே

10] வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள் ளானை கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாய் ஒலி செய்த பனுவல் வரம் செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் இருங்கடல் உலகம் ஆண்டு வெண் குடைக்கீழ இமையவர் ஆகுவர் தாமே.

பெரிய திருமொழி

மகாபாரதம் – 60… இந்திர மதங்க சம்வாத சருக்கம் Asha Aanmigam

திருஷ்டி, பூசணிக்காய் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம்

திருஷ்டி, பூசணிக்காய் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம்

இந்திய மரபில் ஒவ்வொரு செயலுக்கும் அதன் பின்னணியில் ஓர் ஆன்மீக காரணம், பாரம்பரிய நம்பிக்கை மற்றும் அறிவியல் சார்ந்த தர்க்கம் இருக்கிறது. அவற்றுள் ஒன்றாகவே திருஷ்டி கழிப்பு என்ற சடங்கும், அதற்காக பயன்படுத்தப்படும் பூசணிக்காயும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பூசணிக்காய் – திருஷ்டி நீக்கும் சக்தி

நம் வீட்டில் குழந்தை அழகாகத் தோன்றினால், இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தால் அல்லது புதிதாக வீடு கட்டி குடியேறினால், அந்த மகிழ்ச்சியைப் பார்த்து பிறர் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றும் – அது பொறாமை அல்லது தன்னறியாமலான ஈர்ப்பு கூட இருக்கலாம். இதுவே திருஷ்டி எனப்படுகிறது.

இதனைத் தவிர்க்க, பூசணிக்காய் போன்ற பொருட்கள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. ஏனெனில், இந்த காய்க்கறி எண்ண அலைகளை ஈர்த்து, எதிர்மறை ஆற்றலை சீராக மாற்றும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.

புராணக்கதை – கூச்மாண்டன் பற்றிய வரலாறு

பூசணிக்காயின் புனிதத்தையும், திருஷ்டி நீக்கும் சக்தியையும் விளக்கும் ஓர் பழமையான புராணக் கதை உள்ளது.

தேவர்களை பல ஆண்டுகள் துன்புறுத்திய கூச்மாண்டன் என்ற அசுரனை, திருமால் போரிட்டு வென்று அழிக்கிறார். இறப்பதற்கு முன் கூச்மாண்டன், “நான் பூமியில் பிறருக்கு பயனளிக்கும் வகையில் பிறக்க விரும்புகிறேன்” என வரம் கேட்கிறான். இதனை ஏற்று, திருமால் அவனை பூசணிக்காயாக புனர்ஜென்மம் பெறச் செய்கிறார். அதன் மூலம், அவர் பிறர் வாழ்வில் வந்திருக்கும் திருஷ்டியை நீக்கும் சக்தியுடன் பிறக்கிறார்.

இதன் அடிப்படையில்தான், பூசணிக்காயை வாசலில் தொங்கவிடுவது, அல்லது திருஷ்டி கழிக்க பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது.

ஆன்மீக ஆற்றலுடன் கூடிய வெண்பூசணி

வெண்பூசணிக்காய் அதிக உயிர் சக்தி (Pranic Energy) கொண்ட காய்கறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, வீட்டின் ஆன்மீக நலம், சக்தி சுழற்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூய்மை, அமைதி, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் ஆன்மீக பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கியுள்ளன.

வாசலில் பூசணிக்காயை தொங்கவிடும் மரபு

புதிய வீடுகளில் வாசலின் மேல் பகுதியிலோ, பக்கவாடி வாயிலில் பூசணிக்காயை தொங்கவிடும் பழக்கம் உள்ளது. இதற்கான காரணம், அந்த இடத்தில் யாரேனும் கண் திருஷ்டியுடன் வரும்போது, அந்த எதிர்மறை ஆற்றல் பூசணிக்காயின் மீது ஈர்க்கப்பட்டு, வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கப்படுகிறது.

இந்த பூசணியில் காந்தப் புலங்கள் போன்ற ஆற்றல் உண்டு. வீட்டிற்கு வந்த பிறர் எண்ணங்களைப் பதிவு செய்து, அது வீட்டில் தாக்கம் ஏற்படாமல் தடுக்கின்றது என நம்பப்படுகிறது.

திருஷ்டி கழிக்கும் முறைகள்

திருஷ்டி கழிக்கும்போது பூசணிக்காயைப் பயன்படுத்தும் முறைகள் பலவாக உள்ளன.

  1. காயை வெட்டக்கூடாது:
    சிலர் பூசணிக்காயின் மேல்பகுதியை வெட்டி அதற்குள் குங்குமம், நாணயங்கள் உள்ளிட்டவற்றைப் போட்டு திருஷ்டி சுற்றுவார்கள். இது தவறு. ஏனெனில் பூசணிக்காயின் உயிர் சக்தி கத்தி வெட்டும்போது வெளியேறிவிடும்.
  2. தாண்டும் சடங்கு:
    பூசணிக்காயை தரையில் வைத்து, நான்கு திசைகளில் தாண்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் வலது காலை முன்னிட்டு தாண்ட வேண்டும். இது நாலாபக்க திருஷ்டியையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது.
  3. திருஷ்டி சுற்றுதல்:
    தாண்டிய பின்பு, பூசணிக்காயை கைதட்டி, அதனை ஒருவரை சுற்றி மூன்று முறை சுற்றிவிட்டு, அதை நிலத்தில் இடுவது வழக்கமாக உள்ளது.
  4. அமாவாசை திருஷ்டி கழிப்பு:
    அமாவாசை தினங்களில், மன உறுதியும், நெருங்கிய உறவினர்கள் பாதுகாப்பும் தேவைப்படும் என்பதால், அந்த நாளில் பூசணியால் திருஷ்டி கழிக்க மிக முக்கியம்.

விதைகள் – புதிய வாழ்க்கையின் தொடக்கம்

பூசணிக்காயை உடைக்கும் போது, அதன் உள்ளே காணப்படும் விதைகள் வெகு தொலைவுக்கு சிதறும். இது ஒரு நவீன வாழ்க்கையின் தொடக்கத்தை குறிக்கிறது. அதனால், எந்தவொரு நல்ல காரியத்திற்கு ஆரம்பமாக, பூசணிக்காயை உடைப்பது வழக்கமாகியுள்ளது.

அது திருமணம், வீடு கட்டுதல், தொழில் ஆரம்பம், குழந்தை பிறப்பு என எதுவாக இருந்தாலும், பூசணிக்காயின் வழியே திருஷ்டி நீக்குவது வழக்கமாகிறது.

பூசணிக்காயின் தானதர்ம முக்கியத்துவம்

வெண்பூசணி போன்று சத்தும் உயிரும் நிறைந்த காய்களை ஏழைகளுக்கு வழங்குவது, மிகப்பெரிய புண்ணியம் எனக் கருதப்படுகிறது. இந்த மரபு, ஏழை சமூகத்திற்கும் உடல் ஆரோக்கியமும், வாழ்க்கை வளமையும் கொடுக்கின்ற வழியாக அமைகிறது.

வணங்கத் தகுந்த காய்கறி

பூசணிக்காய், வெறும் உணவாக மட்டும் இல்லாமல், அதற்கு ஆன்மீக முக்கியத்துவம் உள்ளதாகவே பாரம்பரியத்தில் இருந்து ஏற்கப்பட்டிருக்கிறது. அதனால் தான், பூசணிக்காயை வீட்டில் வளர்ப்பது, பண்டிகைகளில் அதனை வைத்து தீபம் ஏற்றுவது, வழிபாடுகளில் பயன்படுத்துவது போன்ற மரபுகள் நம்மிடம் உள்ளன.


முடிவுரை

பாரம்பரிய அறிவும், ஆன்மீக நம்பிக்கையும் ஒன்றாக கலந்து உருவான ஒரு விசித்திரமான சின்னமாக பூசணிக்காய் உள்ளது.

இது உணவாக, வழிபாட்டிற்கான கருவியாக, திருஷ்டி நீக்கும் சக்தியாக, வீட்டு பாதுகாப்பாக, மற்றும் புதிய வாழ்க்கையின் தொடக்கச் சின்னமாக திகழ்கிறது.

இத்தகைய பூசணிக்காயை நாம் இன்றும் மரியாதையுடன் கருதி, அதன் ஆற்றலை உணர்ந்து, நம் வீட்டிலும், நம் வாழ்விலும் இடம் கொடுக்கவேண்டும்.

திருஷ்டி, பூசணிக்காய் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் Aanmeega Bhairav